செப்டம்பர் மாதம் 2009 ஆம் ஆண்டு 29 ஆம் நாள் இரவை என்னால் சாகும்வரை மறக்க முடியாது.
நான் தற்போது இருப்பது ஈராக் தலைநகரம் பாக்தாத்தில்.இங்கு உள்ள ஒரு அமெரிக்க விமான தனியார் நிறுவனத்தில் கடந்த 2008 சனவரி மாதம் முதல் வேலை செய்து வருகிறேன்..கிட்டதட்ட இரண்டு வருடம் ஆகப்போகிறது.
நல்ல நிறுவனம்.நல்ல தலைமையின் கீழ் நிறுவனம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.என்னுடன் பணிபுரியும் நம் தமிழ் நண்பர்கள் மட்டும் பத்து பேர் இருக்கிறார்கள்.அண்ணன்கள் அப்துல் ரஷீத்,மரியா ஆண்டனி,நண்பர்கள் ரமேஷ்,சிவா,ராஜ்,வினய்,ராக்ஸி செல்வன்......
மற்ற உடன் பணிபுரிபவர்கள் எல்லோருமே அமெரிக்கா,இங்கிலாந்து,தென் ஆப்ரிக்கா,பிஜி,பாகிஸ்தான்,ஸ்ரீலங்கா,பிலிப்பைன்ஸ்,ரஷ்யா,சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்து என்னுடன் வேலை பார்ப்பவர்கள். இதை தவிர நூறு ஈராக் நாட்டினரும் உடன் பணிபுரிகிறார்கள்.
நானும்,இவர்கள் அனைவரும் தங்க ஒரு அருமையான இடம் உண்டு.அதை முகாம்(CAMP) என்போம்.செங்கல்,சுண்ணாம்பு இவற்றால் கட்டப்படாத ஆனால் உறுதியான ஸ்டீல் கொண்டு செய்யப்பட்ட ட்ரைலரில்(TRAILERS) தங்குவோம். ட்ரைலர் என்றால் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.அதன் உள்ளே எல்லா வசதியும் இருக்கும்.அதாவது நம்ம கேரவன் வேனில் இருப்பது போன்று.இது மட்டும் இன்றி எங்கள் முகாம் உள்ளேயே உணவு விடுதி,பார்,ஜிம் போன்ற வசதிகளும் உண்டு.
அலுவலகத்திலும்,முகாமிலும் நவீன ரக துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு இருக்கும் எந்நேரமும்.உள்ளூர் எதிரிகளிடம் இருந்து எங்களை பாதுகாக்கவே இப்படி பந்தோபஸ்து.
இதில் உங்கள் மறுபிறப்பு எங்கே வந்தது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
சொல்கிறேன்..மேற்சொன்ன செப்டம்பர் 29,2009 அன்று வழக்கம் போல பணிமுடித்து விட்டு எல்லோரும் முகாமுக்கு சென்றோம்.தினமும் முகாமில் என் நண்பன் ரமேஷ் அறையில் நான்,மரியா அண்ணா,வினய் எல்லோரும் இரவு உணவு சாப்பிடும்வரை பேசிவிட்டு பின்பு தத்தம் அறைகளுக்கு செல்வது வழக்கம்.அன்றும் இரவு பேசி இருந்துவிட்டு என் அறைக்கு வந்து ஸ்கைப்பில்(SKYPE) என் மனைவியுடன் பேசிவிட்டு படுக்கைக்கு செல்லும்போது நேரம் 9.15 மணி.அலுவலகத்திலும்,முகாமிலும் நவீன ரக துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு இருக்கும் எந்நேரமும்.உள்ளூர் எதிரிகளிடம் இருந்து எங்களை பாதுகாக்கவே இப்படி பந்தோபஸ்து.
இதில் உங்கள் மறுபிறப்பு எங்கே வந்தது என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
அடுத்து ஒரு மணி நேரத்தில் நிகழ போகும் பெரும் ஆபத்தை உணராமல் தூங்கிவிட்டேன்.
10 comments:
த்ரில்லிங் ஆக இருக்கு , தொடரட்டும் சுவாரசியமான அனுபவ கதை ,திக் திக் திக் திக் !!!!!!!!!
சே... 20-20 மேட்சுல மழை வந்தமாதிரி தொடரும்னு போட்டுட்டிங்களே தலைவா...சீக்கிரம் அடுத்ததை போடுங்க..
ஹைய்யா, மீண்டும் த்ரிலிங் கதைய படிக்கபோகிறேனா? அப்புறம் அப்புறம் என்னாச்சி..
வாராவாரம் ஆராவாரமுன்னல்லாம் போடக்கூடாது
தினமும் தொடரும் திக் திக்..
என்றிருக்கனும்..
Why Suspense?
அட அண்ணாத்தே நம்ம கதை. தலைப்பை மாற்றி ஒரு உண்மை சம்பவம்ன்னு வைங்க.
அப்பத்தான் நல்ல சுவாரஸ்யமா இருக்கும்
கதைக்கான வார்த்தைகளின் கோர்வை அருமை.
தொடரட்டும் வாழ்த்துக்கள்
@ MARIA
//த்ரில்லிங் ஆக இருக்கு , தொடரட்டும் சுவாரசியமான அனுபவ கதை ,திக் திக் திக் திக்//
ஆம்.அண்ணா.நம் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான அனுபவம் இது.நீங்களே பார்த்தீர்களே அன்று நடந்ததை...
@ நாஞ்சில் பிரதாப்
//சே... 20-20 மேட்சுல மழை வந்தமாதிரி தொடரும்னு போட்டுட்டிங்களே தலைவா..சீக்கிரம் அடுத்ததை போடுங்க//
மேட்ச் ஜஸ்ட் ஒரு விளையாட்டு தல.நம்ம கதை லைப் சம்மந்தப்பட்டது.கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இன்னும் ரெண்டு நாள்ல முடிந்துவிடும் பாஸ்.
@ அன்புடன் மலிக்கா
//ஹைய்யா, மீண்டும் த்ரிலிங் கதைய படிக்கபோகிறேனா? அப்புறம் அப்புறம் என்னாச்சி..
வாராவாரம் ஆராவாரமுன்னல்லாம் போடக்கூடாது
தினமும் தொடரும் திக் திக்..
என்றிருக்கனும்..//
தோழி..படிக்கிற உங்களுக்கே திக் திக் என்று இருந்தால் எனக்கு எப்படி இருந்து இருக்கும்? எல்லாமே கடவுள் தரும் சோதனை.
@ Mohan Kumar
//Why Suspense?//
Life is the best suspense than everything else my friend!!!
@ Vijay
//அட அண்ணாத்தே நம்ம கதை. தலைப்பை மாற்றி ஒரு உண்மை சம்பவம்ன்னு வைங்க.அப்பத்தான் நல்ல சுவாரஸ்யமா இருக்கும் கதைக்கான வார்த்தைகளின் கோர்வை அருமை.தொடரட்டும் வாழ்த்துக்கள்//
நம்ம கதையே தான் விஜய்(வினய்). அன்று ஆனதை நம்மில் யாரால் தான் மறக்க முடியும்?
Post a Comment