September 29, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 12***


மச்சி..மீனா இன்னிக்கு கண்டிப்பா ஆபிஸ் வருவா இல்ல?

எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?சூர்யா..காலைல ஆபிஸுக்கு கிளம்பும்போதே இதுபத்தி திங்க் பண்ணாத.வேற எதாச்சும் யோசி.

போடா பன்னி.நீ ரொம்ப யோக்கியம்.நேத்து ராத்திரி நைட்ல புவனா பேர புலம்பிட்டு கிடந்த.அதுக்கு என்ன சொல்ற?

ஐயோ ராமா.என்னை காப்பாத்த வர மாட்டியா?

உன்னை காப்பாத்த ராமன் இல்ல..அனுமார் கூட வரமாட்டார்.சரி வண்டிய எடு.டைம் ஆச்சு.

வந்து தொலைடா.போலாம்.

பிரேம் சூர்யாவை ஏற்றிக்கொண்டு அவன் ஆபிஸ் அருகில் இறக்கினான்.இருவரும் தம் அடித்துவிட்டு அவரவர் அலுவலங்களுக்கு சென்றார்கள்.

அலுவலக வாசலுக்குள் நுழையும்போதே சூர்யா திடுக்கிட்டான். அங்கே மூர்த்தி சார் மீனாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.மீனா தன்னை ஓரக்கண்ணால் பார்ப்பதை கவனித்த சூர்யா கவனிக்காதவன் போல தன் காபினுக்குள் சென்றான்.

உடம்பு சூடாவதையும்,இதயம் படபடவென அடிக்க தொடங்கியதை உணர்ந்தான்.நேற்று வந்த மின்னஞ்சல்களை படிக்க துவங்கினான்.

சூர்யா..சூர்யா...கூப்பிட்டுகொண்டே மூர்த்தி அருகில் வந்தார்.

குட் மார்னிங் சார்.

குட் மார்னிங் சூர்யா..உனக்கு இப்ப தலைவலி எப்படி இருக்குப்பா?

சரி ஆயிடுச்சி சார். சொல்லுங்க சார்.

மீனா மேடம் நேத்தைய அப்டேட்ஸ் கேட்டு இருந்தாங்க.அதான் சொல்லிட்டு வரேன்.

அப்படியா சார்.ஓகே.ஓகே.நேத்து நான் ஏன் வரலைனு கேட்டாங்களா சார்?

ஆமாம் சூர்யா.தலைவலின்னு சொன்னேன்.ஒண்ணும் சொல்லல.சரி.பேங்க் வரை நான் போகணும்..அப்புறம் பேசலாம்ப்பா.

சரிங்க சார்.நீங்க போய் வேலைய பாருங்க.

மறுபடியும் மின்னஞ்சல்களை படிக்க துவங்கினான்..இன்டெர்காம் ஒலித்தது.

மீனாதான் கூப்பிடுகிறாள்.கைநடுங்க ரிஸிவரை எடுத்து ஹலோ என்றான்..

சூர்யா...ப்ளீஸ் கம் டு மை ரூம்.

எஸ் மேம்.

ரிஸிவரை வைத்துவிட்டு தண்ணீரை குடித்தான்.ஐந்து வினாடிகள் கண்ணை மூடித்திறந்தான்.எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று தைரியபடுத்திக்கொண்டு மீனாவின் அறைகதவை நெருங்கி தட்டினான்.

மே ஐ கம் இன் ப்ளீஸ்?

உயிரே பிரியாதே ***பகுதி - 11***


இல்ல பிரேம்..உனக்கு டயார்டா இருந்தா நீ போய் தூங்கு.
நான் கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்.

பரவாயில்லடா.நானும் கொஞ்சநேரம் இருக்கேன்..

தேங்க்ஸ்டா.நீ என்கூட இருந்தா ரொம்ப சப்போர்டிவா இருக்கு.

ஹ்ம்ம்..நீ மீனா விஷயத்தில் என்ன முடிவு பண்ணிருக்க?இப்ப உங்க வீட்லயும் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

தெரியல பிரேம்.மீனாகிட்ட என் காதலை சொல்லிட்டேன்.ஆனா அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியல.

மீனா இல்லைன்னு மறுத்துட்டா?

இல்லடா.எனக்கு நம்பிக்கை இருக்கு.மீனா அப்படி சொல்லமாட்டா.

சப்போஸ் இல்லைன்னு சொல்லிட்டான்னு வைச்சுக்க.

அப்படி என் மீனா மனசுக்குள்ள நான் இல்லைன்னா நீ என்ன சொன்னாலும் செய்றேன் பிரேம்.

சரி..ஒருவேளை மீனா ஓகே சொல்லிட்டு உங்க வீட்டுல முடியாதுன்னு சொல்லிட்டா?

