October 15, 2009

ஆர்குட்


இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு நாள் யாஹூ வலைத்தளத்தில் உலாவிக்கொண்டு இருக்கும்போது, கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன் சாட்டில் வந்தான்.

ஹாய் மச்சி...ஹொவ் ஆர் யூ?

நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க மச்சி?

நான்கூட சூப்பரா இருக்கேன்டா என்று பார்மல் நல விசாரிப்புக்குபின், "நீ ஆர்குட்டில் இருக்கியா" என்றான்.

ஆர்குட்? கேள்விப்பட்டுஇருக்கேன், ஆனா ஐடி இல்லையே என்றேன்.

நீயெல்லாம் ஏன்டா உயிரோடு இருக்கே என்பது மாதிரியான திட்டுக்களை வாங்கியபின் தீர்க்கமான முடிவெடுத்தேன் இனி ஆர்குட்டா நானா என்று.

என்னோட ஜிமெயில் ஐடி வைத்து ஆர்குட்டில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தேன்.உள்ளே போக போக அதில் ஒரு தனி உலகமே இருப்பது தெரிந்தது.பெரும்பாலான பாய்ஸ் பிரண்ட் லிஸ்டில் 200,300 என்றும்,1000,2000  என்றும் ஸ்க்ராப்ஸ் இருப்பதை பார்த்து மிரண்டு்போனேன்.அதைவிட கொடுமை கேள்ர்ஸ் பாய்ஸை விட ரெண்டு மடங்கு அதிகமாக இருப்பதை பார்த்து மயங்கியே போனேன்.

சரி..பரவாயில்லை...என்று தெரிந்த,தெரியாத பாய்/கேர்ள் பிரண்ட்சுக்கு எல்லாம் ஏன் ஐடியை போன்/மெயில் பண்ணேன்.முதல் இரண்டு நாட்கள் யாரும் என் பிரண்ட்ஸ் லிஸ்டில் சேரவும் இல்லை.ஸ்க்ரபும் இல்லை.

ஒரு வாரம் கழித்து 2 ஸ்க்ரப்ஸ் வந்ததை பார்த்து ஆசையுடன் ஆர்குட்டை திறந்தால், "மே ஐ நோ யூ?" , "சாரி,அன்னோன் பெர்சன்ஸ் நாட் அலவுட் இயர்" என்று இரண்டு பெண்கள் மிக அழகாக என்னை ஒதுக்கி இருந்தார்கள்.

அப்புறம் சில மாதங்களில் எப்படியோ 50 பேர் சிக்கினார்கள்.ஸ்க்ராபும் 1000 த்தை தாண்டியது..இதை கொண்டாட தினத்தந்தி/தினகரனுக்கு (தினமலர் இப்போதைக்கு ராசியில்லைங்க) அரைப்பக்க விளம்பரம் தரலாமா என்றுகூட யோசித்தேன்.

அப்புறம் அலுவக வேலையைக்கூட மறக்கும் அளவுக்கு ஆர்குட் போதை ஏறி திரிந்தேன்.

இப்போ என்ன ஆச்சுன்னு எனக்கே தெரியலங்க.தெரியாத பாய்ஸ்/கேர்ல்ஸ் பிரண்ட்ஸ் ரிக்வஸ்ட்/ஸ்க்ராப் அனுப்பினால் நானே "மே ஐ நோ யூ?" என்று அனுப்ப ஆரம்பித்துவிடுகிறேன் அல்லது அமைதியாக இருந்துவிடுகிறேன்.

நேத்து ஒரு பிரண்ட் பேஸ்புக்குன்னு இதோ  ஒரு பேரை சொன்னான்.அங்க மீட் பண்ணலாம் என்ன?

நீங்க எப்படி?

October 14, 2009


TAKE IT EASY !!!

வாழ்க்கை  ரொம்ப அழகான விஷயம்ங்க.நம்மில் நிறைய பேருக்கு இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி ஏன் நடந்துக்குறோம்னுதான் தெரியலை.

சுய கவுரவம்,அதிகாரம்,பதவி,போட்டி,பொறாமை இப்படி பல உயிரற்ற விஷயங்களுக்காக  உயிருள்ள நம் சக மனிதர்களை பாடாய்படுத்துகிறோம்.

எத்தனையோ பெரியமனிதர்கள், சித்தர்கள், மகான்கள் சொல்லிக்கொடுத்த அனுபவங்களை படித்தும்-கேட்டும்,நாம் நம்மை மாற்றிகொள்ள தயாராக இல்லை.இந்த வேகமான யுகத்தில் நம்முடைய சக மனிதர்களை பற்றி யோசிக்கவும் நேரமில்லை.

கடவுள் இல்லைன்னு சொல்ற ஒருத்தர்.கண்டிப்பா இருக்கார்னு சொல்ற ஒருத்தர்.அரசாங்கம் சரியில்லைன்னு சொல்ற ஒருத்தர்.நல்லா ஆட்சி பண்றாங்கப்பான்னு சொல்ற ஒருத்தர்.சிலருக்கு காமெடி பிடிக்கும்,சிலருக்கு அழுகைதான் பிடிக்கும்.

சிலருக்கு பேச பிடிக்கும்,சிலருக்கு கேட்ட மட்டும்தான் பிடிக்கும்.எனக்கு இந்த உலகத்தில் உள்ள எல்லாமே பிடிக்கும்னு சொல்ற ஆட்களை வலைவீசி தேடி பிடிக்கவேண்டும்.

இப்ப நீங்க என்ன செய்யணும்ன்னு கேட்கறீங்களா? நீங்க எதுவும் கெட்டது பேசாம/நினைக்காம/பண்ணாம இருந்தா போதும்.நீங்கன்னா இதை படிக்கிறவங்க இல்லை.அப்படி பண்றவங்களை சொல்றேன்.

நான் யாருக்கு கெட்டது பண்ணேன்னு கேட்குறீங்களா? நாம ஒருத்தரை கொலை பண்றதுதான் கெட்டதுன்னு இல்ல.சக ஊழியர்களை,சக மனிதர்களை,உறவினர்களை,நண்பர்களை பத்தி அவங்க இல்லாதபோது தப்பா பேசறதும்,இருக்கும்போது இகழ்ந்து பேசுறதும்,மேலதிகாரி கேட்கலைன்னாலும் போட்டு கொடுக்கறதும்,நம்பிக்கை துரோகம் பண்றதும் கூட கெட்டதுதாங்க.

என்ன அநியாயமா இருக்கு இது? என்னை காப்பாதிக்க அடுத்தவனை போட்டுகொடுக்கறது தப்பா?ஒரு ஜாலிக்காக நண்பனை வேறுபேத்தறது தப்பான்னு நீங்க கேட்கறது எனக்கு இங்கே கேட்குதுங்க.

ஆனா நம்ம நல்லதுக்காக இன்னொருத்தனை பத்தி தப்பா சொல்றது தப்புதானே?நம்ம சந்தோசத்துக்காக அடுத்தவனை கிண்டல் பண்றது தப்புதானே?

வாழ்க்கை ஒரு பட்டாம்பூச்சி மாதிரி.கொஞ்ச காலம் தான் வாழ முடியும்.அது எப்போ முடியும்ன்னு யாராலும் சொல்ல முடியாது.அதே மாதிரிதான் இந்த பட்டாம்பூச்சி சுதந்திரமா பறக்கும்வரை சந்தோஷ காற்றை சுவாசிக்கலாம் இன்னொருவர் ஆசைபட்டோ அல்லது வெறுத்து பிடித்து அதன் வர்ணம் போகும்வரை,அதாவது நம் சந்தோசம் என்பது பட்டாம்பூச்சியின் வர்ணம் மாதிரின்னு சொல்றேங்க.

சந்தோசம்,பணம்,ஆசை என்பதெல்லாம் நல்லா வீசுற காத்துமாதிரி.ஒரு நாள் என்பக்கம் வீசும், நாளைக்கு அடுத்தவன் பக்கம் வீசும்.காத்தை பிடிச்சி நம் பாக்கெட்டில் போட முடியாதுல்ல?

வாங்க கொஞ்சம் யோசிச்சு, நிறைய பேரை சந்தோஷப்படுத்தலாம்.

October 13, 2009

 
                                    விண்மீன் பேசுமா ?  
                               **********************************

வான்வெளியில் இருந்து ஒரு
விண்மீன் பூமியில் விழுந்தது.
வேடிக்கை பார்க்க எட்டிப்பார்த்தேன்....

வேண்டாம் என்றவர்களை ஒதுக்கி
வீட்டுக்கு எடுத்து சென்றேன்;

தடித்த இரவினில் தனிமையில்
தூக்கம் வராது புரள்கையில்
விண்மீனை பார்க்க ஆசை வந்தது;

கட்டிலுக்கடியில் இருந்து
மெதுவாய் எடுத்துப்பார்த்தேன்;

உயிர் இருக்குமா? பசிக்குமா? காது கேட்குமா?
இல்லை வெறும் கல்லா?
என்றெல்லாம் யோசிக்கையில்,

"என்னை உன் மாடிக்கு அழைத்துப்போவாயா?"
விண்மீன் என்னை கேட்டது.

கல்லாகிய நீ பேசுகிறாயே? வினவினேன்.
"மனிதனாகிய நீ பல நேரங்களில்
மவுனமாய் இருக்கும்போது கல் பேசுவதில்
தவறில்லையே?" விண்மீன் பதிலியது.


மவுனமாய் விண்மீனை ஏந்திக்கொண்டு
மொட்டைமாடிக்கு சென்றேன்.

அர்த்தத்துடன் என்னைப்பார்த்து சிரித்தபடி
ஆகாயம் நோக்கி பயணமானது அந்த விண்மீன் !!!

வன்முறை நேர்கையில் வாய்கிழிய பேசுகிறோம்;
ஆபாச நடிகைகளை பற்றி பதிவெழுதுகிறோம்;
முன்னோட்டம் இட்டுக்கொண்டே பின்னோக்கி போகிறோம்;
திரைப்படங்களை தீர தீர விமர்சுகிறோம்;
மூக்கில் குத்துவிட்டு கோபம் தணிக்கிறோம்;

விண்மீனே வாய்விட்டு பேசும்போது
மனிதனின் மவுனம் சரிதானே ???

October 9, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 21***





 ஸாரி மீனா...உங்களுக்குள் இவ்வளவு பெரிய சோகம் இருப்பது தெரியாம நான் உங்ககிட்ட என்னனமோ பேசிட்டேன்...

இட்ஸ் ஓகே சூர்யா..நான்தான் இப்ப உங்களை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்.

ச்சே..ச்சே...அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை.உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல.ஆனாலும் இப்பத்தான் எனக்கு உங்களை ரொம்பவும் பிடிச்சிருக்கு மீனா..ப்ளீஸ் என்னை தப்பா எடுத்துக்காதீங்க.ஸ்டில் ஐ லவ் யூ மீனா.

சூர்யா...உங்க காதலை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.யாருக்கு வேணும்ன்னாலும் யாரை வேணா பிடிக்கலாம்.ஆனா நாம விரும்பறவங்க மனசுல நாம இருக்கோமான்னு என்பதுதான் முக்கியம்.என் மனசுல அவர்தான் இப்ப இருக்கார்.எப்பவும் இருப்பார்.அதனால நீங்க என்னை மறக்கிறது நல்லது சூர்யா.

நீங்க சொல்றதை என்னால முழுசா ஒத்துக்க முடியாது மீனா.நான் உங்களை விரும்பறா மாதிரி நீங்களும் என்னை கண்டிப்பா விரும்பிதான் ஆகணும்னு நான் சொல்லல.இன்னும் நீங்க உங்க காதலரை, கணவரை நினைசிட்டு இருக்கிற உணர்வை நான் ரொம்ப மதிக்கிறேன்...ஆனா காலம் முழுக்க நீங்க இப்படி தனியாவா இருக்க போறீங்க மீனா?

சூர்யா.....நான் என் வாழ்க்கை முழுக்க தனியாவே இருக்கப்போறேன்னு நான் சொல்லவே இல்ல.நிச்சயம் எனக்கு ஒரு துணைன்னு தேவைபட்டா நான் ஒருத்தரை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன்.ஆனா இப்ப எனக்கு அந்த துணை தேவைப்படல. ஏன்னா இன்னும் அவருடன் வாழ்ந்த அந்த ஞாபகங்கள் என் மனசுல பசுமையா இருக்கு.அதுதான் இப்போதைக்கு என்னோட பெரிய சுகமான சுமையும்,துணையும்...நான் எதாவது தப்பா பேசி இருந்தா ரொம்ப ஸாரி சூர்யா..

இல்ல மீனா...நீங்க எதுவும் தப்பா பேசவே இல்ல.எப்படி உங்களால் இவ்ளோ தெளிவா அழகா பேச முடியுது?ரொம்ப பெருமையா இருக்கு.ஆனா காலம் கண்டிப்பா எந்த ஒரு துன்பத்தையும் மாத்த கூடியது..அப்படி ஒரு நேரம் வந்து நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கும்போது நான் உங்க முன்னாடி இருப்பேன்.உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பேன்.

இவ்வளவு சொல்லியும் நீங்க இன்னும் என்னை நினைச்சுட்டே இருப்பேன்னு சொல்றதை நினைச்சு ரொம்ப சந்தோசப்படறதா இல்ல வருத்தப்படுறதான்னு தெரியல சூர்யா.ஆனா எனக்காக நீங்க எப்பவும் காத்துக்கிட்டு இருக்க வேண்டாம் ப்ளீஸ்...

இப்பவும் எனக்கு நம்பிக்கை இருக்கு மீனா...உங்க காயத்தை என்னால ஆற்ற முடியும்ன்னு..இன்னும் நீங்க அவரையே நினைச்சுட்டு இருக்கிறது காதல்னா உங்களை நினைச்சி நான் காத்துக்கிட்டு இருக்க போவதற்கு பெயரும் காதல்தான் மீனா.

வண்டியில் வந்த மெக்கானிக் வந்து காரை சரி பார்க்க ஆரம்பித்தான்.

சார்..கார் ரெடி..நான் கிளம்பட்டுமா?

இருப்பா...நம்ம ஏரியா தானே?நானும் உன்கூட வரேன்.

மீனா..நான் கிளம்புறேன்...நீங்க வீட்டுக்கு போங்க.வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணுங்கன்னு சொல்ல மாட்டேன்.அட்லீஸ்ட் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க...

சொல்லிவிட்டு சூர்யா வண்டியில் கிளம்பி போவதை பார்த்து கொண்டே இருந்தாள் மீனா.

மழை தூறத்தொடங்கியது...அந்த மழைத்துளிகளில் மீனாவின் ஒரு கண்ணீர் துளியும் சேர்ந்திருந்தது.

சில நினைவுகள், சில நிகழ்வுகள், சில மனிதர்களை நம்மால் என்னிக்குமே மறக்க முடியாது.உயிர் பிரியும்வரை உடன் ஒட்டிக்கொண்டே இருக்கும்....!!!

*******************************   முடிந்தது  *********************************













உயிரே பிரியாதே ***பகுதி - 20***



என்ன காரணம்னு நான் தெரிஞ்சிக்கலாமா மீனா?

சொல்றேன்.என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் சூர்யா?

எனக்கு போதுமான அளவுக்கு தெரியும்.அது போதும்ங்க.

எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி சூர்யா.

நோ..நீங்க பொய் சொல்றீங்க மீனா.நான் இதை நம்ப மாட்டேன்.

ஒரு பொண்ணு சீக்கிரம் பொய் சொல்ல மாட்டா.அதுவும் கல்யாண விஷயத்துல கண்டிப்பா பொய் சொல்ல மாட்டா.நான் காலேஜ் படிக்கும்போது என்கூட படிக்கிற பையன் என்னை லவ் பண்றதா சொன்னான்.முதல்ல எனக்கு அவனை பிடிக்கல. அப்புறம் அவனோட சின்ன சின்ன சேட்டைகள்,பரிசு பொருட்கள், முரட்டுத்தனம் இதெல்லாம் என்னை தானா அவன் பக்கம் இழுத்துடுச்சி. பீச்,பார்குன்னு நாங்களும் மத்த லவ்வர்ஸ் மாதிரி சுத்திட்டுஇருந்தோம்.

ஒரு நாள் நாங்க பீச்ல சுத்திட்டுஇருந்தப்போ ரெண்டுபேரும் வசமா அவனோட அப்பா கண்ணுல மாட்டிகிட்டோம்.அவங்க அப்பா இவன் பேச்சை கேட்காம வேற ஒரு பொண்ணை கல்யாணத்துக்கு பிக்ஸ் பண்ணிட்டார்.

நாங்க தீவிரமா இது பத்தி டிஸ்கஸ் பண்ணோம்.ரிஜிஸ்டர் ஆபீஸ்ல மேரேஜ் பண்ணிகிட்டோம். அவனோட வீட்ல எங்களை ஏத்துக்கல.எங்க வீட்லயும் முதல்ல ஏத்துக்கல.கொஞ்ச நாள் பொறுத்து நான் வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் எங்க வீட்ல ஏத்துகிட்டாங்க.

தனிகுடித்தனம் போனோம்.சந்தோசமா இருந்தோம்.அவனும் வேலைக்கு போனான்.ஒரு நாள் ஆபீஸ்ல இருந்து அவன் வீட்டுக்கு திரும்பும்போது எதிர்ல வந்த லாரில மாட்டி ஸ்பாட்லயே.................

மீனாவால் கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து அழ ஆரம்பித்தாள்.சூர்யா மூச்சடைத்து நின்றான்.அவளுக்குள் இருக்கும் இந்த வேதனை போகும்வரை அழட்டும் என்று சூர்யா மவுனமாக இருந்தான்.

உயிரே பிரியாதே ***பகுதி - 19***









பரவாயில்லை சொல்லுங்க சூர்யா.

கார் எப்ப சரியாகும் என்கிற டென்சன்தான் மேம்.வேற ஒண்ணுமில்ல.

நீங்க பொய் சொல்றீங்க சூர்யா.நான் ஏன் இன்னும் உங்களுக்கு பதில் சொல்லலைனு டென்சன்.ஆம் ஐ ரைட்?

மேம்.அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.நீங்க அதை மறந்துடுங்க ப்ளீஸ்.

ஆபீஸ்லதான் நான் உங்க மேம்.இப்ப என்னை ஒரு தோழியா நினைச்சுக்கங்க.மனசை விட்டு பேசுங்க.தயங்க வேண்டாம் சூர்யா.நீங்க என்னை மீனான்னே கூப்பிடலாம்.

சாரி மேம்.சாரி மீனா.உங்ககிட்ட அன்னிக்கு ஆபீஸ்ல என் காதலை சொன்னது ரொம்ப தப்பு.........

சோ, இப்ப சொல்ல போறேன்னு சொல்றீங்களா?

அது வந்து....நான்...எப்படி...உங்களை...ரொம்ப...
லவ்...இல்ல..ஆமா...தெரியல...

ஓகே..நானே சொல்றேன்..நீங்க என்னை லவ் பண்றீங்க.அதானே?

