November 7, 2009

நாங்களும் பத்துக்கு பத்து போடுவோம்ல்ல.....



1) காதலில் காத்திருத்தல் சுகம் தான். 'கண்டிப்பாக வருகிறேன்' என்று சொன்ன என்  காதலிக்காக இரண்டு நாட்களாய் ரிஜிஸ்டர் ஆபிஸில் காத்திருப்பது சுகமா? சோகமா?

2) "இன்டர்வியூக்கு போவதால் உன் பைக் வேணும் மச்சினு" சொல்லிட்டு போன நண்பன், ஒரு வாரம் ஆகியும் வராதலால் டென்ஷனாகி போன் பண்ணி கேட்கும் போது "நம்ம பிரண்ட்ஷிப் எவ்ளோ டீப்டா" என்று சொல்றதை கேட்பது சுகமா? சோகமா?

3) படிப்பில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துவிட்டு விளையாட்டில் 'ஸ்கூல் பர்ஸ்ட்' கோப்பை வாங்கி வரும் என் மகனை பார்த்து எனக்கு வரும் பீலிங்க்ஸ் சுகமா? சோகமா?

4) ஒரே பஸ்சில் தினமும் வரும் அழகான பெண் ஒருத்தி என்னை பார்த்து புன்னகைத்த பிறகு,இன்னொருவனை பார்த்து 'ஹலோ' சொல்லும்போது என் மனது சுகமா? சோகமா?

5) இன்று மழை பெய்யும்,நாளை மழை பெய்யும் என பல நாட்களாய் எதிர்பார்த்து குடை கொண்டுவந்து ஒரு நாள் மட்டும் மறந்து விடுகையில்,அன்று மட்டும் கொட்டோகொட்டென்று மழை கொட்டும் நாள் சுகமா? சோகமா?

6) வேகமாக பைக்கில் போகையில் அழகான பெண் லிப்ட் கேட்டு,நானும் நிறுத்தி,சேர வேண்டிய இடம் வருவதற்குள்,அவளே நம்மை பலமுறை 'இடித்து' பின்பு அவள் இறங்கி போகையில்,ஜொள் விட்டு நான் 'பை பை' சொல்லி,சிறிது தூரம் வந்ததும் ஞாபகம் வந்து பர்ஸ்ஸை தேடுகையில்,அது காணாமல் போயிருந்தால் நான் அப்போது சுகமா?சோகமா?

7) ஆங்கிலம் எழுத,படிக்க வராத என் நண்பன் திடீரென ஒருநாள் வந்து "மச்சி, காலேஜ் படிக்கிற என் கேர்ள் பிரண்டுக்காக இங்கிலிஷ்ல நானே கவிதை எழுதி இருக்கேண்டா...ப்ளீஸ் படிச்சி தப்பு இருந்தா சொல்லேன்" னு கேட்கும்போது என் கண்களில் இருந்து வரும் கண்ணீருக்கு பெயர் சுகமா? சோகமா?

8)  பல மாதங்களாக பட்ஜெட் போட்டு சேமித்து வைத்த பணத்தில் லேட்டஸ்ட்டாக வந்த டச் ஸ்க்ரீன் மொபைலை வாங்கி வீட்டிற்கு வந்ததும்,"ஹாய் நல்லா இருக்கே மாமா,எனக்குதானே வாங்கி வந்தீங்க,ஸோ ஸ்வீட்னு"சொல்லி பிடிங்கிட்டு போற மச்சினியை பார்த்து வரும் அழுகை சுகமா? சோகமா?

9) திருட்டு தம் அடித்துகொண்டுஇருக்கும் போது "மாடியில் என்னடா பண்றன்னு" அப்பா குரலை கேட்டு பயந்து தம்மை கீழே போட்டுவிட்டு பார்த்தால் சிரித்து கொண்டே வந்த தங்கை என்னை பார்த்து "என் மிமிக்ரி எப்படின்னா" என்று கேட்டால்,சுகமா? சோகமா?

