(இந்த கவிதை எந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது என்று தலைப்பையும்,கவிதையின் கடைசி வரியையும் படித்தாலே தெரியும்..)
காதல் நீரோடையில்
தேங்கிய காமத்தை
எடுத்து பருக
நெருங்கி வந்து
நெற்றி பொட்டில்
முத்தம் பதித்து
முன்னுரை எழுதா
முதல் இரண்டு
பாகத்தை தொட்டுதிறக்கையில்
பதுங்கிய உன்வெட்கம்
பாய்ந்து விலக
கண்கள் சொருக
அனல்மேல் துடித்து
அழுந்திய உடல்கள்
அமிர்தம் குடிக்க
அகிலமும் மறந்து
சகலமும் துறந்து
தரையில் சாய்கையில்
தலையில் முட்டியது
கோவில் மூலஸ்தானம்;
December 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
81 comments:
கலியுக பூசாரின்னு சரியாதான் இருக்கு தலைப்பு.
புரியுது கதிர்
அனேகமா மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அவமானபடவேண்டிய செயல்...
"அகிலமும் மறந்து
சகலமும் துறந்து
தரையில் சாய்கையில்
தலையில் முட்டியது
கோவில் மூலஸ்தானம் "
உங்க எழுத்துக்கள் ரொம்ப அருமை !!!!!
மிரட்டுகிறாய் பூங்குன்றா,புகைப்பட கோணத்தை பார்த்தாலே தெரியுதே,இது கும்ப கோணம்னு
நான் கண்டு பிடிச்சிட்டேன்..., நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்..,
நன்றாகவுள்ளத நண்பரே..
எடுத்துரைத்த விதம் அழகு!!
கவிதை சூப்பர்,தலைப்பு நச்,புகைப்படம் நெத்தியடி
முட்டுச்சே.. ரத்தம் வந்துச்சா?
புகைப்படமும் அதன் விளக்கக் கவிதையும் மிக அருமை தோழமையே..
ஹா..ஹா ..ஹா ...நல்லா எழுதி இருக்கீங்க.
//அகிலமும் மறந்து
சகலமும் துறந்து
தரையில் சாய்கையில்
தலையில் முட்டியது
கோவில் மூலஸ்தானம்//
சொல்ல வந்த செய்தியை நன்றாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் நண்பா.
பாஸ்போர்ட் கையில் கிடைத்த சந்தோசத்தில் சும்மா பறந்து பறந்து அடிக்கிறீங்களே. அருமை அருமை.
பின்னிட்டீங்க பூ... அருமையான படம், அருமையான தலைப்பு, நச் வரிகள்...
ரொம்ப நேர்த்தியான மனிதர் போல நீங்க.. வலைப்பக்கத்திலிருந்து எல்லாத்திலையும் ஒரு ஒழுங்குமுறை, அழகு இருக்கு... வாழ்த்துக்கள் நண்பா..
//அனல்மேல் துடித்து
அழுந்திய உடல்கள்
அமிர்தம் குடிக்க
அகிலமும் மறந்து
சகலமும் துறந்து//
கவிதையும் படமும்....மிக அருமை...
உண்மையை உணர்வு குன்றாமல் எழுதியிருக்கீங்க...
காஞ்சிபுரம் போலாமா மூலஸ்தானத்தை பார்க்க
என்ன ஒரு கேவலமான செயல்
கவிதை அருமையான நெத்தியடி
//அனல்மேல் துடித்து
அழுந்திய உடல்கள்...
...தரையில் சாய்கையில்
தலையில் முட்டியது
கோவில் மூலஸ்தானம்; //
நண்பா... வரிகளில் கலியுக பூசாரிகளுக்கு சாட்டையடி.
கோவில் மூலஸ்தானம் என்பது எப்படிப்பட்ட இடம் என்பதை குழி தோண்டிப் புதைத்தவர்களுக்கு சாட்டையடி.
அருமை..
ம்.... எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ பூங்குன்றன்.
அருமையான கவிவரிகள்.
சூப்பர்
பராசக்தி பட வசனங்கள் தான் ஞாபகம் வருது.
அருமை
சூப்பரா கவிதை எழுதுறீங்க..
அதவிட பெர்பெக்டா படம் போட்டுருக்கீங்க...
எனக்கு கொஞ்சம் கவித எழுத சொல்லித்தாங்க பிரதர்...!!
வெட்ட வேண்டும்
nallaa irukuguga anna
enna solla nenachikalo atha azhaka solli irukega
கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க. இந்த வரிகள்தான் "முன்னுரை எழுதா
முதல் இரண்டு பாகத்தை தொட்டுதிறக்கையில்" கொஞ்சம் இடிக்கிறது :)
கவிதை அழகு
கலியுகத்தில் மதத்தின் பெயரால் நடக்கும்
கொடுமையை சொன்ன விதம் அழகு
முதல்ல இருந்து கடைசி வரை மூச்சு விடாம படிச்சாச்சு, நல்லா எழுதியிருக்கீங்க நண்பரே.
ஹஹஹ நண்பா என்னச்சொல்ல... அந்த செயலுக்கு நெத்தியடியான கவிதை... படமும் பொருத்தம்...
நியாயமான அறச்சீற்றம்.
படமும்,பதிவும் அருமை நண்பரே...
கைதட்டல்கள் பூங்குன்றன்...!
வருத்தம் மிகுந்த விஷயங்களையும், கவிதையில் காரமா கண்டிச்சு சொல்லியிருக்கும் விதம் நல்லா இருக்கு.
@ சின்ன அம்மிணி
//கலியுக பூசாரின்னு சரியாதான் இருக்கு தலைப்பு.//
புரிதலுக்கும்,கருத்துக்கும் நன்றி சின்ன அம்மிணி.
@ aazhimazhai
//புரியுது கதிர்.அனேகமா மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அவமான படவேண்டிய செயல்...
"அகிலமும் மறந்து
சகலமும் துறந்து
தரையில் சாய்கையில்
தலையில் முட்டியது
கோவில் மூலஸ்தானம் "
உங்க எழுத்துக்கள் ரொம்ப அருமை!//
பூசாரிகள்/அர்ச்சகர்கள் எல்லோரும் தப்பு பண்றதில்லை,எல்லா தொழிலையும் கெட்டவங்க இருக்காங்க.ஆனாலும் இந்த கோவிலுக்குள்ள தப்பு பண்ணதை எந்தவிதத்திலும் ஞ்யாப்படுத்த முடியாது.கருத்துக்கு நன்றி கல்யாணி---கதிர்.
@ ஜெரி ஈசானந்தா
//மிரட்டுகிறாய் பூங்குன்றா,புகைப்பட கோணத்தை பார்த்தாலே தெரியுதே, இது கும்ப கோணம்னு//
நான் சொல்லவந்தது காஞ்சிபுரம் மேட்டர் ஸார்.கும்பகோணம் விஷயம் தெரியாதே? உங்களின் கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி ஜெரி ஈசானந்தா.
@ பேநா மூடி
//நான் கண்டு பிடிச்சிட்டேன்., நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள்..,//
அதே..அதே மேட்டர் தான் பாஸ்.நன்றி.
@ முனைவர்.இரா.குணசீலன்
//நன்றாகவுள்ளத நண்பரே.. எடுத்துரைத்த விதம் அழகு!!//
மிக்க நன்றி நண்பா.
@ கரிசல்காரன்
//கவிதை சூப்பர்,தலைப்பு நச், புகைப்படம் நெத்தியடி//
அப்படியா? நன்றி பாஸ்.
@ கலையரசன்
//முட்டுச்சே.. ரத்தம் வந்துச்சா?//
இல்லை பாஸ்..லைட்டா சின்ன வீக்கம் மட்டும்..நன்றி.
@ அன்புடன் மலிக்கா
//புகைப்படமும் அதன் விளக்கக் கவிதையும் மிக அருமை தோழமையே..//
மிக்க நன்றி தோழியே.
@ இளவட்டம்
//ஹா..ஹா ..ஹா ...நல்லா எழுதி இருக்கீங்க.//
நீங்க கூட நல்லா சிரித்து கருத்து சொல்லிருக்கீங்க பாஸ்.ஐ லைக் இட்.நன்றி.