என்ன பிரேம்..லாயர் மாதிரி கேள்வி கேட்டு என்னை கொல்ற?முதல்ல மீனா மனசுல நான் இருக்கேனான்னு தெரியனும்.

சரி..அதுக்கு என்ன பண்ணி போற?

நான் அவகிட்ட சொல்லவேண்டியத சொல்லிட்டேன்.திரும்ப திரும்ப அவகிட்ட போய் என்னால கேட்க முடியாது.

யு ஆர் ரைட் சூர்யா.நீ மறுபடியும் போய் மீனாகிட்ட பேசுன்னு நான் சொல்லல.ஆனா அடுத்த வாரம் வரைக்கும்தான் உனக்கு டைம்.அதாவது உங்க அம்மா பார்த்த பொண்ணை பார்க்க நீ ஊருக்கு போகும்வரை..

சரிடா.அடுத்தவாரம் வரை பார்ப்போம்.

பைன்.இப்பவாச்சும் நாம ரூமுக்கு போகலாமா?

வேண்டாம்..இங்கயே தூங்கலாம்.

அது சரி.காதல் பண்றவனுக்கு கிறுக்கு பிடிக்கும்னு கேள்வி பட்டிருக்கேன்,ஆனா இப்பதான் நேர்ல பார்க்கிறேன்..வாடா கிறுக்கா..வீட்டுக்கு போவோம்..பனி அதிகமா விழுது.

சரிங்க மிஸ்டர் பொறுப்பு பிரேம்.போலாம் வாங்க.

ஞாபகங்கள்
********************

உனக்கான காத்திருப்பின்
வேளையில்
மரம் உதிர்த்த காய்ந்த சருகின்
வலியில் மனம்;
மீண்டும் உனக்கான காத்திருப்பின்
வேளையில்
முன்பு சந்தித்த கணங்கள்
கண்ணில் நிழற்படமாய்.......
ஆயுள் ரகசியம் !
****************************

உன் ஒற்றை சொல்லில்தான்
நான் உயிர்வாழ்வேன
சொல்ல மாட்டேன்..
நீ நிறைய இன்னும் நிறைய
பேசிக்கொண்டேயிரு.
நான் நீண்டநாள் உயிர் வாழ..

September 28, 2009


வெல்வோம் வா
***********************
உயரப் பறந்து சிகரம் தொடுவோம்;
அதற்கு முதலில்
நம்பிக்கை சிறகை நாம் விரிப்போம் வா தோழா!
எதிர்பார்ப்புகள் பொய்யாகும் பயணம்தான்
வாழ்க்கையோ என்றில்லாமல்
எதிர்நீச்சல் போட்டு வெல்லலாம் வா நண்பா !!!

அன்பு தோழி
******************
இந்நேரம் மின்விறியின் துணையால்
நீ தூங்கி கொண்டு இருப்பாய்.
நானோ விண்மீன்களை எண்ணிக்கொண்டு முழித்துகொண்டு இருப்பேன்.
உன் மனம் முழுக்க கனவுகளோடு
என் மனமோ உன் நினைவுகளோடு...

ராசாத்தி நீ தூங்கு,நட்சத்திரத்தின் ஒளியோடு.
செல்லமே நீ தூங்கு,மெல்லமாய் மடிமீது.

ஒரு இரவு உனக்கு..ஒரு ஜென்மம் எனக்கு.
ஒரு பகல் உனக்கு.ஒரு நொடிதான் எனக்கு.

நீ அலுவலகம் வரும்வரை என் மனவுலகம் என்னாவது.
நீ தொலைபேசி மூலம் அழைக்கும் வர
என் உயிர்ஓசை அடங்காது.

காலையில் பேசலாம் நேரம் கிடைத்தால்--நம்
காலம் வரை பேசலாம் வாய்ப்பு கிடைத்தால் !!!!

உயிர் பூவே!!!பொறாமை

நடுநிசியில்
தனியாக உறங்கையில்
உன் நினைவுகள் ஆட்கொள்ளும்;
உன்னோடு உறங்கையில் இந்த
உலகமே வெட்கம் கொள்ளும்;
உயிரே பிரியாதே ***பகுதி - 10***

பிரேம்...ஒரு சின்ன வாக் போயிட்டு வரலாமா?

கண்டிப்பா போலாம்.நான்கூட உங்கிட்ட கொஞ்சம் பேசவேண்டி இருக்கு.

கதவை பூட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.ஆர்.டி.நகர் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் ஒரு மைதானத்தில் அமர்ந்தார்கள்.

சற்றுநேர மௌனத்திற்கு பிறகு பிரேம் ஆரம்பித்தான்.

சூர்யா..உனக்கு என்னாச்சு..ஏன் இப்படி ஆபிஸுக்கு லீவ் போட்டுட்டு குடிச்சிட்டு இருக்க?