10) பதிவு எழுத ஆரம்பித்த புதிதிலேயே ஒரு நாள் இரவு "சிறந்த தமிழ்மண பதிவாளர்" விருது உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று தகவல் வந்து, எல்லா பிரபல ஆண்/பெண் பதிவாளர்களும் எனக்கு போன் செய்து வாழ்த்தியபின்,கனவு கலைந்து எழுந்து பார்ப்பது சுகமா? சோகமா?

20 comments:

புலவன் புலிகேசி said...

நல்ல கேள்விகள்.......

Jawahar said...

//வேகமாக பைக்கில் போகையில் அழகான பெண் லிப்ட் கேட்டு,நானும் நிறுத்தி,சேர வேண்டிய இடம் வருவதற்குள்,அவளே நம்மை பலமுறை 'இடித்து' பின்பு அவள் இறங்கி போகையில்,ஜொள் விட்டு நான் 'பை பை' சொல்லி,சிறிது தூரம் வந்ததும் ஞாபகம் வந்து பர்ஸ்ஸை தேடுகையில்,அது காணாமல் போயிருந்தால் நான் அப்போது சுகமா?சோகமா?//

அது, இடித்த இடமும், எத்தனை இடி என்பதையும் பொறுத்தது.

http://kgjawarlal.wordpress.com

அமுதா கிருஷ்ணா said...

ரொம்ப பாவம் தான் நீங்க....

க.பாலாசி said...

//3) படிப்பில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துவிட்டு விளையாட்டில் 'ஸ்கூல் பர்ஸ்ட்' கோப்பை வாங்கி வரும் என் மகனை பார்த்து எனக்கு வரும் பீலிங்க்ஸ் சுகமா? சோகமா?//

ரொம்ப சோகம் தான்.

ஆமா இப்டி பத்து கேள்விகள் கேட்டு எங்களை இம்சிக்கிறது உங்களுக்கு சுகமா? சோகமா?

thiyaa said...

நல்ல வினாக்கள் விடை சொல்வதுதான் கடினமாக உள்ளது.

எப்பிடி?

ரூம் போட்டு யோசிப்பிங்களோ ?

Prathap Kumar S. said...

4) ஒரே பஸ்சில் தினமும் வரும் அழகான பெண் ஒருத்தி என்னை பார்த்து புன்னகைத்த பிறகு,இன்னொருவனை பார்த்து 'ஹலோ' சொல்லும்போது என் மனது சுகமா? சோகமா?//

இதுகண்டிப்பா சோகம்தான். அனுபவம்தான்...

வாழ்க்கைல நிறைய சோகங்கள் அனுபவச்ருப்பீங்க போல... நல்லாருக்கு டாப் டென்

அன்புடன் மலிக்கா said...

நீங்களும் போட்டாச்சில்ல, அப்பப்பா சூப்பர்

பூங்குன்றன்.வே said...

@ VIJAY

Thank you so much for your valuable comment and your comments are really encouraging me...

பூங்குன்றன்.வே said...

@ புலவன் புலிகேசி

//நல்ல கேள்விகள்..//

பதில் சொல்லத்தான் ரொம்ப கஷ்டபட்டுட்டேன் :)
உங்களின் வருகைக்கும்,பாராட்டுக்கும் ரொம்ப நன்றிகள்.

பூங்குன்றன்.வே said...

@ Jawahar

//அது, இடித்த இடமும், எத்தனை இடி என்பதையும் பொறுத்தது//

பைக்ல போனா பொண்ணுங்க எங்க இடிபாங்கன்னு உங்களுக்கும் தெரியும் பாஸ். நாம அடிவாங்கறது சகஜம் தானே!!!

பூங்குன்றன்.வே said...

@ அமுதா கிருஷ்ணா

//ரொம்ப பாவஆமாங்க அமுதா.நான் ரொம்ப பாவம்.அழுகாச்சி அழுகாச்சியா வருது..என்ன செய்ய?
வருகைக்கு மிகவும் நன்றி..ம் தான் நீங்க....//

பழமைபேசி said...

