December 18, 2009

ஒரு காதல் கதையும், சம்மந்தமில்லா ஒரு கவிதையும்.....





அது ஒரு அக்டோபர் மாதம்,வருடம் 1998.

கிராமத்தில் பிறந்த அந்த இளைஞன்,பட்டயப்படிப்பு முடித்ததும் வேலை தேடி அப்பாவின் மாணவர் ஒருவரின் வற்புறுத்தலினபேரில் பெங்களூர் நோக்கி பயணமாகிறான். கனவுகளும்,ஆசைகளும் நிறைந்த பயணம் அது.எதையோ சாதிக்க போகிறோம் என்கிற திமிர் அவன் கண்களில் தெரிந்தது.பெங்களூர் சென்ட்ரலில் வந்து இறங்கி தந்தை கொடுத்த முகவரியில் அந்த அண்ணா இருந்தார்.

என்ன சூர்யா?(இது நிச்சயம் இந்த கதையின் நாயகன் பெயராகத்தான் இருக்கும்). ஸ்டேஷன்ல இறங்கி ஒரு போன் பண்ணியிருந்தா நானே வந்து கூப்பிட்டு வந்திருப்பேனே?இல்லைண்ணா, பரவாயில்ல, உங்களுக்கு எதுக்கு சிரமமும் என்று நானே வந்துட்டேன்.

இன்னும் நீ மாறவில்லையா சூர்யா?மத்தவங்களுக்கு அதிகம் சிரமம் கொடுக்கமாட்டேன் என்னும் அந்த நினைப்பு சின்ன வயசில உங்கிட்ட பார்த்தது. இன்னும் நீ மாறல போல. சரி,கைகால் அலம்பிட்டு வா,சாப்பிடலாம் என்றார்.அவன் எப்பவும் இப்படித்தான். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பது கூச்ச சுபாவம் என்றாலும் சூர்யாவை பொறுத்தவரை அது மற்றவர்களுக்கு நாம் தரும் சிரமம் என்று நினைக்கிற ரகம். தேவையானதை வீட்டில் கூட வாய்திறந்து கேட்ட மாட்டான்,நண்பர்கள் தவிர பிறரிடம் ரொம்ப சாதுவாக இருப்பான்;அதிகம் பேசமால் எதையோ எழுதிக்கொண்டு, படித்துக் கொண்டு இருக்கும் ரகம்;தம்பிகள் எதாச்சும் வலிய வந்து செல்ல சண்டை போட்டாலும் சிரித்துக்கொண்டே அவர்களின் வெற்றியின் மீது அதிக கவனம் வைக்கும் ரகம்;நீங்கள் எவனுக்கு எதிர்மாறாக இருந்தால் அது சூர்யாவின் தவறல்ல.ஒருவேளை நீங்கள் அவனைப்போலவே இருக்கும் ரகம் என்றாலும் அது சூர்யாவிற்கு மகிழ்ச்சி அல்ல.

நாளைக்கு என்கூட ஆபிஸ் வா.அங்கே எனக்கு தெரிந்த சில கஸ்டமர்ஸ் வருவாங்க, அவர்களிடம் எற்கனவே உன் வேலைய பத்தி பேசிட்டேன்,நாளைக்கு வரும் போது பேசலாம்ன்னு சொன்னாங்க.சரியா சூர்யா?
சரிண்ணா.நாளைக்கு நானும் உங்ககூட வரேன்..

மறுநாள் காலை அவருடன் அலுவலகம் சென்றதும் அங்கே இருந்தவர்களை அறிமுகப் படுத்தினார் ராமன்.கடைசியில் அவளிடம் வந்தார், மீனா, இவர் என்னோட தம்பி சூர்யா. ஊர்ல இருந்து வேலைக்காக வந்திருக்கான்..சூர்யா..இவங்க பெயர் மீனா, தமிழ்நாடு தான் பூர்விகம், நல்லா தமிழ் பேசுவாங்க.. சரி.. நீங்க பேசிட்டு இருங்க,நான் போய் என் வேலையை கவனிக்கிறேன்..

