சமர்ப்பணம்
சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த
உன் நினைவுகளை மொத்தமாய்
காகிதமாய் செய்து கப்பல் இட முயல்கிறேன்;
வண்ண வண்ண பூக்கள் போல்
பூத்திருந்த நம் ஞாபகங்கள்
காய்ந்த சிறகுகளாய் உதிர்வதை உணர்கிறேன்;
காதலிக்கும் காலங்களில் நீ பேசிய
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
தேன் ஆறாய்;
நீ மறந்து சென்ற பின் யாவும் எனக்கு
கானல் நீராய்;
சேகரித்த உன் சிரிப்புகளை
செலவு செய்ய மனமில்லை;
உன்னை காதலித்த பாவத்திற்காக
இறுதி கவிதையை சமர்ப்பிக்கிறேன்;
November 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
"சிறுக சிறுக சேர்த்து
வைத்திருந்த
உன் நினைவுகளை
மொத்தமாய்
காகிதமாய் செய்து
கப்பல் இட முயல்கிறேன்"
நல்ல கற்பனை.
நட்சத்திரப் பதிவாளர் ஆனமைக்கு வாழ்த்துக்கள்
//உன்னை காதலித்த பாவத்திற்காக
இறுதி கவிதையை சமர்ப்பிக்கிறேன்;//
அப்ப இனிமே கவிதையே எழுதமாட்டீங்களா?....(ஹி..ஹி...)
கவிதை நன்று நண்பரே....
அதென்ன இறுதி கவிதை, இது உங்கள் காதலிக்கா அல்லது பதிவிற்க்கா?
@ Dr.எம்.கே.முருகானந்தன்
//நல்ல கற்பனை.
நட்சத்திரப் பதிவாளர் ஆனமைக்கு வாழ்த்துக்கள்//
நன்றிகள் நண்பரே.உங்களின் முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும்..
@ க.பாலாசி
//அப்ப இனிமே கவிதையே எழுதமாட்டீங்களா?....(ஹி..ஹி...)
கவிதை நன்று நண்பரே....//
உங்களை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் சந்தோஷமா இருக்க விட போவதில்லை.
அவங்களை நிறுத்த சொல்லுங்க..நான் நிறுத்துறேன்.(ஹி ஹி ஹி)
@ விஜய்
//அதென்ன இறுதி கவிதை, இது உங்கள் காதலிக்கா அல்லது பதிவிற்க்கா?//
ஆசைய பாரு..இது இறுதி பதிவுன்னா அவ்ளோ சந்தோஷம்(நற..நற..)
இன்னும் நிறைய நிறைய எழுதி, உங்களை எல்லாம்..
ஏன் என்னாச்சி,
இப்படியா ஆகிப்போச்சி
உணர்வென்பது உயிர்மூச்சி
அது எப்போது துண்டாச்சி
கவிதை நல்லா எழுதுறீங்க சூப்பர் தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்...
@ அன்புடன் மலிக்கா
//கவிதை நல்லா எழுதுறீங்க சூப்பர் தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்...//
உங்களை விடவா நான் நல்லா எழுதுறேன் தோழி.இருந்தாலும் உங்கள் பாராட்டுக்கு தலை வணங்கி இன்னும் சிறப்பாக எழுத முயற்சி செய்கிறேன்.
ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை குன்றா!
Post a Comment