சாரிடா மச்சான்.மீனாவை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்லர்ந்து வந்து இருக்காங்களாம்.கேட்டதும் ரொம்ப கஷ்டமா இருக்கவே தண்ணி அடிச்சேன்.

எனகென்னவோ நீ அவளை மறந்துடுறது நல்லதுன்னு தோணுது.
அப்புறம் இன்னொரு விஷயம்.நைட் ஏழு மணி இருக்கும்.உங்க அம்மா போன் பண்ணி இருந்தாங்க.உனக்கு போன் பண்ணா நீ எடுக்கலையாம்.என்னாச்சுன்னு என்னை பார்க்க சொன்னாங்க.நானும் அப்பவே உன் மொபைலுக்கு ட்ரை பண்ணேன்.பட் நோ ரெஸ்பான்ஸ்.

மை காட்.தண்ணி அடிச்சதுல ஒண்ணுமே தெரியலடா.நல்லா தூங்கிட்டேன்.அம்மா வேற என்ன சொன்னாங்க?ஒரு நிமிஷம்.அம்மாகிட்ட பேசிடுறேன்.

சரி பேசு.அவங்களும் பாவம்.வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.

அம்மா...நான் சூர்யா பேசுறேன்..எப்படி இருக்கம்மா?

.....

உடம்புக்கு ஒண்ணுமில்லமா.ரெண்டு நாளா ஆபிஸ்ல நிறைய வேலை.அதான் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்து தூங்கிட்டேன்.

.....

அப்பா நல்லா இருக்காரா?தம்பி காலேஜுக்கு ஒழுங்கா போறானா?

.....

சரிமா நான் பிரேம்கிட்ட கேட்டுக்கிறேன்.. நீ உடம்பை நல்லா பார்த்துக்க.நான் அப்புறமா பேசுறேன்.

.....

சரி..வைச்சுடுமா...ஹ்ம்ம்..

பிரேம்...அம்மா என்னடா சொன்னாங்க?உங்கிட்ட கேட்க சொல்லிட்டாங்க.

உனக்கு பொண்ணு பார்த்து இருக்காங்களாம் சூர்யா.அடுத்த வாரம் உன்னை ஊருக்கு வர சொன்னாங்க....ரூமுக்கு போலாமா?

உயிரே பிரியாதே ***பகுதி - 9***


பஸ்ஸை விட்டு இறங்கி நேராக ஒய்ன் ஷாப்பில் ஒரு அரை பாட்டில் விஸ்கி வாங்கிக்கொண்டு ரூமுக்குள் சென்றான்.
இனிமேல் மீனாவை பற்றி நினைக்ககூடாது,அவள் வீட்டில் மாப்பிளை பார்க்கஆரம்பித்த பிறகு அவளை காதல் மனதோடு பார்ப்பது தவறு என்று சொல்லிகொண்டேமுழு விஸ்கியையும் குடித்து தீர்த்தான்.
தம் ஒன்றை பற்றவைத்து பாதி அடிக்கையிலேயே போதை தலைக்கேற படுக்கையில்விழுந்தான்.ஆனால் அவன் நாக்கு மட்டும் ஏதோதோ புலம்பிக்கொண்டிருந்தது.
டேய் சூர்யா..எழுந்திருடா.என்ன ஆச்சு?ஆபிஸை விட்டு எப்ப வந்த?ஏன் இப்படிஇருக்க?
நண்பா பிரேமு...வந்திட்டியா..வா வா..சரக்கு அடிக்கலாம்.மதியம் ஏண்டா நீ எனக்குகம்பெனி தரல?
மச்சி..சொன்னா கேளுடா..எழுந்திரு என்றபடியே பக்கத்தில் காலி பாட்டிலைபார்த்தான்.
சூர்யா...அரை பாட்டிலை நீயேவா காலி பண்ண?
……….
சரி சூர்யா..கமான்..கெட் அப்.மதியம் சாப்பிட்டியா?
இல்ல மாப்ள..ஆனா இப்ப ரொம்ப பசிக்குதுடா.
அடப்பாவி..இப்ப மணி என்ன தெரியுமா?நைட் 10 ஆச்சுடா.நீ இங்கயே இரு.நான்போய்ட்டு எதாச்சும் சாப்பிட வாங்கிவரேன். நான் போய்ட்டு வரதுக்குள்ள முகம்கழுவிவிட்டு ரெடியா இரு.என்ன?
ஓகே ஓகே..

உயிரே பிரியாதே ***பகுதி - 8***
ஆபிஸை விட்டு வெளியே வந்ததும் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றான்.தலைவலி என பொய் சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டாலும் இப்போது எங்கே செல்வது, என்ன செய்வது,மீனாவிடம் காதலை சொன்னது தப்பா அல்லது சொன்னவிதம் தப்பா,ஏன் இப்படி இருக்கிறோம் என பல கேள்விகள் மனதை துளைத்து கொண்டிருந்தன.

