November 24, 2009

உன் நினைவில் நான் !!!




என்னை காதலிக்கிறேன் என்றாய்
வேண்டாமென மறுத்து விட்டேன்;
இன்றோ நான் உன்னை விரும்புகிறேன்
நீயோ வேறு ஒருவருடன் மணமேடையில் !!! 

விசித்தரமான இந்த வாழ்க்கையில்
வேண்டுதல் நேரத்தில் கிடைப்பதில்லை;
வேண்டாமை வலிய வருகையில்
நூலறுந்த பட்டமாய் அலைபாய்கிறேன் உன் நினைவாய்...

(இந்த கவிதை என் நண்பன் ரமேஷ் ஞானபிரகாசம் என்கிற ரமியின் எண்ணங்களில் உதித்தது..நான் அனுமதியுடன் வெளியிடுகிறேன்)

12 comments:

Prathap Kumar S. said...

யாரோடதா இருந்தா என்ன மேட்டருதான் முக்கியம்..
ரொம்ப அடிவாங்கிருப்பார் போல தெரியுதே உங்க நண்பர்...

கடைக்குட்டி said...

ஏன் இவ்ளோ ஃபீலிங்கீ தலைவா ???

ஹேமா said...

கைக்கு வந்த நேரம் தவற விட்டிருக்கிறார் உங்கள் நண்பர்.இனி என்ன செய்யலாம்.மனதை ஆறுதல்படுதுவதைத் தவிர.இனிய வாழ்வொன்று நிச்சயம் வரவேற்கும் அவரை.

அன்புடன் மலிக்கா said...

வேண்டியது கிடைத்துவிட்டால் பின்பு வேண்டுவது நின்றுவிடுமல்லவா? இதுதான் வாழ்க்கை..

கிடைக்காத ஒன்றுக்கு வருந்துவதைவிட, கிடைத்த அல்ல கிடைக்கிப்போகிற ஒன்றுக்குக்காக மகிழ்ச்சியாக இருப்பது சிறந்தது. என்ன சரியா? தோழமையே ஏதோ நம்மக்கு எட்டியவரை...

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்
//யாரோடதா இருந்தா என்ன மேட்டருதான் முக்கியம்..
ரொம்ப அடிவாங்கிருப்பார் போல தெரியுதே உங்க நண்பர்...//

ஆமாம் தல.அடி ரொம்ப வாங்கி வாங்கி இப்ப பழகிட்டார் :)

பூங்குன்றன்.வே said...

@ கடைக்குட்டி

//ஏன் இவ்ளோ ஃபீலிங்கீ தலைவா ???//

என்ன செய்ய? அவர் பீலிங் எனக்கும் தொத்திகிச்சு பாஸ்.

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//கைக்கு வந்த நேரம் தவற விட்டிருக்கிறார் உங்கள் நண்பர்.இனி என்ன செய்யலாம்.மனதை ஆறுதல்படுதுவதைத் தவிர.இனிய வாழ்வொன்று நிச்சயம் வரவேற்கும் அவரை.//

இது அவரோட பழைய பீலிங். இப்ப மனைவியுடன் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கார்.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//வேண்டியது கிடைத்துவிட்டால் பின்பு வேண்டுவது நின்றுவிடுமல்லவா? இதுதான் வாழ்க்கை..

கிடைக்காத ஒன்றுக்கு வருந்துவதைவிட, கிடைத்த அல்ல கிடைக்கிப்போகிற ஒன்றுக்குக்காக மகிழ்ச்சியாக இருப்பது சிறந்தது. என்ன சரியா? தோழமையே ஏதோ நம்மக்கு எட்டியவரை...//

நீங்கள் சொல்வது சரிதான் தோழி. இப்போது கிடைத்த வாழ்க்கையை இனிதாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

Unknown said...

வாழ்க்கையில் நினைப்பது போல் நடக்காது.
உதாரணம், வேலை , கல்யாணம் , குழந்தை.
இது கடவுள் நமக்கு கொடுத்த கட்டளை .

Unknown said...

முதல் கவிதை எழுதிய நண்பன் ரமேஷிற்கு வாழ்த்துக்கள். பூ ரமேஷ் கிட்ட சொல்லு "மச்சான் கலக்கிட்ட"

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//வாழ்க்கையில் நினைப்பது போல் நடக்காது.உதாரணம், வேலை , கல்யாணம் , குழந்தை.இது கடவுள் நமக்கு கொடுத்த கட்டளை //


உங்களுக்கு வயசு ரொம்ப ஆனது என்பதை தத்துவமாக கருத்து போட்டுயிருக்கீங்க,ஐயையோ,உண்மைய சொல்லிட்டேனே!!!

பூங்குன்றன்.வே said...

@ Vijay

//முதல் கவிதை எழுதிய நண்பன் ரமேஷிற்கு வாழ்த்துக்கள். பூ ரமேஷ் கிட்ட சொல்லு "மச்சான் கலக்கிட்ட"//


சொல்லிட்டேன் நண்பா.