November 25, 2010

ஒருநாள் பூவாய் மலர்வேனோ;

சிலந்தி கூட்டுக்குள்
சிறைபட்ட சிறுவண்டாய்

சிக்கிக்கொண்டும் மனது
சிரிக்கிறதே என் கண்மணி;

கொட்டும்போது கூட
வலிக்கவில்லை,இனிக்குதடி;

வருடக்காதல் உன்னொரு சொல்லில்
வருடுமா மெல்லிய இறகாய்;

வளைந்த பாதை திரும்பாது
வாடிய மலரும் அரும்பாது

எத்தனை பெண்களை பார்த்தாலும்
அத்தனை முகங்கள் நீயாகி

மனதெனும் பெரும் காட்டில்
எரிகிறாய் அணையா தீயாகி!

வர்ணம் போன பட்டாம்பூச்சி
வேகம் இல்லா நீர்வீழ்ச்சி

நான்கூட இவைதானோ-பெண்ணே
உன்நிழல் இன்றி போவேனோ;

உன்பார்வை எனும் பூங்காவில்
ஒருநாள் பூவாய் மலர்வேனோ;

26 comments:

mohamedali jinnah said...

பூங்குன்றன் அவர்கள் கவிதையினை ஆவலுடன் காத்திருந்தேன் .இதனை நாட்கள் ஏன் ஒய்வு . பெற்ற அறிவினை மக்களுக்கு கொடுங்கள். நன்றி .

Romeoboy said...

என்ன பாஸ் .. ரொம்ப நாளா ஆளையே காணோம் .. நல்லா இருக்கீங்களா ??

எஸ்.கே said...

அழகான கவிதை!

VELU.G said...

அருமையான கவிதை

'பரிவை' சே.குமார் said...

Vanga Poongundaran...

nalama?

sennaiyil pani kidaiththu vittatha..?

aaru mathangalukku mela ungala valaiyil kaanom...

ennaachchu?

ini thodarnthu ezhuthungal.

T.V.ராதாகிருஷ்ணன் said...

welcome Back
அருமையான கவிதை

Paleo God said...

My Man! :))

தமிழ் said...

வாங்க நண்பரே

Priya said...

welcome Back
மிக அழகான வரிகள், வாழ்த்துக்கள்!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

warm welcom poongundran

Thenammai Lakshmanan said...

உன்பார்வை எனும் பூங்காவில்
ஒருநாள் பூவாய் மலர்வேனோ;
//

மிக அருமை பூங்குன்றன்.. ரொம்ப நாளா தேடி வந்தேன்.. ஏன் பதிவெழுதவில்லை பூங்குன்றன்..

அன்புடன் மலிக்கா said...

பூங்குன்றமென்னும் தோழமையே!
மீண்டும் வருகவே!வலைபூவெங்கும்
மலர்ந்து மணம் வீசவே!

கவிதை மிகவும் அருமை காதலைச்சொல்லி கவிபாடுகிறது.

Chitra said...

WELCOME BACK!!!!! Super!!!! :-)

Keep Rocking!

Chitra said...

Jan. 6th to Nov.26th - LONG BREAK!!!

Now, write more!

ஜீவன்பென்னி said...

வெல்கம் பேக்..

பூங்குன்றன்.வே said...

@ nidurali
உங்கள் அன்பிற்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!

@ ♥ RomeO ♥
மிக நலமாக இருக்கிறேன் ரோமியோ!
பணிச்சுமைதான் காரணம்.

@ எஸ்.கே
உங்கள் அன்பிற்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி எஸ்.கே!

@ VELU.G
மிக்க நன்றி வேலு !!

@ சே.குமார்
மிக்க நலம் நண்பா.நீங்க நலமா?
சென்னையில் பணி கிடைத்து தற்போது பெங்களூரில் உள்ளேன்.
புதிய வேலை மற்றும் சற்று பணிச்சுமையும் கூட.
இனி வாரம் ஒருமுறை பதிவில் என்னை பார்க்கலாம்.
உங்கள் அன்பிற்கும்,கருத்துக்கும் மிக்க நண்பா !!!

@ T.V.ராதாகிருஷ்ணன்
உங்கள் அன்பிற்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி TVR sir!

@ 【♫ஷங்கர்..】
Yes. I'm always your man sankar!
Thanks for your kindness.

@ திகழ்
வந்துட்டேன் திகழ்!
உங்கள் அன்பிற்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!

@ Priya
உங்கள் அன்பிற்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரியா !!

@ நாய்க்குட்டி மனசு
Thank you so much !

@ தேனம்மை லெக்ஷ்மணன்
உங்கள் அன்பிற்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!

பதிவு எழுதாமல் இருந்ததற்கு தனிப்பட்ட காரணம் எதுவுமில்லை. சென்னை வந்தபிறகு புதுவீடு வாங்கினேன்.அதன் பொருட்டும்,புதிய வேலை பொருட்டும் பதிவு எழுத சரியான நேரம் அமையவில்லை.

@ அன்புடன் மலிக்கா
உங்கள் அன்பிற்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மலிக்கா !!!

@ Chitra
Thanks for your comments & suggestion Chitra.
I will try to write more!!!

விஜய் said...

நலமா நண்பா

பூங்காவில் மலர்ந்த பூக்கள் அருமை

வாழ்த்துக்கள்

விஜய்

Tharshy said...

வர்ணம் போன பட்டாம்பூச்சி
வேகம் இல்லா நீர்வீழ்ச்சி

நான்கூட இவைதானோ-பெண்ணே
உன்நிழல் இன்றி போவேனோ;

உன்பார்வை எனும் பூங்காவில்
ஒருநாள் பூவாய் மலர்வேனோ;

sooo beautiful..Like it boss...

சிநேகிதன் அக்பர் said...

நேசமாய் ஒரு கவிதை. அருமை.

- Akila said...

superrrr anna

அன்புடன் மலிக்கா said...

பூங்குன்றன்
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html

லெமூரியன்... said...

அருமையான வரிகள் பூங்குன்றன்..!
:) :)

Mrs.Mano Saminathan said...

வலைச்சரத்தில் ‘ சிறுகதை முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

jiff0777 said...

இவை வரிகள் அல்ல.. முத்துக்கள்..
எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..

thamarai said...

Hai anna really nice lyrics, happy to have a good brother like you.

Marc said...

மனதெனும் பெரும் காட்டில்
எரிகிறாய் அணையா தீயாகி!

வர்ணம் போன பட்டாம்பூச்சி
வேகம் இல்லா நீர்வீழ்ச்சி

வித்தியாசமான சொற்கள் மிக அருமை வாழ்த்துகள்.