November 7, 2009

காதல் பரிசு !!!


என் காதல் மனைவிக்கு சிறு பரிசாய் இந்த கவிதையை சமர்பிக்கிறேன்............

என் காதல் மனைவி 
என்னை கேட்டாள்    
முதன்முதலாய் 
என் மீது எப்போது
காதல் கொண்டீர்கள்?

கேள்வி கேட்பது எளிது
பதில் சொல்வது கடினம் என்றேன் நான்.

சாதுர்யமாக பேசுவதாக நினைப்போ?
எனக்கு இப்போதே பதில் வேண்டும் என்றாள்;

கண்கள்மூடி பின்னோக்கி சென்றேன்.
காதலை சொன்ன முதல் நாள் எது?
                      ------------------
நீ பிறந்தபோதே உன்மீது காதல் கொண்டேனா?
அத்தைமகள் என்பதால் அதீத அன்பு காதலானதோ

உன் சிரிப்பினில் என் இதயம் சிதறியதோ?
சிறு சிறு சிணுங்களில் மனம் தொலைந்ததோ?

மழை பெய்யும் நேரங்களில் நீ நீரை வாரி என்மேல்
அடித்த கணங்களில் காதல் பூத்ததோ?

நீ பருவம் அடைந்ததும் அதுவரை
பதுங்கியிருந்த என் காதல்
பாயும் புலியென சீற்றம் கண்டதோ?

தாவணி அணிந்து, மருதாணி வரைந்து
கொலுசு காலுடன் ஓடிவந்து
"நான் எப்படி இருக்கேன் மாமா?"
என் தோள்தட்டி கண்சிமிட்டி கேட்டபோது
என் விழியும்,இதயமும் ஒருசேர உன்னில் தஞ்சமானதோ?
                         -----------------
கண்கள் திறந்து பார்த்தேன்
பதிலுக்காக காத்துக்கொண்டிருந்தாள் என் மனைவி...

மென்மையாக அவள் காதில் சொன்னேன்
உன் மீது நானோ, என் மீது நீயோ
காதல் கொள்ளவில்லை;

காதல்தான் நம்மை காதல் கொள்ள வைத்தது.
உன்னிடம் காதலை சொல்லும்
ஒவ்வொரு நாளும் முதல்நாள் தான்-அதனால்
நீ என்னை கேட்பதைவிட அந்த
காதலையே கேளேன் என்றேன்;

கண்கள் பனிக்க என்னை கட்டிப்பிடித்துகொண்டாள்
என் காதல் மனைவி!!!

4 comments:

Unknown said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ வந்ததோ நண்பனே நண்பனே நண்பனே
மனைவியை பிரிந்து இருக்கும் ஏக்கம் உன் வார்த்தைகளிலே...........

உன் காதல் பயணத்தை மகிழ்ச்சியோடு தொடர வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

அருமையோ அருமை, காதல்ரசம் சொட்டுகிறது
காதல்மனையின்மீது,,

அனைவருக்கும் வேண்டுக்கோள்..
நம்ம தோழரைபோல் அனைவரும் மனைவியின்மீது அதீத காதல் கொள்ளுங்கள்..

அப்புறம் தோழமையே தங்களின் பதிகள் அனைத்தையும் உலவு,தமிழிஸில் பதியுங்கள் ஓட்டுப்பட்டை கணெக்‌ஷன் கொடுங்கள் அப்போதுதான் நிறைய தோழமைகள் வந்து சேரும் கருத்துக்களும் நிறைய வரும்..

க.பாலாசி said...

//உன் சிரிப்பினில் என் இதயம் சிதறியதோ?
சிறு சிறு சிணுங்களில் மனம் தொலைந்ததோ?
மழை பெய்யும் நேரங்களில் நீ நீரை வாரி என்மேல்
அடித்த கணங்களில் காதல் பூத்ததோ? //

எப்படியாயினும் இருக்கலாம், அது காதலாக இருக்கும்போது.....

கவிதையினை ரசித்தேன்....

பூங்குன்றன்.வே said...

@ Vijay
உண்மை தான் விஜய்.இந்தியாவுல இருக்கிற என் மனைவி மேல ரொம்ப ஏக்கமா இருக்கு.ஆனா இன்னும் ரெண்டு மாசத்துல ஊருக்கு போறேனே? ஐயோ ஜாலி..

@ அன்புடன் மலிக்கா

என்னை ரொம்ப பாராட்றீங்க..வெட்க வெட்கமா வருதுங்க.அப்புறம் நீங்க சொன்னா மாதிரி இன்னிக்கே உலவு,தமிழிஸில் பதிந்து விட்டேன்..உங்களின் உண்மையான அக்கறை எனக்கு ரொம்ப உற்சாகத்தை தருதுங்க.ரொம்ப நன்றி.


@ க.பாலாசி

நானும் உங்கள் பின்னூட்டத்தினை ரொம்பவும் ரசித்தேன்.மிக்க நன்றி.