பிரேமுக்கு போன் பண்ணலாமா என நினைத்தாலும் அவன் பிஸியாக இருப்பானே என்பதால் வேறு எங்கு செல்வது என யோசிக்க ஆரம்பித்தான்.
இவ்வளவு பெரிய பெங்களூரில் பிரேமை விட்டால் நண்பன் என்று சொல்லிக்கொள்ளவோ,உறவினர்கள் என்றோ யாருமில்லை.

சொந்த ஊரான சேலத்தில் கம்ப்யூட்டர் சயன்ஸ் டிகிரி முடித்தவுடன் சென்னை வேண்டாம்,பெங்களூர் போ.அங்கதான் கம்ப்யூட்டர் படிச்சவங்களுக்கு நிறைய சம்பளம் தராங்களாம் என யார்யாரோ ஊரில் சொல்ல யோசிக்காமல் கிளம்பிவிட்டான்.அப்பாவுடன் படித்த நண்பரின் பையன்தான் இந்த பிரேம்.

பெங்களுருக்கு வந்தவுடன் ஊரில் சொன்னதுபோல உடனே வேலை கிடைத்தது.ஆனால் சம்பளம்தான் பெரியதாக ஒன்றுமில்லை.கிடைத்த வேலையை வேண்டாம் என்று சொல்ல மனமில்லாததால் அதிலேயே சேர்ந்தான்.படிப்படியாக தேவையான நுணுக்கங்களை கற்று தேர்ந்தான்.இதோ மீனாவின் கம்பெனியில் சேர்ந்து 2 வருடங்கள் ஆகிறது.

மீனாவிடமும் மற்றவர்களிடமும் நல்ல பெயர்தான் எடுத்திருக்கிறான்.இவன் சேரும்போது மீனாவின் அப்பாதான் இந்த கம்பெனியை நிர்வாகம் பண்ணிகொண்டிருந்தார்.

சில மாதங்களில் தன் ஒரே பெண் மீனாவையும்,மனைவியையும் அம்போவென விட்டுவிட்டு காலமாகிபோனார்.

அதற்கு பிறகு MBA படித்துக்கொண்டு இருந்த மீனா தான் இந்த கம்பெனியை பைனான்ஸ் மேனேஜர் மூர்த்தியின் ஆலோசனையுடன் திறம்பட நிர்வகித்து வருகிறாள்.தேவையான் நேரங்களில் சூர்யாவும் தனக்கு தெரிந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து வருகிறான்.

மீனாவுக்கும் சூர்யா என்றால் ரொம்ப பிடிக்கும்.தன் அப்பா இறந்த சமயத்தில் உடன் இருந்து எல்லாவற்றையும் சிறப்பாக செய்து கொடுத்தான்.மீனா அலுவகத்தில் பொறுப்பேற்றபோதும் தனக்கு தெரிந்த எல்லா விஷயங்களையும் சொல்லிகொடுத்து இன்று கம்பெனி லாபகரமாக போய்கொண்டிருக்கிறது.

ஆனால் மீனாவுக்கு சூர்யாவின் மீது காதல் இருக்கிறதா என்று தெரியவில்லை.
பழைய ஞாபகங்களை அசை போட்டு முடிக்கையில் மதிய நேரம் ஆகிவிட்டு இருந்தது.

எங்கே செல்வது என தெரியாமல் கடைசியில் தன்னுடைய ரூமுக்கே செல்ல முடிவெடுத்து வந்த பஸ்சில் ஏறினான்.

September 27, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 7***11.30 மணி டீ ப்ரேக்கிற்காக ஆபிசைவிட்டு சூர்யா வெளியே வந்தான்.டீயும் தம்மும் சொல்லிவிட்டு பிரேமுக்கு போன் செய்தான்.

பிரேம்..உனக்கு இன்னிக்கு ஆபிஸ்ல இன்டெர்னல் ஆடிட்டிங் இருக்குனு தெரியும்.ரொம்ப பிசியா இருப்ப.ஆனா உங்கிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசியே ஆகணும்டா.

பரவாயில்ல சூர்யா சொல்லு.என்னாச்சு? மீனாகிட்ட பேசினியா?

இல்லடா.இன்னும் மீனா ஆபிசுக்கு வரல.யாரை கேட்டாலும் தெரியாதுன்னு சொல்றாங்க.கொஞ்சம் பயமாயிருக்குடா மச்சான்.

நீ ஏண்டா தேவையில்லாம பயப்படுற?

நான் என்னோட லவ்வை சொன்னதினால் அவ எதாச்சும் அசிங்கம்னு நினைச்சு ஆபிசுக்கு வரலையோ என்னோவோ?

டேய் சூர்யா..பேசாம உன்பேரை லூசுன்னு மாத்திக்கோ.

ஏண்டா?

பின்ன என்னடா..நீ அவ கம்பெனியில் வொர்க் பண்ற சிஸ்டம் என்ஜினியர்.மீனா கம்பெனியோட முதலாளி.உனக்கு பயந்தோ இல்ல அசிங்கபட்டோ அவ லீவ் போடணும்கிற அவசியம் இல்ல.வேற எதாச்சும் காரணம் இருக்கும்.நீ உன் வேலைய பாரு.

சரிடா மச்சான்.எனக்கும் பிரேக் டைம் முடியபோகுது.வி வில் ஸி லேட்டர்.

காபினுக்குள் உட்கார்ந்த உடன் இண்டெர்காமில் மூர்த்தி அழைத்தார்.

சூர்யா..நீ எங்க போயிருந்த.ஜஸ்ட் இப்பதான் மீனா மேடம் போன் பண்ணாங்க.நல்ல விஷயம்பா.அவங்களை பெண் பார்க்க பையன் வீட்ல இருந்து வந்திருக்காங்களாம்.அதனால இன்னிக்கு ஆபிசுக்கு வரலைனு சொல்லிடாங்கப்பா.நீ எங்கேன்னு மேடம் கேட்டாங்க.

எதுக்கு சார்?

தெரியலப்பா.வேணும்னா நீயே மேடத்துக்கு போன் பண்ணிடேன்.

வேணாம் சார்.தலைவலி அதிகமா இருக்கு.நான் வீட்டுக்கு போகவா சார்?

என்னப்பா.மேடமும் லீவு.நீயும் இப்ப கிளம்ப போறேன்னு சொல்ற.
சப்போஸ் மேடம் திரும்பவும் போன் பண்ணி நீ எங்கேன்னு கேட்டா என்னப்பா சொல்றது?

எனக்கு தலைவலி..கிளம்பிட்டேன்னு சொல்லுங்க.ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.

சரிப்பா.நான் பார்த்துகிறேன்,நீ கிளம்பு.

September 26, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 6***


ஞாயிற்றுகிழமை ஓய்வு முடிந்து திங்கட்கிழமை காலை என்றாலே நம்மில் பாதி பேருக்கு அலர்ஜியும், டென்சனும் சேர்ந்து கொள்ளும். சந்திராயன் செயற்கைகோளை விண்ணில் பறக்கவிட்ட விஞ்ஞானிகளின் டென்சனுக்கு நிகரானது அது.

பிரேமுக்கு ஆடிட்டிங் வொர்க் இருந்ததால் காலையில் சீக்கிரம் கிளம்பி விட்டான்.சூர்யா ஆர்.டி.நகரிலிருந்து சிவாஜி நகர் பஸ் பிடித்து,அங்கிருந்து ஆட்டோவில் ஆபிசுக்கு பயணமானான்.ஒரு தம் அடித்துவிட்டு ஆசுவாசபடுத்திக்கொண்டு கொஞ்சம் தைரியமாகி முதல் மாடி ஏறி தன் காபினுக்குள் நுழைந்து லாப்டாப்பை சுவிட்ச் ஆன் செய்தான்.

ஆபிசில் எல்லோரும் தன்னை முறைப்பது போல் தோன்றியது.இயல்பாக இருக்க முயற்சி செய்தான்.

அலுவலக சம்மந்தபட்ட பல மின்னஞ்சல்கள் வந்து இருந்தாலும் மீனாவை பற்றியும், அவள் தன்னை பார்த்தால் எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியும் மனது சிந்தித்து கொண்டுஇருந்தது.

மீனா வந்து விட்டாளா என்று எதிரே உள்ள அவளின் அறையை பார்ப்பதும், திரும்ப தன் வேலையை பார்ப்பதுமாக ஒரு நிலையில்லாமல் இருந்தான்.

கடிகாரம் காலை சரியாக ஒன்பது மணியை காட்டியது.ஆபிசில் வேலை செய்யும் எல்லோரும் வந்துவிட்டார்கள்.வழக்கமாக 8.50 வந்துவிடும் மீனாவை மட்டும் காணவில்லை.

சரி..ஏதாவது வேலை இருந்து இருக்கும் போல என தன்னை தானே சமாதானப்படுத்திகொண்டான்.மணி இப்போது சரியாய் 9.30 காட்டியது.எங்காவது டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டிருப்பாள் என நினைத்து கொண்டான். இப்படியாக மணி 10.15 தாண்டியதும் பொறுமை இழந்தவனாக பைனான்ஸ் மேனேஜர் மூர்த்தியை கேட்டான்.

மூர்த்தி சார்..மீனா மேடம் இன்னும் வரலையே?உங்ககிட்ட எதாச்சும் சொன்னாங்களா?

அதான் எனக்கும் தெரியல சூர்யா.கொஞ்சம் வெயிட் பண்ணி பார்த்துட்டு அவங்க வரலைனா மொபைலுக்கு கால் பண்ணிபார்ப்போம்.

