December 7, 2009

கடவுள் ஏன் கல்லானான்?




குருதி ஆற்றில் கால் நனைத்து
குழு பிணங்களின் வாசனையில்
காயமுற்றவனின் முதுகின் மீதேறி
கனவுகளையும்,மண்ணையும் விட்டு
திக்கற்று திசையற்று
கண்கெட்டும் தூரம் வரை
கால்கள் நோக நடக்கிறோம்
கடவுளென பூஜைகள் செய்த
அந்த கல்லையும்  தாண்டி......

36 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

வலி இயம்பும் கவிதை...

முனைவர்.இரா.குணசீலன் said...

நாம் செல்லும் திசையெங்கும் இதுபோன்ற கற்கள் பல உண்டு!!

அவற்றில் அருள்மையை எதிர்பார்ப்பது அறிவுடைமை ஆகாது என்பது எனது கருத்து..!

பூங்குன்றன்.வே said...

@ முனைவர்.இரா.குணசீலன்

//வலி இயம்பும் கவிதை...//

ஆம்..வலி தான் நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ முனைவர்.இரா.குணசீலன்

//நாம் செல்லும் திசையெங்கும் இதுபோன்ற கற்கள் பல உண்டு!!

அவற்றில் அருள்மையை எதிர்பார்ப்பது அறிவுடைமை ஆகாது என்பது எனது கருத்து..!//

உங்கள் கூற்று உண்மைதான் நண்பா.ஆனால் பல காலமாக ஈழ மக்கள் கடவுள் என பூஜைகள் செய்த அந்த கல்லை தாண்டி, மண்ணை தாண்டி வலியுடன், கனவுடன் பயணம் செய்வதை தான் நான் சொல்கிறேன்.

Anonymous said...

கவிதைக்கு ஏத்தமாதிரி படமும் போட்டு கலக்கியிருக்கீங்க.!!!

Unknown said...

Nice one Nanbaaa..

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதையில் உணரமுடிகிறது நண்பரே...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கவிதை படித்ததும் எழுந்த உணர்வு
பின்னோட்டம் படித்து மறுபடியும் கவிதை படிக்கும் போது முழுமை ஆனது.சில இனத்து மக்களிடம் இன்னும் கடவுள் நம்பிக்கை இருப்பதே ஒரு ஆச்சர்யம் தான்.

'பரிவை' சே.குமார் said...

Superb...........
valiyudan koodiya Arumaiyana varigal

ஹேமா said...

உங்களுக்குத் தெரியுமோ குன்றன்.
எங்களோட அவரும் தஞ்சம் கேட்டிட்டார் வெளிநாட்டில.அதுதான் அங்க இருக்கிறவையளைக் கவனிக்க ஆருமில்லை !

Prathap Kumar S. said...

வலியை சொல்லும் கவிதை..

//அவற்றில் அருள்மையை எதிர்பார்ப்பது அறிவுடைமை ஆகாது என்பது எனது கருத்து..!//


சரியாகச்சொன்னீர்கள் குணசீலன்...

vasu balaji said...

நல்லா இருக்குங்க வலி சொன்ன விதம். கண்ணுக்கெட்டிய அல்லவா சரி.

கலகலப்ரியா said...

நல்லா இருக்கு பூங்குன்றன்..!

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.

தமிழ் உதயம் said...

கடவுளை(கல்லை) சுமக்க முடியும் என்றால், கடவுளையும் காப்பாற்ற மானுடன் முயல்வான்.

பூங்குன்றன்.வே said...

@ சின்ன அம்மிணி

//கவிதைக்கு ஏத்தமாதிரி படமும் போட்டு கலக்கியிருக்கீங்க.!!!//

படம் போட்டா கூட சிலர் நம்ம கடை பக்கம் வர மாட்டேன்குறாங்க :)
ரொம்ப நன்றிங்க.

பூங்குன்றன்.வே said...

@ Vijay


தேங்க்ஸ் டியர் வினய் !!

பூங்குன்றன்.வே said...

@ முனைவர்.இரா.குணசீலன்

//கவிதையில் உணரமுடிகிறது நண்பரே...//

புரிதலுக்கு நன்றி தோழா !!

பூங்குன்றன்.வே said...

@ நாய்க்குட்டி மனசு

//கவிதை படித்ததும் எழுந்த உணர்வு
பின்னோட்டம் படித்து மறுபடியும் கவிதை படிக்கும் போது முழுமை ஆனது.சில இனத்து மக்களிடம் இன்னும் கடவுள் நம்பிக்கை இருப்பதே ஒரு ஆச்சர்யம் தான்.//

ரொம்ப நன்றி மனசு !!!

பூங்குன்றன்.வே said...

@ சே.குமார்

//Superb...........
valiyudan koodiya Arumaiyana varigal//

மிக்க நன்றி குமார்.

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//உங்களுக்குத் தெரியுமோ குன்றன்.
எங்களோட அவரும் தஞ்சம் கேட்டிட்டார் வெளிநாட்டில.அதுதான் அங்க இருக்கிறவையளைக் கவனிக்க ஆருமில்லை !//

அவர் இருக்கும் வரை நல்லாத்தான் கவனிசுட்டார் ஹேமா.

இப்ப துன்பப்படுற மக்களுக்கு உதவி செய்யவாவது கடவுள் என கும்பிட்ட அந்த சாமி வருவாரா என்று தான் கேட்கிறேன்.

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//வலியை சொல்லும் கவிதை..

