November 23, 2009

என் மறுபிறப்பின் கதை ..**முற்றும்**

நானும் நடந்ததை சொல்லியபிறகு திரு.ரானா(Assistant consular Officer,Embassy of India,Baghdad,Iraq) கனிவாக என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை தெளிவாக விளக்கிசொன்னார்.


மரியா அண்ணா அவர்கள் வேலை செய்யும் துறை மூலம் ஈராக் நாட்டு பிரஜையான மர்வான்,அலி,அதீர்,ஹுசாம் மற்றும் எங்கள் லீகல் வக்கீல் தாமார் மூலம் பாக்தாத்தில் உள்ள நம் இந்திய தூதரகம் சென்று எனக்கு புது பாஸ்போர்ட் கிடைக்க தேவையான ஆவணங்களை தயார் செய்து கொடுத்துவிட்டு வந்து விட்டார்.

சம்பவம் நடந்த தேதி          :  29-september-2009
ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதி :  14-October-2009

நேற்று  காலை நேரம் சரியாக பத்து மணிக்கு மரியா தன் துறைக்கு வருமாறு தொலைபேசியில் அழைத்தார்.

உள்ளே நுழைந்தவுடன் ரமேஷ்,மரியா ஓடி வந்து என்னை கட்டிபிடித்து வாழ்த்து சொல்கிறார்கள்.உடன் இருந்த மர்வான்,அலி,அதீர்,ஹுசாம்,தாமார் ஆகியோரும் கைகுலுக்கி தன் சந்தோஷத்தை சொல்கிறார்கள்.பணி காரணமாக பக்கத்துக்கு ஊர் பாஸ்ராவில் இருந்து நண்பர்கள் ராஜ்,சிவா,வினய் தொலைபேசியில் வாழ்த்தை சொல்கிறார்கள்.ஏனெனில் இன்று சரியாக பத்து மணிக்கு மரியா எனது புது பாஸ்போர்ட்டை என்னிடத்தில் ஒப்படைத்தார்.


சரியாக 52 நாட்கள் நான் ஈராக்கில் பாஸ்போர்ட் இல்லாமல் இருந்து இன்று காலை என் புது பாஸ்போர்ட்டை பெற்றேன்.இந்த கடந்த 52 நாட்களும் எனக்கு இரவினில் நிம்மதியான தூக்கம் இல்லை,கண்களை மூடினால் தீயின் இன்னொரு கோரதாண்டவம் தான் தெரிகிறது.எனக்கு சிறிது காலம் ஆகும் இந்த சம்பவத்தை மறக்க.

இந்த சம்பவத்தை மிக சாதாரணமாக ஒரு பத்தியில் சொல்லி முடித்துவிடலாம்.ஆனால் நம்மை சுற்றி எத்தனை நல்ல உள்ளங்கள் இருக்கிறது என்ற உண்மை எனக்கு மட்டுமே தெரிந்து இருக்கும்.அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்?பல விதங்களில் எனக்கு உதவிகள் பல புரிந்த இந்த ஈராக் நண்பர்களுக்கு என்ன பெரிதாக செய்து விட போகிறேன்? நம்மை சுற்றியும் நல்ல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.கவனிப்பதும்,அதை கொண்டாடுவதும் நம் கையில்தான் இருக்கிறது. முடிந்தவரையில் நாமும் மற்றவர்களுக்குதோள் கொடுப்போம்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் எனக்கு பெரும் உதவிகள் புரிந்த இந்த கட்டுரையில் பெயர் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும்,என் அலுவலக சக தோழர்களுக்கும், பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி திரு.ரானா அவர்களுக்கும், அவருடைய ஊழியர்களுக்கும் என் நெஞ்சம் கனிந்த நன்றியினை தெரிவிப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன்.  

வருகின்ற சனவரி மாதம் முதல் வாரம் சென்னையில் உள்ள என் குடும்பத்தை சந்திக்க போகிறேன் என் புது பாஸ்போர்ட் துணை கொண்டு. புது ஆண்டு நிச்சயம் எனக்கு புது தெம்பையும், புது மலர்ச்சியையும் கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இந்த கட்டுரையின் நோக்கம்:

வெளிநாட்டில் வாழும் என் அன்பு நண்பர்களே!

