காதல் சிறை !!!
நீ என் கண்களை பார்த்து
பேசுகையில்
காலடியில் உலகம் நழுவுகிறது;
நீ என் கைகளை பற்றி
கதை பேசுகையில்
என் மனத்தோட்ட மலர்கள் எல்லாம் பூக்கிறது;
உன் கொலுசு சப்தம்
கேட்கையில்
இதயம் நூறுமுறை படபடக்கிறது;
இப்படியாய் என் காதல்
தினம் தினம்
வளர்பிறையாய் வளர்கிறது - ஆகவே
தேவதை வந்து வரம் கேட்டால்
வேணாம் என்பேன்.
நீயே எனக்கு தேவதையாக இருப்பதால்...
கண்களால் உன்னை சிறையிலிட்டு
என் மனதிற்குள்
முத்த சங்கிலியால் கட்டி,
வேண்டுமென்றே விடுதலை செய்து
லஞ்சமாய்
மொத்தமாய் உன்னை பெறுவேன் !!!
November 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
காலையில் ஒரு கவிதை
அதுவும் காதல் கவிதை
மனதிற்கு இதமான கவிதை
காதலியை
"வேண்டுமென்றே விடுதலை செய்து
லஞ்சமாய்
மொத்தமாய் உன்னை பெறுவேன் !!! "
நன்றாக இருக்கு நண்பா
காதல் சிறையிற்குள் சினேகிதனே
சிறைவைத்தற்கு தண்டனையாய்
லஞ்சமாய் மொத்தமும் கேட்பது அருமை...
தொடரட்டும் சிறைவாசம்...
காதல் சிறகினிலே நந்தலலவா ! அருமை !அருமை !
காதல் சிறை !!!
உண்மையில் காதல் என்பது சிறை தான்!
ஆனால் அதுவும் ஒரு சுகம் தான் !
வாழ்க்கையில் எத்தனையோ முறை, நிறைய பெண்களை கடந்து வந்து
இருப்போம் ( ஆட்டோகிராப் படம் மாதிரி இல்லை ).
ஆனால் முதல் காதல் மறக்கபடுவதும் இல்லை , அழிக்கபடுவதும் இல்லை !
அது தான் காதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது !
வாழ்த்துக்கள்
காதல்...
கண்களால் கைது செய்து
மனதில் சிறை வைத்து
உயிர், மெய் அறியவைத்து
நரகமாய்...
சொர்கத்தை காட்டுமிடம்.
@ விஜய்
//நன்றாக இருக்கு நண்பா//
மிக்க மகிழ்ச்சி விஜய்.
@ அன்புடன் மலிக்கா
காதல் சிறையினில் பரோலில் வரமுடியாத கைதியாக உள்ளேன்.அதுவும் ஆயுள் கைதியாக.
@ மரியா
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அண்ணா.காதல் எந்த காலத்திலும் அழிய முடியா ஒன்றுதான்.
@ RKUMAR
டேய் ராஜ்...இங்க நீயும் வந்தாச்சா? எனக்கு பின்னூட்டம் இட்ட உனக்கு ரொம்ப நன்றி மச்சான்.
Post a Comment