@ செ.சரவணக்குமார்
//அகிலமும் மறந்து
சகலமும் துறந்து
தரையில் சாய்கையில்
தலையில் முட்டியது
கோவில் மூலஸ்தானம்//
//சொல்ல வந்த செய்தியை நன்றாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் நண்பா//
மிக்க நன்றி செ.சரவணக்குமார் !!!
@ S.A. நவாஸுதீன்
//பாஸ்போர்ட் கையில் கிடைத்த சந்தோசத்தில் சும்மா பறந்து பறந்து அடிக்கிறீங்களே. அருமை அருமை.//
ஆமா ஸார்..பாஸ்போர்ட் திரும்ப வாங்கினபின் கொஞ்சம் ஆட்டம் அதிகம் ஆயிடுச்சு எனக்கு.. கட்டுப்படுத்தணும்.என் மனைவிய பார்த்தா மட்டும் பொட்டிபாம்பா அடங்கிடும் வீரன் நான்.ஹி ஹி..
@ பலா பட்டறை
//பின்னிட்டீங்க பூ... அருமையான படம், அருமையான தலைப்பு, நச் வரிகள்...//
ரொம்ப நன்றி!
//ரொம்ப நேர்த்தியான மனிதர் போல நீங்க.. வலைப்பக்கத்திலிருந்து எல்லாத்திலையும் ஒரு ஒழுங்கு முறை, அழகு இருக்கு... வாழ்த்துக்கள் நண்பா..//
ச்சே..ச்சே..அப்படில்லைன்னு சொல்லமாட்டேன் நான் :)
@ க.பாலாசி
////அனல்மேல் துடித்து
அழுந்திய உடல்கள்
அமிர்தம் குடிக்க
அகிலமும் மறந்து
சகலமும் துறந்து//
கவிதையும் படமும்..மிக அருமை.//
நீங்களும் பட்டையை கிளப்புறீங்க தல..
@ தமிழரசி
//உண்மையை உணர்வு குன்றாமல் எழுதியிருக்கீங்க...//
நீங்கள் வருகை தந்ததும்,கருத்துரை இட்டதும் மிக்க மகிழ்ச்சி எனக்கு. நன்றிங்க.
@ Vijay
//காஞ்சிபுரம் போலாமா மூலஸ்தானத்தை பார்க்க.என்ன ஒரு கேவலமான செயல்.கவிதை அருமையான நெத்தியடி//
நீ சொன்னா மாதிரி ரொம்ப கேவலமான செயல்.என்ன பண்ணலாம் நண்பா?
@ சே.குமார்
////அனல்மேல் துடித்து
அழுந்திய உடல்கள்...
...தரையில் சாய்கையில்
தலையில் முட்டியது
கோவில் மூலஸ்தானம்; //
நண்பா... வரிகளில் கலியுக பூசாரிகளுக்கு சாட்டையடி.
கோவில் மூலஸ்தானம் என்பது எப்படிப்பட்ட இடம் என்பதை குழி தோண்டிப் புதைத்தவர்களுக்கு சாட்டையடி.
அருமை..
ம்.... எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ பூங்குன்றன்.
அருமையான கவிவரிகள்.//
புதுசா எதுவும் யோசிக்கவில்லை நண்பரே.நடந்த ஒரு கேவலமான விஷயத்தை கவிதையில் சொல்ல முயன்று இருக்கேன்.இருந்தாலும் உங்க பாராட்டு மனநிறைவை தருகிறது.வருகை தந்து வாழ்த்தியதற்கு நன்றி பாஸ்.
@ வானம்பாடிகள்
//சூப்பர்//
ஒரு வார்த்தையில் வாழ்த்தினாலும், பெரியவங்க வாழ்த்து பெரிசுதானே... நீங்க செய்த பல உதவிகளுக்கு நான் எப்படி நன்றி சொல்வது பாஸ்?
@ கண்மணி
//பராசக்தி பட வசனங்கள் தான் ஞாபகம் வருது.அருமை//
எத்தனை பராசக்தி வந்தாலும் இந்த மாதிரி ஆட்களை திருத்துவது சந்தேகம் கண்மணி.
@ ரசிக்கும் சீமாட்டி
//சூப்பரா கவிதை எழுதுறீங்க.. அதவிட பெர்பெக்டா படம் போட்டுருக்கீங்க..//
இதுக்கு பேர்தாங்க படம் பார்த்து கவிதை சொல்றது :)
//எனக்கு கொஞ்சம் கவித எழுத சொல்லித்தாங்க பிரதர்...!!//
இப்படி ஒரு பச்சை புள்ளைய போட்டு கிண்டல் பண்றது சரி இல்லைங்க :)
தலைப்பும் கவிதையும் மிகவும் நன்று....அழகாக நயம் பட உரைத்திருக்கிறீர்கள்.
@ போர்வாள்
//வெட்ட வேண்டும்//
சரியான தண்டனை தான்..
எனக்கு தெளிவா புரிஞ்சிது..கவிதை வடிவ சாடல் நன்று நண்பரே....
அட்ராசக்கை..... அட்ராசக்கை..... அட்ராசக்கை.....
பட்டைய கிளப்புறாங்கப்பா...
நல்லா எழுதி இருக்கீங்க
ரொம்ப நல்லாயிருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தலைவரே..
@ gayathri
//nallaairukuguga anna,enna solla nenachikalo atha azhaka solli irukega//
ரொம்ப நன்றி தங்கச்சி,உங்களின் கருத்துக்கு..
@ Mohan
//கவிதை ரொம்ப நல்லாயிருக்குங்க. இந்த வரிகள்தான் "முன்னுரை எழுதா
முதல் இரண்டு பாகத்தை தொட்டு திறக்கையில்" கொஞ்சம் இடிக்கிறது:)//
ஒரு புத்தகத்திற்கு முன்னுரை இல்லையென்றால் முழுமையாக இருக்குமா?அதுபோல அவள் 'முதல் இரண்டு பாகத்தை'முன்னரை இல்லா புத்தகம் போல பாதி திறந்தபடி இருக்கிறாள் என்று எழுதிய வரிகள்.. நன்றி நண்பா.
@ நினைவுகளுடன் -நிகே-
//கவிதை அழகு,கலியுகத்தில் மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமையை சொன்ன விதம் அழகு//
நன்றி நிகே, உங்களுக்கு கவிதை பிடித்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி..
@ SUFFIX
//முதல்ல இருந்து கடைசி வரை மூச்சு விடாம படிச்சாச்சு, நல்லா எழுதியிருக்கீங்க நண்பரே.//
என் கவிதை அவ்ளோ நல்லாவா இருக்கு?மிகுந்த சந்தோசம் நண்பா.
@ நாஞ்சில் பிரதாப்
//ஹஹஹ நண்பா என்னச்சொல்ல... அந்த செயலுக்கு நெத்தியடியான கவிதை... படமும் பொருத்தம்...//
வாங்க தல,
நெத்தியடி,சாட்டையடி கொடுத்தாலும் இந்த மாதிரி ஆட்கள் திருந்த மாட்டாங்க..என்ன செய்ய?
@ துபாய் ராஜா
//நியாயமான அறச்சீற்றம்.
படமும்,பதிவும் அருமை நண்பரே...//
மிக்க நன்றி பாஸ்.
@ பிரியமுடன்...வசந்த்
//கைதட்டல்கள் பூங்குன்றன்...!//
நன்றி நண்பா..ஊர்ல மழை எப்படி ?
@ Chitra
//வருத்தம் மிகுந்த விஷயங்களையும், கவிதையில் காரமா கண்டிச்சு சொல்லி யிருக்கும் விதம் நல்லா இருக்கு.//
வாங்க சித்ரா,
எப்பவும் உங்க கமண்ட்ஸ் எனக்கு டானிக்.
@ நிலாமதி
//தலைப்பும் கவிதையும் மிகவும் நன்று....அழகாக நயம் பட உரைத்திருக்கிறீர்கள்.//
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நிலாமதி !!!
@ புலவன் புலிகேசி
//எனக்கு தெளிவா புரிஞ்சிது..கவிதை வடிவ சாடல் நன்று நண்பரே....//
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தல.
@ ரோஸ்விக்
//அட்ராசக்கை...அட்ராசக்கை..... அட்ராசக்கை.....பட்டைய கிளப்புறாங்கப்பா...//
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பா.
நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க.
@ T.V.Radhakrishnan
//நல்லா எழுதி இருக்கீங்க//
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி T.V.R!
@ Sivaji Sankar
//ரொம்ப நல்லாயிருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தலைவரே..//
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நண்பா.
அன்பு பூங்குன்றன் எப்போ வேணாலும் நீங்க கருத்து சொல்லலாம் தவறென்றால் தர்க்கமே கிடையாது அட ஆமால்ல என்று கற்றுக்கொள்ளவே விருப்பம் :) இது எப்படி வந்ததுன்னு விளக்கி ( ?? ) இருக்கிறேன் வந்து சரியா பாருங்கள் ::)))
- பலா பட்டறை
படம் சொல்லும் கவிதையாய்.
பாராட்டுக்கள் குன்றன்.
அருமையான சவுக்கடி கவிதை... பட் நீங்க அந்த கவிதையை பற்றிய விளக்க உரை கொடுத்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்,என்றால் வாசகனே யோசித்து அறியும் போது அதன் சுவை என்னும் கொஞ்சம் கூடி இருக்கும் போல் தோன்றுகிறது...
ஆனால் கவிதையை கொண்டுபோன வழியும் முறையும் வெகு நேர்த்தி...கலகிட்டிங்க....பாஸ்....
ஆமாம்,,
இந்த புகை படத்தை எங்க எடுத்தீர்கள்...
கவிதையோடு நெருங்கி பேசுகிறது...hands off...
@ ஹேமா
//படம் சொல்லும் கவிதையாய். பாராட்டுக்கள் குன்றன்.//
ரொம்ப நாள் உங்களை காணல தோழி.
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
@ கமலேஷ்
//அருமையான சவுக்கடி கவிதை... பட் நீங்க அந்த கவிதையை பற்றிய விளக்க உரை கொடுத்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன், என்றால் வாசகனே யோசித்துஅறியும் போது அதன்சுவை என்னும் கொஞ்சம் கூடி இருக்கும் போல் தோன்றுகிறது...//
நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே..உங்கள் கருத்து சரியானதே !!!
//ஆனால் கவிதையை கொண்டுபோன வழியும் முறையும் வெகுநேர்த்தி...கலகிட்டிங்க..பாஸ்.
ஆமாம்,,இந்த புகை படத்தை எங்க எடுத்தீர்கள்.கவிதையோடு நெருங்கி பேசுகிறது...hands off...//
எப்பவும் எனக்கு புகைப்படங்களை தருவது நம்ம கூகிள் ஆண்டவர் தான் நண்பா.
கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி கமலேஷ் !!!!
ந்ச்ன்னு இருக்கு பூங்குன்றன்
வாவ்... ரொம்ப நல்லாயிருக்கு!
அருமையா இருந்துச்சு நண்பா..
காமத்தின் சாட்சியாய் கடவுள்
நல்லா இருக்கு நண்பா
விஜய்
@ சி. கருணாகரசு
//ந்ச்ன்னு இருக்கு பூங்குன்றன்//
நன்றி நண்பரே !!!
@ Priya
//வாவ்... ரொம்ப நல்லாயிருக்கு!//
நன்றி ப்ரியா !!! நீங்களும் படங்கள்,ஓவியங்கள் என்று தூள் பண்றீங்க!!!
@ வினோத்கெளதம்
//அருமையா இருந்துச்சு நண்பா..//
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி வினோத் !!!
@ கவிதை(கள்)
//காமத்தின் சாட்சியாய் கடவுள்,
நல்லா இருக்கு நண்பா-விஜய்//
மிக்க நன்றி பாஸ் !!!
நல்லா இருக்கு பூங்குன்றன்
@ thenammailakshmanan
//நல்லா இருக்கு பூங்குன்றன்//
மிக்க நன்றி thenammailakshmanan !!!
Post a Comment