December 2, 2009

துணை வேண்டி...(உரையாடல் கவிதைப் போட்டிக்காக)


துணை வேண்டி....


கடல் கடந்து உறவுகள் பிரிந்து
ஓர் அறையில் ஒற்றையில் காலம் போகையில்...

வந்த புதிதில் வந்த
பறவை,பூனை,பல்லி,எறும்பு,ஈ
இவைகள் யாவும்
இப்போது என்னுடன் இல்லை;

என்னை போல கடன் சுமை
காரணமாகி கடல் கடந்து போனதுவோ?
காதல் கொண்டு பின்பு கைவிட்ட
காதலி நினைவாய் ஏக்கமாய் திரிகிறதோ?

எங்கேனும் பார்த்தால்
என் வீட்டுப்பக்கம்
வர சொல்லுங்கள்
சற்று நேரம் ஆறுதலாக பேச....

55 comments:

Anonymous said...

தனிமை மாதிரி கொடுமை ஒண்ணுமில்லை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
(பூனைக்குட்டி படம் அழகு)

Vidhoosh said...

:( வெறுமையை அப்படியே பிரதிபலிக்கிரதுங்க, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு குன்றா.வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்கா!

Vidhoosh said...
This comment has been removed by the author.
அன்புடன் அருணா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

தமிழ்ப்பறவை said...

நல்லா இருக்கு,,, வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ஹேமா said...

குன்றன்,வாழ்த்துக்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த ஏக்கங்கள் தீராதது.தாய் மண்ணின் பெருமை அது.

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பா...
தன் மன உணர்வை இயற்கையின் மீது ஏற்றி்ச் சொல்லிய விதம் அழகு..

முனைவர்.இரா.குணசீலன் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா..

Vijay said...

அனைத்தும் அருமை, கவிதை நடை வார்த்தை கோப்பு, பூனை படம்...........
வெற்றி பெற வாழ்த்துக்கள்

தியாவின் பேனா said...

அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html

amantony74 said...

அருமை !!!!!!!!

பிரியமுடன்...வசந்த் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

tamiluthayam said...

காதல், கடமை எல்லாமே இளமையை கொல்லும் வியாதி.வெற்றி பெற வாழ்த்துக்கள்

நிலாமதி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள். தனிமையின் கொடுமை புரிகிறது ....நேரத்தை பட்டியல் போட்டு பயன் படுத்துங்கள். உங்கள் தளத்தில் நினைப்பதை எழுதுங்கள் மனது ஆறுதலாகி விடும். பாரம் குறையும்.

Satheesh said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா!!!

புனிதா||Punitha said...

பறவை..பூனை... சரி அது என்ன பல்லி...எறும்பு...ஈயுடனும் உரையாடல்.. பொதுவாக இவைகளை கண்டு ஒதுக்குவோரே அதிகமில்லையா நான் உள்பட :-))

அன்புடன் மலிக்கா said...

வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழமையே.

Srivats said...

Totally empathise with u regarding the lonelyness in abroad! :( lovely poem. Here through Aruna blog and totally loved ur writing

பூங்குன்றன்.வே said...

@ சின்ன அம்மிணி

//தனிமை மாதிரி கொடுமை ஒண்ணுமில்லை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.(பூனைக்குட்டி படம் அழகு)//

வாழ்த்திற்கு நன்றி தோழி.

தனிமையை மறக்கவே இப்படி கிறுக்கி கொண்டு இருக்கிறேன்.

பூனை என்றால் உங்களுக்கு பிடிக்குமோ? இல்ல படம் மட்டும் பிடித்திருக்கா?

பூங்குன்றன்.வே said...

@ Vidhoosh

//:( வெறுமையை அப்படியே பிரதிபலிக்கிரதுங்க, வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

வெறுமை போக்கவே தமிழ் துணை இருக்கு வித்யா.

வாழ்த்திற்கு நன்றி தோழி.

பூங்குன்றன்.வே said...

@ பா.ராஜாராம்

//நல்லா இருக்கு குன்றா.வெற்றி பெற வாழ்த்துக்கள் மக்கா!//

மிக்க நன்றி சித்தப்பு.உங்கள் ஆசிர்வாதத்தால் பரிசை வெல்வேன்.
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் அருணா

//வெற்றி பெற வாழ்த்துக்கள்!//

வாழ்த்திற்கு நன்றி தோழி.

