தூங்காத விழிகள் !!!
பின்னிரவில் எழுந்து
உறக்கம் கலைந்து
படுக்கையில் புரண்டு
பலமணிநேரம் மறந்து
மனம் யோசித்தது;
எதற்காக பிறந்தோம்?
எதற்காக வளர்ந்தோம்?
எதற்காக காதலித்தோம்?
எதற்காக பிரிந்தோம்?
எதற்காக நட்பானோம்?
எதற்காக பகையானோம்..............
மறுநாள் காலையில்
மிச்சமிருந்தது நேற்றைய
சிகரட் துண்டும், தூங்கா விழிகளின் வலியும் !!!
November 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நண்பா அப்துல் கலாம் சொன்னது போல் அடுத்து வரும் வாழ்க்கையை பற்றி கனவு காணுவோம். ஏற்கனவே நடந்து முடிந்ததை கனவு கண்டு நடக்கப்போவது ஒன்றும் இல்லை.
அது சரி எல்லாம் எதற்காக என்றால், வாழ்வில் எல்லாம் இருக்கிறது.
அதை தேடி கண்டுபிடிப்பதில் தான் சுகம் , அது தான் வாழ்க்கை !
புகை பிடித்தல் , உடல் நலத்திற்கு கேடு !
எந்தக் கேள்விக்கும் விடை இல்லாமலே வாழ்வு நகரும்.ஆனால் ஆறாம் விரலைத் தவிர்ப்போம்.
@ ஹேமா
//எந்தக் கேள்விக்கும் விடை இல்லாமலே வாழ்வு நகரும்.ஆனால் ஆறாம் விரலைத் தவிர்ப்போம்.//
உண்மைதான் தோழி.உங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் மிக்க ரொம்ப நன்றி !!
மிச்சமிருந்த சிகிரெட் துண்டுகள் போல்தான் காதல் நினைவுகளும்..
தோழனே விரல்களில் வேண்டாமே கொல்லி...
@ அன்புடன் மலிக்கா
//மிச்சமிருந்த சிகிரெட் துண்டுகள் போல்தான் காதல் நினைவுகளும்..
தோழனே விரல்களில் வேண்டாமே கொல்லி...//
அசத்தல் கருத்து தோழி..மிக்க நன்றி !!!
@ Vijay
//நண்பா அப்துல் கலாம் சொன்னது போல் அடுத்து வரும் வாழ்க்கையை பற்றி கனவு காணுவோம். ஏற்கனவே நடந்து முடிந்ததை கனவு கண்டு நடக்கப்போவது ஒன்றும் இல்லை.//
உண்மைதான் தோழா.
@ MARIA
//அது சரி எல்லாம் எதற்காக என்றால், வாழ்வில் எல்லாம் இருக்கிறது.
அதை தேடி கண்டுபிடிப்பதில் தான் சுகம் , அது தான் வாழ்க்கை !//
உண்மை தான் அண்ணா.
Post a Comment