ஹாய் சூர்யா,எந்த ஊர் நீங்க?என்ன வேலை தேடுறீங்க?என்ன படிச்சிருக்கீங்க? உட்காருங்க,ஏன் நின்னுட்டே இருக்கீங்க?

படபடவென பேசிக்கொண்டே இருந்த மீனாவை எந்த பதிலும் பேசாமல் பார்த்துக்கொண்டே  இருந்தான் சூர்யா.

தலைவா,உங்க கிட்டதான் பேசிட்டிருக்கேன்,என்ன ஆச்சு?

ஹாங்..ஒண்ணுமில்லை மேடம்..

மேடமா, ஹல்லோ, கண்டிப்பா நான் உங்களைவிட சின்னபொண்ணுதான்னு நினைக்கிறேன், அப்படியே ஒருவேளை ஒண்ணு,ரெண்டு வயசு கூட என்றாலும் இந்த ஊர்ல மேடம்ன்னு கூப்பிட்டா...உதைப்பாங்க..தெரியுமா?

ஓஹோ..தெரியாதே மேடம்...சாரி...மீனா..

ஓகே..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..நான் இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்ககிட்ட பேசுறேன்..நீங்க இந்த பேப்பரை பாருங்க.

'டைம்ஸ் ஆப இந்தியா'வை என் கைகளில் திணித்த அவளை ஒரு முறை பார்த்துவிட்டு சேரில் அமர்ந்து செய்திகளில் மூழ்கிவிட்டேன்...

ஹல்லோ...சூர்யா..இங்க வாங்க..இந்த மெய்ல பாருங்க..ஒரு லூசுப்பையன் ஆங்கிலத்தை எப்படி கொலை பண்ணி அனுப்பிருக்கான்?

சரிங்க..

என்ன சிரிக்கமாட்டீங்களா? இல்ல..பயமா இருக்கா? நான் ஒண்ணும் உங்களை கடிச்சுட மாட்டேன்..

இல்லங்க..அப்படில்ல..நான் அண்ணனை பார்த்துட்டு வரேன்..

ஓகே சூர்யா..

அப்பாடா தப்பித்தோம் என்று ராமன் அறைக்கு சென்றான்.

ஸாரி சூர்யா..கொஞ்சம் பிஸிப்பா..எதாச்சும் வேணுமா?மீனா என்ன சொல்றாங்க?

எதுவும் வேணாம்...ஜஸ்ட் நீங்க பண்ற வேலைய பார்க்கலாம்ன்னு இங்க வந்தேன்..தப்பா?

ச்சே.. ச்சே.. நீ உட்காரு.. இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒரு விஷயமா நான் சொன்ன கஸ்டமர்ஸ் வந்துடுவாங்க... ரெசூமும், சர்ட்டிபிகேட்ஸ் கைல இருக்குல்ல..

ரெடியா இருக்கு அண்ணே.

ஒரு மணி நேரம் கழித்து வந்த கஸ்டமர்ஸ் அவங்க வேலையை முடித்ததும், அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

அரை மணி நேர நேர்முக தேர்வு மாதிரி முடிந்ததும்..நீங்க எப்ப ஜாயின் பண்றீங்க மிஸ்டர்.சூர்யா?

நாளைக்கே ஸார்.

குட்.இதான் நம்ம கம்பெனி அட்ரஸ்.நாளைக்கு ஷார்ப் ஒன்பது மணிக்கு வந்துடுங்க.

தேங்க்ஸ் ஸார்.

அந்த கம்பனியில் சேர்ந்து இரண்டு மாதத்தில்,மீனாவிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு இருபது கால்ஸ் வந்திருக்கும்..நிறைய பேசினோம்..இல்லை..என்னை பேச வைத்தாள்.