1)உங்கள் பாஸ்போர்ட்டை மிக பத்திரமாக வைத்திருங்கள்.

2)உங்கள் பாஸ்போர்ட் நகல்,நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் ஐடி கார்ட்,கல்வி சான்றிதழ்கள்,குடும்ப அட்டை,இந்திய ஓட்டுனர் உரிமம்,வாக்காளர்  அட்டை, விசா இவற்றின் நகல்களை எப்போதும் உங்கள் கையில் வைத்திருங்கள் அல்லது உங்கள் மெயில் ஐடிக்கு ஸ்கான் செய்து வையுங்கள்.

3)அப்படியும் ஏதேனும் பாஸ்போர்ட்டை தொலைக்க நேர்ந்தால் பதட்டபடாமல் உங்கள் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு உங்கள்
நிலையை விளக்கி தேவையான ஆவணங்களை சமர்ப்பியுங்கள்.

4)பல நாடுகளில் உள்ள நம் தூதரகங்கள் தற்காலிக சான்றிதழ் கூட வழங்கும்.இது நாட்டுக்கு நாடு மாறுபடும்.

5)உங்கள் பாஸ்போர்ட் தொலைந்து போனால் உடனடியாக பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து ஒரு முதல் தவகல் அறிக்கை(FIR) வாங்கி,தேவையான ஆவணங்களுடன் இந்தியதூதரகத்தில் தர வேண்டும்.

6)  உங்கள் பாஸ்போர்ட் எரிந்து போனால் உடனடியாக பக்கத்தில் உள்ள 'தீ அணைப்பு துறையில்' இருந்து ஒரு அறிக்கையும், காவல் நிலையத்தில் இருந்து ஒரு 'முதல் தவகல் அறிக்கை(FIR)' வாங்கி,தேவையான ஆவணங்களுடன் இந்திய தூதரகத்தில் தர வேண்டும்.

7) இதைவிட செய்ய வேண்டிய மிக முக்கிய வேலை என்னவென்றால் உங்களை தொலைத்தாலும் உங்கள் பாஸ்போர்ட்டை மட்டும் தொலைக்காதீர்கள் :)


********************************கட்டுரை முற்றும்*****************************

21 comments:

அன்புடன் மலிக்கா said...

இருநாளில் நடந்தைவைகளை படித்ததற்கு பின்,

இன்று அப்பாடா என்று மனம் லேசாகிப்போனது.

கஷ்டங்களின்போது நம்நண்பர்கள் சுற்றியுள்ளவர்கள் நமக்குதவுதனென்பது பெரும் உதவி. நம்மால் அதற்கு கைமாறு செய்யதுடிப்பது மனிதத்தின் வெளிப்பாடு.

புதிய பாஸ்போட் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி, நல்லபடியாக தாயகம் சென்று குடும்பத்துடன் குதூகலமாய் இருங்கள்.

நடந்தைவகள் அனைத்தையும் நல்லவைக்கே என எண்ணம்கொள்ளுங்கள்..

என்றென்றும் நட்புகளை நினைத்துக்கொள்ளுங்கள்..

அத்தோடு எங்களை இணைத்துக்கொள்ளுங்கள்...

Unknown said...

கட்டுரை பயணத்தோடு , முடிவில் நல்லதொரு பாஸ்போர்ட் பற்றி நல்ல தகவல் தந்ததற்காக நன்றி.

கட்டுரை பற்றி மர்வான், அலி. தாமர் ஆகியோரிடம் சொன்னபோது , அவர்களும் நன்றி மற்றும் தங்கள் மகிழ்ச்சியும் தெரிவிக்குமாறு சொன்னார்கள்.

THAMER SAID:
YOU ARE LIKE MY BROTHER AND MAYE BE ONE DAY, I WILL COME TO INDIA AND YOU WILL HELP ME THAT TIME. aS LONG AS YOU ARE HERE THEN YOU ARE MY BROTHER .

