December 14, 2009

கவிதைகள்: ஒரு ஸ்வீட்; ஒரு சோகம்;




ஸ்வீட் :
கல்லூரி தேவதையாமே நீ;
கனவு கன்னியாமே நீ;
உன் ஒருபார்வை பொருட்டு
தவம்கூட கிடக்கிறார்களாமே;
நண்பர்கள் என்னிடம் சொல்கையில்
நகைப்புக்கு அளவே இல்லை;
என்றோ பூத்த நம் காதலை
எப்படி சொன்னால் நம்புவார்கள்!!!

 

 















சோகம்:  
ஒற்றை மேகத்தில்
ஒளிந்திருக்குமோ;
திசைமறந்த கிழிந்த காகிதமாய்
தெருவோரம் அலைபாயுமோ;
வெட்டிய மின்னளிடுக்கில்
வேகமாய் மறைந்திருக்குமோ;
சொல்ல பயந்த என் காதல்;

47 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

கல்லூரி தேவதையாமே நீ;
கனவு கன்னியாமே நீ;
உன் ஒருபார்வை பொருட்டு
தவம்கூட கிடக்கிறார்களாமே;
நண்பர்கள் என்னிடம் சொல்கையில்
நகைப்புக்கு அளவே இல்லை;
என்றோ பூத்த நம் காதலை
எப்படி சொன்னால் நம்புவார்கள்!!!


கவிதை அழகாக இருக்கிறது..

இனிக்கிறது!

சொன்ன விதம் அருமை..

சூரியன் வந்தபிறகுதான்
நீ எங்கள் தெருவுக்கு
வருகிறாய் என்றாலும்
நீவந்த பிறகு தான்
எங்கள் தெருவே
விழித்துக்கொள்கிறது

என்ற கவிதை நினைவுக்கு வந்தது நண்பரே..

தங்கள் கவிதையில் முடிக்கும் அடிகள் அழகாகவும் நறுக்கென்றும் இருக்கின்றன..

aazhimazhai said...

வழக்கம் போல நல்ல இருக்கு

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ல்லாருக்கு ச‌கா
கொஞ்ச‌ம் பெரிசா எழுத‌ முய‌ற்சி ப‌ண்ணுங்க‌ முடியும் உங்க‌ளால்

சிவாஜி சங்கர் said...

//என்றோ பூத்த நம் காதலை
எப்படி சொன்னால் நம்புவார்கள்// Soஸ்வீட் :)

செ.சரவணக்குமார் said...

உணர்வுப்பூர்வமான கவிதை நண்பரே..

'பரிவை' சே.குமார் said...

நண்பா,

வணக்கம்.

நன்று. தங்களது கவிதைகள் மிகவும் அருமை.

Prathap Kumar S. said...

//ஒற்றை மேகத்தில்
ஒளிந்திருக்குமோ;
திசைமறந்த கிழிந்த காகிதமாய்
தெருவோரம் அலைபாயுமோ;
வெட்டிய மின்னளிடுக்கில்
வேகமாய் மறைந்திருக்குமோ;
சொல்ல பயந்த என் காதல்; //
...............
...............
...............
...............

அழுதுட்டு இருந்தேன் அதான் வார்த்தையே வரல...:-)

முதல் போட்டோ டாப்பு...கண்களும் கவிபாடுதே...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

"திசை தவறிய கிழிந்த காகிதமாய்
சொல்ல பயந்த காதல் "
அழகான கற்பனை. மின்னலிடுக்கில் பூங்குன்றனின் கவிதை மிளிர்கிறது.

vasu balaji said...

ரொம்ப அழகா இருக்கு கவிதைகள்.

Priya said...

wow...Excellent expression, nice!

Unknown said...

very nice , keep it up.

Paleo God said...

//நகைப்புக்கு அளவே இல்லை;//

உள்ளுக்குள்தானே நகைத்தீர்கள்??... :)

//மின்ன'லி'டுக்கில்//.. இதுதான் சரியா?? .

இரண்டுமே வருடுகிறது..இதயத்தை...

நினைவுகளுடன் -நிகே- said...

இரண்டு கவியும் அழகு
குறிப்பாய் சோகம் என்ற தலைப்பில் அமைந்த
அந்த கவிதை அற்புதம் பாராட்டுக்கள் .

ரிஷபன் said...

சோகம் இரண்டாவது பகுதி மனசினூடே கிழித்துச் செல்கிறது.. என்ன அருமையாய் வார்த்தைகள்.. முதல் பகுதியை விஞ்சி விட்டது நண்பா..

நிலாமதி said...

வெட்டிய மின்னல் இடுக்கில் ....

சோகம் தெரிகிறது.....

தமிழ் உதயம் said...

உலகில் பாதி காதலை பயமே கொன்று போடுகிறது.

thiyaa said...

ந‌ல்லாருக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒற்றை மேகத்தில்
ஒளிந்திருக்குமோ;
//

வரிகள் பிரயோகம் அருமைப்பா..!

புலவன் புலிகேசி said...

//என்றோ பூத்த நம் காதலை
எப்படி சொன்னால் நம்புவார்கள்!!!//

சொல்லுங்க நான் நம்புறேன்..வார்த்தைகளின் கோர்வை மிக அருமை நண்பா

பூங்குன்றன்.வே said...

@ முனைவர்.இரா.குணசீலன்

//தங்கள் கவிதையில் முடிக்கும் அடிகள் அழகாகவும் நறுக்கென்றும் இருக்கின்றன..//

உங்கள் அழகிய தமிழ் இடுகைகளை தொடர்ந்து படிக்கும் ஆனந்தம் அடைபவன் நான்.

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ aazhimazhai

//வழக்கம் போல நல்ல இருக்கு//

மிக்க நன்றி ஆழிமழையே,அதில் ஆடும் துளியே !! :)

பூங்குன்றன்.வே said...

@ க‌ரிச‌ல்கார‌ன்

//ந‌ல்லாருக்கு ச‌கா கொஞ்ச‌ம் பெரிசா எழுத‌ முய‌ற்சி ப‌ண்ணுங்க‌ முடியும் உங்க‌ளால்//

பாஸ்..நீங்க சொன்னா மாதிரி பெருசா எழுதறது பெரிய விஷயமில்லை.ஆனா எனக்கு அதில் எப்போது விருப்பமில்லை நண்பா.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ Sivaji Sankar

//என்றோ பூத்த நம் காதலை
எப்படி சொன்னால் நம்புவார்கள்// Soஸ்வீட் :)

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ செ.சரவணக்குமார்

//உணர்வுப்பூர்வமான கவிதை நண்பரே.//

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ சே.குமார்

//நண்பா,
வணக்கம்.
நன்று. தங்களது கவிதைகள் மிகவும் அருமை.//

நன்றி பாஸ்..எப்படி சார் நீங்க நான்கு வலைப்பூவை அழகா மைன்ட்டன் பண்றீங்க ?

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//அழுதுட்டு இருந்தேன் அதான் வார்த்தையே வரல...:-)//

அச்சோ..ஸோ ஸ்வீட் பிரதாப்..நான் அன்னிக்கே சொன்னேன்.உங்களுக்கும் என்னை மாதிரியே பச்சை புள்ள மனசு :)

//முதல் போட்டோ டாப்பு...கண்களும் கவிபாடுதே...//

ஹி..ஹி..கூகிள் ஆண்டவருக்கு நன்றி,நல்ல படம் கொடுத்தற்காக..

பூங்குன்றன்.வே said...

@ நாய்க்குட்டி மனசு

//"திசை தவறிய கிழிந்த காகிதமாய்
சொல்ல பயந்த காதல் "
அழகான கற்பனை. மின்னலிடுக்கில் பூங்குன்றனின் கவிதை மிளிர்கிறது.//

ரொம்ப அழகா கவனிச்சு புரிந்திருக்கீங்க நண்பா.மிக்க மகிழ்ச்சியும்,நன்றியும்..

பூங்குன்றன்.வே said...

@ வானம்பாடிகள்

//ரொம்ப அழகா இருக்கு கவிதைகள்.//

உங்கள் நல்ல மனசும்,ஆசிர்வாதமும் இருப்பதால் நல்லா போயிட்டு இருக்கு ஸார்.மிக்க நன்றி.

பூங்குன்றன்.வே said...

@ Priya

//wow...Excellent expression, nice!//

என்னங்க..நான் எல்லாம் வெறும் வார்த்தைகளை எழுதி உணர்வை சொல்ல ஆசைப்பட்டா நீங்க ஒரே ஒரு ஓவியத்தின் மூலம் ஆயிரம் கவிதைகளை சொல்லறீங்க.. நீங்க தான் கிரேட்.மிக்க நன்றி ப்ரியா.

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//very nice , keep it up.//

என்னனா..ஆங்கிலத்துல கமன்ட்.. நாளைக்கு ஒரு மாச லீவ்ல இந்தியா போறீங்க..வீட்ல அண்ணி, குழந்தைகளை கேட்டதா சொல்லுங்க. ஹவ் எ கிரேட் வகேஷன்.

பூங்குன்றன்.வே said...

@ பலா பட்டறை

///நகைப்புக்கு அளவே இல்லை;//

உள்ளுக்குள்தானே நகைத்தீர்கள்?? :)//

ஆமாங்க நண்பா.இல்லைன்னா இங்க கல்லால அடிப்பாங்க.

//மின்ன'லி'டுக்கில்//.. இதுதான் சரியா??//

'மின்னலிடுக்கில்'-நீங்க தான் சரி.நான் என்னோட தவறை திருத்திக்கிறேன் நண்பா.

//இரண்டுமே வருடுகிறது.. இதயத்தை...//

மிக்க நன்றி.

