December 5, 2009

உன் பேர் சொல்ல ஆசைதான்.....

குவைத் ஏர்போர்ட் வாசல் வரை வந்த சதீஷ்,என்னை டிராப் செய்ததும் கிளம்ப தயாரானான்.

சூர்யா..ஊருக்கு போயிட்டு எல்லோரையும் கேட்டதா சொல்லு.நான் வரேண்டா.

டிராப் பண்ணதுக்கு தேங்க்ஸ் மச்சி.நீயும் ஊரை சுத்தாம வேலைய மட்டும் பாரு.நான் கிளம்பறேன்.. ப்ளைட்டுக்கு நேரம் ஆச்சு.

ஏர்போர்ட்டில் நுழைந்து, சென்னை செல்லும் விமானத்தில் லக்கேஜ் அனைத்தையும் போட்டு,போர்டிங் பாஸ் வாங்கி,செக்-இன் முடிந்து வெய்டிங் ஹாலுக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்து மணி பார்க்கையில் ஏழு காட்டியது.விமானம் புறப்பட இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது.இரவு நேரம் என்பதால் குளிர் கொஞ்சம் அதிகமாக இருந்தது. ஏ.ஸியை கொஞ்சம் குறைத்து வைத்து இருக்கலாமோ?

ஆப்பிளில் பிடித்த பாடல்கள் என் காதுகளை ரீங்காரமிட்டு கொண்டு இருந்தது.கண்களை மூடி என் முன்னாள் காதலியை பற்றிய நினைவுகளை அசை போட்டுக்கொண்டே இருக்கையில் மொபைல் ஒலித்தது.ஒய்ப் பெயர் திரையில் காட்டியது.

என்னம்மா...

எங்க இருக்கீங்க? ப்ளைட் ஏறிட்டீங்களா?

இல்லம்மா.இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.பாப்பா என்ன பண்றா?

அவ தூங்கிட்டா.சரிங்க..பார்த்து வாங்க.ப்ளைட் உள்ள போன உடன் ஒரு போன் பண்ணிடுங்க..சரியா?

சரிப்பா பண்றேன்.வைச்சுடுறேன்.

போனை வைக்கவும் ப்ளைட்க்கு வரசொல்லி அழைப்பு வர வரிசையில் நிற்க ஆரம்பித்தேன்.

ஹே..ஹே..சூர்யா..ஓடாத..ஓடினா...அம்மா அடிப்பேன்.

தன் பேராக இருக்கிறதே என்று ஒரு கணம் ஆச்சர்யமாக திரும்பி பார்க்கையில் அங்கே மீனா ஒரு சிறு பையனை பிடிக்க ஓடிக்கொண்டு இருந்தாள்.

ஒரு நிமிடம் உலகை மறந்து சூர்யா நின்று விட்டான்.இவளை வாழ்நாளில் சந்திக்கவே கூடாது என்றல்லவா இருந்தோம்.இவள் இங்கே எப்படி?

அங்கே..இங்கே ஓடிய அந்த சூர்யா என்னிடம் வந்து என் கைகளை பற்றி இழுத்தான். என்னுடைய பேன்ட் பாக்கெட்டில் அவன் கைகளை நுழைக்க முயன்று கொண்டு இருக்கும்போதே மூச்சிரைக்க ஓடி வந்த மீனா 'ஸாரி ஸார்' என்றபடியே என்னை பார்த்து திடுக்கிட்டாள். சூர்யா..நீங்க..இங்க..எப்படி இருக்கீங்க?







நல்லாயிருக்கேன். நீ….நீங்க எப்படி இருக்கீங்க?

ஹ்ம்ம்.நல்லாயிருக்கேன்.அவன் என் பையன் தான்.பேரு சூர்யா.

ஓ..ஐ ஸீ. நைஸ் நேம்.

நானும் இதே ப்ளைட்ல தான் வரேன்.

அப்படியா..சந்தோஷம்..நான் கிளம்புறேன் மீனா.

சரி சூர்யா.இருவரும் பேசுவதையே பார்த்துகொண்டு இருந்த குட்டி சூர்யாவை கைப்பிடித்து
கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

விமானத்துக்குள் நுழைந்து சீட் பார்த்து உட்கார்ந்தான் சூர்யா.மனசு என்னவோ கொஞ்சம் பாரமாக இருப்பதுபோல் தோன்றவே கண்களை மூடினான்.

மனைவி போன் பண்ண சொன்னது ஞாபகம் வர,மொபைலை எடுத்து மனைவி பெயரை அழுத்தினான்.

டாடி..எங்க இருக்கீங்க? எப்ப வருவீங்க?

ஹை செல்ல பொண்ணு..நான் வீட்டுக்கு தான் வந்துகிட்டே இருக்கேன்.அம்மா எங்கே ?

அம்மா..டாடி கூப்பிடுறாங்க.வாங்க.

என்னங்க.ப்ளைட் ஏறிட்டீங்களா? நம்ம மீனா ரொம்ப சமத்துங்க.இப்பலாம் போன் வந்தா அவளே ஆன் பண்ணி பேசுறா.சரி.நீங்க சீக்கிரமா வாங்க.நான் வைச்சுடுறேன்.

போனை வைத்துவிட்டு ப்ளைட்டில் மீனாவை தேடினேன்...அவள் தன் பையன் சூர்யாவுடன்
ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள்.

ப்ளைட்டிலும் ஏஸி காற்று கொஞ்சம் அதிகமாக இருந்தது.

35 comments:

Balaji-Paari said...

நல்லா இருக்கு. :)

கா.பழனியப்பன் said...

கதையின் முடிவில் கண்கள் சில நேரம் குளமாகியது உண்மை

எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் கடவுச்சொல்லாக தனது காதலியின் பெயரையே பயன்படுத்துகிறான்.
இது கண்டிப்பாக அவன் மனைவிக்குத் தெரியாது.

நன்றி

Unknown said...

உண்மை கதையை எல்லாம் சொல்லக் கூடாது , புரிஞ்சுதா !!!!
உண்மையில் உண்மை கதை நல்ல இருக்கு !!! வாழ்த்துக்கள் !!!

Prathap Kumar S. said...

சூர்யா பேரை பூங்குன்றன்னு நினைச்சுக்கலாமா...? அதான் உங்க நண்பர் மரியாவே சொல்லிட்டாரே... இனியும் ஏன் மறைக்கனும்..

அவரவர் வாழ்வில் ஆயிரம்...ஆயிரம் மாற்றங்கள்...

சும்மா... பாடனும்னு தோனுச்சு...:-)

கமலேஷ் said...

அடடா கதை சும்மா கலக்குது தலை...
நிறைய இடத்தில வாசகனே
யோசித்து புரிந்து கொள்ள வைக்கும்
யுக்தி மிகவும் அருமை...

வாழ்த்துக்கள்...

பிரபாகர் said...

நல்லா பீலிங்-ஆ எழுயிருக்கீங்க நண்பா... அருமையா இருக்கு. சிறுகதைன்னு போட்டிருந்தாலும் சொந்த அனுபவம் மாதிரி தெரியுது? ஹி....ஹி...

பிரபாகர்.

vasu balaji said...

நடையோட்டம் அருமை பூங்குன்றன். நல்லா இருக்கு:)

Chitra said...

கதையா நினைவு அலையா? பெருமூச்சுடன் எத்தனை உள்ளங்கள் இப்படி இருக்கிறதோ?

பூங்குன்றன்.வே said...

@ Balaji-Paari

//நல்லா இருக்கு. :)//

ரொம்ப நன்றி பாரி..முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் பாரி நீங்க தானா :)

பூங்குன்றன்.வே said...

@ தோழி

// :-) //

அதேதாங்க :)

பூங்குன்றன்.வே said...

@ கா.பழனியப்பன்

//கதையின் முடிவில் கண்கள் சில நேரம் குளமாகியது உண்மை//

இளகிய மனசுங்க உங்களுக்கு !!!

//எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன் கடவுச்சொல்லாக தனது காதலியின் பெயரையே பயன்படுத்துகிறான்.
இது கண்டிப்பாக அவன் மனைவிக்குத் தெரியாது.//

தெரியவே கூடாதுங்க.தெரிஞ்சா வீட்ல அப்புறம் நாம டரியல் தான் :)

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//உண்மை கதையை எல்லாம் சொல்லக் கூடாது , புரிஞ்சுதா !!!!
உண்மையில் உண்மை கதை நல்ல இருக்கு !!! வாழ்த்துக்கள் !!!//

உங்களை கமெண்ட்ஸ் மட்டும் தானே போடா சொன்னேன்..இப்படி போட்டு கொடுத்து விட்டுடீங்களே?
இப்ப பாருங்க..நம்ம நண்பர் பிரதாப் உண்மைன்னு (உண்மைதான்) நினைச்சுட்டார்.

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//சூர்யா பேரை பூங்குன்றன்னு நினைச்சுக்கலாமா...? அதான் உங்க நண்பர் மரியாவே சொல்லிட்டாரே... இனியும் ஏன் மறைக்கனும்.. //

நீங்க வேற பாஸ்.அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை(நிறைய இருக்கு)

//அவரவர் வாழ்வில் ஆயிரம்...ஆயிரம் மாற்றங்கள்...

சும்மா... பாடனும்னு தோனுச்சு...:-)//

இந்த பாட்டு உங்களுக்குதானே பாடுனீங்க? :)

பூங்குன்றன்.வே said...

@ Imayavaramban

//அண்பு நண்பரே -

உங்கள் படைப்பு அருமை! சரியான காதலர் போலவே!
நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.
அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி

என் வலைப்பூ முகவரி: http://eluthuvathukarthick.wordpress.com///

கருத்துக்கு மிக்க நன்றி நண்பனே .
இதோ உங்கள் தளத்துக்கு வரேன்..

பூங்குன்றன்.வே said...

@ கமலேஷ்

//அடடா கதை சும்மா கலக்குது தலை...நிறைய இடத்தில வாசகனே
யோசித்து புரிந்து கொள்ள வைக்கும்
யுக்தி மிகவும் அருமை...

வாழ்த்துக்கள்...//

ரொம்ப நன்றி நண்பா.உங்களின் அன்பு மடலும் கிடைக்க பெற்றேன்.விரைவில் பதிலிடுகிறேன்.

பூங்குன்றன்.வே said...

@ பிரபாகர்

//நல்லா பீலிங்-ஆ எழுயிருக்கீங்க நண்பா... அருமையா இருக்கு. சிறுகதைன்னு போட்டிருந்தாலும் சொந்த அனுபவம் மாதிரி தெரியுது? ஹி....ஹி...//

சொந்த அனுபவம் இல்லைன்னு நான் பொய் சொல்ல மாட்டேன் நண்பா.ஹி ஹி

பூங்குன்றன்.வே said...

@ வானம்பாடிகள்

//நடையோட்டம் அருமை பூங்குன்றன். நல்லா இருக்கு:) //


நன்றி பாஸ்.உங்களின் முதல் வருகையே உற்சாகமாக இருக்கிறது.

பூங்குன்றன்.வே said...

@ Chitra

//கதையா நினைவு அலையா? பெருமூச்சுடன் எத்தனை உள்ளங்கள் இப்படி இருக்கிறதோ?//

நிறைய உள்ளங்கள் இப்படிதான் திரியுதுங்கோ என்னைமாதிரி :)
என் மனைவிக்கு மட்டும் யாரும் இந்த லிங்க் அனுப்பிடாதிங்க :)
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மேடம்.

சிங்கக்குட்டி said...

அருமையான பதிவு, நிறைய பேர் வாழ்கையில் இது நடந்துள்ளது.

பூங்குன்றன்.வே said...