//உங்கள் பொன்னான ஓட்டுக்களை இங்கே இடுங்கள்..//

எப்படி? எப்படி??

எதுக்கும் மேல இருக்குற வில்லையில ஒப்பமுக்கிட்டேன்!

பூங்குன்றன்.வே said...

@ க.பாலாசி

//ரொம்ப சோகம் தான்.

ஆமா இப்டி பத்து கேள்விகள் கேட்டு எங்களை இம்சிக்கிறது உங்களுக்கு சுகமா? சோகமா?//

யான் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் என்பது மாதிரி தான்...
எப்படியோ உங்களை போன்ற நல்ல பதிவர்களிடம் இருந்து பின்னூட்டம் பெற்றாயிற்றல்லவா? அதுதாங்க சந்தோஷம்...உங்களின் வருகை என் பதிர்விற்கு மேலும் மெருகூட்டுகிறது..

பூங்குன்றன்.வே said...

@ தியாவின் பேனா
//நல்ல வினாக்கள் விடை சொல்வதுதான் கடினமாக உள்ளது.எப்பிடி?ரூம் போட்டு யோசிப்பிங்களோ?//

ரூம் போட்டு யோசிக்க வேண்டியதில்லை தியா.எல்லாம் சொந்த அனுபவம் தான்..

நீங்கள் எனக்கு பின்னூட்டம் இடுவது இது இரண்டாவது முறை.ரொம்ப சந்தோஷமாக உள்ளேன்.தொடர்ந்து வாருங்கள்.

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்
//இதுகண்டிப்பா சோகம்தான். அனுபவம்தான்...
வாழ்க்கைல நிறைய சோகங்கள் அனுபவச்ருப்பீங்க போல... நல்லாருக்கு டாப் டென்//

சரியா கண்டுபிடிச்சிட்டீங்க..ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் ரொம்ப நன்றி.

பூங்குன்றன்.வே said...

@ Sujatha
//Nice Post//

சின்ன பாராட்டு தான் உங்களுடையது.இருந்தாலும் மிக பெரிய மதிப்பு கொண்டது.ரொம்ப நன்றிகள்...

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//நீங்களும் போட்டாச்சில்ல, அப்பப்பா சூப்பர்//

வாங்க தோழி..என்னடா ஆளையே காணோம்ன்னு பார்த்தேன்.

எனக்கும் ரொம்ப நாளா 'பத்துக்கு பத்து'போடணும்ன்னு ரொம்ப ஆசை.இப்பதான் போட முடிந்தது.உங்களின் பாராட்டுக்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது...நன்றி!!!

பூங்குன்றன்.வே said...

@ பழமைபேசி

//எப்படி? எப்படி??
எதுக்கும் மேல இருக்குற வில்லையில ஒப்பமுக்கிட்டேன்!//

நீங்க வில்லைல ஒப்பமிட்டு ஓட்டு போட்டது உங்களுக்கு சாதாரணம்.ஆனா எனக்கு ரொம்ப பெரிய கவ்ரவம்.ரொம்ப மகிழ்ச்சி நண்பரே!!!

Vijayasarathy R said...

//பதிவு எழுத ஆரம்பித்த புதிதிலேயே ஒரு நாள் இரவு "சிறந்த தமிழ்மண பதிவாளர்" விருது உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று தகவல் வந்து, எல்லா பிரபல ஆண்/பெண் பதிவாளர்களும் எனக்கு போன் செய்து வாழ்த்தியபின்,கனவு கலைந்து எழுந்து பார்ப்பது சுகமா? சோகமா? //

ரொம்ப சிம்பிள் ப்ரதர். உங்க கனவா இருந்தா சுகம்..எங்க கனவா இருந்தா படி சோகம். கெட்ட கனவா நெனச்சு மறந்துடுவோம்ல...

jeevi said...

இப்படி வார்த்தைகளால் உள்ளத்தின் ஆழத்தை தொட்டு , உதட்டில் சிரிப்பும் , ஒரு நிமிடம் மெய் மறக்க வைக்கும் உங்கள் கவிதை சுகமா ! சோகமா !