வேற்று மாநிலம், வேற்று மொழி கடந்து, இப்போது கடல் கடந்து திரவியம் தேடி வேற்று நாடு, வேற்று மக்கள் பழகி இன்னும் மூன்று நாட்களில் என் சொந்த மண்ணுக்கு வரப்போகிறேன். இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது இங்கு வந்து. மூன்று முறை என் இந்தியாவிற்கு விடுமுறைக்காக வந்து சென்றிந்தாலும் இப்பொழுது எட்டு மாதங்கள் கழிந்தநிலையில் என் ஆருயிர் மனைவி, அன்பான அப்பா, அம்மா, இரண்டு தம்பிகள், நண்பர்கள், உறவினர்களை பார்க்க வரப்போகும் இந்த மகிழ்ச்சி ஏற்கனவே வந்து சென்றிருந்த அந்த மூன்று விடுமுறைக்காலத்தை விட சிறந்ததாய் கருதுகிறேன்.
என் நெருங்கிய நண்பர்களுக்கும், என் பழைய இடுகையை படித்துணர்ந்த சக பதிவுலக நண்பர்களுக்கும் தெரியும் இம்மற்றற்ற மகிழ்ச்சிக்கு காரணம்.
கிட்டதட்ட மறுப்பிறவியெடுத்த மனநிலையில்தான் நான் வருகிற சனவரி ஒன்பதாம் தேதி அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து சென்னைக்கு வரப்போகிறேன்.
அந்த சம்பவத்தை நான் பெரிதுபடுத்தி சொல்வது போலிருக்கலாம் அல்லது உங்களுக்கு மிக சாதாரணமாக தோன்றலாம். எப்படியிருந்தாலும் எனக்கு அந்த சம்பவம் ரொம்ப புதிதும், அனுபவித்துணர்ந்ததும்.
எனக்கு மூன்று வாரமே விடுமுறை கிடைத்திருந்தாலும் அதை ஒவ்வொரு கணங்களாய் அனுபவிக்கப்போகிறேன். முடிந்தால் பதிவுலக நண்பர்களை பார்க்க முயற்சிக்கிறேன்.
இந்த விடுமுறைக்காக என் சம்மந்தப்பட்ட அலுவலக வேலைகளை முடித்துக்கொடுக்க வேண்டியிருந்ததால் கடந்த பல நாட்களாக என்னால் இடுகை இட முடியவில்லை; உங்களின் இடுகைகளையும் படித்து கருத்தும் சொல்ல முடியவில்லை. விடுமுறை காலங்களிலும் வலைப்பூவிற்கு வரக்கூடிய நேரம் அமையுமா என்று தெரியாது.
காலம்/அனுபவம் தரும் பாடங்களை எந்த கல்லூரியும் கற்றுக்கொடுப்பதில்லை. பொதுவாக கல்விக்கூடங்களில் பல மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்தான் பாடம் சொல்லித்தருவார். ஆனால் நம் வலைப்பூ எனும் அழகிய கல்விக்கூடத்தில் ஒரு மாணவனாக என்னையும், எனக்கு பாடம் சொல்லித்தரும் அன்பு ஆசிரியர்களாக உங்கள் அனைவரையும் பார்க்கிறேன்.
நான் துவண்டு, சோர்வுறும் நேரங்களில் ஆறுதலாய் அரவணைத்து கனிவு சொற்களால் என்னை புதுப்பித்துக்கொண்டே வரும் என் மனைவி, குடும்பம், நண்பர்களுக்கு 'நன்றி' சொல்ல மாட்டேன், மாறாக 'I love you all' என்று சொல்ல விரும்புகிறேன்..தவறில்லையே !!!
48 comments:
உங்களின் மூன்று வார விடுமுறையின் ஒவ்வொரு மணித்துளியையும் சந்தோஷமாய் கழிக்க வாழ்த்துக்கள். விடுமுறை முடித்து வந்து உங்கள் எழுத்துப்பணியை தொடருங்கள் நண்பா!
பிரபாகர்.
வாழ்த்துக்கள் நண்பா. உங்களின் விடுமுறையை இன்பமாக உங்கள் குடும்பத்தாருடன்
கழித்து வாருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கவலை வேண்டாம் நண்பா .. எல்லாம் நன்மைக்கே .. ஒவ்வொரு நொடியும் குடும்பத்தோடு செலவிட்டு விடுமுறையில் மகிழ்ச்சி காண வாழ்த்துகிறேன் ::) all the best.
தவறே இல்ல தல. தாயக திரும்ப்லில் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துக்கள்
ஊர்ப்பயணம் நல்லபடி அமைய வாழ்த்துக்கள்.