இல்ல சார்.நீங்க இப்பவே ட்ரை பண்ணி பாருங்க.ப்ளீஸ் சார்.

என்ன சூர்யா எதாச்சும் முக்கியமான விஷயமாப்பா?

இல்ல சார்.கிளையன்ட் லோன் விஷயமா ஒரு வேலையை இன்னிக்கு காலைல முடிச்சு அப்ருவல் வாங்க சொல்லிருந்தாங்க. அதான் கேட்டேன் சார்.

அப்படியா. கொஞ்சம் நேரம் பார்த்துட்டு போன் பண்ணுவோம் சூர்யா.

இட்ஸ் ஒகே சார்.ஐ வில் வெயிட் பார் ஹெர்.

உயிரே பிரியாதே ***பகுதி - 5***

சூர்யா புகைத்து கொண்டுஇருக்கும்போதே ஒரு மழைத்துளி முகத்தில் பட்டு தெறித்து பூமியில் விழுந்தது.வானத்தை பார்த்து திரும்ப குனிவதற்குள் சடசடவென மழை பிடித்துகொண்டது.

மழையை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றாலும் இந்த மழை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை போலும்.அதனால்தான் பக்கத்திலிருந்த கடைக்குள் ஒதுங்கிக்கொண்டான்.

பெங்களூரில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் எப்போது மழை வருமென சொல்லமுடியாது.சட்டென வந்துவிடும்.மனிதனுக்கு காதலும் அப்படிதான்.

காதலில் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிலின் உக்கிரம் கூட ஐஸ்கட்டி போல் தோன்றும்.காதலியின் பதில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சூர்யா போன்றவர்களுக்கு ஐஸ்கட்டி மழை கூட அனலாய் தோன்றும்.

சிறிது நேரத்தில் மழை நின்றது.ரூமுக்கு நுழைந்தவுடன் பிரேம் குளித்து சாப்பிட தயாராய் இருந்தான்.

என்னடா மச்சான் வாங்கி வந்த? மழையில் நனைஞ்சிட்டியா என்ன?

இல்ல.கடையில ஒதுங்கிட்டேன்.சாப்பிடலாம் வா.

என்னடா மச்சான். மீனா போன் பண்ணாளா?

இல்ல பிரேம்.

நீயாச்சும் அவளுக்கு போன் பண்ணி பேசுடா சூர்யா.நீ போன் பண்ணி மீனா பேசினா உன்மேல் அவளுக்கு கோபம் இல்லன்னு அர்த்தம்.

இல்லடா பிரேம்.என்னகென்னவோ போன்ல பேசுறது நல்லதா படல.

சரி வேண்டாம் விடு.நாளைக்கு ஆபீஸ்ல அவகிட்ட மறுபடியும் பேசி பாரு.

நாளைக்கு நான் ஆபிசுக்கு போகலடா.மனசே சரியில்ல.நாளைக்கு அவ முகத்தை எப்படி நேருக்குநேர் பார்க்க முடியும்னு தயக்கமா இருக்கு. அதுவும் இல்லாம ஒருவேளை ஆபிஸ்ல எல்லோர் முன்னாடி கோவமா பேசிட்டா அசிங்கம் ஆயிடும் மச்சி.

இல்ல.நீ நாளைக்கு ஆபிஸ்க்கு போகலைன்னா அவ உன்னைப்பத்தி தப்பா நினைப்பா.ஆபிஸ்ல தானே நீ உன் லவ்வ அவகிட்ட சொன்ன.அதே ஆபிஸ்ல ஸாரி கேட்டா ஒன்னும் தப்பில்லை.

ஸாரி கேட்கிறது ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல.

உன்னை வேலைய விட்டு தூக்கிடுவான்னு பயமா சூர்யா?

போடா ஸ்டுபிட். இந்த வேலை போச்சுன்னா வேற வேலை தேடிக்கலாம் மச்சி.

பட் ஐ ஹாவ் ஒன்லி ஒன் மீனா.ஐ லவ் ஹெர் சின்சியர்ல்லி.நாளைக்கே நான் ஆபிஸ் போறேன் பிரேம்.

வெரி குட் சூர்யா.தட்'ஸ் ஸ்பிரிட்.

September 25, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 4***
சூர்யா எங்கேடா இருக்க ?

சாரி பிரேம்.நீ நல்லா தூங்கிட்டு இருந்த.அதான் உங்கிட்ட சொல்லல.இன்னிக்கு சண்டே.அதான் பக்கத்தில் இருக்கிற சர்ச்சுக்கு வந்திருக்கேன்.இன்னும் முப்பது நிமிஷத்தில் டிபன் வாங்கிட்டு ரூமுக்கு வரேன்..நீ குளிச்சிட்டு ரெடியா இரு.