மொத்த பெங்களூரையும் சுற்றி காட்டினாள்;குறிப்பாக கப்பன் பார்க்,பன் வேர்ல்ட்(Fun world) இரு இடங்களும் எங்களை நன்கு அறிந்தவை; கப்பன் பார்க்கில் உள்ள பூக்கள் வாரம் இருமுறை பூக்காது. காரணம் மீனா அந்த நேரத்தில் என்னுடன் பூங்காவில் இருப்பாள். பேச்சு.. பேச்சு.. எப்போதும் எதைப்பற்றியாவது பேசிக்கொண்ட இருக்கும் வகை அவள்; கேட்டுக்கொண்டே ரசிக்கும் ரகம் நான்;இப்படியே தொடர்ந்து மூன்று மாதங்கள் கடந்தது.

ஒரு சாயங்கால சனிக்கிழமை,ஹெப்பாலா சாலை ஓரம் நடந்துக்கொண்டு வழக்கம் போல பேசிக்கொண்டே வந்தவள் பேச்சையும், நடையையும் நிறுத்தி என் கண்களை சில வினாடிகள் பார்த்தாள்.

என்ன மீனா?என்ன ஆச்சு?

ஹ்ம்ம்..ஒண்ணுமில்லை....பார்க்கனும்ன்னு தோணிச்சு.

என்ன திடீர்னு இப்படி?

ஏன் நான் பாக்கக்கூடதா சூர்யா?

ச்சே..ச்சே..அப்படில்ல.என்னவோ நீ பண்றது புதுசா இருந்துச்சு..அதான் கேட்டேன்.
.......
.......
என்ன மீனா..பேசாம வர?

ஒண்ணுமில்லை..

சில அடிகள் நடந்ததும் அவன் கைகளை மீனா கோர்த்ததும் சூர்யா அதிர்ந்து விரல்களை பிரிக்க முயல்கையில் மீனா இன்னும் அழுத்தம் காட்டி கெட்டியாக கோர்த்துக்கொண்டாள்.

என்ன மீனா இது?

சூர்யா..என்னால வாய்திறந்து சொல்ல பயமா இருக்குப்பா.உன் கைப்பிடித்த காரணம் இப்போ புரியும்ன்னு நினைக்கிறேன் என்றவள் மறுபடியும் என் கண்களை பார்த்தாள்.அந்த பார்வை ஆயிரம் கதைகளை சொல்லியது..

புரியுது மீனா.இது எப்போலேர்ந்து?

தெரியல..ஆனா ரெண்டு மூணு நாளாவே உங்கிட்ட எப்படியாவது சொல்லனும்ன்னு ட்ரை பண்ணேன்.பட் வார்த்தை வரல.உனக்கு என்னை பிடிச்சிருக்கா சூர்யா?

என்ன சொல்றதுன்னு தெரியல மீனா.

நீ எதுவும் சொல்லவேணாம்டா.இப்படியே ஆயுசு முழுக்க உன் கைய பிடித்துக்கொண்டே இருந்தா போதும் சூர்யா..

ஹ்ம்ம்..சரி..மீனா.

(இதற்குமேல் கதையை எப்படி முடிப்பது என்று நன்றாக தெரியும்; உண்மையில் இந்த காதல் ஜோடிகள் காலமாற்றத்தால்,சூழ்நிலையால் பிரிந்துவிட்டனர்.தற்போது மீனாவுக்கும்,சூர்யாவுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை;என்றேனும் ஒருநாள் பார்க்கையில் இருவரும் பேசலாம்,அழலாம் அல்லது பார்த்தும் பேச பிடிக்காமல் தங்கள் பாதை நோக்கி போகலாம்; இது உண்மைக்கதையும்,  இருவரும் தங்களுக்குள் அவரவர் காதலெனும் உயிர்ப்பூவை இன்றளவும் பாதுகாத்துக்கொண்டே வரும் உண்மையும்;)

ஆனால் இந்த சூர்யா,மீனா காதலை பிரிக்க இந்த கதையை எழுதிய நான் விரும்ப வில்லை..என்னைப்பொருத்தவரை சூர்யாவின் கைகளை கோர்த்த மீனா இன்னும் பிடித்துக்கொண்டே இருக்கிறாள்.சூர்யாவும் மீனாவின் கையை அழுத்தமாக இன்னும் அழுத்தமாக பிடித்துக்கொண்டே இருக்கிறான்.. பாவம்,அப்படியே அவர்கள் காதலித்துக்கொண்டே இருக்கட்டுமே...