எஸ் மீனா.உங்களை நான் லவ் பண்றேன்.கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்.

சூர்யா....உங்க லவ்வை நான் தப்பு சொல்லல...ஆனா என்னால உங்களை ஏத்துக்கமுடியாது..ஐ ஆம் ஸாரி..

October 8, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 18***




சிறிது தூரம் காரின் சப்தம் தவிர மவுனமே நிலவியது.இரண்டு கிலோமீட்டர் சென்றிருக்கும்.கார் குலுங்கி நின்றது.

என்னாச்சு மேம்.

தெரியல சூர்யா.இருங்க செக் பண்றேன்.

நேரம் கடந்தது.கார் நகரவில்லை.மீனா டென்ஷன் ஆவதை சூர்யா கவனித்தான்.

மேம்.நான் என் பிரண்ட் ப்ரேம்க்கு போன் பண்ணி மெக்கானிக்கை வர சொல்லிட்டேன்.நீங்க காருக்குள் உட்காருங்க.டென்ஷன் ஆக வேண்டாம்.

தேங்க்ஸ் சூர்யா.திடீர்னு என்னாச்சுனு தெரியலயே?

ப்ளீஸ் கூல் மேம்.இன்னும் கொஞ்ச நேரத்தில் மெக்கானிக் வந்துடுவான்.

இருவரும் காரில் அமர்ந்தார்கள்.

இப்போது கேட்கலாமா வேண்டாமா என்று சூர்யா யோசித்து கொண்டிருக்கையில் மீனா தன்னையே பார்த்து கொண்டிருப்பது வேறு பயமாக இருந்தது.

என்ன சூர்யா.என்னை விட நீங்க ரொம்ப டென்சனா இருக்கீங்க போல?

இல்ல மேம்.நத்திங்.

உயிரே பிரியாதே ***பகுதி - 17***








பலமுறை அவளுடன் காரில் சென்று இருந்தாலும் இம்முறை ராஜா,ராணி தேரில் ஊர்வலம் போவதை போன்ற ஒரு உணர்வு தோன்றுவதை சூர்யாவால் தடுக்கமுடியவில்லை.

சூர்யா..இன்னிக்கு மீடிங்க்ல நாம அந்த ^^^^பேங்க் மேனேஜர் பத்தி சொல்லலாமா?

இல்ல மேடம்.நாம போறது வேற ஒரு நோக்கத்துக்காக.முக்கியமான விஷயங்களை டிஸ்கஸ் பண்ணும்போது இந்த மாதிரி குறைகளை சொன்னா நம்மை பத்தி அவங்க தப்ப நினைக்க சான்ஸ் உண்டு,சோ சொல்ல வேணாமே.

எஸ்..யூ ஆர் ரைட் சூர்யா.

இரவு 7 மணிக்கு ஆரம்பித்த மீட்டிங் 10 மணிக்குத்தான் முடிந்தது.அங்கேயே எல்லோரும் டின்னெர் முடித்தார்கள்.

தேங்க்ஸ் சூர்யா..மீட்டிங் வாஸ் வெரி குட் நோ.

எஸ் மேம்.யூ ஆர் ரைட். சரி மேம்.நான் கிளம்புறேன். நாளைக்கு பார்க்கலாம்.

வீட்டுக்கு எப்படி போவீங்க?

பக்கத்துலதான் பஸ் ஸ்டாப்.

நோ சூர்யா.நீங்க பஸ்ல வீட்டுக்கு போய் சேர்வதற்குள் ரொம்ப நேரம் ஆகிடும்.வாங்க.நான் ட்ராப் பண்றேன்.

இட்ஸ் ஓகே மேம்.ஐ வில் மேனேஜ்.

நோ நோ..நீங்க கார்ல ஏறுங்க முதல்ல.

ஓகே.

உயிரே பிரியாதே ***பகுதி - 16***












அலுவலகத்தில் இருந்து ஒவ்வொருவராவ் வீட்டிற்கு  கிளம்பி கொண்டிருந்தார்கள்.மூர்த்தி ஏற்கனவே பெர்மிஷன் போட்டு நேராக மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.