எல்லாம் சரி.திடீர்னு என்ன சர்ச்சுக்கு எல்லாம் போக ஆரம்பிச்சிட்ட?

சும்மா தாண்டா.மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.எந்த இடத்தில மனசு அமைதி கிடைக்குதோ அதான்டா மச்சான் உண்மையான கோவில்.எந்த சாமியா இருந்தா என்ன.எந்த மதமா இருந்தா என்ன?

அதுவும் சரிதான் சூர்யா. நீ பிரேயர் முடிச்சிட்டு ரூமுக்கு வா.பசிக்குது.சீக்கிரம் சாப்பிடலாம்.

சரி.போனை கட் பண்ணிடுறேன்.

ஓகே டா.

சர்ச் பாதர் ப்ரேயரை ஆரம்பித்தார்.
" அன்பு ஒன்றுதான் உலகில் தலைசிறந்தது.
உன்மீது நீ அன்பு காட்டுவது போல்
அடுத்தவர் மீதும் அன்பு காட்ட வேண்டும்.
உன் சிநேகிதனுக்காக/சிநேகிதிக்காக உயிரை கொடுப்பதைவிட
உயர்வான அன்பு உலகில் இல்லை.

நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை
நான் உன்னை கைவிடுவதும் இல்லை "

இந்த வார்த்தைகள் அவனுக்குள் மன தைரியத்தையும், புத்துணர்ச்சியையும் அளித்தது.பிரேயர் முடிந்ததும் சூர்யா மனசு லேசானது போல் இருந்தது.
வெளியே வந்து டிபன் ஆர்டர் செய்தான்.பக்கத்தில் இருந்த கடையில் தம் வாங்கி பற்றவைத்தான்.

உயிரே பிரியாதே ***பகுதி - 3***


பிரேம்...ரொம்ப தாங்க்ஸ்டா.சூப்பர் சரக்கு.நல்ல மப்புடா. இப்ப எனக்கு பயமே இல்ல மாமு.

சரி சரி மச்சி.ரொம்ப உளற ஆரம்பிச்சிட்ட.சாப்பிட என்ன சொல்லட்டும்?

தோசையா இல்ல இட்லியா?

எனக்கு ஒரு பிளேட் மீனா வேணும் மாப்ள.

அய்யோ ஆண்டவா.அவனை விட அதிகம் அடிச்சது நான்.ஆனா உளறது அவனா? டப்பு என்னோடது..மப்பு அவனோடதா...என்ன கொடுமை சார் இது?

பிரேம் மச்சி..ஐ லவ் யு டா. ஐ மிஸ் யூ டா.

அடப்பாவி..போதைய போட்டு ரொம்ப இம்சை பண்றானே.ஐ லவ் யூ சொல்ற நேரமாடா இது.வீட்டுக்கு போலாம் வா.நேரம் ஆச்சு சூர்யா .

மீனா வீட்டுக்கு இப்ப வேணாம் பிரேம்..ரொம்ப லேட் ஆயிடுச்சி.

நீ என்கிட்ட அடிவாங்கபோர சூர்யா .நம்ம வீட்டுக்கு போலாம்னு சொன்னேன்.

ஐ ஆம் சாரி மச்சி..எப்படிடா தண்ணி அடிச்சா கூட தெளிவா பேசுற நீ? சரி நம்ம வீட்டுக்கு போலாம் வா.

இரவு முழுவதும் சூர்யா மீனாவை பற்றியே உளறி உளறி தூங்கி போனான்.பிரேம் தம் அடித்துகொண்டே எதையோ நினைத்து கொண்டு இருந்தான்.நீண்ட நேரம் கழித்துதான் தூக்கம் வந்தது.

காலையில் கண்விழித்த போது சூர்யா பக்கத்தில் இல்லை.கூப்பிட்டு பார்த்தும் பதில் இல்லாததால் எழுந்து போய் தேடி பார்த்தான். கைபேசியில் சூர்யா பெயரை அழுத்தினான்.

September 24, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 2***என்ன சூர்யா, போலாமா என்றான் பிரேம்.

போலாம்டா. உனக்கு வேற எங்காச்சும் போகனுமா இல்ல ரூமுக்கு தானா?

எந்த வேலையும் இல்ல மச்சி..நேரா ரூமுக்கு தான் போறோம்.டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு பாருக்கு போலாம்.

இல்ல நான் வரலடா. நீ வேணும்னா சரக்கு அடிக்க போயிட்டு வா.

டேய் காந்தி பேரா. என்னடா ஆச்சு உனக்கு? சாப்பாடு வேணாம்னு சொல்லு, ஆனா சரக்கை மட்டும் வேணாம்னு சொல்லாதடா.

மச்சான், என்னை டிஸ்டர்ப் பண்ணாத ப்ளீஸ். எனக்கு மூடு இல்ல.