கவிதை எழுதாம மனசும்,கையும் சும்மா இருக்கமாட்டேங்குங்க.

நினைப்பின் ஊடே
நீண்ட தூர அலைகடலில்
நீந்தி கரையேற துடிக்கிறேன்;

மங்கிய நிலவொளியில்
தொலைத்த உன் இதயத்தை
கிடைக்காதென தெரிந்தும் தேடுகிறேன்;

பனிவிழும் பூங்காவில்
கால்தடம் தேடி காதலித்த
கணங்களை காண காத்திருக்கிறேன்;

வரமாட்டாய் என தெரிந்தும்
மனசு கேட்காமல்
வீறிட்டு அழுகிறேன்;

48 comments:

Anonymous said...

இந்த மேடம் வார்த்தை கொஞ்சம் அலர்ஜிதான். நம்ம அப்பா வயசு இருக்கவங்க கூட மேடம்னா நொந்து நூலாப்போவொம்.
மத்தபடி காதலர்களை பிரிக்காத நல்ல மனம் வாழ்க :)

நாடோடி இலக்கியன் said...

//ஒருவேளை நீங்கள் அவனைப்போலவே இருக்கும் ரகம் என்றாலும் அது சூர்யாவிற்கு மகிழ்ச்சி அல்ல.//
கப்பன் பார்க்கில் உள்ள பூக்கள் வாரம் இருமுறை பூக்காது. காரணம் மீனா அந்த நேரத்தில் என்னுடன் பூங்காவில் இருப்பாள்//

ரசித்தேன் நண்பா. நல்ல நடையில் பயணித்தது கதை.

இன்னும் கூட செதுக்கியிருக்கலாம்.
//

Chitra said...

எதையோ சாதிக்க போகிறோம் என்கிற திமிர் அவன் கண்களில் தெரிந்தது............ஆரம்பமே தூள், நண்பா. கதையை போலவும் அந்த கவிதையை போலவும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல நடை..ரசித்தேன்

Prathap Kumar S. said...

//கப்பன் பார்க்கில் உள்ள பூக்கள் வாரம் இருமுறை பூக்காது. காரணம் மீனா அந்த நேரத்தில் என்னுடன் பூங்காவில் இருப்பாள்.//

சே... சூப்பர் நண்பா..... நல்ல கதை...ஒரே மூச்சில் படித்தேன்...

எனக்கு எல்லாம் புரிஞசுப்போபோசுங்கோ....:-)

Unknown said...

என்ன நண்பா பழைய தொடர்கதையோட சுருக்கமா?
நல்லா இருக்கு....................

க.பாலாசி said...

இயல்பான நடை கதையில் .... கவிதையும்....

'பரிவை' சே.குமார் said...

நல்ல கதை..!

எனக்கும் எல்லாம் புரிஞசுபோ.........!

அண்ணாமலையான் said...

ம்ம்ம் நடக்கட்டும்

நாணல் said...

நெகிழ்ச்சியான முடிவு...நிச்சயம் இப்படி பல காதல்கள் வீறிட்டு அழுது கொண்டிருக்கும்....

பிரபாகர் said...

உங்களின் மென்மையான மனது தெரிகிறது உங்களின் எழுத்துக்களின். இன்னும் கொஞ்சம் சிரத்தை வெகு அழகாய் மாற்றியிருக்கும்.

பிரபாகர்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நாளுக்கு நாள் எழுத்தில் மெருகு கூடிக்கொண்டே போகிறது.
வாழ்த்துக்கள் பூங்குன்றன்

சிவாஜி சங்கர் said...

நல்லாருக்கு.. இன்னும் எதிர்பார்கிறேன் இன்னும் நல்லா..

thiyaa said...

நல்ல நடை
அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லது...

அப்டியே காதலச்சுட்டே இருக்கட்டும்ன்னு விட்டுட்டீங்க...

நல்லா எழுதுறீங்க பூங்குன்றன்...!

அன்புடன் அருணா said...

நல்லா எழுதறீங்க!

தமிழ் உதயம் said...

வரமாட்டாய் என தெரிந்தும்
மனசு கேட்காமல்
வீறிட்டு அழுகிறேன்; இது தான் காதல். வரமாட்டாய் என்று தெரிந்தும் ஏதோ ஒரு நப்பாசையில் காத்திருக்கிறேன்

vasu balaji said...

அழகான நடை. மென்மையான உணர்வுகளின் வெளிப்பாடு. கவிதை இன்னும் அழகு சேர்க்கிறது. பாராட்டுகள்.

Priya said...

கவிதை சூப்பர்... ஏதோ ஒரு வலி தெரியுது!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நீங்க கவிதையில் புலின்னு பாத்தா ...கதையிலெ வேறயா ...

கலக்குங்க கலக்குங்க பாஸ் ...

நல்லாருக்கு

சீமான்கனி said...

கப்பன் பார்க்கில் உள்ள பூக்கள் வாரம் இருமுறை பூக்காது. காரணம் மீனா அந்த நேரத்தில் என்னுடன் பூங்காவில் இருப்பாள்//

ரசித்த வரிகள்...கவிதையும் சுப்பர்...
அருமை...வாழ்த்துகள்...

துபாய் ராஜா said...

//ஆனால் இந்த சூர்யா,மீனா காதலை பிரிக்க இந்த கதையை எழுதிய நான் விரும்ப வில்லை../

உங்க நேர்மை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு(ப்)பூ.... :))

//நினைப்பின் ஊடே
நீண்ட தூர அலைகடலில்
நீந்தி கரையேற துடிக்கிறேன்;

மங்கிய நிலவொளியில்
தொலைத்த உன் இதயத்தை
கிடைக்காதென தெரிந்தும் தேடுகிறேன்;

பனிவிழும் பூங்காவில்
கால்தடம் தேடி காதலித்த
கணங்களை காண காத்திருக்கிறேன்;

வரமாட்டாய் என தெரிந்தும்
மனசு கேட்காமல்
வீறிட்டு அழுகிறேன்;//

கவிதையும் அருமை. வாழ்த்துக்கள்.

ஹேமா said...

காதல் கதையும் ,கவிதையும்
- கவிதையும் ,காதல் கதையும் அருமையாயிருக்கு.

Paleo God said...

பூ (டும் டும் ) பூஊஊஊஊஊ எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் சாமி....(டும் டும் )
:))) கலக்கிட்டீங்க ...

திருவாரூர் சரவணா said...

பூவே உனக்காக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை பார்க்கும்போது எதையோ பறிகொடுத்த மாதிரி ஆயிடுமேன்னு திரையரங்க ஆப்ரேட்டரா இருந்தும் பல தடவை பார்க்காம தவிர்த்திருக்கேன். காதல் படமும் அப்படித்தான். பிரியுற காதல் யாருடையதா இருந்தாலும் வழியை எல்லாரும் உணரமுடியும் நண்பா. நல்லா எழுதியிருக்கீங்க.

திருவாரூர் சரவணா said...

இன்னொரு உதவி வேணும் நண்பா. நான் எழுதுற பக்கத்துல followers கேஜெட் எப்படி சேர்க்குறது? விளக்கம் பிளீஸ்...

க‌ரிச‌ல்கார‌ன் said...

//சூர்யா..என்னால வாய்திறந்து சொல்ல பயமா இருக்குப்பா.உன் கைப்பிடித்த காரணம் இப்போ புரியும்ன்னு நினைக்கிறேன் என்றவள் மறுபடியும் என் கண்களை பார்த்தாள்.அந்த பார்வை ஆயிரம் கதைகளை சொல்லியது..//

எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும் சாமி....(டும் டும் )

கலையரசன் said...

நன்று.. நன்..று..

swizram said...

கதை நல்லா இருக்கு தல...!!
உங்க நல்ல மனசு தெரியுது அவங்களா பிரிக்கக்கூடாதுன்னு நினைக்குரதுல...
பட் கதைய இன்னும் நல்லா டைப் செஞ்சுருக்கலாம்!!!

கவிதை வழக்கம் போல கலக்கிட்டீங்க!!
வாழ்த்துக்கள்!!

S.A. நவாஸுதீன் said...

நல்ல நடை பூங்குன்றன். காதலர்களை பிரிக்க விரும்பாத நல்ல மனம் வாழ்க. இதே மாதிரி சிறுகதைகளை முயற்சி செய்யுங்கள். நன்றாக வருகிறது உங்களுக்கு.

கவிதையும் சூப்பரா இருக்கு.

S.A. நவாஸுதீன் said...

மார்கழி மாதத்தில்
ஏதோ ஒரு இரயில் நிலையத்தில்
சூடான தேனிருக்காக நானும்
கையில் சிறு குழந்தையுடன்
பாலுக்காக நீயும்
ஆவின் பால்பூத்தில்
என்றேனும் சந்திக்க
நேரிடலாம்.
அப்போதாவது சொல்லிக்கொடு
மறக்காமல் மறக்கும் வித்தையை

பா.ராஜாராம் said...

ரொம்ப
பிடிச்சிருக்கு...

ஒரு விருது இருக்கு மக்கா.நம் தளத்தில்.

நேரம் வாய்க்கிறபோது ஒரு நடை..

செ.சரவணக்குமார் said...

அன்பின் பூங்குன்றன், நல்ல நடையில் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

V.N.Thangamani said...

யார் அந்த சூர்யா என்று தெரிகிறது.
அருமை.
அந்த இனிய உணர்வுகள்.
என்றும் இதமாய் இதயத்தை தடவட்டும்
நன்றி நண்பரே.
வாழ்க வளமுடன்.

லெமூரியன்... said...

பட்டாசா இருக்குங்க கதை....!
படிக்கும் போதே அதில் வர்ற இடங்கள்லாம் மனசுல வந்து போனதுனால
ரொம்ப ஒன்றி போக முடிந்தது கதையுடன்...!

Unknown said...

கதை அருமைங்க... நெஜமாவே..,

அன்புடன் மலிக்கா said...

நிஜங்கள் மனதைவிட்டு அகன்று நிழலாக தொடர்வது நிஜம்..

மிகவும் அருமையான கதை நவாஸண்ணா சொல்வதுபோல் சிறுகதை எழுத முயற்சியுங்கள்..

ரோஸ்விக் said...

சூப்பரா எழுதீருக்கீங்க சூர்யா! ஓ மன்னிக்கணும். சூர்யா கதையின் நாயகனோ?? :-))

கதை அருமை. நாம் கதையின் நாயகனாக இருந்தால் நல்ல அனுபவம். இதுபோன்ற உணர்வின் நிமிடங்கள் நம்மை எப்போதும் உயிரோடு வைத்திருக்கும்.

மயூ மனோ (Mayoo Mano) said...

ரசித்தேன்.... :)

சுசி said...

ரெண்டுமே நல்லா இருக்கு.

பிரிவின் வலி.. :(

பூங்குன்றன்.வே said...

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சின்ன அம்மணி

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
நாடோடி இலக்கியன்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சித்ரா

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
T.V.Radhakrishnan

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நாஞ்சில் பிரதாப்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி விஜய்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி க.பாலாசி

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சே.குமார்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணாமலையான்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நாணல்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பிரபாகர்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நாய்க்குட்டி மனசு

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சிவாஜி சங்கர்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தியா

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வசந்த்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அருணா

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தமிழ்உதயம்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வானம்பாடிகள்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ப்ரியா

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சீமாங்கனி

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி துபாய் ராஜா

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஹேமா

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பலாபட்டறை

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சரண்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கரிசல்காரன்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கலையரசன்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரசிக்கும் சீமாட்டி

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி S.A. நவாஸுதீன்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பா.ராஜாராம்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி செ.சரவணக்குமார்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வி.என்.தங்கமணி

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி லெமூரியன்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பேநா மூடி

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அன்புடன் மலிக்கா

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரோஸ்விக்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நதியானவள்

@ வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சுசி

gayathri said...

anna kalakkuga kavithaum, kathaium super

gayathri said...

வரமாட்டாய் என தெரிந்தும்
மனசு கேட்காமல்
வீறிட்டு அழுகிறேன்;

itha padikkum pothu naan ezuthuna oru kavithia neyapagam varuthuga anna
நீ வர மாட்டாய் என் தெரிந்தும்

உன் வருக்கைக்காக காத்திருக்கும்

என் இமைகளின் தேடலை
என்ன செய்ய?

பூங்குன்றன்.வே said...

@ வருகைக்கும்,உங்களின் அழகான கவிதைக்கும் நன்றி காயத்ரி !!!

aazhimazhai said...

வரமாட்டாய் என தெரிந்தும்
மனசு கேட்காமல்
வீறிட்டு அழுகிறேன்;

பல சமயம் நம்மோட நிலைமை அப்படிதான் இருக்கு கதிர் !!! இல்லைன்னு திட்டவட்டமா தெரிஞ்சாலும் அதை மனசு உணர மறுப்பதுதான் காரணம் !!! நிகழ்வுகள் நம் நினைவுகளுக்கு எதிர்மறையா இருக்கே கதிர் .... ரொம்ப நல்லா இருக்கு நீங்க கதையை முடிக்காத விதமும் சேர்த்துதான் !!! நகல்ல மாற்ற முடிஞ்சதை நிஜத்துல மாற்றமுடிந்தால் ??????????????????/........................................

பூங்குன்றன்.வே said...

@ aazhimazhai

//வரமாட்டாய் என தெரிந்தும்
மனசு கேட்காமல்
வீறிட்டு அழுகிறேன்;
பல சமயம் நம்மோட நிலைமை அப்படிதான் இருக்கு கதிர் !!! இல்லைன்னு திட்டவட்டமா தெரிஞ்சாலும் அதை மனசு உணர மறுப்பதுதான் காரணம் !!! நிகழ்வுகள் நம் நினைவுகளுக்கு எதிர்மறையா இருக்கே கதிர் .... ரொம்ப நல்லா இருக்கு நீங்க கதையை முடிக்காத விதமும் சேர்த்துதான் !!! நகல்ல மாற்ற முடிஞ்சதை நிஜத்துல மாற்றமுடிந்தால் ?????????????????...//


நிழல் எப்பவும் நிஜமாக முடியாது; நிஜம் வேணும்ன்னா நிழலா மாறலாம்;அதுவும் வெயில் இருக்கும்போது மட்டும்;அதுமாதிரி சில நினைவுகள் நிழல் மாதிரி நம்மை பின்தொடர முடியும்; ஆனா நடைமுறை வாழ்க்கையில் நமக்கான ஒரு ஜீவன் வந்தபிறகு(நிஜம்) இந்த நிழல் மறையலாம்; இல்லை தொடரலாம்;ஆனா நிஜமாக முடியுமா என்பது அவரவர் சூழிநிலைய பொறுத்தது கல்யாணி!!!

Thenammai Lakshmanan said...

நல்லா இருக்கு பூங்குன்றன்

ஆமா இது யாரோட கதை பூங்குன்றன்

பூங்குன்றன்.வே said...

@ thenammailakshmanan

//நல்லா இருக்கு பூங்குன்றன்-ஆமா இது யாரோட கதை பூங்குன்றன்//

கண்டிப்பா இது என் கதை தான்;அதாவது நான் எழுதிய கதை என்று mattum சொல்ல வந்தேங்க..