@ சிங்கக்குட்டி

//அருமையான பதிவு, நிறைய பேர் வாழ்கையில் இது நடந்துள்ளது.//

ஆம் நண்பா.இது பல பேருக்கு நடந்த விஷயம் தான் என்னைத்தவிர..(ச்சும்மா..ஹி ஹி)
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி !!

tamiluthayam said...

நேற்று வாழ்ந்த வாழ்க்கையில் மிச்சமாக மிஞ்சி இருப்பது, நினைவாக தேங்கி இருப்பது அந்த பெயர்கள்

அன்புடன் அருணா said...

கதைதானே!

பூங்குன்றன்.வே said...

@ tamiluthayam

//நேற்று வாழ்ந்த வாழ்க்கையில் மிச்சமாக மிஞ்சி இருப்பது, நினைவாக தேங்கி இருப்பது அந்த பெயர்கள்//

ஆம் நண்பரே. உண்மைதான். சில பெயர்களை நம்மால் என்றைக்குமே மறக்க முடியாது.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் அருணா

//கதைதானே!//

ஹி..ஹி..

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு நடை குன்றா.கலக்குங்க.

பூங்குன்றன்.வே said...

@ பா.ராஜாராம்

//அருமையாய் இருக்கு நடை குன்றா.கலக்குங்க.//

ரொம்ப நன்றி அய்யா !!! சென்னை போனதும் உங்க புத்தகம் வாங்க ஆவலா உள்ளேன்.

அன்புடன் மலிக்கா said...

கலக்குறீங்க. நிச்சியமாக நான் இந்த லிங்கை அங்கே அனுப்பமாட்டேன் கவலைவேண்டாம்...

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//கலக்குறீங்க. நிச்சியமாக நான் இந்த லிங்கை அங்கே அனுப்ப மாட்டேன் கவலைவேண்டாம்...//

கருத்துக்கும்,லிங்க் அனுப்பவில்லை என்று சொன்னதற்கும் ரொம்ப நன்றி தோழி :)

Unknown said...

இந்த கதையை பார்த்தா சிறு கதை மாதிரி தெரியலியே,
பழைய தொடர் கதையோட 2 ம பாகம் மாதிரி தோணுது நண்பா.
என்ன ஒரு சின்ன வித்தியாசம், அது ஒங்களுக்கே தெரியும்
நான் வேற சொல்லனுமா?

பூங்குன்றன்.வே said...

@ Vijay

//இந்த கதையை பார்த்தா சிறு கதை மாதிரி தெரியலியே,
பழைய தொடர் கதையோட 2 ம பாகம் மாதிரி தோணுது நண்பா.
என்ன ஒரு சின்ன வித்தியாசம், அது ஒங்களுக்கே தெரியும்
நான் வேற சொல்லனுமா?//

வினய்..இன்னும் பத்து நாள்ல திரும்ப பாஸ்ராவில் இருந்து பாத்தாத்துக்கு வருவ இல்ல.

அப்ப வைச்சுக்கிறேன் உன்னை--நற.நற :):)

Unknown said...

உண்மைய சொன்னா கோபம் வரும்னு சொன்னாங்க, அது உண்மையா?

பூங்குன்றன்.வே said...

@ Vijay

//உண்மைய சொன்னா கோபம் வரும்னு சொன்னாங்க, அது உண்மையா?//

ச்சே..ச்சே..உண்மைய சொன்ன கோபம் வரத்து.
ஆனா நீ பாக்தாத் வருவது வருவது உண்மைதானே !!!
இருடி இரு...நீ இங்க வராமயா போய்டுவ!!!!!!!

aazhimazhai said...

Romba nalla iruku kathir !!!! matha visayathai chatil solren !!!

பூங்குன்றன்.வே said...

@ aazhimazhai

//Romba nalla iruku kathir !!!! matha visayathai chatil solren!!//

ரொம்ப நன்றி பப்பு.

நீ சாட்டில் என்ன கேட்க போறேன்னு இப்பவே கொஞ்சம் பயமா இருக்குடி :)

நாணல் said...

:)))