எனக்கு தெரியாது..நீ என்கூட வர.சரக்கு அடிக்க கம்பெனி தர, காசும் தர.

நிலைமை தெரியாம பேசாத பிரேம்.ஐ ஆம் டோட்டலி அப்செட்.உங்கிட்ட பேசனும்தான் உன் ஆபிசுக்கு வந்தேன்.

சாரி மச்சான்.என்ன மேட்டர்னு சொல்லு.

இங்க வேணாம்.வண்டிய எடு.கப்பன் பார்க் போலாம்.

கப்பன் பார்க்கில் வண்டியை பார்க் பண்ணிட்டு இருவரும் நடந்து ஒரு பெஞ்சில் அமர்ந்தார்கள். மீனாவிடம் காதலை சொன்ன விஷயத்தை சொன்னான் சூர்யா.

மை காட். என்னடா இப்படி பண்ணிட்ட. இப்ப என்ன பண்ண போற?

தெரியல மச்சி.கொஞ்சம் சந்தோசமா இருக்கு.கூடவே பயமாவும் இருக்கு.

ஆல்ரைட்.இப்ப யோசிச்சா குழப்பமா இருக்கும்.சோ ...

சோ...என்ன பண்ணலாம்னு சொல்ற நீ?

நைட் முடிஞ்சா சூரியன் வரும். சரக்கு அடிச்சா ஐடியா வரும்.

உயிரே பிரியாதே ***பகுதி - 1***


உயிரே பிரியாதே !!! - காதல் தொடர்கதை.
மாலை நேரம்.பெங்களூர் நகரத்திற்கே உரித்தான குளிர் கொஞ்சம்
கொஞ்சமாக பரவ தொடங்கிய நேரம்.சிவாஜி நகர் பேருந்து நிலையத்தில் சூர்யா அவளுக்காகவும்,அவளின் பதிலுக்காகவும் காத்துக்கொண்டு இருந்தான்.அவள் என்றால் மீனா .24 வயது நிரம்பிய அழகான பெண்.செயின்ட் மார்க்ஸ் ரோட்டில் அமைந்துள்ள கார்ட் ஆப் ரிங்க்ஸ் கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள ஒரு நிதிஆலோசக நிறுவனத்திற்கு சொந்தக்காரி.

இவ்வளவு வசதி படைத்த இவளுக்கும், பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டு இருக்கும் சூர்யாவிற்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்?சோ சிம்பிள்..காதல் தான்.

நேற்று அலுவகலத்தில் யாருமில்லா வேளையில் மீனாவிடம் தன் காதலை சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியே வந்து விட்டான் சூர்யா.கிங்க்ஸ் சிகரட்டை பற்ற வைக்குமபோது கைகள் நடுங்குவதை அவனால் நன்றாக உணர முடிந்தது.சிக்னல் செய்தும் நிற்காமல் போன ஆட்டோக்காரன் மீது எரிச்சல் வந்தது.

சிறிது தூரம் நடந்தால் நண்பன் பிரேம்குமார் வேலை செய்யும் அலுவலகம் வந்துவிடும்.அவனிடம் விஷயத்தை சொன்னால் கொஞ்சம் ஆறுதலாக இருக்குமென நினைத்து கைப்பேசியில் அழைத்தான்.

பிரேம் நீ எப்ப வீட்டுக்கு கிளம்பப்போர?

வேலை முடிந்தது மச்சான்..ஜஸ்ட் சிஸ்டம் ஆப் பண்ணிட்டு வர வேண்டியது தான்.ஆமா நீ எங்கடா இருக்க சூர்யா?

உன் ஆபிசுக்கு வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கேன்டா.

ஓகே.ஐ வில் பீ தேர் இன் பைவ் மினிட்ஸ்.இன்னிக்கு என்ன திட்டம் போட்டு இருக்க?சரக்கு ரூம்லே அடிக்கலாமா இல்ல பாருக்கு போலாமா?

டேய். பர்ஸ்ட் வெளிய வந்து தொலைடா.உங்கிட்ட முக்கியமான மேட்டர் சொல்லணும்.

ஓகே ஓகே.வந்துட்டேன் மச்சான்.

பிரேம் வரும்வரை சாலையில் போகும் வாகனங்களை பார்க்கலாம் என திரும்ப அங்கே மீனா தன் காரில் போவது தெரிந்தது.மற்ற நாட்களை விட இன்று சற்று வேகமாக போவதுபோல் தோன்றியது சூர்யாவுக்கு.லேசாக பயமும் வந்தது.கவிதைகள்சிறு இடம்
****************
உனக்கென ஒரு பாடல்.
உனக்கென ஒரு தேடல்.
உனக்கென ஒரு மழை.
உனக்கென ஒரு கவிதை.
உனக்கென ஒரு உலகம்.
அதில் எனக்கே எனக்கென
ஒரு சிறிய இடம்.