பூங்குன்றன்.வே said...

@ நினைவுகளுடன் -நிகே-

//இரண்டு கவியும் அழகு.குறிப்பாய் சோகம் என்ற தலைப்பில் அமைந்த
அந்த கவிதை அற்புதம் பாராட்டுக்கள் //

உங்களின் தொடர் வருகையும்,வாழ்த்தும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது நிகே,மிக்க நன்றிங்க.

பூங்குன்றன்.வே said...

@ ரிஷபன்

//சோகம் இரண்டாவது பகுதி மனசினூடே கிழித்துச் செல்கிறது.. என்ன அருமையாய் வார்த்தைகள்.. முதல் பகுதியை விஞ்சி விட்டது நண்பா//

அப்படியா நண்பரே...எனக்கும் இரண்டாவது கவிதை ரொம்ப பிடிக்கும்.அனுபவித்து எழுதினேன்..
கருத்துக்கு நன்றி ரிஷபன்.

பூங்குன்றன்.வே said...

@ நிலாமதி

//வெட்டிய மின்னல் இடுக்கில் ....
சோகம் தெரிகிறது.....//

ஹ்ம்ம்..சோகமா..இருக்கும்ல்ல.
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நிலா.

பூங்குன்றன்.வே said...

@ tamiluthayam

//உலகில் பாதி காதலை பயமே கொன்று போடுகிறது.//

உண்மைதான் நண்பா.காதலை சொல்ல பயம்..ஏற்பாளா என்ற பயம்..அடிவாங்க பயம்..இப்படி நிறைய.மிக்க நன்றி தமிழ்.

பூங்குன்றன்.வே said...

@ தியாவின் பேனா

//ந‌ல்லாருக்கு//

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தியா.

பூங்குன்றன்.வே said...

@ பிரியமுடன்...வசந்த்

//ஒற்றை மேகத்தில் ஒளிந்திருக்குமோ;//

//வரிகள் பிரயோகம் அருமைப்பா..!//

மிக்க நன்றிப்பா.

பூங்குன்றன்.வே said...

@ புலவன் புலிகேசி

//என்றோ பூத்த நம் காதலை
எப்படி சொன்னால் நம்புவார்கள்!!!//

//சொல்லுங்க நான் நம்புறேன்.. வார்த்தைகளின் கோர்வை மிக அருமை நண்பா//

சரி,சொல்றேன் நண்பா..அது வந்து..அவ என் அஞ்சலை நண்பா...அது வந்து..அழுகையா வருது :)

நேர்ல கதை கதையா சொல்றேன் தல.

sathishsangkavi.blogspot.com said...

//கல்லூரி தேவதையாமே நீ;
கனவு கன்னியாமே நீ;
உன் ஒருபார்வை பொருட்டு
தவம்கூட கிடக்கிறார்களாமே;//

எதார்த்தமான வரிகள், அழகா இருக்கு.......................

Chitra said...

உங்க கவிதைகளை தொடர்ந்து படிக்கிறேன். நாள் நாள் ஆக, மெருகேறி கொண்டே வருது. வாழ்த்துக்கள். வோட்டும் போட்டாச்சு.

விக்னேஷ்வரி said...

ரெண்டும் நல்லாருக்கு.

Unknown said...

அழகா எழுதுறீங்க...,

பூங்குன்றன்.வே said...

@ Sangkavi

////கல்லூரி தேவதையாமே நீ;
கனவு கன்னியாமே நீ;
உன் ஒருபார்வை பொருட்டு
தவம்கூட கிடக்கிறார்களாமே;//
//எதார்த்தமான வரிகள், அழகா இருக்கு.......................//

மிக்க நன்றி நண்பா..

பூங்குன்றன்.வே said...

@ Chitra

//உங்க கவிதைகளை தொடர்ந்து படிக்கிறேன். நாள் நாள் ஆக, மெருகேறி கொண்டே வருது. வாழ்த்துக்கள். வோட்டும் போட்டாச்சு.//

கவிதைகள் மெருகேற நீங்களும், உங்களை போன்ற அன்பு உள்ளங்களின் ஆதரவும் தான் காரணம் சித்ரா.மிக்க நன்றி

பூங்குன்றன்.வே said...

@ விக்னேஷ்வரி

//ரெண்டும் நல்லாருக்கு.//

அப்படியா..ரொம்ப சந்தோஷம். தொடர்ந்து வாங்க,மிக்க நன்றி விக்னேஷ்வரி !!!

பூங்குன்றன்.வே said...

@ பேநா மூடி

//அழகா எழுதுறீங்க...//

நீங்களும் கூடத்தான் பாஸ் அழகாக எழுதறீங்க..ரொம்ப நன்றி பேநா மூடி!!

ஹேமா said...

இரண்டு கவிதைகளின் உணர்வுகளும் ரசிக்க...அதை வேண்ட வைக்கிறது.