November 22, 2009

என் மறுபிறப்பின் கதை ..பாகம் - 3

பாகம் -3


என் பாஸ்போர்ட்டை எங்கே என்று எல்லோரிடமும் கேட்டாயிற்று.

பதிலாக என் பாஸ்போர்ட்டின் எறிந்த பக்கங்கள் மட்டும் என் கையில் யாரோ திணித்தார்கள்.அதை பார்த்த அடுத்த வினாடி உடைந்து அழுதேன்.வெளிநாட்டில் வாழும் நமக்கு உயிருக்கு அடுத்தபடி பாதுகாக்கவேண்டிய விஷயம் இந்த பாஸ்போர்ட்.அது இல்லையென்றால் நாம் எப்படி இந்தியாவிற்கு செல்ல முடியும்?

ரமேஷ்,மரியா மற்றும் வினய் எல்லோரும் என்னை தேற்றினார்கள்..விடு மாப்ள.பாஸ்போர்ட்,எரிந்து போன மத்த பொருட்கள் வேற வாங்கிக்கலாம்.நீ உயிர் பிழைச்சதே பெரிய விஷயம்.கடவுள் தான் உன்னை காப்பாத்தி இருக்கார் என்றெல்லாம் சொன்னாலும் மனம் மட்டும் அதையே நினைத்து வருத்தத்தில் ஆழ்ந்தது.

சிறிது நேரம் கழித்து முகாம் மேலாளர் எனக்கு வேறு ஒரு புதிய அறையை ஒதுக்கி இருப்பதாகவும்,நாளை அடிப்படை தேவைகளுக்கு சோப்பு,டவல்,பிரஷ் வேண்டிய பொருட்களை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். மற்ற அனைவரும் எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

எனக்கு மறுபடியும் தனியாக படுக்க விருப்பம் இல்லை, என் நண்பர்களும் அதை விரும்பவில்லை. மூன்று பேரும் தங்கள் அறைகளுக்கு வருமாறு அன்பு கட்டளை இட்டாலும்...என் கண்கள் மட்டும் எரிந்து போன என் அறையை ஒரு முறை பார்த்தது.

சிறிது நேரம் மன குழப்பத்திற்கு பின், வினய் ரூமுக்கு சென்றோம்.எனக்காக மரியா அண்ணா அந்த நேரத்திலும் பிரார்த்தனை செய்தபோது மனசு நெகிழ்ந்தது.


இரவு 2 மணிவரை எனக்கு ஆறுதலாக பேசிவிட்டு ரமேஷ்,மரியா இருவரும் படுக்க சென்றார்கள். என் வேண்டுகோளின்படி வினய்யும் தூங்கிவிட்டான்.எனக்கு கண்கள் மூடினால் நெருப்பு கோரசிரிப்புகாட்டுகிறது. 

விடிந்தபின் எல்லோரும் அலுவலகம் செல்ல தயார் ஆனார்கள், நானும் தயார் ஆனேன்.நண்பர்கள் என்னை ஓய்வு எடுக்க சொல்லி வற்புறுத்தியும் எனக்கு முகாமில் இருக்க பிடிக்காமல் நண்பர்கள் கொடுத்த சட்டை,பேன்ட்,ஷு போட்டுக்கொண்டு அலுவலகம் வந்த சிறிது நேரத்தில்,குவைத்தில் இருந்து என் அன்பு அண்ணன்,எங்கள் கணினிதுறை மேலாளர் அப்துல் ரஷீத்தும்,அண்ணியும் எனக்கு தொலைபேசியில் ஆறுதல் சொன்னார்கள்.
என்னுடன் பணிபுரிபவர்கள் புதிய பொருட்கள் வாங்க தேவையான பணத்தை அவர்களே ஒவ்வொரு துறைவாரியாக சென்று மொத்தமாய் என் கையில் தருகையில் நான் மறுத்தேன்.மிகபெரிய போராட்டத்திற்கு பின் வாங்கியே ஆகவேண்டிய கட்டாயத்தில் வாங்கினேன்.அன்றே ஒரு நண்பர் உடன் வந்து கடைக்கு சென்று புதியதாய் தேவையான பொருட்களை வாங்கவும்உதவி செய்தார். 
















 
அலுவலகம் முடிந்து சாயங்காலம் முகாம் சென்று என் எரிந்து போன அறையையும்,பொருட்களையும் பார்த்தேன்..எரிந்து போனவை அனைத்தும் எனக்கு கனவுகளாய் தோன்றியது.

மறுநாள் காலை மரியா அண்ணா அவர்கள் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி திரு.ராணாவுக்கு என்னை பேச செய்தார்.

12 comments:

அன்புடன் மலிக்கா said...

என்னவென்று சொல்வது விதியின் விளையாட்டை.