இப்போது மணி சரியாய் 5.50 காட்டியது.

மீனா தன் அறையை பூட்டுவதை சூர்யா கவனிக்க தவறவில்லை.அவள் தன்னை பார்க்கும் முன் அவன் ரொம்ப சீரியசாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு, என்றோ முடிந்துபோன ஒரு ஆடிட்டிங் புக்கை திறந்து வைத்து அதில் ஆழ்ந்தான்.

சூர்யா..மீட்டிங் போகலாமா?

......

சூர்யா..ஆர் யூ ரெடி?

சாரி மேம்.கவனிக்கல..கொஞ்சம் பிஸி :)

இட்ஸ் ஓகே..வாங்க போலாம்.

இருவரும் கார் பார்கிங் நோக்கி நடந்தார்கள்.

சூர்யாவின் மனது சந்தோஷத்தில் துள்ளி குதித்துக்கொண்டு இருந்தது.

உயிரே பிரியாதே ***பகுதி - 15***







தன் இருக்கைக்கு திரும்பிய சூர்யா சுறுசுறுப்பாய் வேலையை ஆரம்பித்தான்.

(ஈவினிங் மீனாகூட தனியாக போகப்போகிறோம் என்பதாலா என்று தெரியவில்லை.கண்டிப்பாக நம்ம ஹீரோக்கு அந்த சந்தோசம்தான், அதான் ஓவரா வேலை பார்க்கிறார் போல.)

எப்படா சாயங்காலம் ஆகும்னு காத்துகொண்டிருந்தான் நம்ம சூர்யா.
மதியம் சாப்பிடகூட போகலன்னா பார்த்துக்கங்க.சரி...ஈவினிங் வரை வெயிட் பண்ணி என்னாகுதுன்னு பாப்போம்.

நாலு மணி ஆகும்போது,பசிப்பதுபோல் தோன்றவே அலுவலகத்திலிருந்து வெளியில் வந்தான்.சாண்ட்விட்ச் சாப்பிட்டு,டீ குடித்தபின் தம்மை பற்றவைத்து ப்ரேம்க்கு போன் செய்தான்.

என்ன மச்சான்..என்ன பண்ற?

சொல்லு சூர்யா..சும்மாதான்.ஒரு இம்பார்டன்ட் காலுக்காக வெயிட் பண்றேன்டா.

யாரு..அந்த புவனாவா?

இல்லடா.பிசினஸ் விஷயமா.

ஓகே மச்சான்..நம்பிட்டேன்.நான் இன்னிக்கு வெளிய சாப்பிட்டு கொஞ்சம் லேட்டா வருவேன்.எனக்காக நைட் சாப்பிடாம வெயிட் பண்ணாத.அதை சொல்லத்தான் கூப்டேன் பிரேம்.

சரிடா மச்சான்.

டேய்..என்ன விசயம்னு கேட்க மாட்டியாடா?

நான் இப்ப கேட்கிற நிலைமையில இல்லடா சூர்யா.வேற ஒரு டென்ஷன்டா.

சாரி மச்சான்..டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.நைட் பேசிக்கலாம்.

உயிரே பிரியாதே ***பகுதி - 14***












மீனாவிடம் பேசிவிட்டு வெளியில் வந்த பிறகுதான் சூர்யாவிற்கு உயிர் வந்ததுபோல் இருந்தது.

நேராக மூர்த்தியிடம் போனான்.

சார், உங்க பொண்ணுக்கு என்னாச்சு?

அதுவா?கொஞ்ச நாளாவே வயிறு வலிக்குதுனு சொல்லிட்டிருந்தா.ரெண்டு நாளைக்கு முன்னதான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனோம்பா.வயித்தில் நீர்கட்டி இருக்காம்.உடனடியா ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னு சொல்லிட்டார்.இன்னிக்கு ஈவினிங் 7 மணிக்கு டைம் கொடுத்துஇருக்கார்.