MARWAN SAID:
YOU ARE WELCOME ALTHOUGH I DID NOT CONTRIBUTE THAT MUCH, BY TH WAY I WILL BRING YOU THE SWEATER AS SOON AS I GO SHOPPING 4 END OF THIS WEEK. THANK U

ALI SAID:
YOU ALWAYS WELCOME, "THAT IS WHAT FRIENDS ARE THERE FOR"

அன்புடன் அருணா said...

நட்புக்கள் வட்டத்துக்கு ஒரு பெரிய பூங்கொத்து!

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா
{{இருநாளில் நடந்தைவைகளை படித்ததற்கு பின்,இன்று அப்பாடா என்று மனம் லேசாகிப்போனது.
கஷ்டங்களின்போது நம்நண்பர்கள் சுற்றியுள்ளவர்கள் நமக்குதவுதனென்பது பெரும் உதவி. நம்மால் அதற்கு கைமாறு செய்யதுடிப்பது மனிதத்தின் வெளிப்பாடு.புதிய பாஸ்போட் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி, நல்லபடியாக தாயகம் சென்று குடும்பத்துடன் குதூகலமாய் இருங்கள்.நடந்தைவகள் அனைத்தையும் நல்லவைக்கே என எண்ணம்கொள்ளுங்கள்..
என்றென்றும் நட்புகளை நினைத்துக்கொள்ளுங்கள்..
அத்தோடு எங்களை இணைத்துக்கொள்ளுங்கள்...}}

கருத்துக்கு மிக்க நன்றி தோழி மல்லி..உங்களை என்றோ என் நட்பு வட்டத்திற்குள் இணைத்து விட்டேன்.

பூங்குன்றன்.வே said...

@ MARIA

உங்கள் உதவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அண்ணா.புது பாஸ்போர்ட் வர உதவி செய்தததும் இன்றி எனக்கு உதவிய இந்த அன்பு ஈராக் நண்பர்கள் மூலம் எனக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய உங்களுக்கு கடவுள் துணை இருப்பாராக !!

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் அருணா

{{நட்புக்கள் வட்டத்துக்கு ஒரு பெரிய பூங்கொத்து!}}

நிச்சயம் மேடம்.உங்களின் தொடர் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி !!!

Prathap Kumar S. said...

உடுக்கை இழந்தான் கைபோல் அவர் தம் இடுக்கண்
களைவ தாம் நட்பு.

நண்பர்கள்னா இப்படித்தான் தலைவா இருக்கணும்.

நீங்க சொன்னப்புறம் என் பாஸ்பார்ட்டை ஒருதடவை எடுத்துப்பார்த்துகிட்டேன் இருக்கான்னு.
புது ஆண்டு மகிழ்ச்சியாய் மலர வாழ்த்துக்கள் தலைவா...

Prathap Kumar S. said...

உடுக்கை இழந்தான் கைபோல் அவர் தம் இடுக்கண்
களைவ தாம் நட்பு.

நண்பர்கள்னா இப்படித்தான் தலைவா இருக்கணும்.

நீங்க சொன்னப்புறம் என் பாஸ்பார்ட்டை ஒருதடவை எடுத்துப்பார்த்துகிட்டேன் இருக்கான்னு.
புது ஆண்டு மகிழ்ச்சியாய் மலர வாழ்த்துக்கள் தலைவா...

பூங்குன்றன்.வே said...

உண்மைதான் அன்பு தோழா,
வாழ்க்கையில் சொந்தங்கள் உதவுகிறதோ இல்லையோ நண்பர்கள் என்றுமே பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் தெய்வங்கள்;
எனக்கும் அப்படிதான்.பல நல்ல உள்ளங்கள் எனக்கு நண்பர்களாக அமைந்திருக்கின்றன உங்களை போல.நன்றி !!!

Unknown said...

நண்பா உனது பாஸ்போர்ட் திரும்ப பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். அதை நீ பெற்றபோது உன் முகத்தில் ஏற்பட்ட அந்த சந்தோஷத்தை நேரில் பார்க்க முடியாத வருத்தம்.

இந்த பதிவில் எங்கள் அனைவரையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்.

