December 8, 2009

நான்கு மெழுவர்த்திகள் நமக்கு கற்று தரும் நம்பிக்கை !!!




ஓர் இருட்டு அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் ரம்மியமான அழகோடு ஒளிவீசி கொண்டிருந்தன. சற்று நேரம் சென்றதும் அந்த நான்கில் மூன்று பேச ஆரம்பித்தன.

முதல் மெழுகுவர்த்தி "அமைதி" :
இவ்வுலகில் அமைதி என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும் சண்டை,வன்முறை, தீவிரவாதம்,கடன் என இருக்கின்றன.அப்படிப்பட்ட உலகில் நான் வசிக்க விரும்பவில்லை என்றவாறு அணைந்துபோனது.

இரண்டாவது மெழுகுவத்தி "உண்மை":
இவ்வுலகில் உண்மை என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும் பொய்,குழு சண்டை,தேர்தல் வாக்குறுதி, இலவசம் என்றே இருக்கின்றன.அதனால் இங்கு வசிக்க விரும்பவில்லை என்றவாறு அணைந்துபோனது.

மூன்றாவது
மெழுகுவத்தி "அன்பு":
இவ்வுலகில் அன்பு என்கிற நான் இல்லை. எங்கு பார்த்தாலும்  என்றே பணம்,சுயநலம்,அடிதடி என்பதே பிரதானமாக இருக்கின்றன.நீங்கள் இருவர் மட்டுமின்றி நானும் அணைந்து போனால்தான் இம்மக்களுக்கு புத்தி வரும்,அறியாமை என்கிற இருளில் கஷ்டபடட்டும் என்றபடி தன்னை அணைத்துக்கொண்டது.

இந்த மூன்றும் அணைந்த நிலையில் ஒரு மழலை அந்த அறைக்கு வந்து,அணைந்திருந்த அந்த மூன்று மெழுகுவர்த்திகளை பார்த்தபடி எரிந்து கொண்டிருந்த நான்காவது திரியிடம் சென்றது.மூவரும் ஏன் இப்படி அணைந்தனர் என வினவியது.

நான்காவது மெழுவர்த்தி "நம்பிக்கை":
கவலைப்படாதே! நம்பிக்கை என்கிற நான் விடாமுயற்சியுடன் எரிந்து கொண்டிருக்கிறேன்.அணைய மாட்டேன்.அணைந்து போன அமைதி,உண்மை,அன்பு இவற்றை நம்பிக்கை என்கிற என்னை கொண்டு நீ மறுபடியும் ஏற்ற முடியும்.நீ செய்வாயா என்றது.

இதை கேட்ட அந்த மழலை தன் பிஞ்சு கரங்களால் நம்பிக்கை ஒளி கொண்டு மற்ற மூன்றையும் ஏற்ற ஆரம்பித்தது. அறை முழுதும் பிரகாசமானது.


அமைதி,உண்மை,அன்பு மூன்றும் பெரிதுதான் என்றாலும் நம்பிக்கை என்ற ஒளி கொண்டு தான் அடைய முடியும் என்பதை அந்த மழலை உணர்ந்தது. நாம் எப்போது உணர போகிறோம்?

25 comments:

Unknown said...

அதை அனைவரும் உணர்ந்தால் உலகில் முதல் மூன்றும் எப்போதும் நிலைத்து இருக்கும்
அது விரைவில் வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்

Unknown said...

அதை அனைவரும் உணர்ந்தால் உலகில் முதல் மூன்றும் எப்போதும் நிலைத்து இருக்கும்
அது விரைவில் வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்

vasu balaji said...

அருமையான சிந்தனை பூங்குன்றன். பதிவளித்தபின் தமிழ்மணத்தில் முதல் வாக்கு நீங்கள் செலுத்த வேண்டும்.

அன்புடன் மலிக்கா said...

அருமையான பதிவு.

/எங்கு பார்த்தாலும் என்றே பணம்,சுயநலம்,அடிதடி என்பதே பிரதானமாக இருக்கின்றன.நீங்கள் இருவர் மட்டுமின்றி/



//என்றே//
அங்கு வராதென்று நினைக்கிறேன்..

முனைவர் இரா.குணசீலன் said...

அறை மட்டுமல்ல இவ்விடுகையைப் படிக்கும் போது மனதும் பிரகாசமாகிறது..

க.பாலாசி said...

நான்கு பார்வையிலும் சொன்ன சிந்தனைகள், கோர்வைபடுத்தியவிதம் அனைத்தும் அருமை நண்பரே....

Vidhya Chandrasekaran said...

நல்ல பதிவு.

கமலேஷ் said...

அடடா எவ்வளவு அழகான விஷயம்...
அருமையா இருக்கிறது...
வாழ்த்துக்கள் நண்பரே...

புலவன் புலிகேசி said...

//அணைந்து போன அமைதி,உண்மை,அன்பு இவற்றை நம்பிக்கை என்கிற என்னை கொண்டு நீ மறுபடியும் ஏற்ற முடியும்.நீ செய்வாயா என்றது.

