December 20, 2009

எஞ்சாமி எங்க போச்சு ?



பகல் உழைச்சு இரவு தூங்க
நோவுக்கு தைலம் தேச்சி
காத்தால எந்திரிச்சா
கடன்கொடுத்தவன் கண்ணெதிர;
ஆயிரம் பொய் சொல்லி
அன்னிக்கும் வேலைக்கு போயி
ஐஞ்சு பத்து கூலிக்கு
இடுப்பொடிந்து வேலைசெஞ்சு
ஊட்டுக்கு சுருக்கா வந்து
உப்புபோடாம கஞ்சி குடிச்சி
உலக்கைய தலையில் வைச்சு
பாதிவுறக்க அசதியில
படுத்துக்கினு இருக்கறப்ப
மாராப்பு வெலக்கி இடுப்பை நெருக்கினவனை
பதறிபோய் பார்த்தா
'கம்முன்னு கிடந்தா கடனை அடைசிரலாம்'
கடன்கொடுத்த ராசா சொல்லுறப்ப
சுருக்குன்னு கோவம் தலைக்கேறி
பிஞ்சுபோன செருப்பாலடிச்சி
துரத்திவிட்டு நினைச்சுக்கிட்டேன்
எஞ்சாமி எங்க போச்சு;
கல்லாவே மாறி போச்சு !!!

91 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

மீன்துள்ளியான் said...

அருமை அருமை

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Please change the settings .. comment panrappa pop up aguthu ...athe page la vara mathiri pannunga

க‌ரிச‌ல்கார‌ன் said...

சூப்ப‌ர் க‌விதையும் ப‌ட‌மும்

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ல்ல‌ க‌விதை ந‌டை இப்ப‌டியே புரிய‌ர‌ மாதிரி எழுதுங்க‌ள்

gayathri said...

nalla irukuga anna

'பரிவை' சே.குமார் said...

//'கம்முன்னு கிடந்தா கடனை அடைசிரலாம்'
கடன்கொடுத்த ராசா சொல்லுறப்ப...
எஞ்சாமி எங்க போச்சு;
கல்லாவே மாறி போச்சு //

கையை கொடுங்க பூங்குன்றன்.
குன்றாத கவிவரிகள்.

சற்று முன்னர்தான் எனது வலையில் தங்கள் கருத்துக்கு பின்னூட்டம் இடும்போது ரெண்டு நாளா எழுதலையோன்னு கேட்டேன். இங்க வந்து பார்த்தா....

பின்னிட்டிங்க. நமக்கெல்லாம் இவ்வளவு அருமையா வராதுங்க.

அண்ணாமலையான் said...

கவிதைய படைச்சதும்
கடவுள படைச்சதும்
மனுஷந்தான்
கவிதைக்கு உயிர் இருக்கு
கடவுள் இன்னும் கல்லாவே இருக்கார்....

S.A. நவாஸுதீன் said...

வாவ். ரொம்ப நல்லா இருக்கு பூங்குன்றன். அசத்துறீங்க போங்க

இளவட்டம் said...

Nice One.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை அருமை ; வறுமையின் நிறம் சிவப்பு

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ur concern over poor people is appreciable poongundran. u can use orkut scrap to get correct spelling for some words.

Prathap Kumar S. said...

சூப்பர் நண்பா... இந்த மாதிரி பகுத்தறிவு, சமூகம் சம்பந்தமான கவிதைகளையும் உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன்...

Paleo God said...

போன ஜென்மத்து ஆத்மா இரண்டாய் பிரிந்து ஒன்று என்னிலும் ஒன்று உன்னிலும் இருப்பதாய் ஒரு உணர்வு நண்பா :))... வாழ்க வளர்க..

Chitra said...

கவிதை நடை அருமை. சாமி கல் ஆவதில்லை. சாமியை கல்லில் மட்டும் வைத்திருப்பதால் மனித நேயம் செத்து போச்சு..

திருவாரூர் சரவணா said...

ஆறு வருஷத்துக்கு முன்னால ஒரு கவிதை எழுதுனதுக்கு அப்புறம் (எண்டர் தட்டிதான்) ஒண்ணுமே முடியல...அதை விட சுலபமானது கவிதைகளைப் படிச்சுடுறது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களின் அவல நிலையை நறுக்குன்னு சொல்லிட்டீங்க. ஒரு விஷயம்தான் ரொம்ப நெருடலா இருக்கு. விவசாயி உற்பத்தி செயுறவன். அவன் நிலை மோசமா இருக்கு. ஆனா இடைத்தரகர்கள் கோடிக்கணக்குல சம்பாதிக்கிறான்களே. ஒரு தொழிலாள நாலு பேரும்ரும் சம்பாதிச்சாதான் நாடு நல்லா இருக்க முடியும். ஆனா உற்பத்தி செய்யுறவன் நடுத்தெருவுல நிக்கறதுதான் கொடுமை.

SUFFIX said...

அருமையான வரிகளில் ஆதங்கம்.

செ.சரவணக்குமார் said...

கவிதை மிகப் பிடித்திருந்தது நண்பரே. புகைப்படம் மிக அருமை.

na.jothi said...

நல்லா இருக்கு பூங்குன்றன்
கிராமத்து வாசம்

Keddavan said...

கவிதைல நல்லயிருக்கின்றது..படித்து முடிக்கும்போது மனதுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் கவிதைகள் தான் சிறந்தகவிதைகள் என நான் நினைக்கின்றேன்..உங்கள் கவிதையும் அந்தவகையிலே அடங்கும்..

கலையரசன் said...

மமம்ம்ம்ம்ம்ம்...

இப்டி எழுத எல்லாம் மூளை வேணுமுன்னு சொல்றாங்களே, உண்மையா பாஸ்?

swizram said...

ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்க !!
எனக்கு தான் கவிதை எழுத சொல்லிதரமாட்டேன்னு சொல்லிடீங்க :(

கமலேஷ் said...

என்ன குரு.. கவிதைல நாளுக்கு நாள் பயங்கர வளர்ச்சி தெரியுது..
கவிதை சும்மா பின்னுது போங்க...
வாழ்த்துக்கள்..

தமிழ் உதயம் said...

வறுமை பெண்களோடு விளையாடினால், அவளோடு மேலும் பலர் விளையாட நினைக்கின்றனர். சிறப்பான கவிதை

விஜய் said...

இடை பிடித்த கிழாரின் கரும்பணக்காமம்

வார்த்தை பிரயோக விதம் அழகு, அருமை

விஜய்

அன்புடன் மலிக்கா said...

நாளுக்கு நாள் மெருகேருகிறது எழுத்துக்கள் ..
இன்னும் மிளிர வாழ்த்துக்கள்...

divyahari said...

"எஞ்சாமி எங்க போச்சு;
கல்லாவே மாறி போச்சு !!!"

கமல் சொல்வது போல "கடவுள் இருந்தால் நல்லா தான் இருக்கும்.."

படிச்சதும் மனசுக்குள்ள ஒரு பாரம்.. நன்று நண்பா..

சுசி said...

அத்தனை வரிகளும் அருமை.

உண்மை வலிக்குது.

ஹேமா said...

வறுமை இல்லாவிட்டாலும் நானும்தான் தேடுறேன் இந்தக் கடவுளை.கேள்வியெல்லாம் எழுதி வைச்சு ரொம்ப நாளாச்சு குன்றன் !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

" ஏஞ்சாமி எங்கே போச்சு?" - அவளுடைய,
வாழ்க்கைத்துணைவன்..சக ஹிருதயன்..
பாதுகாவலன்...ஒன்றுக்கும் லாயக்கு இல்லாத
குடிகாரனாக இருப்பானோ!

பூங்குன்றன்.வே said...

@ T.V.Radhakrishnan

//அருமை//

மிக்க நன்றி T.V.R !!!

பூங்குன்றன்.வே said...

@ மீன்துள்ளியான்

//அருமை அருமை//
//Please change the settings .. comment panrappa pop up aguthu ...athe page la vara mathiri pannunga//

நீங்கள் சொன்னபடி மாற்றிவிட்டேன் நண்பா,மிக்க நன்றி!!

பூங்குன்றன்.வே said...

