September 27, 2009
உயிரே பிரியாதே ***பகுதி - 7***
11.30 மணி டீ ப்ரேக்கிற்காக ஆபிசைவிட்டு சூர்யா வெளியே வந்தான்.டீயும் தம்மும் சொல்லிவிட்டு பிரேமுக்கு போன் செய்தான்.
பிரேம்..உனக்கு இன்னிக்கு ஆபிஸ்ல இன்டெர்னல் ஆடிட்டிங் இருக்குனு தெரியும்.ரொம்ப பிசியா இருப்ப.ஆனா உங்கிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் பேசியே ஆகணும்டா.
பரவாயில்ல சூர்யா சொல்லு.என்னாச்சு? மீனாகிட்ட பேசினியா?
இல்லடா.இன்னும் மீனா ஆபிசுக்கு வரல.யாரை கேட்டாலும் தெரியாதுன்னு சொல்றாங்க.கொஞ்சம் பயமாயிருக்குடா மச்சான்.
நீ ஏண்டா தேவையில்லாம பயப்படுற?
நான் என்னோட லவ்வை சொன்னதினால் அவ எதாச்சும் அசிங்கம்னு நினைச்சு ஆபிசுக்கு வரலையோ என்னோவோ?
டேய் சூர்யா..பேசாம உன்பேரை லூசுன்னு மாத்திக்கோ.
ஏண்டா?
பின்ன என்னடா..நீ அவ கம்பெனியில் வொர்க் பண்ற சிஸ்டம் என்ஜினியர்.மீனா கம்பெனியோட முதலாளி.உனக்கு பயந்தோ இல்ல அசிங்கபட்டோ அவ லீவ் போடணும்கிற அவசியம் இல்ல.வேற எதாச்சும் காரணம் இருக்கும்.நீ உன் வேலைய பாரு.
சரிடா மச்சான்.எனக்கும் பிரேக் டைம் முடியபோகுது.வி வில் ஸி லேட்டர்.
காபினுக்குள் உட்கார்ந்த உடன் இண்டெர்காமில் மூர்த்தி அழைத்தார்.
சூர்யா..நீ எங்க போயிருந்த.ஜஸ்ட் இப்பதான் மீனா மேடம் போன் பண்ணாங்க.நல்ல விஷயம்பா.அவங்களை பெண் பார்க்க பையன் வீட்ல இருந்து வந்திருக்காங்களாம்.அதனால இன்னிக்கு ஆபிசுக்கு வரலைனு சொல்லிடாங்கப்பா.நீ எங்கேன்னு மேடம் கேட்டாங்க.
எதுக்கு சார்?
தெரியலப்பா.வேணும்னா நீயே மேடத்துக்கு போன் பண்ணிடேன்.
வேணாம் சார்.தலைவலி அதிகமா இருக்கு.நான் வீட்டுக்கு போகவா சார்?
என்னப்பா.மேடமும் லீவு.நீயும் இப்ப கிளம்ப போறேன்னு சொல்ற.
சப்போஸ் மேடம் திரும்பவும் போன் பண்ணி நீ எங்கேன்னு கேட்டா என்னப்பா சொல்றது?
எனக்கு தலைவலி..கிளம்பிட்டேன்னு சொல்லுங்க.ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.
சரிப்பா.நான் பார்த்துகிறேன்,நீ கிளம்பு.
Labels:
காதல் தொடர்கதை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment