November 29, 2009

பண பற்றாக்குறை-காரணம் என்ன?

பண பற்றாக்குறை  !!! 

நான்

1000  ரூபாய் சம்பளம் வாங்கும்போது  பற்றாக்குறை  தான்
5000  ரூபாய் சம்பளம் வாங்கும்போது  பற்றாக்குறை  தான்;
10000 ரூபாய் சம்பளம் வாங்கும்போது  பற்றாக்குறை  தான்;
இப்போது 100000 (1லட்சம்) ரூபாய் சம்பளம் வாங்குகிறேன்.
ஆனாலும் அதே பற்றாக்குறை. என்ன நடக்குது இங்கே???

அப்போது தான் எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது ,

பற்றாக்குறை சம்பளத்தில் இல்லை.நமது மனதில்தான் திட்டமிடல் இல்லாமை என்கிற பற்றாக்குறை இருக்கிறது என்று.


 
போதுமென்ற  மனம் இல்லாத  பற்றாக்குறை:நான் சென்னை வரும் முன்பு, தூத்துக்குடி பேருந்தில் பயணம் செய்யும் போது, ஒரு சென்னை நண்பரிடம் கேட்டேன்,சென்னையில் விலைவாசி அதிகம் என்று கூறுகிறார்கள், நான் சென்னையில் குடியேற நினைக்கிறேன்..சமாளிக்க முடியுமா என்றுஅவர் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது.சென்னையில் ரூ1000 வைத்து குடும்பம் நடத்த முடியும்..ரூ100000(1 லட்சம்) வைத்தும் குடும்பம் நடத்த முடியும்.அந்த திட்டமிடல் உன் கையில் தான் இருக்கிறது என்றார். 

அவருடைய வார்த்தைகளை அப்போது கேட்டிருந்தால் இன்று நான் எவ்வளவோ சேமித்திருக்கமுடியும். என்ன செய்வது...சென்னை வந்த பிறகு உற்றார்,நண்பர்கள் எல்லாம் தவறாக நினைப்பார்களோ என்று வாடகை வீட்டையும் அல்லவா அழகு படுத்தினேன்.வீட்டுக்கு வரவங்க நம்மை மதிக்க வேண்டும் என்று தேவை இல்லாவிட்டாலும் ஆடம்பர பொருட்களை  வாங்கி குவித்தேன்.பணம் எல்லாம் இப்படி தேவையற்ற விஷயங்களில் முடங்கி போனது.மருத்துவ அவசரம் என்றாலோ, குழந்தைகளின் கல்விக்கான கட்டணம் கட்டவேண்டி வந்தாலோ திணற வேண்டியிருக்கிறது.இதையே நான் வங்கியில் சேமித்து இருந்தால் அவசர தேவைக்கு தடுமாற்றம் இன்றி சமாளித்திருக்க முடியும். 


" நம் வீட்டு வாசலை மட்டும் பார்க்கவேண்டும் ,
பக்கத்து வீட்டு  வாசலை பார்த்து போட்டியிட்டால்,
                     மேலே சொன்ன பற்றாக்குறை  நம் வாழ்வில் வரும்


எளிமையான வாழ்க்கையில் தான் உண்மையான மனமகிழ்ச்சி இருக்கிறது என்பதை தாமதமாக உணர்வது மனிதனின் குறைபாடு.பணத்தை சேமித்த பின்பு வாங்கி மகிழலாம் என்கிற பிடிவாதம்,கடன் வாங்கியாவது இதை வாங்கியே தீருவேன் என்கிற பிடிவாதத்தை விட சால சிறந்தது.


மனிதன் விசித்திரமானவன்.எப்போதுமே 'அடுத்தவன் நம்மை எப்படி நினைப்பானோ' என்றுதான் யோசிப்பானே தவிர தன் சுய திருப்தியை பற்றியோ அல்லது தன் வருமானத்திற்கு உகந்த வாழ்க்கை பற்றியோ 
சிந்திக்க மாட்டான்.

அங்குதான் பண தடுமாற்றத்தின் முதல் சிக்கல் தொடங்குகிறது. இதை நாம் முதலிலேயே சரி செய்துவிட்டால் நம் வாழ்க்கையில் என்றுமே கொண்டாட்டம்தான் !!!கருத்து :               மரியா அண்ணா.
எழுத்து வடிவம் : அடியேன் நானே.

(இந்த பதிவை படித்து கல் எறிந்தால் மரியா அண்ணனுக்கு, பூங்கொத்து கிடைத்தால் எனக்கு!!!)

17 comments:

ஸ்வர்ணரேக்கா said...

உண்மை தான்...
சென்னையில் ரூ1000 வைத்து குடும்பம் நடத்த முடியும்..ரூ100000(1 லட்சம்) வைத்தும் குடும்பம் நடத்த முடியும்.

சென்னையில் ஆயிரம் ரூபாயில் வாழ்ந்த அனுபவம் எனக்கு உண்டு...
ஆனால் அடுத்த மேட்டர் தெரியல..

ஆமாம்.. நிறை இருந்தால் பின்னூட்டம் போடவேண்டாமா..? ஓட்டு மட்டும் ஓகே வா..?

பூங்குன்றன்.வே said...

@ ஸ்வர்ணரேக்கா

உங்களின் முதல் வருகை என்னை உற்சாகபடுத்துகிறது தோழி..என்னுடைய முழு இடுகையை படிக்க இதை சொடுக்கவும்.
http://poongundran2010.blogspot.com/

நன்றி..

நாஞ்சில் பிரதாப் said...