@ க‌ரிச‌ல்கார‌ன்

//சூப்ப‌ர் க‌விதையும் ப‌ட‌மும்//

உங்கள் வருகையும்,கருத்தும் சூப்பர் !!

பூங்குன்றன்.வே said...

@ க‌ரிச‌ல்கார‌ன்

//ந‌ல்ல‌ க‌விதை ந‌டை இப்ப‌டியே புரிய‌ர‌ மாதிரி எழுதுங்க‌ள்//

இனி உங்களுக்கு பிடித்த மாதிரி எழுத முயற்சி செய்கிறேன் நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ gayathri

//nalla irukuga anna//

ரொம்ப நன்றி தங்கச்சி !!!

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம் நல்லாருக்கு பூங்குன்றன்

கிராமத்து தென்றல் இன்னும் கொஞ்சம் சிரத்தையெடுத்திருந்தால் மிகச்சிறப்பாய் வந்துருக்கும்...

பூங்குன்றன்.வே said...

@ சே.குமார்

//'கம்முன்னு கிடந்தா கடனை அடைசிரலாம்'
கடன்கொடுத்த ராசா சொல்லுறப்ப...
எஞ்சாமி எங்க போச்சு;
கல்லாவே மாறி போச்சு //

கையை கொடுங்க பூங்குன்றன்.குன்றாத கவிவரிகள்.சற்று முன்னர்தான் எனது வலையில் தங்கள் கருத்துக்கு பின்னூட்டம் இடும்போது ரெண்டு நாளா எழுதலையோன்னு கேட்டேன். இங்க வந்து பார்த்தா....
பின்னிட்டிங்க. நமக்கெல்லாம் இவ்வளவு அருமையா வராதுங்க.//

ஆம் நண்பா, ரெண்டு நாளா கொஞ்சம் பணிச்சுமை காரணமாக எழுத முடியவில்லை;நான் ரொம்ப சாதாரணமா எழுதுவதை கூட நீங்கள் பெருந்தன்மையாக பாராட்டுவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

பூங்குன்றன்.வே said...

@ அண்ணாமலையான்

//கவிதைய படைச்சதும் கடவுள படைச்சதும்
மனுஷந்தான் கவிதைக்கு உயிர் இருக்கு கடவுள் இன்னும் கல்லாவே இருக்கார்....//

அதாங்க என் கேள்வியும்...கடவுள் இல்லைன்னு சொல்லல; ஆனா இருந்தா நல்லாயிருக்கும் தானே !

பூங்குன்றன்.வே said...

@ S.A. நவாஸுதீன்

//வாவ். ரொம்ப நல்லா இருக்கு பூங்குன்றன். அசத்துறீங்க போங்க//

உங்களைவிடவா நான் அசத்துறேன் நண்பரே !!
மிக்க நன்றி S.A. நவாஸுதீன் !

பூங்குன்றன்.வே said...

@ இளவட்டம்

//Nice One.//

மிக்க நன்றி இளவட்டம் !!!

பூங்குன்றன்.வே said...

@ Starjan ( ஸ்டார்ஜன் )

//கவிதை அருமை ; வறுமையின் நிறம் சிவப்பு//

வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி !!!

பூங்குன்றன்.வே said...

@ நாய்க்குட்டி மனசு

//ur concern over poor people is appreciable poongundran. u can use orkut scrap to get correct spelling for some words.//

கருத்துக்கு மிக்க நன்றி, இந்த கவிதையை பொறுத்தவரை எந்த வார்த்தைப்பிழையும் இருப்பதாக தெரியவில்லை,எந்த வார்த்தை தவறு என்று சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொள்ள தயாராக இருக்கேன் நண்பரே !!

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//சூப்பர் நண்பா... இந்த மாதிரி பகுத்தறிவு, சமூகம் சம்பந்தமான கவிதைகளையும் உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன்...//

நிச்சயமாக எழுத முயற்சிக்கிறேன் நண்பா !

பூங்குன்றன்.வே said...

@ பலா பட்டறை

//போன ஜென்மத்து ஆத்மா இரண்டாய் பிரிந்து ஒன்று என்னிலும் ஒன்று உன்னிலும் இருப்பதாய் ஒரு உணர்வு நண்பா :))... வாழ்க வளர்க..//

எனக்கும் அப்படிதான் இருக்கு நண்பா.இந்த உணர்வுக்கு பெயர்தான் நட்போ !!!