நான் தான் முதலாவதாய் ? மகிழ்வுடன் சென்று இனிதே மகிழ்ந்து வருக. பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும். ........
.அருமையோ அருமை. enjoy.
நானும் ஒரு தந்தையாக உள்ளேன்.நான் ஒரு சாதாரண பெருந்து நடத்துனர். வாழ்வில் என்று முதல் அவமானப்பட்டேனோ, அன்றே முடுவு செய்தேன். ந்ன் பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்று. அதன்படி இன்று என் பிள்ளைகள் இருவரும் கணனி பொறியாளர்கள். உங்களின் இடுகையை பார்த்ததும் எனக்கு பழைய நினைவுகள் வந்து கண்கள் நிறைந்து விட்டன.இன்று என்னைப்பற்றி நானே பெருமைபட்டுக்கொள்ளுமளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
நன்றி
Have a safe and fun trip, நண்பா.....
Enjoy! Relax!
நல்ல பதிவு. நல்ல எண்ணம்.
உங்கள் பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள் பூங்குன்றன் .....
விடுமுறை காலங்களிலும் வலைப்பூவிற்கு வரக்கூடிய நேரம் அமையுமா என்று தெரியாது. //
வேண்டாம் பூங்குன்றன். வலைப்பூ ஒரு மாதிரி adiction
நீண்ட இளைவெளிக்குப்பின் குடும்பத்தினரை சந்திக்கும் நீங்கள் உங்கள் நேரத்தை முழுமையாக குடும்பத்துக்கே செலவழியுங்கள். எங்கே போக போகிறோம் வலையுலக நண்பர்கள் .
உங்கள் நாட்டின் சில கவலைக்கிடமான செய்திகளை பார்க்கும்போது ஒரு நிமிடம் உங்களை நினைத்ததுண்டு.
happy holidays
Enjoy with your family wish u happy pongal.............
சென்னையில் கேபிள் சங்கர் அல்லது தண்டோரவிற்கு ஒரு போன் செய்தால் சென்னை பதிவர்களில் சிலரையாவது (சிலர் என்பது கிட்டதிட்ட 10 ) பார்த்து விடலாம். அவசியம் நாம் சந்திப்போம். சென்னையில் என் தொலை பேசி எண்: 90030 12871
உங்களுக்கு நேரம் இருப்பின் சென்னையில் சந்திக்கலாம்.. தண்டோரா இல்லை கேபிளை அழையுங்கள்...
//உங்களின் மூன்று வார விடுமுறையின் ஒவ்வொரு மணித்துளியையும் சந்தோஷமாய் கழிக்க வாழ்த்துக்கள். விடுமுறை முடித்து வந்து உங்கள் எழுத்துப்பணியை தொடருங்கள் நண்பா!// அப்படியே வழிமொழிகிறேன் :)
நல்லபடியாக சென்று வாருங்கள்
தாங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற்றித்தருவான் இறைவன்.
குடும்பத்திஉலுள்ள அனவரையும் நலம் விசாரித்ததாக கூறுங்கள்.
ஆல்த பெஸ்ட்...
நேரம்கிடைக்கும்போது இதையும் பார்க்கவும்
http://fmalikka.blogspot.com/
வாழ்த்துக்கள் நண்பா. மூன்று வார காலமும் குடும்பத்தினருடன் செலவழிக்கவும்.
சந்தோசமா ஊருக்கு போய்ட்டு வாங்க
குடும்பத்தினர் அனைவருக்கும்
வாழ்த்துக்களையும் வணக்கங்களையும்
தெரிவியுங்கள்
சந்தோசமா ஊருக்கு போய்ட்டு வாங்க
குடும்பத்தினர் அனைவருக்கும்
வாழ்த்துக்களையும் வணக்கங்களையும்
தெரிவியுங்கள்
காலம்/அனுபவம் தரும் பாடங்களை எந்த கல்லூரியும் கற்றுக்கொடுப்பதில்லை. பொதுவாக கல்விக்கூடங்களில் பல மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்தான் பாடம் சொல்லித்தருவார். ஆனால் நம் வலைப்பூ எனும் அழகிய கல்விக்கூடத்தில் ஒரு மாணவனாக என்னையும், எனக்கு பாடம் சொல்லித்தரும் அன்பு ஆசிரியர்களாக உங்கள் அனைவரையும் பார்க்கிறேன்.//
உண்மைதான் நண்பரே..
தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளமுடிகிறது..
கூட்டுக்கு திரும்பறீங்களா:). வாங்க பூங்குன்றன்.
கூட்டுக்கு திரும்பறீங்களா:). வாங்க பூங்குன்றன்.
We Love U! தவறில்லையே...
