November 6, 2009

என்று மாறும் இந்த நிலை?


என்று மாறும் இந்த நிலை?

கனவாக போனதோ நம்
தனி ஈழம்?
நனவாக ஆனதோ
நரிகளின் ஆட்டம்?

என் தமிழ் இனமே சாகிறது 
பட்டினியால். 
நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்
பேசிக்கொண்டே இருக்கிறோம்;

சண்டை வேண்டாம்,தனிநாடு வேண்டாம்
பணம் வேண்டாம்,பதவிகள் வேண்டாம்;
மேடை பேச்சுக்கள் நம் சகோதரர்களுக்கு
ஒரு வேலை சோறு போடாது;

பாலைவனத்தில் பஞ்சுமேடை
அமைத்தாலும்
பசியாற உணவு வேண்டாமா?
சுடுகாடே என்றாலும்
சுதந்திர காற்றை எம்மக்கள்
சுவாசிக்கவேண்டாமா?

என்று இந்த நிலை மாறும்?
'இருந்திருந்தால் நன்றாக இருக்குமே' என்கிற
இறைவன் 'இருக்கிறேன் ' என்று
காட்சிகொடுத்து எம்மக்களை
காப்பாற்றுவாரா???

2 comments:

Unknown said...

பூங்குன்றா உனக்குள் இத்தனை வேட்கைகளா? மிகவும் அருமையான கவிதை. பாராட்டுக்கள். உங்களது கற்பனை மற்றும் தமிழ் வளம் பெருக வாழ்த்துக்கள்.

jeevi said...

கழகத்தின் ஒரு தலைவன் இறந்ததற்கு , ஆயிரம் ஈழ தமிழ் உயிர்கள் பலி !
இந்த சதியில் பயனடைந்த அரசியல் நரிகளுக்கு செல்வாக்கு !! சொகுசான வாழ்கை !
வெறும் battery வாங்கி தந்த , ஈழ வீரன் ,பேரறிவாள னுக்கு தூக்கு தண்டனை !!
எங்கே நீதி !!!