கரெக்ட்டா சொன்னீங்க தலைவா... இதே கதிதான் எனக்கும்...
சரியா திட்டமபோட்டு செலவழிச்சா மட்டுமே... பணத்தேவையின்போது சமாளிக்க முடியும்...
இதை நூறு சதவிதம் நான் வழிமொழிகிறேன்... அனுபவம்ல....

நாஞ்சில் பிரதாப் said...
This comment has been removed by the author.
tamiluthayam said...

மனிதனுக்கான பால பாடமே சிக்கனம் தான். சிக்கனம் குறித்தான விழிப்புணர்வை பெற்றோர்களே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் முதல் முதலாக சம்பாதிக்க துவங்கும் போது சிக்கனம் குறித்து பேச வேண்டும். ஆனால் பெற்றோர்கள் இந்த வயசில் அனுபவிக்கிறது பிள்ளைகளை கெடுத்து விடுகிறார்கள்.

Vijay said...

மரியா அண்ணன் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் என்பதை இங்கே உறுதி படுத்தி இருக்கிறார். ஆனால் அவருடைய கருத்துக்களை அவரது வழிலேயே சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், நான் சொல்ல வர்றது உனக்கு புரியுதா நண்பா?

மரியா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

நல்ல பதிவு,
எதையுமே அளவோடு செய்தால் வளமோடு வாழலாம்..

கற்களுக்கும் பூக்களாக உங்கள் இருவருக்குமே..

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//கரெக்ட்டா சொன்னீங்க தலைவா... இதே கதிதான் எனக்கும்...சரியா
திட்டமபோட்டு செலவழிச்சா மட்டுமே... பணத்தேவையின்போது சமாளிக்க முடியும்...இதை நூறு சதவிதம் நான் வழிமொழிகிறேன்... அனுபவம்ல...//

நானும் செலவை குறைக்க எவ்வளவோ முயற்சி செய்கிறேன் நண்பா.நல்லதுதானே !!!

பூங்குன்றன்.வே said...

@ tamiluthayam

//மனிதனுக்கான பால பாடமே சிக்கனம் தான். சிக்கனம் குறித்தான விழிப்புணர்வை பெற்றோர்களே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் முதல் முதலாக சம்பாதிக்க துவங்கும் போது சிக்கனம் குறித்து பேச வேண்டும். ஆனால் பெற்றோர்கள் இந்த வயசில் அனுபவிக்கிறது பிள்ளைகளை கெடுத்து விடுகிறார்கள்//

நாம் வசதியாக இருந்தாலும் சிறுவயதில் இருந்தே பிள்ளைகளுக்கு சிக்கனத்தை கற்றுகொடுத்தால் நல்லதுதான்.மிக நல்ல யோசனை தல.

பூங்குன்றன்.வே said...

@ Vijay

//அவருடைய கருத்துக்களை அவரது வழிலேயே சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்//

ஓ.ஓ.அவருடைய வழியில் சொன்னால் கட்டுரை முடியாது நண்பா.நம்ம அண்ணனுக்கு எதை பண்ணாலும் பெரிசா பண்ணனும்ன்னு நினைக்கிற ஆளு.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//நல்ல பதிவு,
எதையுமே அளவோடு செய்தால் வளமோடு வாழலாம்..
கற்களுக்கும் பூக்களாக உங்கள் இருவருக்குமே..//

ரொம்ப நன்றி தோழி.நீங்கள் தந்த பூக்களை இருவரும் பிரித்துக்கொள்கிறோம் :)

நாணல் said...

நல்ல பதிவு..

Srivats said...

very good thoughts well worded

//பற்றாக்குறை சம்பளத்தில் இல்லை.நமது மனதில்தான் திட்டமிடல் இல்லாமை என்கிற பற்றாக்குறை இருக்கிறது என்று//

Correct but rising prices are not in our hand too, what ever was luxury those days have become necessary and the gap between the two has become very narrow , dont u think ?

பூங்குன்றன்.வே said...

@ நாணல்

//நல்ல பதிவு..//

உங்களின் தொடர் ஊக்கம் மிகுந்த உற்சாகத்தை தருகிறது தோழி.
இன்னும் பல நல்ல பதிவுகளை எழுத முயல்கிறேன்.நன்றி !!!

பூங்குன்றன்.வே said...

@ Srivats

//very good thoughts well worded//

நன்றி !!!

//Correct but rising prices are not in our hand too, what ever was luxury those days have become necessary and the gap between the two has become very narrow , dont u think ?//

I partially do agree with you my friend.But even though the necessary item prices are increased,still the lower people are managing it.but some middle class people still don't know how to manage this kind of problem.so i said 'PLANNING' is must for everyone.

I appreciate your honest comments.I like it.

அன்புடன் அருணா said...

/தூத்துக்குடி பேருந்தில் பயணம் செய்யும் போது, /
தூத்துக்குடியா எங்கூருங்கோ!
சிலநேரம் தெரிஞ்சே வாரியிறைப்போமே!!!!

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் அருணா

//தூத்துக்குடியா எங்கூருங்கோ!
சிலநேரம் தெரிஞ்சே வாரியிறைப்போமே!!!!//

நான் வடதமிழ் நாட்டை சேர்ந்தவன்.வேலூர் மாவட்டம்.தூத்துக்குடி தென் தமிழ்நாடு.இந்த கட்டுரையை எழுத்தாக்கம் செய்தது மட்டுமே என் வேலை தோழி,மற்றபடி
கருத்து ஆக்கமும் மரியா அண்ணாவுடையது. கருத்துக்கு மிக்க நன்றி பிரின்ஸ்.