September 26, 2009
உயிரே பிரியாதே ***பகுதி - 6***
ஞாயிற்றுகிழமை ஓய்வு முடிந்து திங்கட்கிழமை காலை என்றாலே நம்மில் பாதி பேருக்கு அலர்ஜியும், டென்சனும் சேர்ந்து கொள்ளும். சந்திராயன் செயற்கைகோளை விண்ணில் பறக்கவிட்ட விஞ்ஞானிகளின் டென்சனுக்கு நிகரானது அது.
பிரேமுக்கு ஆடிட்டிங் வொர்க் இருந்ததால் காலையில் சீக்கிரம் கிளம்பி விட்டான்.சூர்யா ஆர்.டி.நகரிலிருந்து சிவாஜி நகர் பஸ் பிடித்து,அங்கிருந்து ஆட்டோவில் ஆபிசுக்கு பயணமானான்.ஒரு தம் அடித்துவிட்டு ஆசுவாசபடுத்திக்கொண்டு கொஞ்சம் தைரியமாகி முதல் மாடி ஏறி தன் காபினுக்குள் நுழைந்து லாப்டாப்பை சுவிட்ச் ஆன் செய்தான்.
ஆபிசில் எல்லோரும் தன்னை முறைப்பது போல் தோன்றியது.இயல்பாக இருக்க முயற்சி செய்தான்.
அலுவலக சம்மந்தபட்ட பல மின்னஞ்சல்கள் வந்து இருந்தாலும் மீனாவை பற்றியும், அவள் தன்னை பார்த்தால் எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியும் மனது சிந்தித்து கொண்டுஇருந்தது.
மீனா வந்து விட்டாளா என்று எதிரே உள்ள அவளின் அறையை பார்ப்பதும், திரும்ப தன் வேலையை பார்ப்பதுமாக ஒரு நிலையில்லாமல் இருந்தான்.
கடிகாரம் காலை சரியாக ஒன்பது மணியை காட்டியது.ஆபிசில் வேலை செய்யும் எல்லோரும் வந்துவிட்டார்கள்.வழக்கமாக 8.50 வந்துவிடும் மீனாவை மட்டும் காணவில்லை.
சரி..ஏதாவது வேலை இருந்து இருக்கும் போல என தன்னை தானே சமாதானப்படுத்திகொண்டான்.மணி இப்போது சரியாய் 9.30 காட்டியது.எங்காவது டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டிருப்பாள் என நினைத்து கொண்டான். இப்படியாக மணி 10.15 தாண்டியதும் பொறுமை இழந்தவனாக பைனான்ஸ் மேனேஜர் மூர்த்தியை கேட்டான்.
மூர்த்தி சார்..மீனா மேடம் இன்னும் வரலையே?உங்ககிட்ட எதாச்சும் சொன்னாங்களா?
அதான் எனக்கும் தெரியல சூர்யா.கொஞ்சம் வெயிட் பண்ணி பார்த்துட்டு அவங்க வரலைனா மொபைலுக்கு கால் பண்ணிபார்ப்போம்.
இல்ல சார்.நீங்க இப்பவே ட்ரை பண்ணி பாருங்க.ப்ளீஸ் சார்.
என்ன சூர்யா எதாச்சும் முக்கியமான விஷயமாப்பா?
இல்ல சார்.கிளையன்ட் லோன் விஷயமா ஒரு வேலையை இன்னிக்கு காலைல முடிச்சு அப்ருவல் வாங்க சொல்லிருந்தாங்க. அதான் கேட்டேன் சார்.
அப்படியா. கொஞ்சம் நேரம் பார்த்துட்டு போன் பண்ணுவோம் சூர்யா.
இட்ஸ் ஒகே சார்.ஐ வில் வெயிட் பார் ஹெர்.
Labels:
காதல் தொடர்கதை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment