September 26, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 5***













சூர்யா புகைத்து கொண்டுஇருக்கும்போதே ஒரு மழைத்துளி முகத்தில் பட்டு தெறித்து பூமியில் விழுந்தது.வானத்தை பார்த்து திரும்ப குனிவதற்குள் சடசடவென மழை பிடித்துகொண்டது.

மழையை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றாலும் இந்த மழை சூர்யாவுக்கு பிடிக்கவில்லை போலும்.அதனால்தான் பக்கத்திலிருந்த கடைக்குள் ஒதுங்கிக்கொண்டான்.

பெங்களூரில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் எப்போது மழை வருமென சொல்லமுடியாது.சட்டென வந்துவிடும்.மனிதனுக்கு காதலும் அப்படிதான்.

காதலில் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிலின் உக்கிரம் கூட ஐஸ்கட்டி போல் தோன்றும்.காதலியின் பதில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சூர்யா போன்றவர்களுக்கு ஐஸ்கட்டி மழை கூட அனலாய் தோன்றும்.

சிறிது நேரத்தில் மழை நின்றது.ரூமுக்கு நுழைந்தவுடன் பிரேம் குளித்து சாப்பிட தயாராய் இருந்தான்.

என்னடா மச்சான் வாங்கி வந்த? மழையில் நனைஞ்சிட்டியா என்ன?

இல்ல.கடையில ஒதுங்கிட்டேன்.சாப்பிடலாம் வா.

என்னடா மச்சான். மீனா போன் பண்ணாளா?

இல்ல பிரேம்.

நீயாச்சும் அவளுக்கு போன் பண்ணி பேசுடா சூர்யா.நீ போன் பண்ணி மீனா பேசினா உன்மேல் அவளுக்கு கோபம் இல்லன்னு அர்த்தம்.

இல்லடா பிரேம்.என்னகென்னவோ போன்ல பேசுறது நல்லதா படல.

சரி வேண்டாம் விடு.நாளைக்கு ஆபீஸ்ல அவகிட்ட மறுபடியும் பேசி பாரு.

நாளைக்கு நான் ஆபிசுக்கு போகலடா.மனசே சரியில்ல.நாளைக்கு அவ முகத்தை எப்படி நேருக்குநேர் பார்க்க முடியும்னு தயக்கமா இருக்கு. அதுவும் இல்லாம ஒருவேளை ஆபிஸ்ல எல்லோர் முன்னாடி கோவமா பேசிட்டா அசிங்கம் ஆயிடும் மச்சி.

இல்ல.நீ நாளைக்கு ஆபிஸ்க்கு போகலைன்னா அவ உன்னைப்பத்தி தப்பா நினைப்பா.ஆபிஸ்ல தானே நீ உன் லவ்வ அவகிட்ட சொன்ன.அதே ஆபிஸ்ல ஸாரி கேட்டா ஒன்னும் தப்பில்லை.

ஸாரி கேட்கிறது ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல.

உன்னை வேலைய விட்டு தூக்கிடுவான்னு பயமா சூர்யா?

போடா ஸ்டுபிட். இந்த வேலை போச்சுன்னா வேற வேலை தேடிக்கலாம் மச்சி.

பட் ஐ ஹாவ் ஒன்லி ஒன் மீனா.ஐ லவ் ஹெர் சின்சியர்ல்லி.நாளைக்கே நான் ஆபிஸ் போறேன் பிரேம்.

வெரி குட் சூர்யா.தட்'ஸ் ஸ்பிரிட்.

0 comments: