December 4, 2009

கவிதை மலரெடுத்து உனக்கு சூட்டுவேனடி ..

அந்தி மாலை நேரம்.மொட்டை மாடி.முழு நிலவாய் என் தலைவி.என் கண்கள் பார்த்து ஏதோதோ கதை அளாவிக்கொண்டு இருந்தவள் சட்டென ஒரு புள்ளி வைத்து என்னிடம் கேட்டாள்,மாமா,எனக்கு இப்போதே பூ ஒன்று வேண்டும் தலையில் சூட.சரி வாங்கி வருகிறேன்,என்கிறேன்.இல்லையில்லை எனக்கு இப்போதே வேண்டும் வேண்டும் என்கிறாள்.நம்மிடம் என்ன பூந்தோட்டமா இருக்கிறது உடனே பறித்துகொடுக்க,சற்று பொறு,கடைக்கு சென்று வாங்கிவருகிறேன் என்கிறேன்.நீங்கள் எனக்கு எல்லா பூவையும் வாங்கி கொடுத்துவிட்டீர்கள்.யாரும் வாங்கித்தாராத பூவொன்று இங்கயே வேண்டும் என பிடிவாதம் பிடிக்க,மனம் அன்பு தலைவிக்காக யோசித்தது.சற்று நேரம் சென்றதும், 'சரிம்மா,நீ கேட்ட அப்படி ஒரு பூ இருக்கிறது' என்றேன்.அப்படியா? என்ன பூ என என் தலைவி கேட்ட,நான் சொல்ல ஆரம்பிக்கிறேன்.

கொஞ்சம் காதல்
கொஞ்சம் காமம்
கொஞ்சம் ஊடல்
கொஞ்சம் தேடல்
இவை கலந்து
நிறைய முத்த நீரூற்றி
மன செடியில் பதிய வைத்து
மேகத்தில் ஒளிய வைத்த
கவிதை மலரெடுத்து
கண்மணி உனக்கு சூட்டுவேன் இதோ !!!

எனக்கு கடைசியில் கவிதைப்பூவையே தலையில் சூட்டுகிறீர்களா? கில்லாடி தான் நீங்கள்,இப்போதே சூட்டுங்கள் என்றவள் அருகில் வந்து கைகளை இறுகப்பற்றுகிறாள்;அந்த இறுக்கத்தில் உலகம் உள்ளவரை உன்னுடன் இருப்பேன் என்கிற அர்த்தம் புரிந்தது.எனக்கோ அந்த உலகமே என் உள்ளங்கையில் அடங்கியது போலிருந்ததது.வானத்து விண்மீன் எங்களை பார்த்து வெட்கத்தில் கண்சிமிட்டி விட்டு மறைந்தது.

22 comments:

aazhimazhai said...

Kathir !!!! yellamaa konjam konjam than iruku !!! niraiyaa kathal irutha niramba nalla irukum !!!

Nalla iruku pa !!! chumma sonnen

Mohan said...

கவிதை பூ!அழகா இருக்குங்க!

Unknown said...

Simply soooperb nanbaa....

மோகனன் said...

நல்லா இருக்கு தோழா... வசன கவிதை போல இருக்கு...

//நிறை இருந்தால் தமிழிளிஷிலும்,தமிழ்மணத்திலும் ஓட்டு போடுங்கள்.//

தமிழிஷிலும்... திருத்திப் பாரு நண்பா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

நாணல் said...

hmm hmmm :))

Unknown said...

கவிதை பூ அருமை

அன்புடன் மலிக்கா said...

அழகான பூ கவிப்பூ. அருமை...

ஹேமா said...

பூக்களாய்
எழுத்துக்களாய்
வார்த்தைகளாய்க்
கொட்டிகிடக்கும் காதல் அனபுக்கவிதை அழகு.

Prathap Kumar S. said...