//அவற்றில் அருள்மையை எதிர்பார்ப்பது அறிவுடைமை ஆகாது என்பது எனது கருத்து..!//


சரியாகச்சொன்னீர்கள் குணசீலன்...//

அருளுடைமை எதிர்பார்ப்பது தவறு தான் நண்பா.இவ்வளவு இன்னலுக்கிடையேயும் அந்த கடவுள் ஏன் வரவில்லை ?
இதற்கு நம்ம ஓம்கார் சுவாமிகள் என்ன சொல்வார்?

பூங்குன்றன்.வே said...

@ வானம்பாடிகள்

//நல்லா இருக்குங்க வலி சொன்ன விதம்.//

ரொம்ப நன்றி ஸார்.

//கண்ணுக்கெட்டிய அல்லவா சரி.//

ஆமால்ல.தமிழை பிழையாக எழுதியதற்கு இன்று காலை சாப்பாடு கட்.(தண்டனை)
பிழை திருத்தியதற்கு மனம் கனிந்த நன்றிகள்.

பூங்குன்றன்.வே said...

@ கலகலப்ரியா

//நல்லா இருக்கு பூங்குன்றன்..!//

மிக்க நன்றி கலா.அடிக்கடி வாங்க.

பூங்குன்றன்.வே said...

@ கல்யாணி சுரேஷ்

//ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க.//

மிக்க நன்றி கல்யாணி.உங்க பேர்ல எனக்கு ஒரு தோழி இருக்காங்க.

பூங்குன்றன்.வே said...

@ tamiluthayam

//கடவுளை(கல்லை) சுமக்க முடியும் என்றால், கடவுளையும் காப்பாற்ற மானுடன் முயல்வான்.//

நான் ஒன்பது வரியில் சொன்னதை நீங்கள் ரொம்ப அழகா ஒரே வரியில் சொல்லி விட்டீர்கள் நண்பரே.

Chitra said...

நீங்க வித்தியாசமா யோசிக்கிறீங்க. எங்களையும் யோசிக்க வைக்குறீங்க. வாழ்த்துக்கள்.

பூங்குன்றன்.வே said...

@ Chitra

//நீங்க வித்தியாசமா யோசிக்கிறீங்க. எங்களையும் யோசிக்க வைக்குறீங்க. வாழ்த்துக்கள்.//

உங்கள் பாராட்டு என்னை மகிழ்ச்சி அடைய வைக்கிறது சித்ரா. ரொம்ப நன்றிங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்குங்க

ஹேமா said...

//பூங்குன்றன்.வே ...

அவர் இருக்கும் வரை நல்லாத்தான் கவனிசுட்டார் ஹேமா.

இப்ப துன்பப்படுற மக்களுக்கு உதவி செய்யவாவது கடவுள் என கும்பிட்ட அந்த சாமி வருவாரா என்று தான் கேட்கிறேன்.//

குன்றன் இதுதான் நம்பிக்கை.
வருவார்.எங்கள் கடவுள் வருவார்.
ஏதோ ஒரு உருவத்திலாவது வருவார்.எங்களைக் கைவிடார் அவர்.
30 வருஷமாய்க் காவல் காத்த தெய்வம்.தமிழ்த் தாயவளை யாரோ ஒருவன் தனதென்று சொந்தம் கொள்ள ஒருபோதும் விடான். வருவான்.

பூங்குன்றன்.வே said...

@ T.V.Radhakrishnan

//நல்லா இருக்குங்க//

மிக்க நன்றி நண்பரே !

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//குன்றன் இதுதான் நம்பிக்கை.
வருவார்.எங்கள் கடவுள் வருவார்.
ஏதோ ஒரு உருவத்திலாவது வருவார்.எங்களைக் கைவிடார் அவர்.
30 வருஷமாய்க் காவல் காத்த தெய்வம்.தமிழ்த் தாயவளை யாரோ ஒருவன் தனதென்று சொந்தம் கொள்ள ஒருபோதும் விடான். வருவான்.//

வரணும் ஹேமா.இனிதான் நம் சகோதர/சகோதரிகளுக்கு அதிக நம்பிக்கை தேவை.தற்சமயம் சோதனை காலம் தான்.இதை பொற்காலமாக மாற்ற முதலில் நம்பிக்கை கொள்வோம். அதுவரை சற்று காத்திருப்போம்.

ரிஷபன் said...

எந்த நாட்டு சரித்திரமும் ரத்த வாசனை இல்லாமல் எழுதப்பட்டதில்லை.. வலியோடு ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.. கடவுளை விட்டுத் தள்ளுங்கள்.. நம்பிக்கையைப் பற்றிக் கொள்ளுங்கள்..

priyamudanprabu said...

கடவுளென பூஜைகள் செய்த
அந்த கல்லையும் தாண்டி......////

அருமையான வரிகள்
சொல்ல வார்த்தையில்லை

பூங்குன்றன்.வே said...

@ ரிஷபன்

//எந்த நாட்டு சரித்திரமும் ரத்த வாசனை இல்லாமல் எழுதப்பட்டதில்லை.. வலியோடு ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.. கடவுளை விட்டுத் தள்ளுங்கள்.. நம்பிக்கையைப் பற்றிக் கொள்ளுங்கள்..//

நீங்கள் சொல்வது உண்மைதான் ரிஷபன்.மிக்க நன்றி.

பூங்குன்றன்.வே said...

@ பிரியமுடன் பிரபு

//கடவுளென பூஜைகள் செய்த,அந்த கல்லையும் தாண்டி......////

//அருமையான வரிகள்.சொல்ல வார்த்தையில்லை//

புரிதலுக்கு மிக்க நன்றி நண்பா..