பூங்குன்றன்.வே said...

@ தமிழ்ப்பறவை

//நல்லா இருக்கு,,, வெற்றி பெற வாழ்த்துக்கள்...//

வாழ்த்திற்கு நன்றி தமிழ் !!

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//குன்றன்,வாழ்த்துக்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த ஏக்கங்கள் தீராதது.தாய் மண்ணின் பெருமை அது//

நீங்கள் சொன்னது போல இந்த ஏக்கம் நெஞ்சுக்கூட்டுக்குள் நீங்காது இருப்பவை.

புரிதலுக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஹேமா.

பூங்குன்றன்.வே said...

@ முனைவர்.இரா.குணசீலன்

//கவிதை நன்றாகவுள்ளது நண்பா...
தன் மன உணர்வை இயற்கையின் மீது ஏற்றி்ச் சொல்லிய விதம் அழகு..//

இயற்கை நமக்கு எல்லாவற்றையும் கொடுத்தது போல எனக்கு கவிதையும் கொடுத்திருக்கிறது.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா...//

மிக்க நன்றி நண்பா!!

பூங்குன்றன்.வே said...

@ Vijay

//அனைத்தும் அருமை, கவிதை நடை வார்த்தை கோப்பு, பூனை படம்...
வெற்றி பெற வாழ்த்துக்கள்//

பூனை நம்ம வி.பி.யோடது வினய் :)
மிக்க நன்றி நண்பா!!

பூங்குன்றன்.வே said...

@ தியாவின் பேனா

//அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html//

விருது கொடுத்து பெருமைப்படுத்தியமைக்கு நன்றி நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ amantony74

//அருமை !!!!!!!!//

தேங்க்ஸ் அண்ணா.

பூங்குன்றன்.வே said...

@ பிரியமுடன்...வசந்த்

//வெற்றி பெற வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா!

பூங்குன்றன்.வே said...

@ tamiluthayam

//காதல், கடமை எல்லாமே இளமையை கொல்லும் வியாதி.வெற்றி பெற வாழ்த்துக்கள்//

நீங்கள் சொல்வது உண்மை தான் தமிழமுதம்.வாழ்த்திற்கு நன்றி !!!

பூங்குன்றன்.வே said...

@ நிலாமதி

//வெற்றி பெற வாழ்த்துக்கள். தனிமையின் கொடுமை புரிகிறது ....நேரத்தை பட்டியல் போட்டு பயன் படுத்துங்கள். உங்கள் தளத்தில் நினைப்பதை எழுதுங்கள் மனது ஆறுதலாகி விடும். பாரம் குறையும்.//

நிலா...உங்கள் வருகைக்கு நன்றி.தனிமையில் இருப்பது உண்மைதான்.ஆனால் எந்த சோகமோ,வருத்தமோ இல்லை தோழி குடும்பத்தை விட்டு இருப்பதை தவிர..

நேரத்தை பட்டியல் போடக்கூட நேரம் இல்லை.பணிசுமை காரணம்.இந்த கவிதை ஒரு பார்வையாளனாய் வலியை புரிந்து எழுதியது.

உங்கள் அன்பான அறிவுரைக்கும்,
அக்கறைக்கும் எப்படி நன்றி சொல்வது? மிக்க நன்றி அன்பு தோழி.

பூங்குன்றன்.வே said...

@ Satheesh

//வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா!//

மிக்க நன்றி நண்பா .

பூங்குன்றன்.வே said...

@ புனிதா

//பறவை..பூனை... சரி அது என்ன பல்லி...எறும்பு...ஈயுடனும் உரையாடல்.. பொதுவாக இவைகளை கண்டு ஒதுக்குவோரே அதிகமில்லையா நான் உள்பட :-))//

பல்லி...எறும்பு...ஈ உரையாடல்.. இல்ல..சும்மா..ஒரு கவிதைக்காக தோழி..

கருத்துக்கு மிக்க நன்றி!

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழமையே.//

வாழ்த்திற்கு நன்றி தோழி.

பூங்குன்றன்.வே said...

@ Srivats

//Totally empathise with u regarding the lonelyness in abroad! :( lovely poem. Here through Aruna blog and totally loved ur writing//

நீங்க என்னை ரொம்ப புகழறீங்க பாஸ்.இருந்தாலும் முதல் வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!!!

