December 1, 2009

இனிப்பு; காரம்; கொஞ்சம் தேநீர் : கவிதைகள்


     
     இனிப்பு
நீ சிரிக்கையில்
புதிதாய் பூத்த மலராய்
உன் புன்னகை;
நீ பிரிகையில்
மழைக்காக ஏங்கிக்கிடக்கும்
நிலமாய் மனது!!!

         காரம்
யாரோ தூக்கி எறிந்த
உபயோகிக்கமுடியாத
தெருவோர மிதிவண்டியை
நினைவுபடுத்துகிறது
நம் காதல் நாட்கள்!!!

      கொஞ்சம் தேநீர்
இப்பொழுதெல்லாம் கவிதை எழுத
அதிகம் சிந்திப்பதில்லை
காதலில் தோல்வி !!!

20 comments:

க.பாலாசி said...

//இப்பொழுதெல்லாம் கவிதை எழுத
அதிகம் சிந்திப்பதில்லை
காதலில் தோல்வி !!! //

சரிதான். ரொம்ப பாதிக்கப்ட்டிருப்பீங்களோ?

மூன்றும் அருமை நண்பரே....

அன்புடன் மலிக்கா said...

மும்மூன்று கவிதைகளாய் வருகிறது
முப்பரிமாணங்களை தாங்கியபடி,

அருமையாக இருக்கு தோழமையே..

Unknown said...

இனிப்பு காரம் தேனீர் மூன்றும் சுவையாக உள்ளது

Prathap Kumar S. said...

மிதிவண்டி ரொம்ப டாப்பு...
எல்லாமே சூப்பரப்பு...

Menaga Sathia said...

இனிப்பு காரம் தேனீர் என அசத்தலா இருக்கு கவிதை.

Unknown said...

அருமை நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ க.பாலாசி

//சரிதான். ரொம்ப பாதிக்கப்ட்டிருப்பீங்களோ?

மூன்றும் அருமை நண்பரே...//

பாதிப்பு எல்லாம் எதுவும் இல்லைங்க.கவிதைகளுக்காக உணர்ந்து பார்த்தேன்.நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//மும்மூன்று கவிதைகளாய் வருகிறது
முப்பரிமாணங்களை தாங்கியபடி,

அருமையாக இருக்கு தோழமையே//

மிக்க நன்றி தோழி!!!

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//இனிப்பு காரம் தேனீர் மூன்றும் சுவையாக உள்ளது//

ரொம்ப நன்றி அண்ணா.உங்களோட அடுத்த கட்டுரையை சீக்கிரம் பதிவா போட்டுவிடுகிறேன்.

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//மிதிவண்டி ரொம்ப டாப்பு...
எல்லாமே சூப்பரப்பு...//

சம்பத் என்னோட பதிவுக்கு பின்னூட்டம் போட்டாதான்யா ஒரு அழகே வருது.தொடர்ந்து வந்து என்னை உற்சாகப்படுத்தும் அன்பு நண்பனுக்கு நன்றி !!!

பூங்குன்றன்.வே said...

@ Mrs.Menagasathia

//இனிப்பு காரம் தேனீர் என அசத்தலா இருக்கு கவிதை.//

மிக்க நன்றி தோழி..உங்களோட
பழக் கலவைத் தொக்கு' என் வீட்ல செய்து பார்க்க சொல்லி இருக்கேன்ங்க.

பூங்குன்றன்.வே said...

@ VIJAY

//அருமை நண்பா.//

ரொம்ப தேங்க்ஸ் நண்பாஎ..நீ இல்லாம பாக்த்தாத்துல ரொம்ப போர் அடிக்குதுப்பா.

கமலேஷ் said...

ரொம்ப அழகாக இருக்கிறது கவிதை
பூங்குன்றன் அவர்களே...

பூங்குன்றன்.வே said...

@ கமலேஷ்

//ரொம்ப அழகாக இருக்கிறது கவிதை
பூங்குன்றன் அவர்களே...//

மிக்க நன்றி கமலேஷ் !!!

நாணல் said...

//யாரோ தூக்கி எறிந்த
உபயோகிக்கமுடியாத
தெருவோர மிதிவண்டியை
நினைவுபடுத்துகிறது
நம் காதல் நாட்கள்!!! //

நல்ல கற்பனை

துபாய் ராஜா said...

கவிதைகளின் வரிகளெங்கும் பிரிவின் வலி மேலோங்கி நிற்கிறது நண்பரே..

sri said...

//யாரோ தூக்கி எறிந்த
உபயோகிக்கமுடியாத
தெருவோர மிதிவண்டியை
நினைவுபடுத்துகிறது
நம் காதல் நாட்கள்!!!//

இப்பொழுதெல்லாம் கவிதை எழுத
அதிகம் சிந்திப்பதில்லை
காதலில் தோல்வி !!! //

Lovely! absoultely beautiful!
Guess what I wrote so many poems when my heart was broken into pieces, but not one when I am in love!

I hope and wish that this passing stage pass too quickly to save u from the trouble , hang in there mate, u seem too good to be alone :)

பூங்குன்றன்.வே said...

@ நாணல்

//நல்ல கற்பனை//

ரொம்ப நன்றி நாணல் !!

பூங்குன்றன்.வே said...

@ துபாய் ராஜா

//கவிதைகளின் வரிகளெங்கும் பிரிவின் வலி மேலோங்கி நிற்கிறது நண்பரே..//

தங்களின் முதல் வருகைக்கும்,
கருத்துக்கும் நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ Srivats

//Lovely! absoultely beautiful!
Guess what I wrote so many poems when my heart was broken into pieces, but not one when I am in love!

I hope and wish that this passing stage pass too quickly to save u from the trouble , hang in there mate, u seem too good to be alone :)//

My dear friend,
Thank you so much for your comments and i would like say am very happy at present as i got my lovely wife and this poem is a feeling when i just thought about my old love..that's it.

My pleasure to welcome you here always my dear brother !!!