November 13, 2009

பித்தனா? காதல் சித்தனா?









வளைகரங்களால் நீ வாசலில் தானே கோலமிடுகிறாய்
ஏன் என் மனதும் வளைந்து வளைந்து வர்ணமாகிறது ?

அலைகடலில் நீ உன் கால்களை தானே நனைக்கிறாய்
அதற்கேன் என் மனது கிடந்து அலைபாய்கிறது ?

தொலைதூர ஊருக்கு நீ விடுமுறையில் தானே செல்கிறாய்
இதயம் ஏன் பொம்மையை தொலைத்த குழந்தையாகிறது ?

சிலைபோல தானே அழகாக இருக்கிறாய்
ஆனால் உன்னை மீண்டும் உதட்டால் செதுக்கிட ஏன் தோன்றுகிறது?

நடமாடும் தேர்போல தானே இருக்கிறாய்
மனமோ நிலை இன்றி உன்னை தேடி தேடி அலைகிறது ?

விடை தேடி அலையும்போது தெரு பித்தன் சொன்னான்.
முட்டாளே இதற்கு பெயர்தான் காதல் என்று.

மிக்க நன்றி பித்தனே.நீயேன் இப்படி ஆனாய் என்றேன்.
"உனக்கு நான் மூத்தவன்.நீயும் என் வழியில் தொடர்கிறாய் என்றான்."

8 comments:

புலவன் புலிகேசி said...

//மிக்க நன்றி பித்தனே.நீயேன் இப்படி ஆனாய் என்றேன்.
"உனக்கு நான் மூத்தவன்.நீயும் என் வழியில் தொடர்கிறாய் என்றான்." //

காதலர்களில் பெரும்பாலோர் பித்தர்களாகத்தான் இருக்கிறார்கள். வாக்கியங்களின் அணிவகுப்பு அருமை.

Unknown said...

நண்பா இந்த கவிதை காதலைதேடியா இல்லை காதலியை தேடியா?

பித்தன் வழி செல்கிறாயா அல்லது சித்தன் வழி செல்கிறாயா?

வெறும் குன்றனாக செல்கிறாயா அல்லது பூக்களை சுமந்து செல்லும் பூங்குன்றனாக செல்கிறாயா?

வார்த்தைகள் அருமை.

அன்புடன் மலிக்கா said...

நான் கேட்கவந்த அத்தனையும் நண்பர் விஜய் கேட்டுவிட்டார், தோழனே, பதில் என்ன?

கவிதை கவியாய் முன்னேறுகிறது
வாழ்த்துக்கள்..

Prathap Kumar S. said...

//தொலைதூர ஊருக்கு நீ விடுமுறையில் தானே செல்கிறாய்
இதயம் ஏன் பொம்மையை தொலைத்த குழந்தையாகிறது ?//

தலைவா சான்ஸே இல்ல... எங்க காலை கொஞ்சம் காட்டுங்க..

பூங்குன்றன்.வே said...

@ புலவன் புலிகேசி

காதலர்களில் பெரும்பாலோர் பித்தர்களாகத்தான் இருக்கிறார்கள். வாக்கியங்களின் அணிவகுப்பு அருமை.

உண்மை தான் தோழரே.பித்தர்களுக்கு வேறு பெயர் காதலர்கள்.உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.

பூங்குன்றன்.வே said...

@ விஜய்

//நண்பா இந்த கவிதை காதலைதேடியா இல்லை காதலியை தேடியா?

பித்தன் வழி செல்கிறாயா அல்லது சித்தன் வழி செல்கிறாயா?

வெறும் குன்றனாக செல்கிறாயா அல்லது பூக்களை சுமந்து செல்லும் பூங்குன்றனாக செல்கிறாயா?

வார்த்தைகள் அருமை//

நான் எதை தேடியும் தானாக செல்வதில்லை நண்பா.வழியில் வருவது எல்லாம் வாழ்க்கை ஆவது இல்லை பலருக்கு.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//கவிதை கவியாய் முன்னேறுகிறது
வாழ்த்துக்கள்//

உங்கள் கருத்துக்கு நன்றி.உங்களுக்கு சொல்ல வேண்டியதை நண்பர் விஜயின் பதில் சொல்லியிருக்கிறேன்.

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//தலைவா சான்ஸே இல்ல... எங்க காலை கொஞ்சம் காட்டுங்க//

என்ன செய்வது நண்பரே.நிறைய தமிழ் படங்களை பார்த்து மனசு ரொம்ப கெட்டு போச்சு.பீலிங்க்ஸ்..ஸாரி...
வரிகள் அதுவா வருது..