November 17, 2009

பெருமையுடன் வழங்கும் ஐம்பதாவது இடுகை :)

பெருமையுடன் வழங்கும் ஐம்பதாவது இடுகை-  நன்றி நன்றி நன்றி !!!


(எத்தனையோ பேர் நூறு, ஐநூறு என்று பதிவுகள் எழுதி அமைதியாக இருக்கும்போது 'நேற்று மழையில் இன்று முளைத்த காளானாய்' ஐம்பதுக்கே பெருமையா என்று நீங்கள் கேட்பது புரியுது சாமி-ஆனால் எனக்கெல்லாம் இந்த ஐம்பதாவது இடுகையே பெரிய சாமாசாரம்ங்க)

நான் அப்படி என்னதான் எழுதி விட்டேன்? இல்லை இன்னும் அப்படி புதிதாய் என்ன எழுத போறேன்னு பார்த்தா எழுதியவரைக்கும் நிச்சயம் ஒன்றுமில்லை. ஆனால் என் எழுத்துக்கள் நிச்சயம் ஒருநாள் என் தமிழ் மக்களை கவரும் என்பதில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

நாம் கடுமையாக உழைப்பின் எந்த கனவும் ஒருநாள் நனவாகும்.என் கனவும் நனவாக உழைத்து கொண்டிருக்கிறேன்.

சரளமாய் பெய்யும் மழையில்,மின்சாரம் இல்லாத ஓர் இரவில்...சட்டென எங்கோ தோன்றும் வெளிச்சம் போல என் கவிதைகள் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை.

என் கவிதைகள் மகாகவிகள் பாரதி/பாரதிதாசன் கவிதைகள் போல சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் நினைக்கவில்லை.ஆனால் இன்றைய வேகமான எந்திர சூழலில் ஒரு நிமிடம் என் கவிதைகளை படித்து சிறு மகிழ்ச்சி கிடைத்தால் அதுவே எனக்கு சிறப்பு.

தமிழ் ஒரு அழகான மொழி. தமிழில் நான் எழுதுகிறேன் என்பதே எனக்கு கிடைத்த பேரின்பம்.தமிழனாய் பிறந்ததே ஒரு தவம்.என்னால் முடிந்ததை நானும் எழுதுகிறேன் என்ற அளவில் மிக்க பெருமை எனக்கு.

முகம் தெரியாத பல நல்ல உள்ளங்கள் என் ஒவ்வொரு படைப்பிற்கும் தொடர்ந்து கருத்துகள்,ஆலோசனைகள்,அறிவுரைகள் வழங்கி வருவதை நினைக்கையில் உள்ளம் நெகிழ்கிறது.அவர்களுக்கும்,என் உடன் பணிபுரியும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியினை தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்.

நன்றியுடன்,

பூங்குன்றன்.

18 comments:

அன்புடன் மலிக்கா said...

ஹையா நான் தான் ஃபஸ்ட்,

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழனே.

கவியென்பது கனவுலகிலிருந்து கொண்டுவருவது

கவியென்பது நினைவுலகிலிருந்து தினம் படைப்பது

கவியென்பது காற்றாற்று வெள்ளம்போல் பாய்ந்துவருவது

எதையும் எழுதலாம் கவிக்குள்
எதையும் படைக்கலாம் கவிக்குள்
எதையும் தகர்தெறியலாம் கவிக்குள்
எதையும் கொண்டுவரலாம் கவிக்குள்

இனி
அத்தனையும் கொண்டுவா உன் படைப்பில்.

எல்லாம் ஜெயித்திடலாம் நிஜத்தில்.

ஏணியில்லாம் எட்டிதொடு வானத்தை
கடக்க கடக்க வந்துகொண்டிருக்கும் வனப்பாதை அதை வேகமாக நடந்து முன்னேறு..

ஐம்பதென்ன ஐயாயிரையும் தாண்டியும் தொடலாம்.

தொடர்ந்து தொடருங்கள்..
வாழ்த்துக்கள் வந்துகுமியட்டும்..

Unknown said...

ஷ் ஷ் ஷ் , யப்பா முடியல , தாங்க முடியல எப்படிப்பா உனக்கு மட்டும் வருது.
அதுவா தான வருது , சரி சரி அடங்கு கண்ணா .

அருமையோ அருமை , அதுக்குள்ளே ஐம்பதா , வாழ்த்துக்கள் பூங்குன்றன், உமது பணி சிறக்க எமது வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் , தொடரட்டும் அன்பு தொல்லை , எமது கருத்துக்கள் உமது எண்ணங்களை உற்றாக படுத்தும் என நம்புகிறேன் !

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா. எழுத ஆரம்பித்து 50 நாட்களில் 50 படைப்புகள்.
சில படைப்புகள் சுமாராக இருந்தாலும் பல படைப்புகள் அருபுதமாக இருந்தன.
வானொலியில் தினம் ஒரு கதை சொல்லிய தென்கச்சி கோ சுவாமிநாதனை போல
"தினம் ஒரு பதிவு" கொடுங்கள். 50 என்ன 50000 இத்தையும் தாண்டல்லாம்.
உங்கள் கனவுகள் நினைவாக வாழ்த்துக்கள்
உங்கள் எழுத்துக்கள் அனைவருக்கும் உற்சாக பானம் போல இருக்கட்டும்

thiyaa said...

வாழ்த்துக்கள்

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

மிக்க நன்றி தோழி.உங்களின் தொடர் ஊக்கத்துக்கும்,ஆதரவுக்கும் நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

பூங்குன்றன்.வே said...

@ MARIA

மிக்க நன்றி அண்ணா.உங்களின் தொடர் ஊக்கத்துக்கும்,ஆதரவுக்கும் நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

பூங்குன்றன்.வே said...

@ Vijay

தினம் ஒரு பதிவு இதைதான் முயன்று கொண்டிருக்கிறேன் நண்பா.இனி வரும் காலங்களில் தரமான படைப்புக்களை வழங்க முயல்கிறேன்.உன் ஊக்கத்துக்கும்
,ஆதரவுக்கும் மிக்க நன்றி.

பூங்குன்றன்.வே said...

@ தியாவின் பேனா

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி!!!

ரோஸ்விக் said...

வாழ்த்துக்கள் நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ ரோஸ்விக்

ரொம்ப நன்றி தலைவா !!!

அன்புடன் அருணா said...

50க்கு பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் அருணா

உங்களின் முதல் வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி!!!

ஜெயந்தி said...

வாழ்த்துக்கள்!

பிரபாகர் said...

இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். தொடருங்கள், விரைவில் நூறாவது தொட வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

பூங்குன்றன்.வே said...

@ ஜெயந்தி

மிக்க நன்றி !

பூங்குன்றன்.வே said...

@ பிரபாகர்

//இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். தொடருங்கள், விரைவில் நூறாவது தொட வாழ்த்துக்கள்//

உங்களை போன்ற நண்பர்கள் தரும் உற்சாகத்தால் நிச்சயம் நூறாவது பதிவை தொடுவேன் விரைவில்..மிக்க நன்றி பிரபாகர் !!!

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

"சரளமாய் பெய்யும் மழையில்,மின்சாரம் இல்லாத ஓர் இரவில்...சட்டென எங்கோ தோன்றும் வெளிச்சம் போல என் கவிதைகள் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை"
ஆசைகள் நிறைவு பெறட்டும்.

தொடரட்டும் வெற்றிகள்.