இப்போ நான் உங்களுக்கு ஒரு சிந்தனையை தூண்டும் ஒரு கதை(பாடம்) சொல்ல போறேன். கவனமா படிங்க.
ஒரு காலை வேளையில் அலுவலகம் செல்வதற்காக ஒரு அப்பா தன்னுடைய புது காரை மிகுந்த பக்குவத்துடன் துடைத்து கழுவிக்கொண்டிருந்தார்.அப்பாவுடன் அந்த நான்கு வயது நிறைந்த மகனும் இருந்தான்.
அப்பா துடைத்துக்கொண்டிருப்பதை பார்த்த அந்த மகன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரில் என்னவோ கிறுக்கி கொண்டிருந்தான்.
இதை கண்ட அப்பா கடும்கோபம் கொண்டு சற்றும் யோசிக்காமல் கையில் கிடைத்த ஒரு இரும்பு கம்பி என்பதை உணராமல்(கோபம் கண்ணை மறைக்குமே)தன் மகனின் கைகளில் ஓங்கி அடித்துவிட்டார்.வலியில் அந்த சிறுவன் கதற துவங்க,அம்மாவும் உள்ளிருந்த ஓடிவர,அடித்த அப்பாவும் தன் மகன் கதறுவதை பார்த்ததும் உடனே அவனை வாரியெடுத்து காரில் போட்டு மருத்துவமனைக்கு சென்றார்.
சிறுவனை சோதித்த மருத்துவர்கள் அடி பலமாகபட்டிருப்பதால் இரண்டு விரல்களை எடுத்தே ஆக வேண்டுமென்று சொல்ல,அப்பா அதிர்ந்தே போனார்.எவ்வளவோ முயன்றும் மருத்துவர்கள் சொன்னபடி இருவிரலை எடுத்தும் விட்டார்கள்.
சற்று நேரம் கழித்து அந்த சிறுவன் அப்பாவிடம் "எப்பப்பா எனக்கு இந்த ரெண்டு விரல் வளரும்?"வினவ,அப்பா அழுதுகொண்டே வேகமாக வெளியில் ஓடிவந்து தன் காரை காலால் எட்டி உதைத்தான்.அப்போதுதான் தன் குழந்தை கிறுக்கிய வாசகம் கண்ணில்
பட்டது."LOVE YOU DADDY".
கோபமும்,அன்பும் எல்லை அற்றது(NO LIMITS).எந்த உணர்ச்சிகளையும் நாம் அளவாக கையாண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.தெளிந்த நீரோடை போல அழகாக இருக்கும்.முன்பு:"பொருட்கள் என்றால் உபயோகப்படுத்துவதற்காக"-"மக்கள் என்றால் அன்பு காட்டுவதற்காக"...இன்றோ:"பொருட்கள் என்றால் அன்பு காட்டுவதற்காக"-"மக்கள் என்றால் உபயோகப்படுத்துவதற்காக"....
சிந்திப்போம்.மகிழ்ச்சியாக இருப்போம்.
December 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
56 comments:
ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்த கதை என்றாலும்.. உங்கள் தமிழாக்கத்தில் மீண்டும் படிக்க முதல் முறை படிப்பது போலவே இருந்தது.. நன்று...
நல்ல கருத்துள்ள கதை. சில நொடி தாமதம் பல நேரம் பெரிய இழப்பைத் தவிர்க்கும் என்பது பட்டுத் தெளிந்த உண்மை. ஆனாலும் அந்த நேரம் ஏனோ இதெல்லாம் நினைவுக்கு வருவதில்லை.
ரொம்ப அருமையான சிந்திக்வைத்த ஒருப்பதிவு நன்றி சகோதறா
பூங்குன்றன். இது பின்னூட்டமல்ல. வெளியிடவேண்டாம். யூனிகோடில் டைப் செய்யும்போது பத்தி பிரிக்க மட்டுமே எண்டர் உபயோகிக்கவும். இல்லையெனில் வாசகங்கள் இப்படி சிதிலமாகும்.
//கோபமும்,அன்பும் எல்லை அற்றது(NO LIMITS)//
ரொம்ப கரெக்ட் :)
ஆத்திரம் அன்பை அழித்துவிடும் என்பதை குட்டியாக அழகாக சொல்லி விட்டீர்கள்..நன்று நண்பரே..
கருத்துள்ள கதை
இது எனக்கு வந்த மின்னஞசலில் படித்த நினைவு...நல்ல கதை.