சே... கொன்னுட்டீங்க நண்பா. கவிதை பூ கூட தலைவிக்கு கொடுக்கலாமா? ரிஸ்க் எடுக்க பயமா இருக்கு? :-)

கவிதை சொன்னதக்கப்புறம்...பயந்து ஓடிடக்கூடாது... :-)

பூங்குன்றன்.வே said...

@ aazhimazhai

//Kathir !!!! yellamaa konjam konjam than iruku !!! niraiyaa kathal irutha niramba nalla irukum !!!

Nalla iruku pa !!! chumma sonnen//

கவிதைல மட்டும் தான் கொஞ்சம் சொல்லியிருக்கேன்.நேர்ல என் தலைவிக்கு எப்பவும் நிறைய நிறைய தாம்ப்பா.

நீ சும்மா சொல்றியா இல்ல உண்மையா கவிதை நல்லா இருக்குன்னு சொல்றியான்னு எனக்கு தெரியாதா பப்பு ?

பூங்குன்றன்.வே said...

@ Mohan

//கவிதை பூ!அழகா இருக்குங்க!//

ரொம்ப நன்றி மோகன் :)

பூங்குன்றன்.வே said...

@ Vijay

//Simply soooperb nanbaa....//

ரொம்ப நன்றி நண்பனே.

பூங்குன்றன்.வே said...

@ மோகனன்

//நல்லா இருக்கு தோழா... வசன கவிதை போல இருக்கு...//

ரொம்ப நன்றி நண்பா.

//தமிழிஷிலும்... திருத்திப் பாரு நண்பா...//

திருத்தி விட்டேன் நீங்கள் சொன்னதுபோல்.வேறு ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள். திருத்தி கொள்ள தயாராக இருக்கேன் தோழனே !

பூங்குன்றன்.வே said...

@ T.V.Radhakrishnan

//நல்லா இருக்கு//

ரொம்ப நன்றி TVR !!!

பூங்குன்றன்.வே said...

@ நாணல்

//hmm hmmm :))//

:) :) நன்றிங்கோ :) :)

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//கவிதை பூ அருமை//

நன்றி அண்ணா.நீங்களும் இதை பீல் பண்ணி படிச்சு இருப்பீங்கன்னு தெரியும்.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//அழகான பூ கவிப்பூ. அருமை...//

நன்றி தோழி.

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//பூக்களாய்
எழுத்துக்களாய்
வார்த்தைகளாய்க்
கொட்டிகிடக்கும் காதல் அனபுக்கவிதை அழகு.//

ஆமாம் ஹேமா.நிஜத்திலும் என் தலைவிக்கு நான் அப்படிதான்.

மிக்க நன்றி தோழி.

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//சே... கொன்னுட்டீங்க நண்பா. கவிதை பூ கூட தலைவிக்கு கொடுக்கலாமா? ரிஸ்க் எடுக்க பயமா இருக்கு? :-)

கவிதை சொன்னதக்கப்புறம்... பயந்து ஓடிடக்கூடாது... :-)//

நீங்க..எந்த தலைவிக்கு பூ தர்றீங்க என்பது ரொம்ப முக்கியம் நண்பா :)

நீங்க கவிதை சொன்னால் உங்கள் தலைவி கண்டிப்பாக ஏற்று கொள்வார்கள் !!!

கமலேஷ் said...

வாழ்க்கைய ரொம்ப ரசிக்கிரிங்க போல இருக்கு நண்பா
ரொம்ப நல்லா இருக்கு...

பூங்குன்றன்.வே said...

@ கமலேஷ்

//வாழ்க்கைய ரொம்ப ரசிக்கிரிங்க போல இருக்கு நண்பா.ரொம்ப நல்லா இருக்கு...//

ஆம் நண்பா,நல்ல மனைவி கிடைப்பின் வாழ்க்கை ரசனையாகத்தான் இருக்கும்.
கருத்துக்கு நன்றி கமலேஷ்!!!