ரியல் ஹீரோ 2009
வறுமையில் வாடும் சமுதாயத்தை சேர்ந்த திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை முன்னேற்றமடைய வைக்கும் திட்டத்தின் பெயர் தான் "சூப்பர் -30'. இந்த திட்டத்தை உருவாக்கியவர், கணித வல்லுனர் ஆனந்த் குமார்.
பீகாரை சேர்ந்த இவர், தன் சூப்பர்-30 திட்டத்தின் மூலம் கடந்த ஏழு ஆண்டுகளில், துப்புரவு தொழிலாளி, ரிக்ஷா ஓட்டுபவர், நிலமற்ற தொழிலாளி உட்பட பலரின் பிள்ளைகளை, இந்தியாவின் முதன் மையான கல்வி மையங்களில் படிக்க வைத்து, சிறந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாக உருவாக்கி வருகிறார்.ஒவ்வொரு ஆண்டும் திறமை வாய்ந்த 30 மாணவர்களை தேர்ந் தெடுத்து பயிற்சி கொடுப்பதாலேயே இந்த திட்டத்திற்கு சூப்பர் -30 என பெயரிடப்பட்டுள்ளது. இவர், இத்திட்டத்தை துவங்கிய போது, 30 மாணவர்களின் தேவை யை பூர்த்தி செய்வது என்பது சிறிது கடினமானதாக இருந்தது. ஆனால், அவரது குடும்பத்தினர் ஆதரவு கரம் நீட்டினர். ஆனந்த் குமார், மற்ற பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பது போன்ற வேலைகளை செய்து பணம் ஈட்டினார். அவரின் தாயார் ஜெயந்தி தேவி, மாணவர்களுக்கான உணவுகளை தயார் செய்து கொடுத்தார்.
"சூப்பர்-30' திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே இலக்கு கடுமையாக படிக்க வேண் டும் என்பதே . மாணவர்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பலன் முதலாம் ஆண்டே கிடைத்தது. தன் குழுவில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்களுடன் இணைந்து, ஆனந்த் கடுமையாக உழைத்தார். கடந்த ஏழு ஆண்டுகளில், இவரிடம் பயிற்சி பெற்ற 182 மாணவர்கள், நாட்டின் பல்வேறு ஐ.ஐ.டி., மையங்களில் இடம் பெற் றுள்ளனர். கடந்த 2003ம் ஆண்டு "சூப்பர்-30' திட்டம் துவங்கப் பட்டது. அப்போது 30 மாணவர்களில், 18 பேர் ஐ.ஐ.டி.,களில் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத் தாண்டு 22 பேரும், 2005ம் ஆண்டு, 26 பேரும், கடந்த 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில், தலா 28 பேர் தேர்ச்சி பெற்றனர்.
கடந் தாண்டு மற்றும் இந்தாண்டும் "சூப்பர்-30' மூலம் பயற்சி பெற்ற 30 மாணவர்களும், தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, ஆனந்த் குமார் கூறுகையில், "அடுத்தாண்டு முதல், இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 60 ஆக அதிகரிக்க உள்ளேன். அப்போது, தான் பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் வாய்ப்பு பெறுவர்' என்றார்.ஆனந்த் குமார் மாணவ பருவத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர். தபால் துறை ஊழியராக இருந்த அவரது தந்தை இறந்த பின், ஆனந்த் குமாருக்கு, கருணை அடிப் படையில், கிளார்க் வேலை வழங்கப்பட்டது.
ஆனால், ஆனந்த் குமார் அதை ஏற்க மறுத்து, தன் படிப்பை தொடர்ந்தார். அப்போது பல தடைகளை எதிர்கொண்டார்.அவரது தாய் அப்பளங்கள் மற்றும் பிற உணவுப் பொருட் களை தயாரித்து ஆனந்த் பெயரில் விற்றார். ஆனந்த் குமாரும் அந்த பொருட்களை, வீடு வீடாக சென்று விற்று வருவார். அப்போது அவர் அனுபவித்த துன்பங்கள் தான், அவரை போன்ற மற்றவர்களின் துன்பத்தை உணர வைத்தன. அது தான் "ராமானுஜம் கணக்கு பள்ளி' மற்றும் "சூப்பர் -30' ஆகியவை துவங்க வழி வகுத்தன. இவை இரண்டும் பிரபலமடைய துவங்கிய போது, இவற்றை நிறுத்த கோரி, பல்வேறு தரப்பினரின் மிரட் டல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஆனந்திற்கு ஏற்பட்டது. கடந்த 2004ம் ஆண்டு, ஆனந்த் கொலை தாக்குதலில் இருந்து தப்பி உள்ளார். இவரது பயிற்சி மையத்தையும், சிலர் தாக்கினர். ஆனால், இதற்கெல்லாம் அஞ்சாமல், ஆனந்த் தன் குறிக்கோளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.
நன்றி: தினமலர்
தேதி: 10-Nov-2009
November 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஹேட்ஸ் ஆப் ஆனந்த்...
//இவை இரண்டும் பிரபலமடைய துவங்கிய போது, இவற்றை நிறுத்த கோரி, பல்வேறு தரப்பினரின் மிரட் டல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஆனந்திற்கு ஏற்பட்டது//
தானும் நல்லது பண்ணமாட்டாய்ங்க...பண்றவங்களையும் பண்ண விடமாட்டாயங்க. நாடு எவ்வளவு வேகமா போனாலும் இழுத்து பிடிச்சு நிப்பாட்றதுக்குன்னு சிலபேரு இருக்காய்ங்க..
ராயல் சல்யூட்.
நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்.
வாழவழிவிடு
இல்லையென்றால்
வாழ்க்கைக்கு வழிகொடு..
ஆனந்த் நீடூழி வாழட்டும்..
மேலும் பணி சிறக்க
வாழ்த்துக்கள் !
இப்படிக்கு
அந்தோணி தி கிரேட்
Post a Comment