November 24, 2009

மாவீரர் தினத்தன்று ஒரு நாள் முழுக்க பதிவர்களின் ஈழ படைப்புக்கள்.

நம் சகோதர செல்வங்கள்-இன்றைய எந்திர உலகிலும் எவ்வித வசதிகளும் இன்றி முகாமில் தனித்து வாழும் நம் அன்பு இன மக்கள்-தமிழ் ஈழ மக்கள் !!!

இவர்களுக்காக போராடிய ஒரு விடுதலை படை இன்று சற்று பின்வாங்கியுள்ள சூழ்நிலையில் 'மாவீரர் தினம்' கொண்டாடப்படுமா அல்லது கொண்டாடாதா என்றெல்லாம் இருக்கிற குழப்பமான இந்த நேரத்தில் தமிழ் இனத்தை சேர்ந்த 

நாம்,தமிழை சுவாசிக்கிற நாம்,தமிழை எழுதிக்கொண்டு இருக்கிற நாம் நம் இன சகோதர்களுக்காக அன்றைய தினத்தில் என்ன செய்ய போகிறோம்?



 

நாம் கையில் துப்பாக்கி ஏந்த வேண்டாம்; அதைவிட கூர்மையான ஆயுதமான நம் பதிவர்களின் எழுத்து இருக்கிறது; 

நாம் அணுகுண்டை போட வேண்டாம்; அதைவிட வலிமை வாய்ந்த நம் பதிவர்களின் ஒற்றுமை இருக்கிறது;


 நாம் எந்த மேடைக்கும் சென்று உரை ஆற்ற வேண்டாம்; நமக்கென இங்கே பல இணையதளங்கள் இருக்கிறது;

இன்னமும் எனக்கு புலிகளின் வரலாறு முழுதாக தெரியாது;ஆனால் தமிழனின் வரலாறு தெரியும்.தமிழனும்,புலிகளும் வெவ்வேறு இல்லை;நம்மூர் அரசியல்வாதிகள் 

(அண்ணன் உண்மைத்தமிழனின் பார்வையில் அரசியல்வியாதிகள்) அங்கே செத்துக்கொண்டே இருக்கும் நம் இனத்திற்காக போராடுகிறார்களா அல்லது நாடகம் ஆடுகிறார்களா என்பது இப்போதைக்கு முக்கியமில்லை.நமக்கு இப்போது அரசியல் பற்றி பேச வேண்டாம்.அதைவிட முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது;

அது வருகின்ற நவம்பர் 27 ஆம் தேதி நம் இனத்திற்காக போராடிய-உயிர் துறந்த தோழர்களுக்காக நடைபெறும் "மாவீரர் தினம்".அன்று நம் பதிவர்கள் அனைவரும் படைக்கின்ற படைப்புகள் அனைத்தும்(கதை,கவிதை,சிந்தனை,

செய்திகள்,வீடியோ,அனுபவம்,பொது,விமர்சனம்) இப்படி எதுவாக 
இருந்தாலும் அது நம் இலங்கை முகாமில் வாடும் நம் தமிழினத்தை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது இந்த சிறுவனின் அவா.

அன்று மீண்டும் நம் பதிவர்களின் ஒற்றுமை இந்த உலகிற்கு தெரியட்டும்;நமக்கு அரசியல்வாதிகளை விட சமூக பங்களிப்பு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவோம்.  மாவீரர் தினம் அன்று நம் இனத்திற்கு நாம் செய்யும் ஒரு சிறு உதவியாய்/நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்பதின் அடையாளமாய் நம்படைப்புகள் இருக்கட்டும்.
   
மாவீரர் தினம் அன்று தமிழினத்தை பற்றி எழுத/பேச நான் அல்லது நாம் விடுதலைபுலிகளாக இருக்கவேண்டும் என்பதில்லை.தமிழனை பற்றி பேச-எழுத-போராட நாம் ஒரு தமிழனாக இருந்தால் மட்டுமே போதும்.நான் தமிழன்.

27 comments:

Unknown said...

அருமை , அன்று எழுச்சி நாள் அனைத்து இலங்கை தமிழருகளுக்கும் நன்நாளின் துவக்கம் !!!!!!!!!!!!!!

பூங்குன்றன்.வே said...

உண்மைதான் அண்ணா.அன்றுதான் நம் அன்பு இலங்கை தமிழ் மக்களுக்கு விடியலின் வாசலாக இருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

நிச்சியமாக தமிழர்களின் உணர்வுகளைச்சொல்ல இதுஒரு வாய்பாகவும் அமையும்..

நல்ல யோசனைதான் தோழமையே. நம்மால் ஆன நம் எழுத்துக்களின் பிரதிபளீப்பை வெளியிடுவோம்.

தமிழுக்காக தமிழ்மக்களுக்காக...

புலவன் புலிகேசி said...

நல்லது முயற்சிப்போம்..நண்பா...

venkat said...

தமிழர்களின் ஒற்றுமையின்மையே வீழ்ச்சிக்கு காரணம்.
இந்த விசயத்திலாவது நமது உணர்வுகளை பிரதிபலிப்போம்
ஒற்றுமையாக.

ஜீவன்பென்னி said...

நிச்சயமாக இதை செய்வோம்.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//நிச்சியமாக தமிழர்களின் உணர்வுகளைச்சொல்ல இதுஒரு வாய்பாகவும் அமையும்..

நல்ல யோசனைதான் தோழமையே. நம்மால் ஆன நம் எழுத்துக்களின் பிரதிபளீப்பை வெளியிடுவோம்.

தமிழுக்காக தமிழ்மக்களுக்காக.//

கருத்துக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி தோழி.

பூங்குன்றன்.வே said...

@ புலவன் புலிகேசி

//நல்லது முயற்சிப்போம்..நண்பா...//

கருத்துக்கும்,ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பனே!!முயற்சி திருவினையாக்கும்!!

பூங்குன்றன்.வே said...

@ venkat

//தமிழர்களின் ஒற்றுமையின்மையே வீழ்ச்சிக்கு காரணம்.
இந்த விசயத்திலாவது நமது உணர்வுகளை பிரதிபலிப்போம்
ஒற்றுமையாக.//

நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே.இந்த விஷயத்தில் நாம் நிச்சயம் ஒற்றுமையை கடைபிடிப்போம்.கருத்துக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி !!

பூங்குன்றன்.வே said...

@ ஜீவன்பென்னி

//நிச்சயமாக இதை செய்வோம்.//

உங்களின் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது ஜீவன்.கருத்துக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி!!

tamiluthayam said...

அனைவரும் ஏற்று செயல்படுத்த வேண்டிய கடமை. இதிலாவது எமது ஒற்றுமையை காட்டுவோம்.

பூங்குன்றன்.வே said...

@

//அனைவரும் ஏற்று செயல்படுத்த வேண்டிய கடமை. இதிலாவது எமது ஒற்றுமையை காட்டுவோம்.//

நிச்சயம் நிறைவேற்றுவோம் நண்பரே !!!

கருத்துக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி !!

ஹேமா said...

நிச்சயமாக.என் பதிவு 20 ல் இருந்தே அந்த நினைவோடுதான்.

யூர்கன் க்ருகியர் said...

சரி !

யூர்கன் க்ருகியர் said...
This comment has been removed by the author.
யூர்கன் க்ருகியர் said...
This comment has been removed by the author.
பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//நிச்சயமாக.என் பதிவு 20 ல் இருந்தே அந்த நினைவோடுதான்//

கருத்துக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி
தோழி!!!

பூங்குன்றன்.வே said...

@ யூர்கன் க்ருகியர்

//சரி !//

கருத்துக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி
தோழா !!!

பூங்குன்றன்.வே said...

@ tamiluthayam

//அனைவரும் ஏற்று செயல்படுத்த வேண்டிய கடமை. இதிலாவது எமது ஒற்றுமையை காட்டுவோம்.//

உங்கள் கருத்துக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி !!!

Anonymous said...

நல்ல யோசனை நண்பரே.., உங்களின் வேண்டுகோளுக்கிணங்க அன்று முழுவதும் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் ஈழம் சார்ந்ததாகவே இருக்கும். முடிந்தால் அன்று எனது தளத்துக்கு ஒரு முறை வருகை தரவும்.www.oruvaarthai.blogspot.com

பூங்குன்றன்.வே said...

@ கலகலப்ரியா

:) - எதுக்கு தோழி சிரிக்கிறீங்க? சரி..சிரிக்காம பதிவுக்கு உங்க பதில சொல்லுங்க !!! கருத்துக்கு ஸாரி சிரிப்புக்கு நன்றி !!!

பூங்குன்றன்.வே said...

@ ஒருவார்த்தை

//நல்ல யோசனை நண்பரே.., உங்களின் வேண்டுகோளுக்கிணங்க அன்று முழுவதும் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் ஈழம் சார்ந்ததாகவே இருக்கும்.//

ரொம்ப நல்லது.உங்க ஆதரவுக்கும், கருத்துக்கும் நன்றி !!!

//முடிந்தால் அன்று எனது தளத்துக்கு ஒரு முறை வருகை தரவும்.www.oruvaarthai.blogspot.com//

இதோ வந்து கொண்டே இருக்கிறேன் தோழரே !!!

அஹோரி said...

//நாம் கையில் துப்பாக்கி ஏந்த வேண்டாம்; அதைவிட கூர்மையான ஆயுதமான நம் பதிவர்களின் எழுத்து இருக்கிறது; //

அருமை. ஆனால், அடிவருடி அல்லக்கைகள் செய்யுமா?

பூங்குன்றன்.வே said...

@ அஹோரி

//அருமை. ஆனால், அடிவருடி அல்லக்கைகள் செய்யுமா?//

நண்பா..நாம் அனைவரும் தமிழ் பதிவர்கள்.இந்த அல்லக்கைகள் பற்றி எனக்கு தெரியாது நண்பா.தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை.நமக்குள் ஒற்றுமை இருக்கிறது.அதுமட்டும் எனக்கு நன்றாக தெரியும்.நல்லதே நினைப்போம்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி !!!

Unknown said...

கண்டிப்பாக நண்பா.... தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்ப்போம். தமிழினத்திற்காக தங்கள் உயிரையும் இழந்த மாவீரர்களின் வீரத்திற்கு தலை வணங்குவோம்.

Anonymous said...

அய்யா பட்டையை கெளப்புறீங்க !!!!!!!!!!!!

பூங்குன்றன்.வே said...

@ செந்தழல் ரவி

அய்யா பட்டையை கெளப்புறீங்க !!!!!!!!!!!!

ரொம்ப நன்றி ரவி.