கதையும் அதன் மூலம் சொல்லப்பட்ட கருத்தும் நன்றாக இருக்கிறது.
நல்ல கதை.
இப்போது தான் முதல் முறை கதையை
படிக்கிறேன்...டச்சிங்..
sms ல வந்தது தான்....
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு ன்னு சொல்ற எளிய கதை!!!!
Good One Friend
ஏற்கனவே படித்தகதைதான் இருந்தாலும் கனக்க செய்கிறது;;;;
கோபமும் அன்பும்தான் அரவணைக்கத் தேவையானதும் உரிமையானதும்கூட.
முதல் முறை படிக்கிறேன்... நல்ல கதை.
சிந்திக்க வைக்கும் கதைங்க.... தொடர்ந்து கதைங்க.
@ aazhimazhai
//ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்த கதை என்றாலும்.. உங்கள் தமிழாக்கத்தில் மீண்டும் படிக்க முதல் முறை படிப்பது போலவே இருந்தது.. நன்று...//
உண்மைதான் கல்யா.இந்த ஆங்கில மின்னஞ்சல் எனக்கு அனுப்பியது மரியா அண்ணா அவர்கள்.படித்ததும் கண் கலங்கிவிட்டது.அதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவே தமிழில் மொழியாக்கம்(?) செய்தேன்.
@ வானம்பாடிகள்
//நல்ல கருத்துள்ள கதை. சில நொடி தாமதம் பல நேரம் பெரிய இழப்பைத் தவிர்க்கும் என்பது பட்டுத் தெளிந்த உண்மை. ஆனாலும் அந்த நேரம் ஏனோ இதெல்லாம் நினைவுக்கு வருவதில்லை.//
உண்மைதான் ஸார். கோபப்படும்போது என்ன செய்றோம்ன்னு தெரிவதில்லை. பிறகு வருந்துவார்கள்.
@ ராஜவம்சம்
//ரொம்ப அருமையான சிந்திக்வைத்த ஒருப்பதிவு நன்றி சகோதறா//
மிக்க நன்றி நண்பா.உங்க தளமும் இன்று பார்த்தேன்.நல்லா இருக்கு.
@ பிரபு . எம்
////கோபமும்,அன்பும் எல்லை அற்றது(NO LIMITS)//
ரொம்ப கரெக்ட் :)//
ஆமாம்..நிறைய கோபம் தப்புதானே ?
@ புலவன் புலிகேசி
//ஆத்திரம் அன்பை அழித்துவிடும் என்பதை குட்டியாக அழகாக சொல்லி விட்டீர்கள்..நன்று நண்பரே..//
நன்றி புலிகேசி..
@ T.V.Radhakrishnan
//கருத்துள்ள கதை//
மிக்க நன்றி T.V.R !!!
@ நாஞ்சில் பிரதாப்
//இது எனக்கு வந்த மின்னஞசலில் படித்த நினைவு...நல்ல கதை.//
உண்மைதான் நண்பா.தமிழாக்கம் செய்துள்ளேன்.நன்றி தல.
@ க.பாலாசி
//கதையும் அதன் மூலம் சொல்லப்பட்ட கருத்தும் நன்றாக இருக்கிறது.//
புரிதலுக்கு நன்றி தல.
@ ராமலக்ஷ்மி
//நல்ல கதை.//
நன்றி மேம்.உங்களின் முதல் வருகை என்னை உற்சாகப்படுத்துகிறது.
@ ஜெட்லி
//இப்போது தான் முதல் முறை கதையை படிக்கிறேன்...டச்சிங்..//
நன்றி ஜெட்லி..
@ ரசிக்கும் சீமாட்டி
//ms ல வந்தது தான்....
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு ன்னு சொல்ற எளிய கதை!!!!//
உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சீமாட்டி !!!
@ Vijay
//Good One Friend//
Thank you my dear vijay.When you are coming to Baghdad from Basra?come soon yaar.
//முன்பு:"பொருட்கள் என்றால் உபயோகப்படுத்துவதற்காக"-"மக்கள் என்றால் அன்பு காட்டுவதற்காக"...இன்றோ:"பொருட்கள் என்றால் அன்பு காட்டுவதற்காக"-"மக்கள் என்றால் உபயோகப்படுத்துவதற்காக"....//
சரிதான் நீங்க சொல்றது
@ பிரியமுடன்...வசந்த்
//ஏற்கனவே படித்தகதைதான் இருந்தாலும் கனக்க செய்கிறது;;;;//
ஆமாம்.வசந்த்.மின்னஞ்சலில் வந்ததை தமிழ்ப்படுத்தியிருக்கேன்.நன்றி நண்பா.
