காதல் போர்க்களம் ...
இரவு பூக்களாய் உன்
கனவுகள்
சுகந்த மலராக மலர்கிறது;
நிலவின் ஒளியாய் உன்
நினைவுகள்
சூர்ய வெளிச்சமாய் மிளிர்கிறது;
அம்பென பாயும் உன்
பார்வையோ
பூவிதழாய் இனிக்கிறது;
வாழ்வியல் இலக்கணமின்றி நம்
உடல்கள்
காமனின் போர்க்களத்தில் குதிக்கிறது;
எல்லாம் முடிந்து எழுகையில்
ஏனோ இதயம்
பெருங்குரலெடுத்து அழுகிறது !!!
November 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
காதல் கவிதை கண்ணுக்குள் மிளிர்கிறது,,
அருமையாக இருக்கு தோண்டத்தோண்ட மனஆழத்திலிருந்து அற்புதமான வரிகள் எழும்பும்.ம்ம்ம்.
தொடரட்டும் காதல் கணைகள்..
வளரட்டும் கவிதை வரிகள்...
நண்பா இந்த கவிதைக்கு "பாக்தாத்திலிருந்து பூங்குன்றன் காதல் ஏக்கத்துடன்" தலைப்பு எப்படி இருக்கும்?
நல்ல கவிதை
:-)
அட!!
நன்றாகவுள்ளது கவிஞரே...
சங்க இலக்கியத்தில் புறநானூற்றுப்பாடல் பாடிய புலவர் ...
கணியன் பூங்குன்றனார்...
(யாதும் ஊரே.
யாவரும் கேளிர்)
பெயர் பார்த்து இவ்வலைப்பதிவுக்கு வந்தேன்...
@ அன்புடன் மலிக்கா
நீங்க வேற மேடம்.நான் எங்கே தோண்டுவது..அதுவா வருது.அடக்க முடியல.காதல் பீலிங் ஸை சொல்றேன்.என்னமோ நடக்குது.மர்மமா இருக்குது.
@ விஜய்
அடிவாங்க வைக்க ஒரு கூட்டமே சுத்துது..நீங்கதான் அதுக்கு தலைவனா?
@ கலையரசன்
நல்லா இருக்குன்னு சிரிக்கிறீங்களா? இல்ல நல்லா இல்லைன்னு சிரிக்கிறீங்களா??
@ முனைவர்.இரா.குணசீலன்
//கணியன் பூங்குன்றனார்//
அவர் எல்லாம் ரொம்ப பெரிய ஆளுங்க.
//பெயர் பார்த்து இவ்வலைப்பதிவுக்கு வந்தேன்//
பெயர் பார்த்து வந்து ரொம்ப ஏமாந்து போய்ட்டீங்களா திரு.இரா.குணசீலன்.
உங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றி!!!
ஏமாறவில்லை நண்பரே...
இங்குள்ள எல்லா கவிதைகளையும் வாசிச்சுட்டேன் குன்றா.அருமையாய் இருக்கு.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள் மக்கா!
பூ உன் எண்ணங்கள், ஆசைகள் வெளி வருகின்றது ! நன்று
அருமை !
அருமை !
Post a Comment