பூங்குன்றன்.வே said...

@ Chitra

//கவிதை நடை அருமை. சாமி கல் ஆவதில்லை. சாமியை கல்லில் மட்டும் வைத்திருப்பதால் மனித நேயம் செத்து போச்சு..//

சாமி இருந்திருந்தா கல் ஆகியிருக்குமா இல்ல இந்த மாதிரி கஷ்டம் தான் அடித்தள மக்களுக்கு வந்திருக்குமா சித்ரா? அப்படிப்பட்ட ஒரு ஆள் இருக்காரா என்றுதான் தெரியல...இனி வேண்டவே வேண்டாம்.

பூங்குன்றன்.வே said...

@ சரண்

//ஆறு வருஷத்துக்கு முன்னால ஒரு கவிதை எழுதுனதுக்கு அப்புறம் (எண்டர் தட்டிதான்) ஒண்ணுமே முடியல...அதை விட சுலபமானது கவிதைகளைப் படிச்சுடுறது.//

நீங்க இப்படி சொல்றது உங்க தன்னடக்கத்தை காட்டுது சரண் !!

//பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களின் அவல நிலையை நறுக்குன்னு சொல்லிட்டீங்க.

ஒரு விஷயம்தான் ரொம்ப நெருடலா இருக்கு. விவசாயி உற்பத்தி செயுறவன். அவன் நிலை மோசமா இருக்கு. ஆனா இடைத்தரகர்கள் கோடிக்கணக்குல சம்பாதிக்கிறான்களே. ஒரு தொழிலாள நாலு பேரும்ரும் சம்பாதிச்சாதான் நாடு நல்லா இருக்க முடியும். ஆனா உற்பத்தி செய்யுறவன் நடுத்தெருவுல நிக்கறதுதான் கொடுமை.//

இந்த முதலாளித்துவம் ஒழிஞ்சாத்தான் நாடு முன்னேறமுடியும்.ஐம்பது வருஷம் முன்னால இருக்கும்போதும் ஏழை ஏழைதான்; இப்ப கணிப்பொறி காலத்திலும் ஏழை ஏழைதான்; உங்க உணர்வு புரியுது பாஸ்..என்ன செய்யறதுன்னு தான்தெரியல.

பூங்குன்றன்.வே said...

@ SUFFIX

//அருமையான வரிகளில் ஆதங்கம்.//

மிக்க நன்றி SUFFIX !!!

பூங்குன்றன்.வே said...

@ செ.சரவணக்குமார்

//கவிதை மிகப் பிடித்திருந்தது நண்பரே. புகைப்படம் மிக அருமை.//

உங்களின் தொடர் வருகை எனக்கு மிகுந்த உற்சாகம் நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ ஜோதி

//நல்லா இருக்கு பூங்குன்றன்,கிராமத்து வாசம்//

இப்ப மாசம் லட்சக்கணக்குல சம்பாதித்தாலும் நான் அடிப்படையில் ஒரு கிராமத்தான் என்பதில் பெருமைதாங்க ஜோதி !!!

பூங்குன்றன்.வே said...

@ தமிழ்குறிஞ்சி

//தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.//

என் படைப்பை வெளியிட்டதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே! மிக்க நன்றி தமிழ்குறிஞ்சி !!!

பூங்குன்றன்.வே said...

@ rajeepan

//கவிதைல நல்லயிருக்கின்றது..படித்து முடிக்கும்போது மனதுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் கவிதைகள் தான் சிறந்தகவிதைகள் என நான் நினைக்கின்றேன்..உங்கள் கவிதையும் அந்தவகையிலே அடங்கும்..//

உங்களின் முதல் வருகைக்கும்,என் மனம் குளிர வைத்த பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ கலையரசன்

//மமம்ம்ம்ம்ம்ம்...,இப்டி எழுத எல்லாம் மூளை வேணுமுன்னு சொல்றாங்களே, உண்மையா பாஸ்?//

இது கிண்டல் தானே! மூளை இல்லாத என்கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்பது உங்களுக்கே நியாயமா பாஸ் :)

பூங்குன்றன்.வே said...