@ ஹேமா
//கோபமும் அன்பும்தான் அரவணைக்கத் தேவையானதும் உரிமையானதும்கூட.//
நிச்சயமாக தோழி..மிக்க நன்றி !!!
@ சி. கருணாகரசு
//முதல் முறை படிக்கிறேன்... நல்ல கதை.//
மிக்க நன்றி நண்பா.
@ சி. கருணாகரசு
//சிந்திக்க வைக்கும் கதைங்க.... தொடர்ந்து கதைங்க.//
கண்டிப்பா.உங்களை நான் மரியாதை இல்லாம 'நண்பா' என்று சொல்லி விட்டேன்.மன்னிக்கணும்.'நண்பரே' என்று கூப்பிடுவது தான் சரி.
இந்த கதையை நான் ஒரு முறை எழுதியாகிவிட்டது.
பிறகு மாதவராஜ் ஒரு முறை எழுதியாகி விட்டது.
இப்போது நீங்கள்!!!
இதோ அதற்கான லிங்க்:
http://www.iniyavan.com/2009/03/blog-post_31.html
http://mathavaraj.blogspot.com/2009/10/blog-post_258.html
@ என். உலகநாதன்
//இந்த கதையை நான் ஒரு முறை எழுதியாகிவிட்டது.
பிறகு மாதவராஜ் ஒரு முறை எழுதியாகி விட்டது.
இப்போது நீங்கள்!!!
இதோ அதற்கான லிங்க்:
http://www.iniyavan.com/2009/03/blog-post_31.html
http://mathavaraj.blogspot.com/2009/10/blog-post_258.html//
மன்னிக்க வேண்டும் திரு.உலகநாதன்.
நீங்கள் எழுதியதையும், திரு.மாதவராஜ் எழுதியதையும் நான் படிக்கவில்லை.ஒருவேளை படித்திருந்தால் எழுதியிருக்க மாட்டேன்.
மின்னஞ்சலில் வந்ததை படித்ததும் பிடித்துப்போய் அதை ஜஸ்ட் தமிழாக்கம் செய்தேன்.
உங்கள் லிங்க் கிடைத்தபிறகு இருவரின் பதிவுகளையும் படித்தேன்.உண்மைதான்.
இன்னொரு சங்கதி: என்னைவிட (நான் புது பதிவன்) நீங்கள் இருவருமே மிக நன்றாக எழுதியிருக்கீர்கள் ஸார்.
நன்றியுடன், பூங்குன்றன்.
இதை நான் சஸ்பென்ஸ் வைத்து
:ஆத்திரத்தின் விளைவு:என்ற தலைப்பில் தமிழ்குடும்பத்தில் எழுதியிருந்தேன்.மூன்று நான்கழித்து அதன் பதிலைச்சொன்னேன்.. எத்தனைமுறை பார்த்தபோதும் ஒரு பகீர்.. நல்ல பகிர்வு...
கோபமும்,அன்பும் எல்லை அற்றது(NO LIMITS).எந்த உணர்ச்சிகளையும் நாம் அளவாக கையாண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.தெளிந்த நீரோடை போல அழகாக இருக்கும்.முன்பு:"பொருட்கள் என்றால் உபயோகப்படுத்துவதற்காக"-"மக்கள் என்றால் அன்பு காட்டுவதற்காக"...இன்றோ:"பொருட்கள் என்றால் அன்பு காட்டுவதற்காக"-"மக்கள் என்றால் உபயோகப்படுத்துவதற்காக"....................... நல்ல தத்துவம் - நல்ல கதை. அருமை.
மனதை கவ்விய கதை.
@ அன்புடன் மலிக்கா
//இதை நான் சஸ்பென்ஸ் வைத்து
:ஆத்திரத்தின் விளைவு:என்ற தலைப்பில் தமிழ்குடும்பத்தில் எழுதியிருந்தேன்.மூன்று நான்கழித்து அதன் பதிலைச்சொன்னேன்.. எத்தனைமுறை பார்த்தபோதும் ஒரு பகீர்.. நல்ல பகிர்வு...//
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி !!!
