October 14, 2009


TAKE IT EASY !!!

வாழ்க்கை  ரொம்ப அழகான விஷயம்ங்க.நம்மில் நிறைய பேருக்கு இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி ஏன் நடந்துக்குறோம்னுதான் தெரியலை.

சுய கவுரவம்,அதிகாரம்,பதவி,போட்டி,பொறாமை இப்படி பல உயிரற்ற விஷயங்களுக்காக  உயிருள்ள நம் சக மனிதர்களை பாடாய்படுத்துகிறோம்.

எத்தனையோ பெரியமனிதர்கள், சித்தர்கள், மகான்கள் சொல்லிக்கொடுத்த அனுபவங்களை படித்தும்-கேட்டும்,நாம் நம்மை மாற்றிகொள்ள தயாராக இல்லை.இந்த வேகமான யுகத்தில் நம்முடைய சக மனிதர்களை பற்றி யோசிக்கவும் நேரமில்லை.

கடவுள் இல்லைன்னு சொல்ற ஒருத்தர்.கண்டிப்பா இருக்கார்னு சொல்ற ஒருத்தர்.அரசாங்கம் சரியில்லைன்னு சொல்ற ஒருத்தர்.நல்லா ஆட்சி பண்றாங்கப்பான்னு சொல்ற ஒருத்தர்.சிலருக்கு காமெடி பிடிக்கும்,சிலருக்கு அழுகைதான் பிடிக்கும்.

சிலருக்கு பேச பிடிக்கும்,சிலருக்கு கேட்ட மட்டும்தான் பிடிக்கும்.எனக்கு இந்த உலகத்தில் உள்ள எல்லாமே பிடிக்கும்னு சொல்ற ஆட்களை வலைவீசி தேடி பிடிக்கவேண்டும்.

இப்ப நீங்க என்ன செய்யணும்ன்னு கேட்கறீங்களா? நீங்க எதுவும் கெட்டது பேசாம/நினைக்காம/பண்ணாம இருந்தா போதும்.நீங்கன்னா இதை படிக்கிறவங்க இல்லை.அப்படி பண்றவங்களை சொல்றேன்.

நான் யாருக்கு கெட்டது பண்ணேன்னு கேட்குறீங்களா? நாம ஒருத்தரை கொலை பண்றதுதான் கெட்டதுன்னு இல்ல.சக ஊழியர்களை,சக மனிதர்களை,உறவினர்களை,நண்பர்களை பத்தி அவங்க இல்லாதபோது தப்பா பேசறதும்,இருக்கும்போது இகழ்ந்து பேசுறதும்,மேலதிகாரி கேட்கலைன்னாலும் போட்டு கொடுக்கறதும்,நம்பிக்கை துரோகம் பண்றதும் கூட கெட்டதுதாங்க.

என்ன அநியாயமா இருக்கு இது? என்னை காப்பாதிக்க அடுத்தவனை போட்டுகொடுக்கறது தப்பா?ஒரு ஜாலிக்காக நண்பனை வேறுபேத்தறது தப்பான்னு நீங்க கேட்கறது எனக்கு இங்கே கேட்குதுங்க.

ஆனா நம்ம நல்லதுக்காக இன்னொருத்தனை பத்தி தப்பா சொல்றது தப்புதானே?நம்ம சந்தோசத்துக்காக அடுத்தவனை கிண்டல் பண்றது தப்புதானே?

வாழ்க்கை ஒரு பட்டாம்பூச்சி மாதிரி.கொஞ்ச காலம் தான் வாழ முடியும்.அது எப்போ முடியும்ன்னு யாராலும் சொல்ல முடியாது.அதே மாதிரிதான் இந்த பட்டாம்பூச்சி சுதந்திரமா பறக்கும்வரை சந்தோஷ காற்றை சுவாசிக்கலாம் இன்னொருவர் ஆசைபட்டோ அல்லது வெறுத்து பிடித்து அதன் வர்ணம் போகும்வரை,அதாவது நம் சந்தோசம் என்பது பட்டாம்பூச்சியின் வர்ணம் மாதிரின்னு சொல்றேங்க.

சந்தோசம்,பணம்,ஆசை என்பதெல்லாம் நல்லா வீசுற காத்துமாதிரி.ஒரு நாள் என்பக்கம் வீசும், நாளைக்கு அடுத்தவன் பக்கம் வீசும்.காத்தை பிடிச்சி நம் பாக்கெட்டில் போட முடியாதுல்ல?

வாங்க கொஞ்சம் யோசிச்சு, நிறைய பேரை சந்தோஷப்படுத்தலாம்.

4 comments:

Sujatha said...

Great..Well said.

Unknown said...

அனைவரும் இந்த கருத்துக்களை பின் பற்றி நடந்தால் எவ்வளவு இனிமையான மனகசப்பற்ற சந்தோஷமான வாழ்க்கையை வாழாலாம். நன்றி நண்பா. இனியாவது முயற்சிப்போம்....... அடுத்தவர்கள் மனதை புண் படுத்தாமல் வாழ

Unknown said...

பிறரையும்,
நம்மைபோல் நினைக்கும் போது... எந்த சுயநல, சந்தர்பத்திற்கும் இடமில்லை...
பாம்பினில்
விஷம் எடுக்க நினைப்பதை விட, ஒதுங்கி செல்வதும்...
விஷ முறிவை தேடுவதும்...
சால சிறந்தது என் ஆத்மார்த்த நண்பா

Unknown said...

நல்ல சிந்தனை...
தவறு இழைபவராய் பார்த்து திருந்தினால் உண்டூ... அனால் மிக கடினம்... உலோன்று வைத்து பினொன்று பேசும் வஞ்சக வித்தகர்கள்...
நெய் ஒழுக பேசி கல்லையும் கரைய வைப்பார்...
ஆக, இவர்கள் மாறுவது மிக கடினம்.
தன்னலம் நோக்கி,
பிறர்நலம் கெடுத்து
வாழ்வது விலங்கினம்...
பணம், பதவி - போதைக்கு அடிமையகியவர் திருந்த மாட்டார்... நன்மை செய்வதை விட
தீய்மை செயாதிருபது சாலசிறந்தது. மாறுமா இந்த நிலை???