@ ரசிக்கும் சீமாட்டி

//ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்க !!எனக்கு தான் கவிதை எழுத சொல்லிதரமாட்டேன்னு சொல்லிடீங்க//

என்னங்க இப்படி கிண்டல் பண்றீங்க! உங்களுக்கு கவிதை எழுது சொல்லிதர மாட்டேன்னு நான் எப்பவும் சொல்லல.

அது ஒண்ணும் பெரிய விஷயமில்லைங்க.ஒரு கருவை மனசில் உருவாக்கிவிட்டு அதை நல்ல தமிழில் நாலு முறை எழுதி பாருங்க.

கொஞ்சம் எதுகை,மோனை,நயம்,ரசிக்கவைக்கும் தன்மை இப்படி சில அம்சங்களை பாருங்கள். சொல்ல வந்த கருவை நறுக்கென்று சொல்லமுடியுமா என்று உங்களை நீங்களே ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.

கவிதை என்பது குழந்தை தவழ்வது முதல் காமம் வரை என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.சமூகம்,கல்வி,அரசியல்,ஆலமரம்,காடு,ஆறு இப்படி பல தலைப்புகளில் எழுதி பழகுங்கள்;

சித்திரமும் கைப்பழக்கம், கவிதையும் முயற்சித்தால் முடியும்..இன்னும் உங்களுக்கு எளிமையாக சொல்லவேண்டுமெனில் என்னுடைய மின்னஞ்சலுக்கு ஒரு கடிதம் அனுப்பினால், எப்படியாவது சுமாராக எழுதும் நான் உங்களுக்கு சொல்லிதர தயார்.

என்னைவிட நிறைய ஆண்/பெண் தோழிகள் மிக அழகாக கவிதை படிக்கிறார்கள்.விடாமல் படியுங்கள்..ஒருநாள் நல்ல கவிதை உங்கள் வசமாகும்.வாழ்த்துக்கள் தோழி !!!

பூங்குன்றன்.வே said...

@ கமலேஷ்

//என்ன குரு.. கவிதைல நாளுக்கு நாள் பயங்கர வளர்ச்சி தெரியுது..கவிதை சும்மா பின்னுது போங்க...வாழ்த்துக்கள்..//

பாஸ்...வளர்ச்சியெல்லாம் ஒண்ணுமில்லை;
மனசுல தோன்றியதை எழுதினேன்.மிக்க நன்றி கமலேஷ் !!

பூங்குன்றன்.வே said...

@ tamiluthayam

//வறுமை பெண்களோடு விளையாடினால், அவளோடு மேலும் பலர் விளையாட நினைக்கின்றனர். சிறப்பான கவிதை//

ஆமாங்க.கலிகாலம் முத்திபோச்சு.சதை ஆசை இன்னும் குறையவில்லை,வறுமையை விட மானம் தான் பெரிசு என்னும் கிராம மக்கள் இன்னும் இருக்கிறார்கள்.

பூங்குன்றன்.வே said...

கவிதை(கள்)

//இடை பிடித்த கிழாரின் கரும்பணக்காமம்//

இது அருமையா இருக்கே!

//வார்த்தை பிரயோக விதம் அழகு, அருமை//

மிக்க நன்றி விஜய் !!

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//நாளுக்கு நாள் மெருகேருகிறது எழுத்துக்கள் ..
இன்னும் மிளிர வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி மலிக்கா !!!

பூங்குன்றன்.வே said...

@ divyahari

//"எஞ்சாமி எங்க போச்சு;கல்லாவே மாறி போச்சு !!!"-கமல் சொல்வது போல "கடவுள் இருந்தால் நல்லா தான் இருக்கும்.."-படிச்சதும் மனசுக்குள்ள ஒரு பாரம்.. நன்று நண்பா..//

மிக்க நன்றி திவ்யா.

உங்களின் தளமும் இப்பதான் பார்த்தேன். எளிமையாக,அருமையா இருக்கு,நிறைய எழுதுங்கள்..

சரியாக எழுதமாட்டோமோ என்று நினைக்க கூடாது,இப்போ நான் இடுகைஎழுதுவதில்லையா :)

பூங்குன்றன்.வே said...