இதை கேட்ட அந்த மழலை தன் பிஞ்சு கரங்களால் நம்பிக்கை ஒளி கொண்டு மற்ற மூன்றையும் ஏற்ற ஆரம்பித்தது. அறை முழுதும் பிரகாசமானது.

//

சபாஷ் தல...என்னவொரு சிந்தனை...

ஹேமா said...

உண்மையில் ஒரு சொட்டுக் கண்ணீர்.
இதே நம்பிக்கை இன்னும் எமக்கும் வேண்டும்.ஏற்றுவோம் கர்த்திகைத் தீபங்களை.நன்றி குன்றன்.

Thenammai Lakshmanan said...

//அணைய மாட்டேன்.அணைந்து போன அமைதி,உண்மை,அன்பு இவற்றை நம்பிக்கை என்கிற என்னை கொண்டு நீ மறுபடியும் ஏற்ற முடியும்.நீ செய்வாயா என்றது.//


நம்பிக்கைதான் விளக்கு என்ற பாடல் ஞாபகம் வருது பூங்குன்றன்

அருமை!!!

நம் எல்லாருக்குமான வார்த்தை

பூங்குன்றன்.வே said...

@ Vijay

//அதை அனைவரும் உணர்ந்தால் உலகில் முதல் மூன்றும் எப்போதும் நிலைத்து இருக்கும் அது விரைவில் வரவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்//

நிச்சயமாக வரும் காலங்களில் அமைதி,அன்பு,உண்மை வரும், வரணும்.மிக்க நன்றி விஜய்!!

பூங்குன்றன்.வே said...

@ வானம்பாடிகள்

//அருமையான சிந்தனை பூங்குன்றன். //

மிக்க நன்றி ஸார்.

//பதிவளித்தபின் தமிழ்மணத்தில் முதல் வாக்கு நீங்கள் செலுத்த வேண்டும்.//

ஆலோசனைக்கு மிக்க நன்றி.இனி கண்டிப்பாக செய்கிறேன்.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//அருமையான பதிவு.

/எங்கு பார்த்தாலும் என்றே பணம்,சுயநலம்,அடிதடி என்பதே பிரதானமாக இருக்கின்றன.நீங்கள் இருவர் மட்டுமின்றி/
//என்றே//
அங்கு வராதென்று நினைக்கிறேன்//


பிழை திருத்தியதற்கு மிக்க நன்றி தோழி.

பூங்குன்றன்.வே said...

@ முனைவர்.இரா.குணசீலன்

//அறை மட்டுமல்ல இவ்விடுகையைப் படிக்கும் போது மனதும் பிரகாசமாகிறது..//

மகிழ்ச்சி நண்பரே !

பூங்குன்றன்.வே said...

@ க.பாலாசி

//நான்கு பார்வையிலும் சொன்ன சிந்தனைகள், கோர்வைபடுத்தியவிதம் அனைத்தும் அருமை நண்பரே...//

ரொம்ப மகிழ்ச்சி பாலாசி !

பூங்குன்றன்.வே said...

@ வித்யா

//நல்ல பதிவு.//

நன்றி வித்யா !!!

பூங்குன்றன்.வே said...

@ கமலேஷ்

//அடடா எவ்வளவு அழகான விஷயம்...அருமையா இருக்கிறது...
வாழ்த்துக்கள் நண்பரே...//

வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ புலவன் புலிகேசி

//சபாஷ் தல...என்னவொரு சிந்தனை...//

நன்றி புலிகேசி பாஸ்.

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//உண்மையில் ஒரு சொட்டுக் கண்ணீர்.
இதே நம்பிக்கை இன்னும் எமக்கும் வேண்டும்.ஏற்றுவோம் கர்த்திகைத் தீபங்களை.நன்றி குன்றன்.//

உங்கள் கண்ணீருக்கும், கேள்விகளுக்கும் விரைவில் பதில் கிடைக்கணும் ஹேமா.
நம்பிக்கையோடு இருப்போம் !

பூங்குன்றன்.வே said...

@ thenammailakshmanan

//நம்பிக்கைதான் விளக்கு என்ற பாடல் ஞாபகம் வருது பூங்குன்றன்

அருமை!!!

நம் எல்லாருக்குமான வார்த்தை//

உங்கள் முதல் வருகையும், வாழ்த்தும் உற்சாகம் அளிக்கிறதுங்க.நம்பிக்கை தானே எல்லாவற்றுக்கும் அடிப்படை.

Unknown said...

அருமை அருமை !!!!!!!!!!!!!!

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//அருமை அருமை !!!!!!!!!!//

நன்றி !! நன்றி !!!

திவ்யாஹரி said...

அமைதி,உண்மை,அன்பு மூன்றும் பெரிதுதான் என்றாலும் நம்பிக்கை என்ற ஒளி கொண்டு தான் அடைய முடியும் என்பதை அந்த மழலை உணர்ந்தது. நாம் எப்போது உணர போகிறோம்?

பணம்.. பதவி.. அதிகாரம்.. இதெல்லாம் கண்ணை மறைத்து விடுகிறது.. என்ன செய்வார்கள் பாவம்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான சிந்தனை