December 6, 2009

இன்னமும் அங்கேயே அவர்கள்...



காலை எழுந்து அலுவலகம் செல்ல
காலுறை அணியும்போது
வந்து தொலைக்கிறது எவனோ
ஒருவனின் செருப்பில்லாத கால்கள்.

நீண்ட வருடங்கள் தவம் செய்து
பெற்றெடுத்த பிள்ளை அவளை
முதியோர் இல்லத்தில் சேர்க்கையில்
பெற்றவளின் மனசு குளிருமோ ?

பெய்யும் மழைக்கு ஹீட்டர் போட்டு
பெரிய எல்.சி.டியில் புதுப்பட டி.வி.டி
இலவச டிவியில் ஒன்றும் வராமல்
தவிப்பானோ முக்காடிட்ட குடிசைவாசி?

மொபைல் லேப்டாப் வீடு தங்கம்
கார் வாங்க லோன் போடணும்
வேர்வை நாற்றமின்றி இன்றொரு நாள்
புணர்ச்சி செய்யணும் மல்லிகைப்பூ கடன்வாங்கி..

27 comments:

Unknown said...

நீண்ட வருடங்கள் தவம் செய்து
பெற்றெடுத்த பிள்ளை அவளை
முதியோர் இல்லத்தில் சேர்க்கையில்
பெற்றவளின் மனசு குளிருமோ ?


எல்லோரும் ஒரு நாள் முதியவர் ஆவர் என்பதை மறக்க வேண்டாம் ,

அருமை !!!

ப்ரியமுடன் வசந்த் said...

//மொபைல் லேப்டாப் வீடு தங்கம்
கார் வாங்க லோன் போடணும்
வேர்வை நாற்றமின்றி இன்றொரு நாள்
புணர்ச்சி செய்யணும் மல்லிகைப்பூ கடன்வாங்கி..//

ச்சோ..

கமலேஷ் said...

கவிதை நிறைய விஷயங்கள் பேசுகிறது...
ரொம்ப நல்லா இருக்கு..

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

அன்புடன் மலிக்கா said...

விசயங்களை நிறைய சுமந்திருக்கும் விதை கவிதை..

Ashok D said...

My choice.. last para.. nice one

Unknown said...

அருமையான கவிதைகள் நண்பா..........
உணர்ச்சியுடன் உண்மை பேசுகிறது...........

thiyaa said...

அருமையா உணர்ச்சியா எழுதியுள்ளீர்கள்
ஏழை என்றுமே ஏழையாகத் தான் இருக்கிறான்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வசதி படைத்தவர்களுக்கு ஏழையை பற்றிய உணர்வு மனதின் ஒரு ஓரத்தில் எப்போதும் இருந்தால் கூட போதும் ஏழைமையை எளிதில் ஒழித்து விடலாம்.
உங்களிடம் இருக்கும் இந்த உணர்வை வரண்டு போக விட்டு விடாதீர்கள்

ஹேமா said...

இந்தக் கவிதையின் முத்தாய்ப்பு கடைசிப் பந்தி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு

Chitra said...

வாழை பழத்தில் ஊசியாய் நெருடும் உணர்வுடன் இருக்கும் ஏழை மனதை நன்கு படம் பிடித்து காட்டுகிறது, உங்கள் கவிதை.

Jawahar said...

//வேர்வை நாற்றமின்றி இன்றொரு நாள்
புணர்ச்சி செய்யணும் மல்லிகைப்பூ கடன்வாங்கி.. //

சுவாரஸ்யமான வரிகள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? மன்மதக் கலையில் சிறந்த பெண்கள் உடலில் வியர்வை மணம் தவிர்க்க முடியாததாம். உனக்கெப்படித் தெரியும் என்று கேட்க ஆசை எழலாம். எனக்குத் தெரியும், ஆனால் சோதித்ததில்லை.

http://kgjawarlal.wordpress.com

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//எல்லோரும் ஒரு நாள் முதியவர் ஆவர் என்பதை மறக்க வேண்டாம் ,

அருமை !!!//

நன்றி அண்ணா.

பூங்குன்றன்.வே said...

@ பிரியமுடன்...வசந்த்

//ச்சோ..//

நன்றி வசந்த்

பூங்குன்றன்.வே said...

@ கமலேஷ்

//கவிதை நிறைய விஷயங்கள் பேசுகிறது..ரொம்ப நல்லா இருக்கு.//

நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் அருணா

//பூங்கொத்து!//


பூங்கொத்துக்கு நன்றி தோழி !

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//விசயங்களை நிறைய சுமந்திருக்கும் விதை கவிதை..//

மிக்க நன்றி தோழி !

பூங்குன்றன்.வே said...

@ D.R.Ashok

//My choice..last para.nice one.//

மிக்க நன்றி டாக்டர்!!!

பூங்குன்றன்.வே said...

@ Vijay

//அருமையான கவிதைகள் நண்பா...
உணர்ச்சியுடன் உண்மை பேசுகிறது.//

மிக்க நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ தியாவின் பேனா

//அருமையா உணர்ச்சியா எழுதியுள்ளீர்கள்.ஏழை என்றுமே ஏழையாகத் தான் இருக்கிறான்//

உண்மைதான்.மிக்க நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//இந்தக் கவிதையின் முத்தாய்ப்பு கடைசிப் பந்தி.//

முதலில் அந்த கடைசி நாலு வரிகளை எழுதி பதிவிடும்போது நிறையவே யோசித்தேன் தோழி.
தப்பாக தோன்றி விடுமோ என்று !

எங்கோ ஒரு மூலையில் உழைத்துக்கொண்டே இருக்கும் ஒரு தொழிலாளியின்
மனதை தான் சொல்கிறேன் என்றாலும்,எனக்குள் தயக்கமாக இருந்தது.

இப்போது பின்னூட்டங்களை பார்த்து சற்று ஆறுதலாக இருக்கிறது.

தவறாக ஏதேனும் எழுதினால் தயவுசெய்து சுட்டிகாட்டவும். மிக்க நன்றி.

பூங்குன்றன்.வே said...

@ T.V.Radhakrishnan

//கவிதை ரொம்ப நல்லா இருக்கு//

நன்றி T.V.R !!!

பூங்குன்றன்.வே said...

@ Chitra

//வாழை பழத்தில் ஊசியாய் நெருடும் உணர்வுடன் இருக்கும் ஏழை மனதை நன்கு படம் பிடித்து காட்டுகிறது, உங்கள் கவிதை.//

உங்கள் தொடர் வருகையும்,கருத்தும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி மேம்!!!

பூங்குன்றன்.வே said...

@ Jawahar

//சுவாரஸ்யமான வரிகள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? மன்மதக் கலையில் சிறந்த பெண்கள் உடலில் வியர்வை மணம் தவிர்க்க முடியாததாம். உனக்கெப்படித் தெரியும் என்று கேட்க ஆசை எழலாம். எனக்குத் தெரியும், ஆனால் சோதித்ததில்லை.//

நான் அதை பற்றி யோசிக்கவில்லை ஸார்.ஒரு தொழிலாளியின் மனதை தான் படம்பிடிக்க நினைத்தேன்.
உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே !!!

ரிஷபன் said...

வரிகளினூடே வலிகள் எப்படி சாத்தியமாயிற்று..

பூங்குன்றன்.வே said...

@ ரிஷபன்

//வரிகளினூடே வலிகள் எப்படி சாத்தியமாயிற்று..//

சமுகத்தில் தினமும் நடப்பதுதானே.. இந்த பணக்காரன் அப்படியே தான் இருக்கான்,தொழிலாளி அதே தின கூலிக்கு வாழ்க்கையை நடத்தறான். வலிகள் வரும் தானே நண்பா.