@ சுசி

//அத்தனை வரிகளும் அருமை.உண்மை வலிக்குது.//

வலிக்கும் உண்மையைத்தான் என்ன செய்ய தோழி.அரசாங்கம் திருந்தவில்லை;மக்களும் மாறவில்லை;

மிக்க நன்றி சுசி !!!

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//வறுமை இல்லாவிட்டாலும் நானும்தான் தேடுறேன் இந்தக் கடவுளை.கேள்வியெல்லாம் எழுதி வைச்சு ரொம்ப நாளாச்சு குன்றன் !//

கேள்வி கேட்டாலும்,கேட்கப்படாவிட்டலும் கடவுள் வரமாட்டார்.அப்படி வருபவராக இருப்பின் கேள்வி கேட்கும் முன்பே நம் எதிரில் இருப்பாரல்லவா !!!

பூங்குன்றன்.வே said...

@ ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி

//" ஏஞ்சாமி எங்கே போச்சு?" - அவளுடைய,
வாழ்க்கைத்துணைவன்..சக ஹிருதயன்.. பாதுகாவலன்...ஒன்றுக்கும் லாயக்கு இல்லாத
குடிகாரனாக இருப்பானோ!//

உறவுகள் என்று உடன் யார் இருந்தாலும் வறுமை ஒழிவதில்லை; இப்படிப்பட்ட சூழ்நிலை அடித்தள பெண்களுக்கு அமைவது இயல்பு.கேட்பார் யாருமில்லை அல்லவா..

எழுதும்போது உறவுகளை பற்றி யோசிக்கவில்லை என் தோழா.அவர்களின் வறுமை தான் பிரதானமாக இருந்தது. மிக்க நன்றி ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி !!!

பூங்குன்றன்.வே said...

@ பிரியமுடன்...வசந்த்

//ம்ம் நல்லாருக்கு பூங்குன்றன்
கிராமத்து தென்றல் இன்னும் கொஞ்சம் சிரத்தையெடுத்திருந்தால் மிகச்சிறப்பாய் வந்துருக்கும்...//

நன்றி வசந்த் !!!

அண்ணாமலையான் said...

நம்ம பக்கம் வாங்க...

Unknown said...

பின்னூட்டத்துக்கே பின்னோட்டம் போடனுமான்னு நினைக்கிறேன், இருந்தாலும் பாராட்டியே பழக்கப்பட்ட நம்மலால சும்மா இருக்க முடிலபா,

கவிதைல டிப்ளமோ முடிக்க போறிங்க மிஸ்டர்.பூங்குன்றன், முடிக்க போறிங்க,,,,,, ரொம்ப முன்னேற்றம் தெரியுதுபா (நம்ம ரெக்கமெண்ட்ல சவுதி வெட்டி சங்கத்துல சொல்லி கவிப்பூங்குன்றன் னு ஒரு பட்டம் கொடுக்க முயற்சி பன்றேன்)

அது எப்படி எல்லா பிளாக்ஸ்லயும் உங்க பின்னூட்டம் பாக்க முடிகிறதே இதனோட சீக்ரட் தான் என்ன? என்ன மாதிரி நிறய பேர் சும்மா இருக்கறத பாக்கும் போது சந்தோசமா இருக்கு நண்பா)

ஸ்ரீதர்

Anonymous said...

Super

புலவன் புலிகேசி said...

தல என்னமா ஒரு கவிதை...படிச்சதும் வறுமையின் நிலையும் பகுத்தறிவும் தெளிவா புரியுது.. கல்லைதான் பலர் கடவுள்னு நெனைச்சிட்டிருக்காங்க..

Priya said...

பொதுவா கவிதைனாலே காதல்தான்னு இல்லாம, நீங்க எழுதறது... ரியலி சூப்பர்! கவிதைக்கு ஏத்த மாதிரியே அழகான படம்!!!

பூங்குன்றன்.வே said...

@ sridhar

//பின்னூட்டத்துக்கே பின்னோட்டம் போடனுமான்னு நினைக்கிறேன், இருந்தாலும் பாராட்டியே பழக்கப்பட்ட நம்மலால சும்மா இருக்க முடிலபா,

கவிதைல டிப்ளமோ முடிக்க போறிங்க மிஸ்டர்.பூங்குன்றன், முடிக்க போறிங்க,,,,,, ரொம்ப முன்னேற்றம் தெரியுதுபா (நம்ம ரெக்கமெண்ட்ல சவுதி வெட்டி சங்கத்துல சொல்லி கவிப்பூங்குன்றன் னு ஒரு பட்டம் கொடுக்க முயற்சி பன்றேன்)

அது எப்படி எல்லா பிளாக்ஸ்லயும் உங்க பின்னூட்டம் பாக்க முடிகிறதே இதனோட சீக்ரட் தான் என்ன? என்ன மாதிரி நிறய பேர் சும்மா இருக்கறத பாக்கும் போது சந்தோசமா இருக்கு நண்பா)-ஸ்ரீதர்//

நீங்க இடுகைக்கு பின்னூட்டம் போட்டாலும் சரி;பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் போட்டாலும் சரி;வந்ததே மிக்க மகிழ்ச்சி.

கவிதைல டிப்ளமோ தான் முடிக்க போறேனா? அதுவும் இன்னமும் முடிக்கலையா.. :)

நீங்க என்ன பட்டம் கொடுத்தாலும் ஏத்துக்க ரெடி :)

நான் ப்ரீயா இருக்கும்போது என் வேலையே மத்தவங்க பதிவுகளை படிப்பதும்,பின்னூட்டம் இடுவதும் தான் பாஸ்.

வேலை இருக்கும்போது வேலைய(?) மட்டும் பார்ப்பேன்;எனக்கும் 'வெட்டி சங்கத்தில்' இணைவதில் மகிழ்ச்சியே :)

பூங்குன்றன்.வே said...

@ சின்ன அம்மிணி

//Super//

மிக்க நன்றி அம்மணி !!!

பூங்குன்றன்.வே said...

@ புலவன் புலிகேசி

//தல என்னமா ஒரு கவிதை...படிச்சதும் வறுமையின் நிலையும் பகுத்தறிவும் தெளிவா புரியுது.. கல்லைதான் பலர் கடவுள்னு நெனைச்சிட்டிருக்காங்க..//

ரொம்ப நன்றி பாஸ்.உண்மைதானே நண்பா.. இன்னமும் கல்லைத்தானே கடவுள் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்;

பூங்குன்றன்.வே said...

@ Priya

//பொதுவா கவிதைனாலே காதல்தான்னு இல்லாம, நீங்க எழுதறது... ரியலி சூப்பர்! கவிதைக்கு ஏத்த மாதிரியே அழகான படம்!!!//

இந்த மாதிரி ரொம்ப பாராட்டாதீங்க ப்ரியா. பாருங்க..எனக்கு தல,கால் புரியல.நன்றிங்க.

சிவாஜி சங்கர் said...

சில கல் ராசாக்களை பாக்கும் போது தோணுது...
//எஞ்சாமி எங்க போச்சு!!//
நல்லாஇருக்கு தலைவரே....

கண்மணி/kanmani said...

அருமை சகோ.காதலையும் தாண்டி கவிதை உண்டு.

aazhimazhai said...

அருமையா இருக்கு கூர்மையான வார்த்தைகளின் கோர்வை

பூங்குன்றன்.வே said...

@ கண்மணி

//அருமை சகோ.காதலையும் தாண்டி கவிதை உண்டு//

ஆம் சகோ.மிக்க நன்றி கண்மணி !!!

பூங்குன்றன்.வே said...

@ aazhimazhai

//அருமையா இருக்கு கூர்மையான வார்த்தைகளின் கோர்வை//

நன்றி கல்யாணி !!!

swizram said...

//ஒருநாள் நல்ல கவிதை உங்கள் வசமாகும்.வாழ்த்துக்கள் தோழி !!!//

இத கேக்குறதுக்கே ரொம்ப சந்தோசமா இருக்கு...!!!
ட்ரை பண்றேன் தோழரே....
நன்றி :)

rvelkannan said...