மேலும் அயல் நாடு வாழ் இந்தியர்கள் தங்களது பாஸ்போர்ட் தொலைந்தாலோ அல்லது எரிந்து போனாலோ செய்ய வேண்டிய விதிமுறைகள் பற்றி கூறி இருப்பது பாராட்டுக்குரியது.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் நண்பரே!

மிக தேவையான கருத்துகள்.

நட்பு - இதை விளக்கிடவே இயலாது.

மிக்க சந்தோஷம்.

S.A. நவாஸுதீன் said...

மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தந்த இடுகை பூங்குன்றன். விரைவில் தாயகம் சென்று குடும்பத்தோடு சந்தோசத்தை இரட்டிப்பாக்குங்கள்.

பூங்குன்றன்.வே said...

@ நட்புடன் ஜமால்

//வாழ்த்துகள் நண்பரே!

மிக தேவையான கருத்துகள்.

நட்பு - இதை விளக்கிடவே இயலாது.

மிக்க சந்தோஷம்.//

ஆம் நண்பா.சோதனை காலத்திலும்,சந்தோசம் தருணத்திலும் udan இருப்பவன் நண்பன் தானே. எனக்கும் இங்கே கிடைத்த நட்பையும்,என் சோதனை காலத்தில் அவர்கள் உதவியதையும் இங்கே இடுகையாக போட்டு ஒரு நன்றியினை வெளிப்படுத்தினேன். மிக்க நன்றி ஜமால்.

பூங்குன்றன்.வே said...

@ S.A. நவாஸுதீன்

//மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தந்த இடுகை பூங்குன்றன். விரைவில் தாயகம் சென்று குடும்பத்தோடு சந்தோசத்தை இரட்டிப்பாக்குங்கள்.//

நிச்சயமாக..நீங்கள் வந்து இங்கே என்னை வாழ்த்தியதும் பெரும் மகிழ்ச்சி எனக்கு.அடுத்த மாதம் சென்னை வருகிறேன் சந்தோஷமாக..மிக்க நன்றி நண்பரே!!!

SUFFIX said...

தங்களுடைய விடுமுறைப் பயணம் இனிதே அமைந்திட வாழ்த்துக்கள். தகவல் பகிர்விற்கு நன்றி. முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து மெயில் பாக்ஸில் வைத்துக் கொள்வது நல்ல அறிவுரை.

பூங்குன்றன்.வே said...

@ SUFFIX

//தங்களுடைய விடுமுறைப் பயணம் இனிதே அமைந்திட வாழ்த்துக்கள். தகவல் பகிர்விற்கு நன்றி. முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து மெயில் பாக்ஸில் வைத்துக் கொள்வது நல்ல அறிவுரை.//


வாழ்த்திற்கு நன்றி நண்பா,
உண்மைதான், ஒருவேளை நம் அசல் ஆவணங்கள் அழிந்தாலும் ஸ்கேன் பண்ணிய காப்பி கொண்டு சமாளித்துவிடலாம்.

அன்புடன் நான் said...

தங்களின் எச்சரிக்கை மற்றவர்கலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.... நன்றி. உங்க கடவுசீட்டு மீண்டும் கிடைத்ததில்மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள்.

வினோத் கெளதம் said...

அந்த சூழ்நிலையில் உங்களக்கு உதவிய நண்பர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்..ஊருக்கு சந்தொஷமா போயிட்டு வாங்க..:)

வினோத் கெளதம் said...

உதவுகின்ற உள்ளங்கள் இருக்க தான் செய்கின்றன..நாடு, மதம், மொழிகளை கடந்தும்..
ஊருக்கு சந்தோஷமா போயிட்டு வாங்க தல..;)

சத்ரியன் said...

உங்களுக்கு உதவிய நல் உள்ளங்களுக்கு ஒரு நண்பனாய் நானும் நன்றி சொல்கிறேன்.

காலம் வலிமை மிக்கது பூங்குன்றன். காயங்கள் ஆறும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இந்த பதிவை படித்து ரொம்ப கஷ்டமாகி விட்டது .

இந்த வேளையில் உங்களுக்கு உதவி புரிந்தவர்களை மறக்கலாகாது .

எனவே , மூழ்காத கப்பல் நட்பு தான் .

ஊருக்கு செல்ல என் வாழ்த்துக்கள் .