ஐ ஆம் சாரி சார்.கவலைபடாதீங்க..உங்க பொண்ணுக்கு ஒரு பிரச்னையும் இல்லாம ஆபரேஷன் முடியும்.உங்களுக்கு எந்த உதவி வேணும்னாலும் என்னை கூப்பிடுங்க.

ரொம்ப தேங்க்ஸ்பா சூர்யா.

ஓகே சார்.ஒண்ணு கேட்பேன்.பட் நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது.

என்ன சூர்யா? திடீர்னு பீடிகை போடுற..

இல்ல சார்.உங்களுக்கு எதாச்சும் பணஉதவி தேவைபட்டா தயங்காம என்கிட்ட சொல்லுங்க.

ரொம்ப தேங்க்ஸ்பா சூர்யா..இந்த ஆபரேஷன்க்கு தேவையான பணத்தை ரெடி பண்ணிட்டேன்.மேற்கொண்டு எதாச்சும் வேணும்னா கண்டிப்பா உங்கிட்ட கேட்கிறேன் போதுமா?

ஓகே சார்.

சூர்யா..இன்னிக்கு ஈவ்னிங் நீ மீனாகூட போறல்ல?

ஆமா சார், போய்த்தானே ஆகணும்.

என்னப்பா ஒரு மாதிரி சொல்ற.போக விருப்பம் இல்லையா? இல்ல உனக்கு வேற வேலை இருக்கா?

ச்சே..ச்சே..அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார்.நான் என் சீட்டுக்கு போறேன்.அப்புறம் பார்க்கலாம் சார்.

உயிரே பிரியாதே ***பகுதி - 13***

 







 

எஸ்..கம் இன்.

குட் மார்னிங் மேடம்.

யா.குட் மார்னிங் சூர்யா. ப்ளீஸ் டேக் யுவர் சீட்.

இட்ஸ் ஓகே, டெல் மீ மேம்.

அந்த ரீட்டா கார்மெண்ட்ஸ் பேமென்ட் என்னாச்சு?

இன்னிக்கு மதியம் செக்கை வந்து வாங்கிக்க சொல்லிட்டாங்க.நான் நம்ம ரங்காவை அனுப்பி வாங்கிவந்துட சொல்றேன்.

ஓகே.மிஸ்டர்.ப்ரீதம் அவரோட புது கம்பெனிக்காக பேங்க் லோன் கேட்டுருந்தாரே?

அது விஷயமா ****பேங்க் மேனேஜரிடம் பேசிட்டேன்.ரிசல்ட் பாஸிடிவா இருக்கும்னு சொல்லிட்டார்.

குட்.ரெண்டும் இம்பார்டன்ட் டாஸ்க்.சோ ப்ளீஸ் டேக் கேர்.

யா..ஐ வில் டேக் கேர் மேம்.

இன்னிக்கு ஈவினிங் நீங்க ப்ரீ தானே சூர்யா?

எஸ் மேம்.

ஓகே.கரெக்டா ஈவினிங் ஆறு மணிக்கு ரெடியா இருங்க, ஒரு கிளையன்ட் மீட்டிங் விஷயமா நாம 'தி ரெயின் ட்ரீ' ஹோட்டல்க்கு போகணும்.

மேம்.வழக்கமா நீங்க மூர்த்தி சாரை தானே கூட்டிட்டு போவிங்க?இப்ப.....

அவர்கிட்ட கேட்டாச்சு.அவரோட பொண்ணுக்கு வயத்தில கட்டியாம்,சோ ஈவினிங் டாக்டர்கிட்ட போகணும்னு சொல்லிட்டார்.

ஓகே மேம்,ஐ வில் கம் வித் யூ.

தேங்க்ஸ் சூர்யா..நீங்க வேலைய பாருங்க.

ஓகே மேம். ஐ வில்.