October 15, 2009

ஆர்குட்


இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு நாள் யாஹூ வலைத்தளத்தில் உலாவிக்கொண்டு இருக்கும்போது, கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன் சாட்டில் வந்தான்.

ஹாய் மச்சி...ஹொவ் ஆர் யூ?

நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க மச்சி?

நான்கூட சூப்பரா இருக்கேன்டா என்று பார்மல் நல விசாரிப்புக்குபின், "நீ ஆர்குட்டில் இருக்கியா" என்றான்.

ஆர்குட்? கேள்விப்பட்டுஇருக்கேன், ஆனா ஐடி இல்லையே என்றேன்.

நீயெல்லாம் ஏன்டா உயிரோடு இருக்கே என்பது மாதிரியான திட்டுக்களை வாங்கியபின் தீர்க்கமான முடிவெடுத்தேன் இனி ஆர்குட்டா நானா என்று.

என்னோட ஜிமெயில் ஐடி வைத்து ஆர்குட்டில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தேன்.உள்ளே போக போக அதில் ஒரு தனி உலகமே இருப்பது தெரிந்தது.பெரும்பாலான பாய்ஸ் பிரண்ட் லிஸ்டில் 200,300 என்றும்,1000,2000  என்றும் ஸ்க்ராப்ஸ் இருப்பதை பார்த்து மிரண்டு்போனேன்.அதைவிட கொடுமை கேள்ர்ஸ் பாய்ஸை விட ரெண்டு மடங்கு அதிகமாக இருப்பதை பார்த்து மயங்கியே போனேன்.

சரி..பரவாயில்லை...என்று தெரிந்த,தெரியாத பாய்/கேர்ள் பிரண்ட்சுக்கு எல்லாம் ஏன் ஐடியை போன்/மெயில் பண்ணேன்.முதல் இரண்டு நாட்கள் யாரும் என் பிரண்ட்ஸ் லிஸ்டில் சேரவும் இல்லை.ஸ்க்ரபும் இல்லை.

ஒரு வாரம் கழித்து 2 ஸ்க்ரப்ஸ் வந்ததை பார்த்து ஆசையுடன் ஆர்குட்டை திறந்தால், "மே ஐ நோ யூ?" , "சாரி,அன்னோன் பெர்சன்ஸ் நாட் அலவுட் இயர்" என்று இரண்டு பெண்கள் மிக அழகாக என்னை ஒதுக்கி இருந்தார்கள்.

அப்புறம் சில மாதங்களில் எப்படியோ 50 பேர் சிக்கினார்கள்.ஸ்க்ராபும் 1000 த்தை தாண்டியது..இதை கொண்டாட தினத்தந்தி/தினகரனுக்கு (தினமலர் இப்போதைக்கு ராசியில்லைங்க) அரைப்பக்க விளம்பரம் தரலாமா என்றுகூட யோசித்தேன்.

அப்புறம் அலுவக வேலையைக்கூட மறக்கும் அளவுக்கு ஆர்குட் போதை ஏறி திரிந்தேன்.

இப்போ என்ன ஆச்சுன்னு எனக்கே தெரியலங்க.தெரியாத பாய்ஸ்/கேர்ல்ஸ் பிரண்ட்ஸ் ரிக்வஸ்ட்/ஸ்க்ராப் அனுப்பினால் நானே "மே ஐ நோ யூ?" என்று அனுப்ப ஆரம்பித்துவிடுகிறேன் அல்லது அமைதியாக இருந்துவிடுகிறேன்.

நேத்து ஒரு பிரண்ட் பேஸ்புக்குன்னு இதோ  ஒரு பேரை சொன்னான்.அங்க மீட் பண்ணலாம் என்ன?

நீங்க எப்படி?

7 comments:

Vijay said...

இனையதளம் என்பதன் மூல கருத்தை நன்றாக புரிந்து கொண்டீர் போல

angel said...

nanum athula irunthen irunthen soldratha vida time waste panen nu solalam ana thank god coz oru 2months athuvum annual xam holidays la matum than enga skl padikravanga avanga frnds ku frnds avanga frnds ku frnds ku frnds.................. ipdi enaku sernthathu 490 frnds kita scrap 20000 irukum apram acct hack ayidichu thirumbhi new acct more scraps apram 10th vanthen ore adiya orkut ku good bye soliachu

angel said...

comment konjam perusa ayidichu sorry

பூங்குன்றன்.வே said...

@ angel

//nanum athula irunthen irunthen soldratha vida time waste panen nu solalam ana thank god coz oru 2months athuvum annual xam holidays la matum than enga skl padikravanga avanga frnds ku frnds avanga frnds ku frnds ku frnds.................. ipdi enaku sernthathu 490 frnds kita scrap 20000 irukum apram acct hack ayidichu thirumbhi new acct more scraps apram 10th vanthen ore adiya orkut ku good bye soliachu//

//அந்தந்த வயசில் நண்பர்களை தேடுவதும்,இது மாதிரியான சமூக இணையங்களில் இணைத்துக் கொண்டு உலாவதும் இயற்கை. ஆனால் அதில் மூழ்கி படிப்பை/ வேலையை வாழ்க்கையை தொலைத்தவர்கள் அநேகம் பேர். நானும் ஒரு காலகட்டத்தில் முழித்துக்கொண்டு வெளியில் வந்து
எழுதுவதில் மூழ்கிவிட்டேன். நீங்களும் விழிப்படைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.படிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள்.

பூங்குன்றன்.வே said...

@ angel

//comment konjam perusa ayidichu sorry//

கமென்ட் கொஞ்சம் பெரிசுதான்,பட் ஒண்ணும் தப்பில்லை :)

அக்பர் said...

எதுவுமே ஒரு அளவுதான் இல்லையா தல‌

எனது நண்பர்களும் சொன்னாங்க. பொதுவா அர்த்தமில்லா அரட்டை அடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை.

நாஞ்சில் பிரதாப் said...

//இரண்டு பெண்கள் மிக அழகாக என்னை ஒதுக்கி இருந்தார்கள்//


மாத்தி சொல்லப்படாது... இரண்டு அழகான பெண்கள் என்னை ஒதுக்கி இருந்தார்கள்...அதுதான கரெக்ட்டு... நம்மள ஏமாத்த முடியாது தல... எத்தனை அடிவாங்கியிருப்போம் :-)

ஆர்குட் ஒருமாதிரியான போதைதான். ஆமீரகத்துல அந்தப்பிரச்சனை இல்லை. இங்க banned பண்ணி வச்சுருக்காங்க... ஆனால் ஒரு சாப்ட்வேர் போட்டா ஆக்ஸஸ் பண்ணலாம். எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல...