விண்மீன் பேசுமா ?
**********************************
வான்வெளியில் இருந்து ஒரு
விண்மீன் பூமியில் விழுந்தது.
வேடிக்கை பார்க்க எட்டிப்பார்த்தேன்....
வேண்டாம் என்றவர்களை ஒதுக்கி
வீட்டுக்கு எடுத்து சென்றேன்;
தடித்த இரவினில் தனிமையில்
தூக்கம் வராது புரள்கையில்
விண்மீனை பார்க்க ஆசை வந்தது;
கட்டிலுக்கடியில் இருந்து
மெதுவாய் எடுத்துப்பார்த்தேன்;
உயிர் இருக்குமா? பசிக்குமா? காது கேட்குமா?
இல்லை வெறும் கல்லா?
என்றெல்லாம் யோசிக்கையில்,
"என்னை உன் மாடிக்கு அழைத்துப்போவாயா?"
விண்மீன் என்னை கேட்டது.
கல்லாகிய நீ பேசுகிறாயே? வினவினேன்.
"மனிதனாகிய நீ பல நேரங்களில்
மவுனமாய் இருக்கும்போது கல் பேசுவதில்
தவறில்லையே?" விண்மீன் பதிலியது.
மவுனமாய் விண்மீனை ஏந்திக்கொண்டு
மொட்டைமாடிக்கு சென்றேன்.
அர்த்தத்துடன் என்னைப்பார்த்து சிரித்தபடி
ஆகாயம் நோக்கி பயணமானது அந்த விண்மீன் !!!
வன்முறை நேர்கையில் வாய்கிழிய பேசுகிறோம்;
ஆபாச நடிகைகளை பற்றி பதிவெழுதுகிறோம்;
முன்னோட்டம் இட்டுக்கொண்டே பின்னோக்கி போகிறோம்;
திரைப்படங்களை தீர தீர விமர்சுகிறோம்;
மூக்கில் குத்துவிட்டு கோபம் தணிக்கிறோம்;
விண்மீனே வாய்விட்டு பேசும்போது
மனிதனின் மவுனம் சரிதானே ???
October 13, 2009
Labels:
கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
விண்மீனிடம் பேசிய உங்கள் திறமை
மிக அருமை, தொடர்ந்து எழுதுங்கள் தொடர்ந்து வருகிறோம்
Post a Comment