நட்பு
சிநேகிதங்கள்
சிந்திக்கொண்டிருக்கிறது
சிறு சிறு மழைத்துளிகளாய்
நான் முற்றும் துறந்து மணற்பரப்பில்
நெஞ்சுடைந்து கிடைக்கையில்....
காதல்
கண்கள் பார்த்து
காது குளிர வார்த்தைகள்;
கைகள் பிடித்து
கால்நோக நடக்கலாம்;
மனசு முழுக்க
மருதாணி வாசம்;
மழைக்காலம் வரை
நீ என்னில் தீயாய்
இதயம் தீபம் அணையும் வரை
இதே காதலோடு...
வாழ்க்கை
நீ,நான்,நாம்,அவன்,அவள்,அவர்கள்
அனைவரும் முகமூடியில்..
காதல்,காமம்,நட்பு,சிரிப்பு
கண் எட்டும்வரை காற்றாடியில்..
தொலைதூரம்,வெகுநெருக்கம்,பிரிவு,இணைவு
தொலைந்து போகும் மிகவிரைவில்...
பணம்,மனம்,பாசம்,உறவு,துறவு
பறந்து போகும் பத்து வினாடியில்...
ஆனாலும் வாழ்க்கை வாழ்வதற்கே.
November 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//மனசு முழுக்க
மருதாணி வாசம்;
மழைக்காலம் வரை
நீ என்னில் தீயாய்
இதயம் தீபம் அணையும் வரை
இதே காதலோடு...//
அழகிய வரிகள்.....மூன்றுமே அருமை...
@ க.பாலாசி
ரொம்ப நன்றி பாலாசி.தொடர்ந்து வாங்க !!!
நட்பு பற்றி எழுத எழுத கவிதை வரும்
காதல் பற்றி எழுத எழுத கவிதை வரும்
ஆனால் வாழ்க்கை பற்றி எழுத எழுத சுய சரிதை வரும் . ஹா ஹா ஹா !
எப்படி ! அதுவா தான வருது , அடக்க முடியவில்லை
//ஆனாலும் வாழ்க்கை வாழ்வதற்கே.//
அதே...!
@ MARIA
//நட்பு பற்றி எழுத எழுத கவிதை வரும்
காதல் பற்றி எழுத எழுத கவிதை வரும்
ஆனால் வாழ்க்கை பற்றி எழுத எழுத சுய சரிதை வரும் . ஹா ஹா ஹா !//
கமெண்ட்ஸ் எழுதறேன்னு சொல்லிட்டு இப்படி என்னை கவுத்துடீங்களே அண்ணா !!!
@ கலகலப்ரியா
//ஆனாலும் வாழ்க்கை வாழ்வதற்கே.
அதே...!//
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிகள் தோழி.
முப்பரிமாணங்களாக. மூன்று கவிதைகள்.. அருமை...
வாழ்க்கையில் எல்லாம் கானல் நீரே... ஆனாலும் வாழ்க்கை வாழ்வதற்கே
@ அன்புடன் மலிக்கா
முப்பரிமாணங்களாக. மூன்று கவிதைகள்.. அருமை...
நீண்ட நாள் கழித்து வருகை புரிந்த தோழிக்கு நன்றிகள் :)
@ tamiluthayam
//வாழ்க்கையில் எல்லாம் கானல் நீரே... ஆனாலும் வாழ்க்கை வாழ்வதற்கே//
உண்மைதான் நண்பரே.திண்டாடினாலும் கொண்டாடத்தான் வாழ்க்கை !!!
//பறந்து போகும் பத்து வினாடியில்...
ஆனாலும் வாழ்க்கை வாழ்வதற்கே. //
நிதர்சனமான உண்மை..
@ நாணல்
//நிதர்சனமான உண்மை..//
ரொம்ப நன்றி நாணல் !!!
Post a Comment