September 29, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 12***






மச்சி..மீனா இன்னிக்கு கண்டிப்பா ஆபிஸ் வருவா இல்ல?

எனக்கு என்ன ஜோசியமா தெரியும்?சூர்யா..காலைல ஆபிஸுக்கு கிளம்பும்போதே இதுபத்தி திங்க் பண்ணாத.வேற எதாச்சும் யோசி.

போடா பன்னி.நீ ரொம்ப யோக்கியம்.நேத்து ராத்திரி நைட்ல புவனா பேர புலம்பிட்டு கிடந்த.அதுக்கு என்ன சொல்ற?

ஐயோ ராமா.என்னை காப்பாத்த வர மாட்டியா?

உன்னை காப்பாத்த ராமன் இல்ல..அனுமார் கூட வரமாட்டார்.சரி வண்டிய எடு.டைம் ஆச்சு.

வந்து தொலைடா.போலாம்.

பிரேம் சூர்யாவை ஏற்றிக்கொண்டு அவன் ஆபிஸ் அருகில் இறக்கினான்.இருவரும் தம் அடித்துவிட்டு அவரவர் அலுவலங்களுக்கு சென்றார்கள்.

அலுவலக வாசலுக்குள் நுழையும்போதே சூர்யா திடுக்கிட்டான். அங்கே மூர்த்தி சார் மீனாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.மீனா தன்னை ஓரக்கண்ணால் பார்ப்பதை கவனித்த சூர்யா கவனிக்காதவன் போல தன் காபினுக்குள் சென்றான்.

உடம்பு சூடாவதையும்,இதயம் படபடவென அடிக்க தொடங்கியதை உணர்ந்தான்.நேற்று வந்த மின்னஞ்சல்களை படிக்க துவங்கினான்.

சூர்யா..சூர்யா...கூப்பிட்டுகொண்டே மூர்த்தி அருகில் வந்தார்.

குட் மார்னிங் சார்.

குட் மார்னிங் சூர்யா..உனக்கு இப்ப தலைவலி எப்படி இருக்குப்பா?

சரி ஆயிடுச்சி சார். சொல்லுங்க சார்.

மீனா மேடம் நேத்தைய அப்டேட்ஸ் கேட்டு இருந்தாங்க.அதான் சொல்லிட்டு வரேன்.

அப்படியா சார்.ஓகே.ஓகே.நேத்து நான் ஏன் வரலைனு கேட்டாங்களா சார்?

ஆமாம் சூர்யா.தலைவலின்னு சொன்னேன்.ஒண்ணும் சொல்லல.சரி.பேங்க் வரை நான் போகணும்..அப்புறம் பேசலாம்ப்பா.

சரிங்க சார்.நீங்க போய் வேலைய பாருங்க.

மறுபடியும் மின்னஞ்சல்களை படிக்க துவங்கினான்..இன்டெர்காம் ஒலித்தது.

மீனாதான் கூப்பிடுகிறாள்.கைநடுங்க ரிஸிவரை எடுத்து ஹலோ என்றான்..

சூர்யா...ப்ளீஸ் கம் டு மை ரூம்.

எஸ் மேம்.

ரிஸிவரை வைத்துவிட்டு தண்ணீரை குடித்தான்.ஐந்து வினாடிகள் கண்ணை மூடித்திறந்தான்.எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று தைரியபடுத்திக்கொண்டு மீனாவின் அறைகதவை நெருங்கி தட்டினான்.

மே ஐ கம் இன் ப்ளீஸ்?

0 comments: