November 15, 2009


காதல் வழி யாது?

சன்னமாய் கதவு வழி வந்த காதல்
சலிக்கும்வரை விளையாடியது என்னிடம்.
வேண்டாம் என்று ஒதுக்காமல்
வேண்டுமென்றே சேர்ந்தே நானும் விளையாடினேன்;

சித்தாந்தம்,வேதாந்தம்,கடவுள்,மதம்
சிறிதளவும் வேறுபாடு காட்டாமல்
சிரிக்க சிரிக்க மனம்
சிறைப்பட்டு கிடந்தது அதன் காதலில்;

வாழ்க்கை சூழலில் வேகமாய் போகையில்
வர்ண வானவில்போல காதலும்;
ஒருநிமிடம் நின்று ரசித்தபின்பு
ஓராயிரம் கடமைகள் மனக்கண்ணில்...

வானவில் மறைந்தாலும்
வர்ணம் மட்டும் இதயத்தில் வாசமாய்;
காதல் சுகம்தான் என்றாலும்
சுமையாய் சுருங்கிப்போனது கானல்நீராய்;

இப்போது கதவு வழி வந்த காதல்
விடைசொல்லி வேர் அறுத்து
வேதனையில் உருக வைத்தபடி
சாளரம் வழியில் போகிறது வேறு பாதை நோக்கி !!!

12 comments:

Prathap Kumar S. said...

ச்ச்ச்ச்.சுசுசு... பீலிங்ஸ் ஆப் இன்டியா வந்துருச்சு... அழகான கவிதை... அழவைக்கும் கவிதை... நல்லாருக்குன்னு சொன்னேன்..

Unknown said...

காதல் சுகம் என்பது காதல் வலி,
அதை அனுபவித்தால்தான் தெரியும் !
கவிஜெர்கள் அனைவரும் பொய்
சொல்லுவதில் வல்லவர்கள் ,
அதனால் தான் வலியை, காதல் சுகமானது
என்று பொய்யாய் கவிதை சொல்லியும்,
படம் போட்டு காட்டி நம்மை ஏமாற வைத்துவிட்டார்கள்.

பல்லாண்டு காலமாக வழி வழியாக வந்த காதல்,
வழி மாறி, திசை மாறி "சாளரம் வழியில் போகிறது வேறு பாதை நோக்கி" !!!

அருமை !

அன்புடன் மலிக்கா said...

வானவில்லாய் காதலை நினைத்தது சரியா?
இல்லை அது வழிமாறிப்போனதாய் நினைத்தது சரியா?

காதல் புனிதமென்று படித்திருக்கிறேன்
அதை உணர்ந்தபோது நிஜமென்றும் நம்பியிருக்கிறேன்..

சிலருக்கு
காதல் வானத்தை போன்றது.

சிலருக்கு காதல்வானவில்லைபோன்றது.

வந்துபோகும் காதலெல்லாம் நிலைப்பதில்லை

நினைத்துவிட்டகாதல் அது மறபதில்லை..

உங்கள் கவிதை மிகவும் நன்று
தொடருங்கள்..... சோகத்தையல்ல!!

Unknown said...

காதல் என்பது ஆயிரம் பட்டாம் பூச்சிகள் மனதுக்குள் பறப்பது போன்ற உணர்வு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த பட்டாம் பூச்சிகள் பறப்பதற்கு முன் அதை உணர வேண்டும். பறந்த பின் ஒன்றும் செய்ய முடியாது.

அருமையான கவிதை
உணர்வுப்பூர்வமான கவிதை

aazhaimazhai said...

romba nalla iruku kathir !!! Iam lost for some time ....

பூங்குன்றன்.வே said...

@ நாஞ்சில் பிரதாப்

//ச்ச்ச்ச்.சுசுசு... பீலிங்ஸ் ஆப் இன்டியா வந்துருச்சு... அழகான கவிதை... அழவைக்கும் கவிதை... நல்லாருக்குன்னு சொன்னேன்//

நான் எழுதும் கவிதைகளை விட உங்க கமெண்ட்ஸ் எல்லாமே நல்லா இருக்கு பிரதாப்.உங்கள் தொடர் கருத்துக்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//காதல் சுகம் என்பது காதல் வலி,
அதை அனுபவித்தால்தான் தெரியும் !
கவிஜெர்கள் அனைவரும் பொய்
சொல்லுவதில் வல்லவர்கள் ,
அதனால் தான் வலியை, காதல் சுகமானது
என்று பொய்யாய் கவிதை சொல்லியும்,
படம் போட்டு காட்டி நம்மை ஏமாற வைத்துவிட்டார்கள்.

பல்லாண்டு காலமாக வழி வழியாக வந்த காதல்,
வழி மாறி, திசை மாறி "சாளரம் வழியில் போகிறது வேறு பாதை நோக்கி" !!!
அருமை !//

படம் போடலைன்னா இந்த காலத்துல பிழைக்க முடியாது போல..ரொம்ப நன்றி மரியா அண்ணா.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//காதல் புனிதமென்று படித்திருக்கிறேன்
அதை உணர்ந்தபோது நிஜமென்றும் நம்பியிருக்கிறேன்..//

காதல் உண்மை/புனிதம் தான் தோழி. சூழ்நிலை,குடும்பம்,சமூகம்,
கடமை இவற்றின் பேராலும் சிலசமயம் உண்மையான காதலும் போலியாய் தோன்றுவதுண்டு.ஆனாலும்
இன்னும் காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது,இருக்கும்!!

பூங்குன்றன்.வே said...

@ விஜய்

//அருமையான கவிதை
உணர்வுப்பூர்வமான கவிதை//

ரொம்ப நன்றி நண்பா.நீ தரும் தொடர் ஊக்கத்தில் என் பதிவு வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது சிறப்பாக.

பூங்குன்றன்.வே said...

@ ஆழிமழை

//romba nalla iruku kathir !!! Iam lost for some time//

என் அன்பு தோழி, கருத்து இருக்கட்டும்..நீ ஏன் இப்பொழுதெல்லாம் கவிதை எழுதுவதில்லை? உன் திறமை பற்றி நான் நன்கு அறிவேன்,தொடர்ந்து எழுது-இப்படி பணிவா சொல்லமாட்டேன்.ஒழுங்கா நீ பதிவை போடலன்னா வீட்டுக்கு ஆட்டோ வரும் :)

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..

பூங்குன்றன்.வே said...

@ முனைவர்.இரா.குணசீலன்

//கவிதை நன்றாகவுள்ளது நண்பரே//

மிக்க நன்றி குணா சார்.