//எஞ்சாமி எங்க போச்சு;
கல்லாவே மாறி போச்சு //
நெஞ்சை தொட்டு விட்ட வரிகள்.
நெஞ்சை விட்டு நீங்காத கவிதை(கள்)
உங்களுடையது பூங்குன்றன் வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

பின்னிட்டிங்க பாஸ்.

வலி உணர்ந்து எழுதிய கவிதை.

Thenammai Lakshmanan said...

இந்தக் கவிதையில் ஒரு நிமிடம் யோசிக்க வைச்சிட்டீங்க பூங்குன்றன்

ரிஷபன் said...

எஞ்சாமி எங்க போச்சு;
கல்லாவே மாறி போச்சு !!!

மனசுக்குள் அந்தக் கொடுமை தெரிய.. ரௌத்திரம் வரும் அளவு.. கவிதையில் வீச்சு..

பூங்குன்றன்.வே said...

@ ரசிக்கும் சீமாட்டி

//ஒருநாள் நல்ல கவிதை உங்கள் வசமாகும். வாழ்த்துக்கள் தோழி !!!//

இத கேக்குறதுக்கே ரொம்ப சந்தோசமா இருக்கு...!!!ட்ரை பண்றேன் தோழரே.
நன்றி :)//

முயற்சி திருவினையாக்கும்,வாழ்த்துக்கள்.

பூங்குன்றன்.வே said...

@ velkannan

//எஞ்சாமி எங்க போச்சு;
கல்லாவே மாறி போச்சு //
நெஞ்சை தொட்டு விட்ட வரிகள்.
நெஞ்சை விட்டு நீங்காத கவிதை(கள்)
உங்களுடையது பூங்குன்றன் வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி வேல்கண்ணன் !!!

பூங்குன்றன்.வே said...

@ அக்பர்

//பின்னிட்டிங்க பாஸ்.

வலி உணர்ந்து எழுதிய கவிதை.//

மிக்க நன்றி அக்பர் !!!

பூங்குன்றன்.வே said...

@ thenammailakshmanan

//இந்தக் கவிதையில் ஒரு நிமிடம் யோசிக்க வைச்சிட்டீங்க பூங்குன்றன்//

மிக்க நன்றி thenammailakshmanan !!!

பூங்குன்றன்.வே said...

@ ரிஷபன்

//எஞ்சாமி எங்க போச்சு;
கல்லாவே மாறி போச்சு !!!

மனசுக்குள் அந்தக் கொடுமை தெரிய.. ரௌத்திரம் வரும் அளவு.. கவிதையில் வீச்சு..//

ரிஷபன் said...

எஞ்சாமி எங்க போச்சு;
கல்லாவே மாறி போச்சு !!!

மனசுக்குள் அந்தக் கொடுமை தெரிய.. ரௌத்திரம் வரும் அளவு.. கவிதையில் வீச்சு..

மிக்க நன்றி ரிஷபன் !!!

துபாய் ராஜா said...

பெண்பாடு பெரும்பாடுதான். :(

divyahari said...

உங்க கவிதையை பார்த்ததும் தான் இப்படிஎல்லாம் என்னால எழுத முடியுமான்னு சந்தேகமே வந்துச்சி.. நல்ல இருக்கு உங்கள் இடுகை.. உங்களை போல எழுத முயற்சிக்கிறேன் நண்பா..

அன்புடன் அருணா said...

அச்சோ இதை எப்புடி விட்டேன்னு தெரிலையே! பூங்கொத்து!

பூங்குன்றன்.வே said...

@ துபாய் ராஜா

//பெண்பாடு பெரும்பாடுதான்//

உண்மைதான் தல..

பூங்குன்றன்.வே said...

@ divyahari

//உங்க கவிதையை பார்த்ததும் தான் இப்படிஎல்லாம் என்னால எழுத முடியுமான்னு சந்தேகமே வந்துச்சி.. நல்ல இருக்கு உங்கள் இடுகை.. உங்களை போல எழுத முயற்சிக்கிறேன் நண்பா..//


அய், ஜோக்கு..ஜோக்கு.. :)

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் அருணா

//அச்சோ இதை எப்புடி விட்டேன்னு தெரிலையே! பூங்கொத்து!//

நீங்க வந்ததே பூங்கொத்து வந்தா மாதிரிங்க..