November 27, 2009

தமிழன் மாவீரனை போற்றுவோம் !!!



மறைந்த தோழர்கள் புகழ் பாட
மாவீரர் தினம்;
தலைவன் உரைகேட்ட
தமிழ் இனமே தவம் கிடக்கும்;
இன்றோ எம் தலைவன் புகழ் பாட
இந்த தரணியே எழுச்சியாய்;

மக்களின் விடுதலைக்காக
மரணத்தை முத்தமிட்டாய்;
பல்லாண்டுகள் போராடி இன்றோ
புது புரட்சிக்கு வித்திட்டாய்;

மரணம் என்பது உன் உடலுக்கு மட்டுமே
மரணமில்லா உன் கனவுகளும்,லட்சியமும்
வென்று விரைவில் வெற்றி கிட்டுமே;
தாரணி எங்கும் தமிழர் புகழ் எட்டுமே!

இன்னுயிர் ஈந்த தோழர்களே
இனி தமிழர்க்கு விடியல்தான்;
இமைகளை சற்று மூடுங்கள்
இனி ஒரு விதிசெய்வோம் கூறுங்கள்;

12 comments:

ரமேஷ் ஞானபிரகாசம் said...

'விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல்

முனைவர் இரா.குணசீலன் said...

மரணத்தைக் கண்டு பயந்தவர் பிரபாகரன்..

மரணத்துக்குப் பின்னர் தன் மக்களுக்கு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தால்........

அன்புடன் மலிக்கா said...

ஈழத்தின் வேதனையை குறைய தமிழர்கள் ஒன்று படவேண்டும் என்பதின் தாங்களுடைய நோக்கம் சிறந்தது தோழமையே..

harikrishnan said...

என் நண்பனை ஒரு கல்லூரி கவிஞனாக மட்டுமே எனக்கு தெரியும்!!! ஆனால் இப்போதுதான் ஒரு உலகம் போற்றும் சமூக சிந்தனையலானாக பார்க்கிறேன் உன் சேவையும் வெற்றியும் தொடரட்டும் நண்பா - என்றும் உன் அரிகிருஷ்ணன் .

Unknown said...

நீ விதைக்க பட்டிருக்கிறாய் , அழிக்க படவில்லை
ஒரு விதை நூறு ஆகும்
நூறு ஆயிரம் ஆகும்
ஆயிரம் லட்சம் ஆகும்
லட்சம் கணக்கில் அடங்கா !!!

பிரபா என்ற பேரின் மூலம் இந்த பிரபஞ்சத்தின் , ஈடு இணையற்ற ஒப்பற்ற தமிழ் இன தலைவன் நீ !!!!

உம் கனவு நனவாக நாள் வெகு தூரத்தில் இல்லை . வாழ்க தமிழ் , வாழ்க தமிழன் !!!

ஹேமா said...

கை கோர்க்கிறீர்கள்.
மனநெகிழ்வோடு நன்றி.

பூங்குன்றன்.வே said...

@ ரமேஷ் ஞானபிரகாசம்

//'விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல்//

உண்மை தான் நண்பா.

பூங்குன்றன்.வே said...

@ முனைவர்.இரா.குணசீலன்

//மரணத்தைக் கண்டு பயந்தவர் பிரபாகரன்..
மரணத்துக்குப் பின்னர் தன் மக்களுக்கு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தால்........//

உண்மைதான் தோழா.அவர் எதிரிகளிடம் போராடுவதைவிட துரோகிகளை எதிர்த்துதான் அதிகம் போராட வேண்டியிருக்கிறது.

பூங்குன்றன்.வே said...

@ அன்புடன் மலிக்கா

//ஈழத்தின் வேதனையை குறைய தமிழர்கள் ஒன்று படவேண்டும் என்பதின் தாங்களுடைய நோக்கம் சிறந்தது தோழமையே..//


ஒன்றுபடுதலின் நோக்கம் உங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்கு புரிகிறது தோழி.ஆனால் ஒரு கும்பல் இதை புரிந்துகொள்ளாமல் 'எழுதினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா' என்றெல்லாம் சொல்வதற்காகவே ஒரு பதிவை போடுகிறது.கோவில் என்று இருந்தால் சற்று தொலைவில் இந்த கும்பலை போன்ற குப்பைகளும்
இருக்கும் என்பதால் அமைதியாக இருக்க உள்ளது.

பூங்குன்றன்.வே said...

@ harikrishnan

//என் நண்பனை ஒரு கல்லூரி கவிஞனாக மட்டுமே எனக்கு தெரியும்!!! ஆனால் இப்போதுதான் ஒரு உலகம் போற்றும் சமூக சிந்தனையலானாக பார்க்கிறேன் உன் சேவையும் வெற்றியும் தொடரட்டும் நண்பா - என்றும் உன் அரிகிருஷ்ணன்//

முதன் முதலாக என் ப்ளாக்குக்கு வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம்டா ஹரி.ஆனா என்னைபத்தி கொஞ்சம் ஓவர் பில்ட்அப் கொடுதுட்டியே மாப்ள!!!

பூங்குன்றன்.வே said...

@ MARIA

//நீ விதைக்க பட்டிருக்கிறாய் , அழிக்க படவில்லை.ஒரு விதை நூறு ஆகும்.நூறு ஆயிரம் ஆகும்
ஆயிரம் லட்சம் ஆகும் லட்சம் கணக்கில் அடங்கா !!!
பிரபா என்ற பேரின் மூலம் இந்த பிரபஞ்சத்தின் , ஈடு இணையற்ற ஒப்பற்ற தமிழ் இன தலைவன் நீ !!!!
உம் கனவு நனவாக நாள் வெகு தூரத்தில் இல்லை . வாழ்க தமிழ் , வாழ்க தமிழன் !!!//

உண்மைதான் அண்ணா. நிச்சயம் தமிழ் தலைவன் பிரபாவின் கனவு நனவாகும் நாள் வெகுதூரம் இல்லை.

பூங்குன்றன்.வே said...

@ ஹேமா

//கை கோர்க்கிறீர்கள்.
மனநெகிழ்வோடு நன்றி.//

கைகோர்ப்பதில் எனக்கும் மகிழ்ச்சி தான் தோழியே.