நடப்பது அனைத்தும் நம் நன்மைக்கே என்றெண்ணிக்கொள்வதைத்தவிர அப்படியுள்ள சூழலில் வேறென்ன செய்யமுடியும்.

கண்முண்ணே காட்சிகளில் பிம்பங்கள் வந்து வந்து செல்கின்றன..

Cable சங்கர் said...

உங்கள் அன்றைய நிலையை லைவாய் எழுதியிருக்கிறீர்கள்.

ஜீவன்பென்னி said...

ரொம்ப பயங்கரமா இருக்கு. நீங்க பாக்தாத்ல வேலைபார்க்குறீங்கன்னு படிச்சப்பவே மனசுக்கு பக்குன்னு இருந்துச்சு. இப்போ இத படிச்ச பிறகு..ஹுஹும் என்ன சொல்லுறதுண்ணே தெரியல.

Unknown said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே உள்ளதே நண்பனே நண்பனே நண்பனே.......
அன்று போல் என்றுமே இருக்கவே கூடாது நண்பனே..........

கடைக்குட்டி said...

சுய அனுபவத்தை சுருக்கமாக எழுதி இருக்கிறீர்கள்.. சொல்ல வந்ததை கரெக்டா சொல்றீங்க.. இதே மாதிரி எழுதவும் :-)


அப்புறம் பாஸ்போர்ட் இல்லாம என்ன பண்ணீங்க அங்க??

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

/என்னவென்று சொல்வது விதியின் விளையாட்டை.

நடப்பது அனைத்தும் நம் நன்மைக்கே என்றெண்ணிக்கொள்வதைத்தவிர அப்படியுள்ள சூழலில் வேறென்ன செய்யமுடியும்.

கண்முண்ணே காட்சிகளில் பிம்பங்கள் வந்து வந்து செல்கின்றன//

விதியின் விளையாட்டு என்பதை விட நம் அறிவியல் கண்டுபிடிப்பால் நம்மை இழந்து கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை தோழி.

பூங்குன்றன்.வே said...

@ Cable Sankar

//உங்கள் அன்றைய நிலையை லைவாய் எழுதியிருக்கிறீர்கள்.//

ரொம்ப தேங்க்ஸ் ஸார்.நீங்கள் என் பதிவினை வாசிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை.அது இன்று நிறைவேறி விட்டது.
தொடர்ந்து வந்து உங்கள் அறிவுரை/
ஆலோசனைகளை கூறுங்கள்.

பூங்குன்றன்.வே said...

@ ஜீவன்பென்னி

//ரொம்ப பயங்கரமா இருக்கு. நீங்க பாக்தாத்ல வேலைபார்க்குறீங்கன்னு படிச்சப்பவே மனசுக்கு பக்குன்னு இருந்துச்சு. இப்போ இத படிச்ச பிறகு..ஹுஹும் என்ன சொல்லுறதுண்ணே தெரியல//

பாக்தாத் என்றாலே எல்லோரும் பயப்படுகிறார்கள் பாஸ்.நான் இருப்பது ஏர்போட்டில்.அது முழுவதுமாய் அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கு.
எப்படி இருந்தாலும் இன்னும் ரெண்டு மாசத்துல ஊருக்கு வந்துவிடேன் பாஸ்.உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி !!!

பூங்குன்றன்.வே said...

@ Vijay

//அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே உள்ளதே நண்பனே நண்பனே நண்பனே..
அன்று போல் என்றுமே இருக்கவே கூடாது நண்பனே//

எரிந்த நாள் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!
தீதான் காரணம் நண்பனே நண்பனே
நன்றி உரைக்கிறேன் நண்பனே

பூங்குன்றன்.வே said...

@ கடைக்குட்டி

//சுய அனுபவத்தை சுருக்கமாக எழுதி இருக்கிறீர்கள்.. சொல்ல வந்ததை கரெக்டா சொல்றீங்க.. இதே மாதிரி எழுதவும் :-)
அப்புறம் பாஸ்போர்ட் இல்லாம என்ன பண்ணீங்க அங்க??//

பாஸ்போர்ட் இல்லாம இருந்த நாட்களையும்,வாங்கின கதையையும் கடைசி பாகத்தில் எழுதி இருக்கிறேன் நண்பா.உங்க வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி!!!

Prathap Kumar S. said...

சாரி தலைவா வரலேட்டாப்போச்சு... சிஸ்டத்தை தொட்டதும் முதல்ல உங்க மேட்டரைத்ததான் பார்க்க வந்தேன்...


படிக்கும் போதே ஜீலிர்ங்குது... கடைசியையும் படிச்சுடறேன்...

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//சாரி தலைவா வரலேட்டாப்போச்சு... சிஸ்டத்தை தொட்டதும் முதல்ல உங்க மேட்டரைத்ததான் பார்க்க வந்தேன்.//

உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி தோழா..இதுக்கு பெயர்தான் நட்பு.