அப்துல் ரஷீத்!!!
அப்துல் ரஷீத், இவர் எங்கள் கணினித்துறை மேலாளர்.
வெளிநாட்டு அமெரிக்க நிறுவனத்தில்(குவைத்) வேலை கிடைத்து சேர்ந்த அன்றுதான் முதல்முறையாக அவரை பார்த்தேன்.
அதற்கு முன் அவரை பார்த்ததில்லை, ஆனால் ஓரிரு முறை இணையத்தில் நேர்முக தேர்விற்காக பேசி இருக்கிறேன்.
முதல் நாள் என்பதால் கொஞ்சம் பயமாகவும்,படபடப்பாகவும் இருந்தது.வெளிநாடு என்பதால் நம்மூரை போலன்றி நிறைய விஷயங்களுக்குக்காக கையெழுத்து போட வேண்டி இருந்தது.
உடன் இருந்து எல்லாவற்றையும் முடித்து கொடுத்தார்.இரண்டு நாட்கள் குவைத்தில் இருந்துவிட்டு மூன்றாம் நாள் நான் பாக்தாத்(ஈராக்) பயமணமாகும் வரை எல்லா உதவிகளையும் செய்தார்.
ஈராக் வந்து இரண்டு ஆண்டுகள் முடிய போகிறது.வேலையில் நான் சில தவறுகள் செய்திருந்தாலும் ஒருமுறை கூட கடும்சொற்களால் ஏசியதில்லை.(எஸ்கேப்)
என்னை மட்டும் இல்லை-என்னுடன் இந்த நிறுவன கணினி துறையில் இருக்கும் சக நண்பர்கள் எல்லோரையுமே அவர் எப்போதும் அரவணைத்தே வந்து கொண்டு இருக்கிறார்.
சிறந்த பண்பாளர்.அவரிடம் இலக்கியம்,தமிழ்,கவிதை,எழுத்தாளர்கள், சமுதாயம், சித்தாந்தம்,அரசியல்,கடவுள்,கணினி இப்படி எந்த விஷயத்தை பற்றியும் எவ்வளவு நேரம் நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.
அதற்காக எங்கள் மேலாளர் வயதானவர் என்று நினைக்க வேண்டாம்.ஜஸ்ட் 33 தான் ஆகிறது.(எங்கள் மேலாளரை சினிமாவில் நடிக்ககூட கூப்பிட்டார்கள்,ஆனால் அஜித்,விஜய் பாவம் என்பதால் அந்த பக்கம் போகவில்லை)
மிக அழகாக பாடுவார்.அவர் பாடுவதை ஓரு நாள் முழுக்க கேட்டுகொண்டே இருக்கலாம்.பாடும்போது சிறு பிசிறோ அல்லது தாளம் தப்பியோ பாடாமல் மிகசரியாக பாடுவார்.
நிறைய கவிதைகள்,கதைகள்,கட்டுரைகள் எழுதியிருந்தாலும் வேலைப்பளு காரணமாக வெளியிடாமல் வைத்திருக்கிறார்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை குவைத்தில் இருந்து ஈராக் வருவார்.ஒரு வாரம் தங்கி இருந்து மேற்பார்வையிடுவார்.அந்த ஒருவாரம் நாங்கள் இருக்கும் பாக்த்தாத் ஏர்போர்ட்டே களைகட்டும்.ஒரு மேலாளர் மாதிரி இல்லாமல் நண்பன் மாதிரி,உடன் பிறந்த அண்ணன் மாதிரி எங்களை பார்த்துகொள்வார்.
அந்த எண்ணம் எல்லா மேலாளருக்கும் வந்துவிட்டால் எந்த அலுவலகமும் சிறப்பாக இருக்கும்.
குவைத்தில் இருந்து ஈராக் வரும்போது சும்மா வர மாட்டார்.அண்ணி எங்களுக்காக செய்த புளிசாதம்,பிரியாணி என்று பலவகை சுவையான சாப்பாடுகளை கொண்டு வந்து எங்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பார்.ஈராக்கில் ஹோட்டல் இல்லை.நம்மூர் சாப்பாடும் கிடைக்காது.(ஸ்பெஷல் தேங்க்ஸ் டூ அண்ணி)
அவர் கொடுத்த வேலைய முடித்துவிட்டால் அடுத்து நாம் என்ன செய்து கொண்டுருந்தாலும் அதை பற்றி கேட்கமாட்டார்.(செம ஐஸ்)
அவரை நான் வேலையில் சேர்ந்த முதல் நாளிலிருந்து இன்றுவரை 'ஸார்' என்று அழைத்ததில்லை.உரிமையாக 'அண்ணா' என்றுதான் நான் அழைத்து கொண்டு இருக்கிறேன்.
நான் சோர்வுறும் நேரங்களில் அறிவுரை கூறி இயல்பான மனநிலைக்கு கொண்டுவரும் அவரை நான் அண்ணா என்று அழைப்பதில் தவறில்லையே!!
சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த மிக பெரிய தீ விபத்தில் என் உயிரை தவிர எல்லாவற்றையும் இழந்த நிலையில் அண்ணாவும்,அண்ணியும் குவைத்தில் இருந்து எனக்கு ஆறுதல் சொன்னதோடு மட்டுமின்றி நான் எதிர்பாராத ஒரு உதவியையும் செய்து எனக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிட்டார்.(ஸோ கைண்ட் ஆப் யூ & தேங்க் யூ அண்ணா)
((( இந்த நேரத்தில் இங்கே அந்த விபத்து முடிந்து பிறகு மரியா அண்ணா,ரமேஷ்,வினய்,சிவா,ராஜ் ஆகியோர் எனக்கு கொடுத்த மன தைரியமும்,ஆறுதல்களையும் நினைத்து பார்க்கிறேன்.குறிப்பாக உடன் பிறவா அண்ணன் மரியா அந்தோணி செய்துகொண்டுஇருக்கும் உதவிகள் என் மனதை விட்டு என்றும் அகலாது.)))
இதோ வெளிநாடு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து இன்னும் ஒரு சில மாதங்களில் ஊர் திரும்ப போகிறோம்.எங்கள் 'அண்ணா' வின் சுகமான சகோதர பாசத்தை மனதில் சுமந்து கொண்டு............
இந்த அண்ணன்-தம்பி உறவு, திரும்ப இங்கயே வந்தாலும்(ஈராக்) அல்லது அங்கயே நின்றாலும்(இந்தியா) தொடர வேண்டும் என்பதே எனக்கும், எங்கள் கணினி துறையில் இருக்கும் சக நண்பர்களுக்கும் ஆசை.
காலம்தான் பதில் சொல்லவேண்டும்!!!
November 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கொடுத்துவச்சவர் நீங்க... நல்ல பாஸ் கிடைச்சிருக்காரு...
லட்சத்துல ஒருத்தருக்கதான் இது அமையும்.வாழ்த்துக்கள்.
@ நாஞ்சில் பிரதாப்
//கொடுத்துவச்சவர் நீங்க... நல்ல பாஸ் கிடைச்சிருக்காரு...
லட்சத்துல ஒருத்தருக்கதான் இது அமையும்.வாழ்த்துக்கள்.//
அது உண்மை தான் ஜி.நாங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க இந்த விஷயத்தில்...
Post a Comment