November 8, 2009

பேசும் நிலா


பெய்யன பெய்யும் மழைக்கு
நீ ரசிகை என்கிறாய்;
உன் அழகின் ரசிகன் நான் சிரிக்கிறேன்!

மாலை நேர சூரியன் அழகு
மிக பிடிக்கும் என்கிறாய்;
எனக்கோ நீ ஒரு பேசும் நிலா !

இசை கேட்டபடி பூங்காவில் நடப்பது
இனிமையான தருணம் என்கிறாய்;
எனக்கு நீதானே காதல் மெல்லிசை !!!

சட்டென தோன்றும் வானவில்
அதை சித்திரம் வரைந்து தா என்கிறாய்;
என் பார்வையில் நீ உயிர் ஓவியமாய் !!!

6 comments:

Prathap Kumar S. said...

இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி வரவேண்டிய கவிதையாச்சே பூங்குன்றன். உங்களுக்கு ஆயிடுச்சா?

Unknown said...

என்னடா கண்ணா ரோமன்ஸ் மூட்ல இருக்காப்ல , லவ்லி டா கண்ணா !

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

கல்யாணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆச்சு நண்பரே.ஆனாலும் காதலுக்கும், காதல் கவிதைகளுக்கும் குறைவில்லை..
உங்கள் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி ஜி.

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//என்னடா கண்ணா ரோமன்ஸ் மூட்ல இருக்காப்ல , லவ்லி டா கண்ணா//

நிலா என்றாலே லவ்லி தான் அண்ணா,ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கு!!!

மணி said...

காதலிப்பதே கவிதை
நல்லா இருக்கு உங்க கவி

பூங்குன்றன்.வே said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் வணக்கங்கள்."பேசும் நிலா" விற்கு ஓட்டு போட்ட எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள்.