@ Chitra
//கோபமும்,அன்பும் எல்லை அற்றது(NO LIMITS).எந்த உணர்ச்சிகளையும் நாம் அளவாக கையாண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.தெளிந்த நீரோடை போல அழகாக இருக்கும்.முன்பு:"பொருட்கள் என்றால் உபயோகப்படுத்துவதற்காக"-"மக்கள் என்றால் அன்பு காட்டுவதற்காக"...இன்றோ:"பொருட்கள் என்றால் அன்பு காட்டுவதற்காக"-"மக்கள் என்றால் உபயோகப்படுத்துவதற்காக"....................... நல்ல தத்துவம் - நல்ல கதை. அருமை.//
சித்ரா..உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.. தொடர் வருகைக்கு,கருத்துக்கு மிக்க நன்றி ...
@ tamiluthayam
//மனதை கவ்விய கதை.//
மிக்க நன்றி நண்பரே..இதை பற்றி நிறைய பேர் எழுதி விட்டாலும் நானும் அதில் ஒருவன்..நல்ல படைப்பு வாசகர்களை சேர்வதில் ஒரு மனதிருப்தி இருக்கத்தான் செய்கிறது.
பெற்றோர் _ பிள்ளைகள் பாசத்துக்கு அளவே கிடையாது ..
அருமையான கதை
@ Starjan ( ஸ்டார்ஜன் )
//பெற்றோர் _ பிள்ளைகள் பாசத்துக்கு அளவே கிடையாது ..
அருமையான கதை//
ஆமாங்க...நான் பார்க்கும் சிலர் பைத்தியக்காரத்தனமா பாசம் வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன் நண்பரே. அது சரி இல்லை.கோபமும்,கண்டிப்பும்
எங்கு வேண்டுமோ அங்கு வேண்டும்.அங்கு கூடாதோ அங்கு கூடாது என்பதை உணர்ந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை.மேற்கொண்டு மிக தெளிவான பதிவை படிக்க வேண்டுமானால் நம்ம உலகநாதன் லிங்க்,மாதவராஜ் லிங்க் சென்று படிக்கவும் நண்பா !!
super story machi
rombaa touch panna kathai daa
மின்னஞசலில் படித்த கதை.
கருத்துள்ள கதை . நன்றி.
நல்ல கதை
பூங்குன்றன்,
வணக்கம். இதே கதையை நானும் நிலாச்சாரலில் எழுதியிருக்கிறேன். உங்கள் நடையும் அருமை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
நான் எழுதியதின் லிங்க் :
http://www.nilacharal.com/ocms/log/07280807.asp
@ ரமேஷ் ஞானபிரகாசம்
//uper story machi
rombaa touch panna kathai daa//
கருத்துக்கு ரொம்ப தேங்க்ஸ் நண்பா.நீ,நான்,மரியா அண்ணன் இந்த மின்னஞ்சலை படித்து எவ்வளவு நேரம் விவாதித்தோம் !!!
@ சே.குமார்
//மின்னஞசலில் படித்த கதை.
கருத்துள்ள கதை . நன்றி.//
ஆம் நண்பரே..எனக்கும் மின்அஞ்சலில் வந்தது தான் இது.கருத்துக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி குமார்.
@ நசரேயன்
//நல்ல கதை//
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நசரேயன்.உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கே.நல்லா இருக்கு.
@ ரிஷி
//பூங்குன்றன்,
வணக்கம். இதே கதையை நானும் நிலாச்சாரலில் எழுதியிருக்கிறேன். உங்கள் நடையும் அருமை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
நான் எழுதியதின் லிங்க் :
http://www.nilacharal.com/ocms/log/07280807.asp//
அன்பு ரிஷி,
உங்கள் தளத்தை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்.ரொம்ப அழகா-நீட்டா இருக்கிறது.நீங்க சொன்னவாறு உங்கள் கதையையும் படித்தேன்.
உண்மையாகவே என்னைவிட மிக தெளிவாக,கோர்வையாக எழுதியிருக்கீர்கள்.நீங்கள் என்னை பாராட்டுவது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது.
உங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.
friend,i'm sort of new to the blogging world.do read my reviews and let me know of what you think.thank you.and vote it if you think it is any good.
http://www.tamilish.com/user/view/shaken/login/ramkvp
http://illuminati8.blogspot.com/2009/12/disclosure.html
டச்சிங் டச்சிங். பாசம் கண்ணை மறைக்க கூடாது (கார் பாசம்தான்).
அன்பின் பூங்குன்றன்
கதை அருமை - பகிர்வினிற்கு நன்றி - என்ன செய்வது - கோபம் எல்லை மீறும் போது .......
ம்ம்ம் நல்வாழ்த்துகள் பூங்குன்றன்
நட்புடன் சீனா
Good bye, sweet soul mate :)
Post a Comment