September 24, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 1***


உயிரே பிரியாதே !!! - காதல் தொடர்கதை.




மாலை நேரம்.பெங்களூர் நகரத்திற்கே உரித்தான குளிர் கொஞ்சம்
கொஞ்சமாக பரவ தொடங்கிய நேரம்.சிவாஜி நகர் பேருந்து நிலையத்தில் சூர்யா அவளுக்காகவும்,அவளின் பதிலுக்காகவும் காத்துக்கொண்டு இருந்தான்.அவள் என்றால் மீனா .24 வயது நிரம்பிய அழகான பெண்.செயின்ட் மார்க்ஸ் ரோட்டில் அமைந்துள்ள கார்ட் ஆப் ரிங்க்ஸ் கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள ஒரு நிதிஆலோசக நிறுவனத்திற்கு சொந்தக்காரி.

இவ்வளவு வசதி படைத்த இவளுக்கும், பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டு இருக்கும் சூர்யாவிற்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்?சோ சிம்பிள்..காதல் தான்.

நேற்று அலுவகலத்தில் யாருமில்லா வேளையில் மீனாவிடம் தன் காதலை சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியே வந்து விட்டான் சூர்யா.கிங்க்ஸ் சிகரட்டை பற்ற வைக்குமபோது கைகள் நடுங்குவதை அவனால் நன்றாக உணர முடிந்தது.சிக்னல் செய்தும் நிற்காமல் போன ஆட்டோக்காரன் மீது எரிச்சல் வந்தது.

சிறிது தூரம் நடந்தால் நண்பன் பிரேம்குமார் வேலை செய்யும் அலுவலகம் வந்துவிடும்.அவனிடம் விஷயத்தை சொன்னால் கொஞ்சம் ஆறுதலாக இருக்குமென நினைத்து கைப்பேசியில் அழைத்தான்.

பிரேம் நீ எப்ப வீட்டுக்கு கிளம்பப்போர?

வேலை முடிந்தது மச்சான்..ஜஸ்ட் சிஸ்டம் ஆப் பண்ணிட்டு வர வேண்டியது தான்.ஆமா நீ எங்கடா இருக்க சூர்யா?

உன் ஆபிசுக்கு வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கேன்டா.

ஓகே.ஐ வில் பீ தேர் இன் பைவ் மினிட்ஸ்.இன்னிக்கு என்ன திட்டம் போட்டு இருக்க?சரக்கு ரூம்லே அடிக்கலாமா இல்ல பாருக்கு போலாமா?

டேய். பர்ஸ்ட் வெளிய வந்து தொலைடா.உங்கிட்ட முக்கியமான மேட்டர் சொல்லணும்.

ஓகே ஓகே.வந்துட்டேன் மச்சான்.

பிரேம் வரும்வரை சாலையில் போகும் வாகனங்களை பார்க்கலாம் என திரும்ப அங்கே மீனா தன் காரில் போவது தெரிந்தது.மற்ற நாட்களை விட இன்று சற்று வேகமாக போவதுபோல் தோன்றியது சூர்யாவுக்கு.லேசாக பயமும் வந்தது.



0 comments: