November 7, 2009
மழைசாரலில் மல்லிப்பூ !!!
என்னை மயக்கிய அழகிய பிசாசே
உன்னை மனச்சிறையில் தள்ளவா
இல்லை அடக்கி அல்லவா?
எங்கயோ பிறந்தாய்; என்னுள் நுழைந்தாய்;
எங்கேயோ இருக்கிறாய்;உயிரில் மிதக்கிறாய்;
மழையாக வருகிறாய்; சாரலாக போகிறாய்;
மெதுவாக கிசுகிசுத்து மின்னலாக மறைகிறாய்;
பூவாக மணக்கிறாய்; புயலாக பாய்கிறாய்;
தென்றலாக வந்து தீமூட்டி போகிறாய்;
தேடி தேடி அலைகிறேன்
முகவரிதான் கிடைக்கவில்லை
முகத்தையும் காட்டவில்லை.
மல்லிப்பூ வாசனையில்
மனதையே கிறங்கடித்தாய்;
வாட்டியது போதுமடி
வந்தென்னை சேர்ந்துவிடு !!!
Labels:
கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
எளிமையான இனிமையான கவிதை
ஐ...கவிதை...கவிதை...
நல்லாருக்கு நண்பரே..
மழைச்சாரலில் மல்லிகை
மனசிறையில் யாரவள்
மங்கை என்ற மனைவியா இல்லை
மயக்கிய மோகினியா.
எதுவானாலும் கவிதை அருமையோ அருமை..
ரொம்ப பிடிச்சு இருக்குங்க.
அருமை உனக்குள் இத்தனை இனிமையான கவிதையா வாழ்த்துக்கள் !
@ விஜய்
//எளிமையான இனிமையான கவிதை//
உங்களின் கருத்தும் இனிமையாக உள்ளது.நன்றி.
@ நாஞ்சில் பிரதாப்
//ஐ...கவிதை...கவிதை...
நல்லாருக்கு நண்பரே//
இதை கவிதைன்னு நீங்க ஒப்புக்கொண்டதே ரொம்ப சந்தோஷமா இருக்கு.உங்களின்
தொடர் பின்னூட்டங்கள் எனக்கு உற்சாகமாக இருக்கு தலைவா.
@ அன்புடன் மலிக்கா
//எதுவானாலும் கவிதை அருமையோ அருமை//
எல்லாம் நீங்க தர ஊக்கம் தான் தோழியே. ரொம்ப நன்றிங்க.
@ பா.ராஜாராம்
//ரொம்ப பிடிச்சு இருக்குங்க//
எதுங்க? மல்லிபூவையா அல்லது என் கவிதையையா?
முதல் வருகை உங்களது..என் பதிவுக்கு மெருகூட்டுகிறது.மிக்க மகிழ்ச்சி.
@ MARIA
//அருமை உனக்குள் இத்தனை இனிமையான கவிதையா வாழ்த்துக்கள்//
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிண்ணா.அண்ணிய பத்தி நீங்க எவ்ளோ கவிதை பாடி இருக்கீங்க.அதை விடவா?
Post a Comment