Vijay said...

பூனை நம்ம வி.பி.யோடது வினய் :)

இப்போ அவர சுத்தி வர்றதே அந்த பூனை தான் அதையும் ஏன் நண்பா இங்க கூட்டிட்டு வந்துட்ட,
பாவம் அவர ரூம் போட்டு அழ போறாரு. ஹி ஹி ஹி.

sakthi said...

தனித்து நின்று போராடும்
மறத் தமிழன் ஐயா நாம்..!
சிறிய கடல் கொள்ளுமா
நம் அன்பு வெள்ளத்தை..!
உன்னிடம் தனிமை இல்லை
இருப்பினும் பிழையும் இல்லை..!
வலிஇருக்கும் வாழ்வுதான்
இன்பமானது, இயல்பானது..!
அது இல்லா வாழ்வு - இனிமையானது
அண்ணல் அது நீரிலிவாவது..!

பூங்குன்றன்.வே said...

@ sakthi

//தனித்து நின்று போராடும்
மறத் தமிழன் ஐயா நாம்..!
சிறிய கடல் கொள்ளுமா
நம் அன்பு வெள்ளத்தை..!
உன்னிடம் தனிமை இல்லை
இருப்பினும் பிழையும் இல்லை..!
வலிஇருக்கும் வாழ்வுதான்
இன்பமானது, இயல்பானது..!
அது இல்லா வாழ்வு - இனிமையானது
அண்ணல் அது நீரிலிவாவது..!//

ஆஹா.பின்னூட்டத்தில் கவிதையா..ரொம்ப நல்ல எழுதுறீங்க நண்பா.
'உரையாடல் கவிதை போட்டிக்கு' கவிதை அனுப்புங்க.நன்றி சதீஷ் !!!

S.A. நவாஸுதீன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே

பூங்குன்றன்.வே said...

@ S.A. நவாஸுதீன்

//வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே//

மிக்க நன்றி நண்பா.

thenammailakshmanan said...

தனிமை முகத்தில் அறைகிறது பூங்குன்றன்


வெற்றி பெற வாழ்த்துக்கள்

பூங்குன்றன்.வே said...

@ thenammailakshmanan

//தனிமை முகத்தில் அறைகிறது பூங்குன்றன்

வெற்றி பெற வாழ்த்துக்கள்//


ஆம் நண்பா.தனிமை கொடுமை அன்றோ ???உங்கள் கருத்துக்கு நன்றியும்,மகிழ்ச்சியும்..

முகமூடியணிந்த பேனா!! said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

ரொம்ப நல்ல எழுதுறீங்க நண்பா.

பூங்குன்றன்.வே said...

@முகமூடியணிந்த பேனா!!

//வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
ரொம்ப நல்ல எழுதுறீங்க நண்பா.//

உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பா.

angel said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

பூங்குன்றன்.வே said...

@ angel

// வெற்றி பெற வாழ்த்துக்கள் //

தேங்க்ஸ் ஏஞ்சல்!!!

அவனி அரவிந்தன் said...

தனிமையின் சூனியம் சில வேளைகளில் நம்மை முழுங்கித் தின்று விடும். மிகச் சில கணங்களில் அது தரும் ஒரே பரிசு இது போன்ற கவிதைகள். வெற்றி பெற வாழ்த்துக்கள் !

பூங்குன்றன்.வே said...

@ அவனி அரவிந்தன்

//தனிமையின் சூனியம் சில வேளைகளில் நம்மை முழுங்கித் தின்று விடும். மிகச் சில கணங்களில் அது தரும் ஒரே பரிசு இது போன்ற கவிதைகள். வெற்றி பெற வாழ்த்துக்கள்//

ஆம் நண்பா.கவிதையும்,தமிழும் இல்லையெனில் தனிமை கொடுமைதான். மிக்க நன்றி!!!

தியாவின் பேனா said...

வாழ்த்துக்கள்

ஜெஸ்வந்தி said...

தனிமையின் ஏக்கத்தில் பிறந்த அழகான கவிதை.
வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே.

Anonymous said...

வாழ்த்துக்கள்

திகழ் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

நாவிஷ் செந்தில்குமார் said...

வெற்றி பெற வாழ்த்துகள்!

இராவணன் said...

அழகு