October 9, 2009

உயிரே பிரியாதே ***பகுதி - 21***

 ஸாரி மீனா...உங்களுக்குள் இவ்வளவு பெரிய சோகம் இருப்பது தெரியாம நான் உங்ககிட்ட என்னனமோ பேசிட்டேன்...

இட்ஸ் ஓகே சூர்யா..நான்தான் இப்ப உங்களை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்.

ச்சே..ச்சே...அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை.உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல.ஆனாலும் இப்பத்தான் எனக்கு உங்களை ரொம்பவும் பிடிச்சிருக்கு மீனா..ப்ளீஸ் என்னை தப்பா எடுத்துக்காதீங்க.ஸ்டில் ஐ லவ் யூ மீனா.

சூர்யா...உங்க காதலை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.யாருக்கு வேணும்ன்னாலும் யாரை வேணா பிடிக்கலாம்.ஆனா நாம விரும்பறவங்க மனசுல நாம இருக்கோமான்னு என்பதுதான் முக்கியம்.என் மனசுல அவர்தான் இப்ப இருக்கார்.எப்பவும் இருப்பார்.அதனால நீங்க என்னை மறக்கிறது நல்லது சூர்யா.

நீங்க சொல்றதை என்னால முழுசா ஒத்துக்க முடியாது மீனா.நான் உங்களை விரும்பறா மாதிரி நீங்களும் என்னை கண்டிப்பா விரும்பிதான் ஆகணும்னு நான் சொல்லல.இன்னும் நீங்க உங்க காதலரை, கணவரை நினைசிட்டு இருக்கிற உணர்வை நான் ரொம்ப மதிக்கிறேன்...ஆனா காலம் முழுக்க நீங்க இப்படி தனியாவா இருக்க போறீங்க மீனா?

சூர்யா.....நான் என் வாழ்க்கை முழுக்க தனியாவே இருக்கப்போறேன்னு நான் சொல்லவே இல்ல.நிச்சயம் எனக்கு ஒரு துணைன்னு தேவைபட்டா நான் ஒருத்தரை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன்.ஆனா இப்ப எனக்கு அந்த துணை தேவைப்படல. ஏன்னா இன்னும் அவருடன் வாழ்ந்த அந்த ஞாபகங்கள் என் மனசுல பசுமையா இருக்கு.அதுதான் இப்போதைக்கு என்னோட பெரிய சுகமான சுமையும்,துணையும்...நான் எதாவது தப்பா பேசி இருந்தா ரொம்ப ஸாரி சூர்யா..

இல்ல மீனா...நீங்க எதுவும் தப்பா பேசவே இல்ல.எப்படி உங்களால் இவ்ளோ தெளிவா அழகா பேச முடியுது?ரொம்ப பெருமையா இருக்கு.ஆனா காலம் கண்டிப்பா எந்த ஒரு துன்பத்தையும் மாத்த கூடியது..அப்படி ஒரு நேரம் வந்து நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கும்போது நான் உங்க முன்னாடி இருப்பேன்.உங்களுக்காக காத்துக்கிட்டு இருப்பேன்.

இவ்வளவு சொல்லியும் நீங்க இன்னும் என்னை நினைச்சுட்டே இருப்பேன்னு சொல்றதை நினைச்சு ரொம்ப சந்தோசப்படறதா இல்ல வருத்தப்படுறதான்னு தெரியல சூர்யா.ஆனா எனக்காக நீங்க எப்பவும் காத்துக்கிட்டு இருக்க வேண்டாம் ப்ளீஸ்...

இப்பவும் எனக்கு நம்பிக்கை இருக்கு மீனா...உங்க காயத்தை என்னால ஆற்ற முடியும்ன்னு..இன்னும் நீங்க அவரையே நினைச்சுட்டு இருக்கிறது காதல்னா உங்களை நினைச்சி நான் காத்துக்கிட்டு இருக்க போவதற்கு பெயரும் காதல்தான் மீனா.

வண்டியில் வந்த மெக்கானிக் வந்து காரை சரி பார்க்க ஆரம்பித்தான்.

சார்..கார் ரெடி..நான் கிளம்பட்டுமா?

இருப்பா...நம்ம ஏரியா தானே?நானும் உன்கூட வரேன்.

மீனா..நான் கிளம்புறேன்...நீங்க வீட்டுக்கு போங்க.வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணுங்கன்னு சொல்ல மாட்டேன்.அட்லீஸ்ட் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க...

சொல்லிவிட்டு சூர்யா வண்டியில் கிளம்பி போவதை பார்த்து கொண்டே இருந்தாள் மீனா.

மழை தூறத்தொடங்கியது...அந்த மழைத்துளிகளில் மீனாவின் ஒரு கண்ணீர் துளியும் சேர்ந்திருந்தது.

சில நினைவுகள், சில நிகழ்வுகள், சில மனிதர்களை நம்மால் என்னிக்குமே மறக்க முடியாது.உயிர் பிரியும்வரை உடன் ஒட்டிக்கொண்டே இருக்கும்....!!!

*******************************   முடிந்தது  *********************************

5 comments:

Vijay said...

கதை மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் வெகு சீக்கிரம் முடிந்ததை போல் உள்ளது. ஒவ்வொரு காதலுக்குள்ளும் எத்தனை சோகங்கள். தமிழ் பட இயக்குனர்களை போல அடுத்த கதையில் காதலர்களை சேர்த்து வைக்கவும். மேலும் www.Tamilish.com ல உங்கள் பதிவுகள் ஒரே நாளில் 10 வாக்குகளை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

பூங்குன்றன் வேதநாயகம் said...

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே... அடுத்த காதல் கதையில் நிச்சயமாக காதலர்கள் இணைவதை போல எழுதி விடுகிறேன்.
தொடர்ந்து உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

aazhaimazhai said...

Hey parthiyaa !!! your story is really super pa !!!! expecting your next story ya

அன்புடன் மலிக்கா said...

கதை மிக நன்றாக இருந்தது, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

Vijay said...

அடுத்த கதை எப்போது?