ரொம்ப சந்தோசம். நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாங்க. (முடிந்தால் ஊரிலேயே அல்லது வேறு நாட்டிற்கோ வேலைக்கு செல்ல முயற்சிக்கவும்). திரும்ப ஈராக் போயித்தான் ஆகனுமா? ஈராக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறதே, அதனால் சொன்னேன்.
Happy voyage & enjoy your trip !!!
//We Love U! தவறில்லையே...//
அதானே... இதுலென்ன தப்புருக்கு...
சந்தோஷமாகபோய் வரவும்... எல்லாப்பிரச்சனைகளும் கடந்துபோகும்.
விடுமுறையில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வாங்க, ப்ளாக், பின்னூட்டம் அது இதுன்னு எதையும் எட்டிப் பார்க்காதிங்க. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் பூங்குன்றன்.
வாழ்த்துகள் பூங்குன்றன். உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
//விடுமுறையில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வாங்க, ப்ளாக், பின்னூட்டம் அது இதுன்னு எதையும் எட்டிப் பார்க்காதிங்க. வாழ்த்துக்கள்.//
கன்னா பின்னா ரிப்பீட்டு.
ஆமா பாஸ் குடும்பத்தோட மட்டும் நேரத்தை செலவழியுங்கள்.
விடுமுறை இனிதாக கழிய வாழ்த்துகள்.
பூங்குன்றன் , வாழ்த்துக்கள் !!!
ஊருக்கு நல்லபடியாக சென்று சந்தோசமாக விடுமுறையை கழிக்கவும் ...
வேறு எந்த சிந்தனையையும் வேண்டாம் .
இந்த தருணமெல்லாம் நினைத்து நினைத்து பார்க்கக்கூடிய ஒன்று ....
//எனக்கு மூன்று வாரமே விடுமுறை கிடைத்திருந்தாலும் அதை ஒவ்வொரு கணங்களாய் அனுபவிக்கப்போகிறேன்.//
நல்லா அனுபவிங்க பூங்குன்றன்.
உங்க பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்
தவறே இல்லை...!!
தங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்,
ஆர்.ஆர்.
/*எனக்கு மூன்று வாரமே விடுமுறை கிடைத்திருந்தாலும் அதை ஒவ்வொரு கணங்களாய் அனுபவிக்கப்போகிறேன்*/
ஒவ்வொரு கணமும் இனிமையாகச் செல்ல வாழ்த்துக்கள்.
உங்கள் விடுமுறையை உங்கள் குடும்பத்தாருடன் மிக மிக சந்தோஷமாக கழிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நன்பா ஊருக்கு போனால் நன்பர்களூம் உங்களை மறக்க போவதில்லை நீங்களும் மறக்க போவதில்லை எழுத்தும் மறந்து விடபோவதில்லை. எனவே விடுமுறையை சிறப்பாக கழிப்போம். நாளை காலை விமானம் ஏறுவோம்.......... நாளை மறுனாள் காலை தங்க தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை சென்றடைவோம்.....
வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
சந்தோஷமான விடுமுறை வாழ்த்துகள் குன்றன்.
போய்ட்டு வாங்க.
உங்க பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்
விடுமுறையை மகிழ்வுடன் கொண்டாட வாழ்த்துகிறேன் நண்பா
விஜய்
உங்களின் மூன்று வார விடுமுறையின் ஒவ்வொரு மணித்துளியையும் சந்தோஷமாய் கழிக்க வாழ்த்துக்கள். விடுமுறை முடித்து வந்து உங்கள் எழுத்துப்பணியை தொடருங்கள் நண்பா!
பிரபாகர்.//
இதையே நானும் வழி மொழிகிறேன்.... அனைத்தையும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் பூங்குன்றன்.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்.
குறிப்பு : இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம்.
அண்ணா எனது கைப்பேசி எண் : 9381377888
அழைத்தால் மிகவும் மகிழ்வேன்.
:)
welcome puungundran
Hi My dear lovable anna, am very lucky to ve u... & proud of u...by ur brother Thamarai.V
தங்களது காதல் ஞானி என்ற கவிதை எனது நண்பரின் தளமான 'தமிழ்ச்சிகரம்'(www.tamilsigaram.com) தளத்தின் 'இலக்கியம்'(http://www.tamilsigaram.com/Linkpages/Literature/disp.php?MessageId=7351) பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது மேலான படைப்புக்களை இந்த தளத்திற்கு அனுப்பி வைக்கவும். இணையதளத்திற்கு ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி - admin@tamilsigaram.com
tamilsigaram@yahoo.com
எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.
படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html
மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.
நட்புடன்,
சே.குமார்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
enna vanthachcha....?
pathivaiyey kanom...
enathu valaipoovirkku ungalai varaverkirean...
http://www.vayalaan.blogspot.com
Post a Comment