November 18, 2009

உயிர் பூவே !!!

உயிர் பூவே !!!

நீ வரும்வழியில்
பூக்கள் தூவ மாட்டேன்.
அந்த பூக்களின் மரணத்தில்
உன் உயிர்ப்பூ வருந்துமே !!!



காதல் மோசடி  !!!

காதலை சொன்னேன்
ஏற்று கொண்டாய்;
முத்தம் கேட்டேன்
மறுக்காமல் இதழில் பதித்தாய்;
கட்டிப்பிடி என்றேன்
இறுக அணைத்தாய்;
நான் கேட்ட அனைத்தும் செய்தாய்
ஆனால் என்னை கேட்காமலேயே
வேறு ஒருவனை மணந்து
வாழ்த்து கேட்கிறாயே?
தரவா? மறவா?

6 comments:

அன்புடன் மலிக்கா said...

/நீ வரும்வழியில்
பூக்கள் தூவ மாட்டேன்.
அந்த பூக்களின் மரணத்தில்
உன் உயிர்ப்பூ வருந்துமே !!!/

நிச்சயம் வருந்தும். ஒரு உயிருக்காக ஒன்னொரு உயிரை வதைப்பது பாவம்..

/தரவா? மறவா? /

கேள்விகள் சுலபம்..
பதில்கள் சிரமம்..

ஆயினும் கவிதைகள் பூமணம்...

Unknown said...

பூ (பூங்குன்றன்) பூவை பற்றி எழுதியது அருமை .


==========

வாழ்த்து கேட்கிறாயே?
தரவா? மறவா?

சரியானது தான் .

பிறகு தான் உனக்கு மறுபடியும் கிடைக்கும் வேறு ஒரு காதல் , முத்தம்,கட்டிபிடித்தல் . மட்டுமல்ல இப்படி கவிதை எழுத வைப்பதற்காகவும்.

காதல் மோசடிக்கு அப்புறம் தான் கவிஜெர்கள் பிறப்பார்கள் , பூவை (பூங்குன்றன்போல ஹா ஹா ஹா ஹா ஹா !!!!!!!!!!!!!!!!

காலை வணக்கமையா !!!!!!!!!!!!!!

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி..

பூங்குன்றன்.வே said...

@ MARIA


உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி..

தேவன் said...

பாக்தாத் திருடன் ( மன்னிச்சிருங்க ) முதல் படம் ரொம்ப அழகு சுட்டுட்டேன்.

பூங்குன்றன்.வே said...

நான் பாக்தாத் பூங்குன்றன்...திருடன் இல்லீங்க. பரவாயில்லை.

நான் சுட்ட பழத்தை நீங்க இப்ப சுட்டுட்டீங்க கேசவன் :)